தோட்டக் கலை

சௌசௌ இயற்கை விவசாயம்..!

சௌசௌ பொதுவாக சைவ உணவுகளில் முதல் இடத்தில் இடம் பெற்றிருக்கும். இந்த சௌ சௌ அதிகளவு நீர்ச்சத்து உள்ளது.

உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள், இந்த சௌசௌ அதிகளவு உண்டு வந்தால் உடல் எடையை உடனே குறைத்துவிட முடியும். பலவகையான ஆரோக்கிய பிரச்சனைகளுக்கு இந்த சௌ சௌ மருத்துவ பயன்கள் அதிகளவு பயன்படுகிறது.

சரி வாங்க இயற்கை விவசாயம் பகுதியில் சௌசௌ சாகுபடி (chow chow cultivation) செய்வது எப்படி என்று இந்த பகுதியில் படித்தறிவோம் வாங்க..!

சௌ சௌ சாகுபடியில் அதிக மகசூல் பெறுவது எப்படி? பயிர் பாதுகாப்பு மற்றும் நோய் மேலாண்மை!!

சௌ சௌ இரகங்கள்:

இயற்கை விவசாயம் சௌசௌ சாகுபடி (chow chow cultivation) பொறுத்தவரை இரண்டு இரகங்கள் உள்ளன அவை ஒன்று பச்சை காய் வகை மற்றொன்று வெள்ளை காய் ரகங்கள் என்று இரண்டு ரகங்கள் உள்ளன.

பருவ காலங்கள்:

இயற்கை விவசாயம் சௌசௌ சாகுபடி (chow chow cultivation) பொறுத்தவரை மலைப்பிரதேச பகுதிகளுக்கு ஏப்ரல் – மே மாதமும், சமவெளிப்பகுதிகளுக்கு ஜீலை – ஆகஸ்ட் மாதமும் ஏற்ற பருவங்கள் ஆகும்.

மண்:

சௌசௌ சாகுபடி (chow chow cultivation) பொறுத்தவரை நல்ல வடிகால் வசதியுடைய, ஈரத்தைத் தக்கவைத்துக் கொள்ளும் குணம் நிறைந்த களிமண், செம்மண் ஏற்றது. மண்ணின் கார அமிலத் தன்மை 5.5 முதல் 6.5 இருந்தால் பயிரின் வளர்ச்சிக்கு ஏற்றதாக இருக்கும். செளசெள அதிக வெப்பநிலை நிலவக்கூடிய கடலோரப்பகுதியிலும், குளிர்ச்சியான மலைப்பகுதியிலும் பயிரிடலாம்.

நிலம் தயாரித்தல்:

சௌசௌ சாகுபடி பொறுத்தவரை நிலத்தை 2 முதல் 3 முறை உழுது பண்படுத்த வேண்டும். பின்பு 45 செ.மீ நீளம், அகலம், ஆழம் உள்ள குழிகளை 2.5 x 1.8 மீட்டர் என்ற இடைவெளியில் எடுக்கவேண்டும்.

10 கிலோ நன்கு மக்கிய தொழு உரம், 250 கிராம் யூரியா, 500 கிராம் சூப்பர் பாஸ்பேட் உரங்களை மேல் மண்ணுடன் நன்கு கலந்து இட்டு குழிகளை மூடவேண்டும்.

விதை:

செளசெள முளைவிட்ட காய்கள் மூலம் இனப்பெருக்கம் செய்யப்படுகின்றது. காய்கள் கொடியில் இருக்கும் பொழுதே அதனுள் இருக்கும் விதை முளைத்துவிடுகிறது.

குருத்து 13 செ.மீ முதல் 15 செ.மீ வரை வளர்ந்தவுடன் நடவு செய்ய உபயோகப்படுத்தலாம். இதைத் தவிர தண்டின் வெட்டுத் துண்டுகளையும் நடவிற்குப் பயன்படுத்தலாம்.




விதைத்தல்

சௌசௌ சாகுபடி பொறுத்தவரை தயார் செய்துள்ள குழிகளில் நன்கு முற்றி முளையிட்ட காய்களை குழிக்கு 2 முதல் 3 நடவு செய்ய வேண்டும்.

நீர் நிர்வாகம்

சௌசௌ சாகுபடி பொறுத்தவரை நட்டவுடன் நீர் பாய்ச்ச வேண்டும். பின்பு சமவெளி பகுதிகளுக்கு இரண்டு வாரத்திற்கு ஒரு முறை நீர்ப்பாய்ச்ச வேண்டும். மலைப்பகுதிகளுக்கு நீர் பாசனம் அதிகமாக தேவைப்படாது.

உரங்கள்

சௌசௌ சாகுபடி பொறுத்தவரை நட்ட 3 முதல் 4 மாதங்கள் கழித்து கொடிகள் பூக்க ஆரம்பிக்கும். அப்பொழுது குழி ஒன்றுக்கு 250 கிராம் யூரியா இட்டு நீர் பாய்ச்சவேண்டும்.

ஒவ்வொரு முறை அறுவடை முடிந்து கொடியினை அறுத்துவிடும் போதும் தழை, மணி மற்றும் சாம்பல் சத்துக்களை 200 கிராம் இடவேண்டும்.

பாதுகாப்பு முறைகள்

களை நிர்வாகம்

முளைத்து வெளிவரும் கொடிகளைக் கயிறுடன் இணைத்துக் கட்டி, கயிற்றை 6 அடி உயரத்தில் எழுப்பப்பட்டுள்ள பந்தலில் கட்டி கொடிகளைப் பந்தலில் விட்டு படரச் செய்யவேண்டும். குழிகளின் இடைப்பகுதிகளில் களைக்கொத்து கொண்டு களைகளை அகற்றவேண்டும்.

அறுவடை முடிந்தவுடன் தரையில் இருந்து 60 செ.மீ உயரத்தில் கொடியினை அறுத்துவிடவேண்டும். அப்போது தான் பக்கக் கிளைகள் குழிகளில் உருவாகி பந்தலில் படரத் தொடங்கும். இவ்வாறு ஒவ்வொரு முறையும் அறுவடை முடிந்தபின் இந்தச் சுழற்சியினை மேற்க்கொண்டால் 4 முதல் 5 ஆண்டுகள் வரை கொடியினை நன்றாக காய்க்கும் திறனில் வைத்துக்கொள்ளலாம். ஜனவரி மாதம் கவாத்து செய்தால் மீண்டும் ஜீலை மாதத்தில் அறுவடைக்கு தயாராகி டிசம்பர் மாதம் வரையிலும் காய்கள் கிடைக்கும்.




பயிர் பாதுகாப்பு

பூச்சிகள்

மாவுப்பூச்சி மற்றும் அசுவினிப்பூச்சிகளை கட்டுப்படுத்த டைமெத்தோயேட் 1 மில்லி மருந்தை ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்கவேண்டும்.

பழ ஈக்கள்

பழ ஈக்களை கட்டுப்படுத்த மாலத்தியான் மருந்தை 1 லிட்டர் நீரில் 2 மில்லி என்ற அளவில் கலந்து தெளிக்கவேண்டும்.

நூற்புழு

வேர் முடிச்சு நூற்புழுக்களின் தாக்குதல் அதிகமாக உள்ள பகுதிகளில் பியூராடன் குருணை மருந்தை குழிகளைச் சுற்றி இடுவதன் மூலம் கட்டுப்படுத்தலாம்.

அறுவடை

விதைத்த 5-6 மாதங்களில் அறுவடைக்கு வந்துவிடும். காய்களை சாதாரண வெப்பநிலையில் 2 முதல் 4 வாரங்கள் வரையில் கெட்டுப் போகாமல் சேமித்து வைக்கலாம்.

மகசூல்

நன்கு வளர்ந்த ஒரு கொடியிலிருந்து ஒரு வருடத்திற்கு சுமார் 25 முதல் 30 கிலோ காய்கள் கிடைக்கும்.




What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!