Serial Stories thanga thamarai malare தங்க தாமரை மலரே

தங்க தாமரை மலரே – 7

7

” கமலினி …? வாம்மா என்ன விசயம் …? ” அனுமதி வாங்கிக் கொண்டு அவள் அறைக்குள் நுழைந்தவளை வரவேற்ற பாரிஜாத்த்தின் குரலில் கொஞ்சம் வெறுப்பு தெரிய கமலினி குழம்பினாள் .

” கீழே எல்லோருடைய முன்பும் உன்னை தெரிந்தாற் போல் காட்டிக் கொள்ள முடியாதும்மா .அதனால்தான் …” குன்றலாய் பேசிக் கொண்டிருப்பவள் சற்று முன் மகாராணித்தனமாக காரில் வந்து இறங்கியவள்தானா என்ற சந்தேகம் கமலினிக்கு வந்த்து .இவர்கள் ஏன் எப்போதும் எதற்கோ பயந்த்து போன்றே இருக்கிறார்கள் …?

” என்னை எதற்காக அப்பாயின்ட் பண்ணினீர்கள் மேடம் …? ” கோபமாக பேச வந்தவள்தான் .ஆனால் இப்போது அதி மென்மையாக பேசினாள் .

” நானா …உன்னையா …நீ வேலையில் ஜாயின்ட் பண்ணவா வந்தாய் …? ” பாரிஜாத்த்தின் ஆச்சரியத்தில் கமலினிக்கு அதிர்ச்சி .

” நீதான் நேற்றே வேலை வேண்டாமென்று விட்டாயே கமலினி .நான் உன்னை அப்பாயின்ட் பண்ணவில்லையே .இனி நாம் சந்திக்க வேண்டியிராது என நான் நிம்மதியாக …அ…அது …வந்து …இனி உன்னை சந்திக்க முடியாது என்று நினைத்துக் கொண்டிருந்தேன் .ஆனால் எப்படி …? ” பாரிஜாதம் திக்கி திணற கமலினி அவளை இரக்கமாக பார்த்தாள் .

” அடுத்தவர் வம்பு பேசும் பழக்கம் எனக்கு எப்போதும் கிடையாது மேடம் .உங்கள் கடையிலிருந்து உடனே வந்து வேலையில் ஜாயின்ட் பண்ணிக் கொள்ளுமாறு போன் வந்த்து .அதனால்தான் வந்தேன் . உங்கள் பார்வையிலேயே படக் கூடாது என்றுதான் நானும்  நினைத்திருந்தேன் …”

பாரிஜாத்த்தின் முகம் வாடியது .” கமலினி என் நிலைமை அப்படி . என்னை தவறாக எடுத்துக் கொள்ளாதேம்மா …”




கமலினி பாரிஜாத்த்தின் மனநிலையை மாற்ற விரும்பினாள் .” ஏங்க மேடம் …நான் உங்களுக்கு என்ன பாவம் பண்ணினேன் …? இப்படி வார்த்தைக்கு வார்த்தை அம்மா போட்டு என்னை குடு குடு கிழவியாக்க நினைக்கிறீர்களே …” சோகமாக பேசி மூக்குறுஞ்சி சுடிதார் ஷாலால் வெற்றுக் கண்களை அழுத்தமாக துடைத்துக் கொண்டாள் .

பாரிஜாதம் பட்டென வாய் விட்டு சிரித்தாள் .தனை மறந்து சிரித்தபோது அவள் மிகவும் அழகாக மின்ன ” ம் …இப்போதுதான் அந்த பாரிஜாதம் போலவே அழகாக இருக்கிறீர்கள் மேடம் .எப்போதும் இப்படியே சிரித்துக் கொண்டே இருங்களேன் “

” ப்ச் …போ கமலினி .நான் ஒன்றும் உன்னைப் போல் அழகானவளில்லை …”

” ஆனாலும் உங்களுக்கு அநியாய தன்னடக்கம் மேடம் .உங்கள் அழகை பற்றி உங்கள் ஹஸ்பென்டிடம்தான் கேட்க வேண்டும் . உரிமை பட்டவர் அவர்தானே …” இயல்பாக சொல்லிக் கொண்டிருக்கும் போதே ஏதோ தவறு செய்வதாக உன்மனம் கூற , கமலினி உதடு கடித்து பேச்சை நிறுத்த பாரிஜாத்த்தின் முகம் மீண்டும் வாடி விட்டிருந்த்து .கண்ணாடி டேபிள் பிரதிபலித்த தனது உருவத்தை வெறித்தபடி அமர்ந்திருந்தாள் அவள் .

கமலினி எழுந்து நின்று டேபிளில் கிடந்த அவள் கை மீது தன் கையை ஆறுதலாக  வைத்தாள் .உடனே அவள் கையை இறுக பற்றிக் கொண்டு விட்டாள் பாரிஜாதம் .அந்த பிடிப்பு ஒரு சிறு ஆறுதலுக்காக அவள் எந்த அளவு ஏங்கிக் கொண்டிருக்கிறாள் என்று காட்டியது . இரு பெண்களும் இரு நிமிடங்கள் அப்படியே இருக்க , பாரிஜாதம் திடுமென நிமிர்ந்தாள் .

” கமலினி உன்னை நான் அப்பாயின்ட் பண்ணவில்லை . என்றால் …ஒரு வேளை விஸ்வா …? ” பெயரை சொல்லும் போதே பாரிஜாத்த்தின் முகம் வெளுத்தது .

” நான் இல்லையென்றால் விஸ்வாதான் …அ…அவருக்கு எல்லாம் தெரிந்து விட்டதோ …? இல்லையென்றால் உன் மூலமாக எதையோ தெரிந்து கொள்ள நினைக்கிறாரோ …? “

எழுந்து நின்று படபடத்த பாரிஜாத்த்தை கையமர்த்தினாள் கமலினி .” ஈசி மேடம் .ஏன் இவ்வளவு பதட்டம் …? என்னை யார் அப்பாயின்ட் பண்ணியிருந்தாலும் வேலை செய்யும் முடிவை எடுக்க வேண்டியது நான்தானே …? இதோ இப்போதே கீழே போய் சதாசிவம் சாரிடம் எனக்கு இங்கே வேலை பார்க்கும் எண்ணமில்லை என்று சொல்லிவிட்டு போய்விடுகறேன் .சரிதானே …? “

பாரிஜாதம் மீண்டும் மலர்ந்தாள்.” கமலினி இதில் உனக்கு எந்த வருத்தமும் கிடையாதே…? “

” நிச்சயம் கிடையாது மேடம் .என்னை சந்தித்தையே நீங்கள் மறந்து விடுங்கள் .இதுவே நமது கடைசி சந்திப்பு …பை …” கையசைத்தபடி எழுந்து அறை வாயிலை நோக்கி நடந்தாள் .அவளை பார்த்தபடியே இருந்த பாரிஜாதம் அவள் அறைக்கதவை திறந்த போது குரல் கொடுத்தாள் .

” கமலினி ஒரு நிமிடம் …” திரும்பி பார்த்தவளை தலையசைத்து தன்னருகே அழைத்தாள் .அருகே வந்தவளின் இரு கைகளையும் பிடித்துக் கொண்டாள் .

” என் பெற்றோருக்கு நான் ஒரே பிள்ளை கமலினி .சிறு பிள்ளையிலிருந்தே மனம் விட்டு பேச விளையாட என என் பிறந்த வீட்டில் ஆள் கிடையாது .பள்ளி , கல்லூரியிலும் என் மனதுக்கு திருப்தியான ஒரு தோழியை நான் ஏனோ சந்திக்கவேயில்லை .புகுந்த வீட்டிலும் என் மனம் புரிந்து நடக்கும் உறவுகள் அமையவில்லை . என்னுடைய இந்த இருபத்தியெட்டு வயது வரை நான் என் வாழ்க்கையில் உணர்ந்த்து பெரும்பாலும் தனிமையும் , வெறுமையுமதான் .ஆனால் இப்போது உன்னை சந்தித்த பின்பு …உன் நல்ல மனதை உணர்ந்த பிறகு உன்னை ஏன் தவிர்க்க வேண்டுமென்று எனக்கு தோன்றுகிறது …? “

கமலினி மௌனமாக அவளை பார்த்தபடி இருந்தாள் .” நீ மிகவும் நல்லவளாக இங்கிதமானவளாக முக்கியமாக என்னை பற்றியும் நினைப்பவளாக இருக்கிறாய் . இங்கே கடையில் இருக்கும் சில மணி நேரங்களாவது உன் தோழமையோடு இருக்க விரும்புகிறேன் .இந்த வேலையை ஒத்துக் கொள்கிறாயா கமலினி …? “

” நன்றாக யோசித்துக் கொள்ளுங்கள் மேடம் .நீங்கள் அடிக்கடி என்னை பார்த்து பயப்படுகிறீர்கள் …”




” இல்லையில்லை .இப்போது உன் மேல் பயமில்லை .என்னை …என் உணர்வுகளை புரிந்து கொண்ட ஒரே தோழி நீ என உன்னோடு எனக்கு ஒரு வகை நெருக்கமான உணர்வுதான் உண்டாகிறது .ப்ளீஸ் எனக்கு துணையாக இரு கமலினி “

பாரிஜாத்த்தின் வேண்டலோடு இந்த வேலைக்கான தனது தேவையும் மனதிலாட கமலினி ஒப்புதலாக தலவயசைத்தாள் .அப்போது அறைக்கதவு மெலிதாக தட்டப்பட பாரிஜாதம் வேகமாக போய் தன் இருக்கையில் அமர்ந்து கொண்டு ,” யெஸ் …” என்க,  கமலினியும் வேகமாக தன் இருக்கையில் அமர்ந்த போது விஸ்வேஸ்வரன் உள்ளே வந்தான் .

நுழைந்த உடனேயே அவனது விழிகள் இருவரையும் அளவெடுத்தது .பின் கமலினியை நோக்கி ” எப்போது வந்தீர்கள் …? ட்யூட்டியில் ஜாய்ன்ட் பண்ணவில்லை …? ” என்றான் .

” இதோ …கிளம்பிக் கொண்டே இருக்கிறாள. …” படபடத்த பாரிஜாத்த்தை எச்சரிக்கையாக பார்த்தாள் கமலினி .அவன் வலை விரிக்கும் முன்பே இவள் தானே போய் சிக்கிக் கொள்வாள் போலவே …அவள் பயத்தை  போன்றே இருந!தது அடுத்த விஸ்வேஸ்வரனின் கேள்வி .

” இங்கே என்ன செய்கிறீர்கள் கமலினி …? “

ஏதோ சொல்லி சமாளித்து வைக்க வாய் திறந்த பாரிஜாத்த்தை கண்களால் அமைதிப்படுத்தி விட்டு ” என்னை ஏன் வேலைக்கு எடுத்தீர்களென மேடத்திடம் கேட்டுக் கொண்டிருந்தேன் …? ” தைரியமாக பேசி பாரிஜாத்த்தை அதிர வைத்தாள் கமலினி .அதே அதிர்வை விஸ்வேஸ்வரனிடமும் எதிர்பார்க்க அ வன் வெகு சாதாரணமாக முகத்தை வைத்திருந்தான் .

” உங்களை செலக்ட் செய்த்து உங்கள் மேடம் இல்லை .நான்தான் “

” ஓ …ஆனால் நீங்கள்தான் நேற்று என்னை வேலைக்கு வேண்டாமென்றீர்கள் சார் .இன்று என்னை செலக்ட் செய்ய காரணம் …? “

” நேற்று உங்கள் மேடம் கூடத்தான் உங்களை வேண்டாமென்றார்கள் .இப்போதோ அவர்களுக்கு நீங்கள் ஓ.கே வாகி விட்டீர்களே …” சொன்னபடி டேபிளை நோக்கி நடந்து வந!தவன் அமர்வதற்காக வேகமாக இருக்கயிலிருந்து எழுந்தாள் பாரிஜாதம் .அவளை உட்காரும்படி சைகை செய்து விட்டு இன்னொரு சேரை அவளரிகிலேயே இழுத்து போட்டு அமர்ந்து கொண்டு அவளை கேள்வியாய் திரும்பிப் பார்த்து ” ம் …? ” என்றான் .

“‘அ …அது வந்து நேற்று கமலினி மிகவும் சாதாரணமான உடையில் எந்த அலங்காரங்களும் இன்றி இருந்தாள் .அவளது வேலைக்கு அலங்காரமும் , ஆடம்பரமான தோற்றமும் தேவை என்பதால் நேற்று அவளை முதலில்  வேலைக்கு வேண்டாமென்றேன. …”

” தட்ஸ் இட் .  நேற்றைய எனது எண்ணமும் அதுதான் .ஆனால் அதன் பிறகு நேற்று உங்களை அந்த பங்சனில் உங்களது அந்த  அலங்காரங்களோடு மரகதப்பாவை போல்  பார்த்த பிறகு ..நான் என் முடிவை மாற்றிக் கொண்டேன் …” ரசனை சுமந்து வந்த்து விஸ்வேஸ்வரனின் குரல் .அக்குரல் ஏனோ கமலினியினுள் நுழைந்து அவள் அகம் தொட்டது .




ஏதோ ஓர் உறுத்தல் உள்ளே இழையோட மெல்ல தலையசைத்தபடி பாரிஜாத்த்தை பார்க்க அவள் முகத்திலும் கமலினியை பற்றிய விஸ்வேஸ்வரனின் கூற்றை ஆமோதிக்கும்  புன்னகை .

” இப்போது சந்தேகம் போனதா …? இனி வேலையை ஒத்துக் கொள்ளலாம்தானே …? “

” யெஸ் சார் .தேங்க்ஸ் பார் யுவர் காம்ப்ளிமென்ட்ஸ் நான் இப்போதே வேலையில் சேர்ந்து கொள்கிறேன. .” கமலினி எழுந்தாள. .

” சௌமியை ஸ்கூலிலிருந்து கூப்பிட எப்போது போக வேண்டும் ….? ” பின்னால் விஸ்வேஸவரன் விசாரித்தபடி இருந்த போது அறையை விட்டு வெளியே வந்த கமலினியின் மனதில் தான் எதையோ மிஸ் பண்ணுவதாக …தனக்கு எதுவோ பிடிபடாதிருப்பதாக தோன்றிக் கொண்டே இருந்தது .

What’s your Reaction?
+1
22
+1
14
+1
1
+1
2
+1
1
+1
0
+1
0
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!