mayiladum solayile Serial Stories

Mayilaadum Sollaiyilae – 34

                                             34

எல்லோரும் வாங்க என குடும்பத்து உறுப்பினர்கள் அனைவரையும் கூப்பிட்டு அமர வைத்துவிட்டு கைகளை கட்டிக் கொண்டி தன்னை பார்த்த மணிமேகலையை மிக வெறுத்தாள் யமுனா .

இவள் மீது மயக்கத்தில் இருக்கும் போது அண்ணனிடம் இவளை பற்றி சொன்னது தவறுதானே …தன்னையே நொந்து கொண்டு அமர்ந்திருந்தாள் அவள் .

என்னம்மா …என்ன விசயம் …? ” தங்கையை சமாதானபடுத்தியபடி மணிமேகலைக்கு விழி கேள்வி கேட்டான் பார்த்தசாரதி .

தன் உதட்டின் மேல் விரல் வைத்து அவனை பேசாமல் இருக்குமாறு சைகை செய்துவிட்டு , அவன் மேல் சாய்ந்து விம்மிக் கொண்டிருந்த யமுனாவின் தோள.களை பற்றி தூக்கினாள் .தன் சேலை முந்தானையால் அவள் கண்களை துடைத்தாள் .

” அழாதே யமுனா .உன் பிரச்சினைகளை நான் தீர்க்கிறேன் .கீழே போ …” என்றாள் .

என் பிரச்சினையே நீதானே ….என பார்த்த யமுனாவின் தோள்களை தட்டினான் பார்த்தசாரதி .

” போம்மா …மேகா இப்போது வருவாள் ….” என்றான் . யமுனா வேறு வழியின்றி கீழே இறங்கி வந்துவிட்டாள் .

ஏதோ கான்பரன்ஸ் போல் எல்லோரையும் கூட்டி வைத்திக் கொண்டிருக்கிறாள் மணிமேகலை …இது தன்னை குடும்பத்தினரிடம் போட்டுக் கொடுக்க செய்யும் வேலை என தெரிந்தும் அதனை தடுக்கும் வழி தெரியாமல் அமர்ந்திருந்தாள் யமுனா .




ஏனென்றால் அனைவரிடமும் பேச வேண்டும் வாருங்கள் என அழைத்ததும் பார்த்தசாரதியே முதல் ஆளாக வந்து உட்கார்ந்திருந்தான் .அடுத்து மாதவி ….காவேரி …அரைமனதாக கங்கா …இவர்களில் யாரிடம் தன் மனக்குறையை கொட்டுவது என அறியாத தவிப்புடன் யமுனா …

” நான் ஒரு சைக்காலஜி ஸ்டூடன்ட் .மனித மனதின் விசித்திரங்களை அறிவதில் எனக்கு மிகுந்த ஆர்வம் உண்டு …” மணிமேகலை இப்படி ஆரம்பிக்க அவளை ஊருக்குள் தப்பி வந்து விட்ட கருப்பு ஓநாயை பார்க்கும் பார்வையை பார்த்தாள் யமுனா .

” நம் வீட்டில் நாம் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பிரச்சினை .அந்த எல்லா பிரச்சினைகளின!  பின்னணியிலும் தெய்வாம்மா இருக்கிறார் .அவருக்கான முன் கதை ஒன்று அத்தையிடம் இருக்கிறது .நமது குடும்பத்தின் மீது அவரது சாபம் இருக்கிறது .அந்த சாபம்தான் மாமாவை அல்ப ஆயுளில் போக வைத்தது .பார்த்தாவின் மண வாழ்வையும் , கங்காவின் மணவாழ்வையும் ….இப்போது யமுனாவின் மணவாழ்வையும் கூட அதுதான் கெடுத்துக் கொண்டிருக்கிறது . எனது படிப்பை அடிப்படையாக எடுத்துக் கொண்டால் இது எல்லாவற்றிறகும் காரணம் மன அழுத்தம்தான் .தோழிக்கு துரோகம் செய்து விட்டோமென்ற அத்தையின் குற்றவுணர்வுதான் இங்கே எல்லோருடைய வாழ்வின் மீது சோக உணர்வாய படிந்திருக்கிறது …”

” நீ என்ன சொல்ல வருகிறாய் மணிமேகலை …? என் மன பயம்தான் என் குழந்தைகளின் வாழ்வை பாதிக்கிறது என்கிறாயா …? ” மாதவியின் குரலில் கோபம் இருந!தது .

” அப்படியும் சொல்லலாம் அத்தை .ஏனென்றால் நம் மனம்  விநோதமானது . அதனை நமது கட்டுக்குள் வைத்திருந்தால் நம் சொல்படி கேட்கும் .அலை பாய விட்டு விட்டால் அதன் சொல்படி நாம் கேட்க வேண்டி வரும் .சாபமெதுவும் எனக்கு கிடையாது ்என் குடும்பத்தை அது பாதிக்காது ..்என நீங்கள் வெளிப்படையாக சொல்லிக் கொண்டாலும் ….உங்கள் உள் மனது …நான் தவறு செய்துவிட்டேன் …என அலறிக்கொண்டே இருக்கிறது . பழி வாங்குவேன் என சபதம் செய்துவிட்டு செத்துப் போன உங்கள் தோழியின் தோற்மும் , வார்த்தைகளும் உங்களை அறியாமலேயே உங்கள் அடிமனதில் விதைகளாக விழுந்து இன்று மரமாக வளர்ந்துவிட்டது .அதனால் தற்செயலாக இந்த குடும்பத்தில் நடந்து விட்ட சில துயர சம்பவங்களை நீங்கள் செய்துவிட்ட தவறுகளின் தண்டனையாக எண்ணி மனம் மறுகிக் கொண்டிருக்கிறீர்கள் ….”

” அதாவது …என்னை பைத்தியம் என்று சொல்கிறாய் …அப்படித்தானே …? ” மாதவியின் இந்த கேள்வியில் பார்த்தசாரதி எழுந்து அம்மாவின் அருகில் அமர்ந்து அவள் தோள்களை அணைத்துக் கொண்டான் .

” அம்மா … அப்படி ஒன்றும் இல்லை .நீங்கள் மணிமேகலையை கவனியுங்கள் .ப்ளீஸ் …” என்றான்.

அவன் கைகளை தட்டி விட்ட மாதவி ” புருசனை சிறு வயதிலேயே பறிகொடுத்து விட்டு நான்கு பிள்ளைகளையிம் , திரண ட சொத்துக்களையும் இத்தனை வருடமாக காத்து வந்திருக்கிறேன் .நான் பைத்தியமா …? ” கொதித்தாள் .

” பைத்தியமென ற பெரிய வார்த்தை சொல்லாதீர்கள் அத்தை .சிறு மன அழுத்தம் .தோழிக்கு துரோகம் செய்துவிட்டோமே என்ற கவலை…சாபமிட்டு விட்டாளே என்ற பயம் …என் குடும்பம் பாதிக்க படுமோ என்ற கவலை ….இப்படி  ஒரு மனம் .அதே நேரம் காதலித்ததை தவிர நான் என்ன தவறுசெய்துவிட்டேன் ….அவளது சாபத்திற்கு அடிப்படையே இல்லையே ….அந்த சாபத்தை பலிக்க விட மாட்டேன் , இப்படி ஒரு தைரிய மனம் .இந்த இரு மனங்களும் சேர்ந்து குழம்பி சிறு மூளை சங்கடம் ….”

” ஒரு வகையில் இந்த மூளை சங்கடம்தான் மிக சாதாரண குடும்பத்து பெண்ணான உங்களை இத்தனை நொத்துக்களை நிர்வகத்து , அழகாக நான்கு பிள்ளைகளையும் வளர்த்து ஆளாக்கிய தைரியத்தையும் கொடுத்தது .அதுவேதான் தற்செயலாக உங்கள் பிள ளைகளின் வாழ்வுல் நிகழ்ந்து விட ட துயரங்களை பெரிதுபடுத்தி கவலைபட வைத்திருக்கிறது .அந்த கவலையே உங்கள் பிள்ளைகளின் மனதில் நமக்கென ஒரு வாழ்வு கிடையாது என்ற உறுதியை கொடுத்து விட்டிருக்கிறது ….”

” ஓஹோ …என் பைத்தியக்காரத்தனத்தை என் பிள்ளைகளுக்கும் கொடுத்து விட்டேன் என்கிறாய் …?”

” திரும்பவும் பைத்தியம் என சொல்லாதீர்கள் அத்தை .இது மனபிறழ்வு …இல்லாத ஒன்றை இருப்பதாக நினைத்துக் கொள்வது .இது எல்லோருக்கும் வருவதுதான் .ஏன் …எனக்கே வந்த்து .இந்த குன்று …தெய்வாம்மா …என கேட்ட கதைகள் என் மனதையே சங்கடப்படுத்தி சில இயல.பான சம்பவங்களை கூட தெய்வாம்மாவின் சாபத்தோடு சம்பந்தபடுத்தி பார்க்க வைத்தது .கற்பனை உருவம் ஒன்றின் நடமாட்டத்தோடு இந்த குன்று கூட எனக்கு பயம் கொடுத்தது . அந்த பயத்தை போக்கத்தான் அன்று அந்த குன்றேற முடிவு செய்தேன் ….”




” வேண்டாம் …வேண்டாம் .அந்த தவறை மட்டும் செய்து விடாதே …அந்த குன்று சாப  பூமி .அங்கே போனவர்கள் யாரும் திரும்ப முடியாது ….” கத்தியபடி மாதவி எழுந்து வந்து மணிமேகலையை அணைத்துக் கொண்டாள் .

” போகமாட்டேன் அத்தை .உங்கள் மனதை பாதிக்கும் ஒரு செயலை நான் செய்யமாட டேன் .ஆனால் உங்கள் மனதை சமனப்படுத்தும் ஒரு செயலை நான் இப்போது செய்ய போகிறேன் .இதனால் தெய்வாம்மா …நிரந்தரமாக நம் குடும்பத்தை விட்டு …உங்கள் மனதை விட்டு போய் விடுவார்கள் …”

” நிஜமாகவா மணி .அப்படி நடக்குமா …? நீ ஏதாவது மந்திரம் கற்று வைத்திருக்கிறாயா …? அந்த தெய்வாவை விரட்டி விடுவாயா ….? ” ஆர்வம் பொங்க கேட்ட மாதவியை இழுத்து அணைத்துக் கொண்டாள் மணிமேகலை .

அது போல் ஏதாவது செய்து விட மாட்டாளா …என்ற ஏக்கத்துடன் நின்றிருந்தனர் யமுனாவும் , கங்காவும்.புரிந்தும் புரியாமலும் நின்றிருந்தாள் காவேரி .கை நீட்டி அவர்களையும் அருகே அழைத்த மணிமேகலை ….அவர்கள் கைகளையும் பிடித்துக கொண்டு ….

” நாம் எல்லோரும் சேர்ந்து அந்த தெய்வாம்மாவையும் , அவர்கள் சாபத்தையும் நம் வீட்டை விட்டு விரட்டுவோம் .வாருங்கள் ….” என்றாள் .

ஐந்து பெண்களும் திரும்பி பார்த்தசாரதியை பார்க்க , காக்கும் கடவுளின் நம்பிக்கை புன னகையோடு அவர்களை அழைத்தபடி வீட்டின் பின்புறம் வந்தான் .அனைவரும் அந்த குன்றை நோக்கி நடந்தனர்.

அந்த குன்றின் அடியில் சிலர் ஏதோ வேலை செய்து கொண்டிருந்தனர் .மண்வெட்டியும் , கடப்பாரையுமாக இருந்த அவர்களை பார்த்த மாதவியின் முகம் மாறியது .

குன்றை இடிக்க போகிறார்களா என்ன …?்அது சாபத்தை இன்னமும் அதிக்படுத்த அல்லவா செய்யும் …?்

மாதவி இன்னமும் மனம் கலங்க தொடங்கினாள் .

What’s your Reaction?
+1
3
+1
1
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!