kadak katru Serial Stories

Kadal Kaatru – 42

                                              42

” என்னை இங்கே வைத்துக் கொண்டால் உங்களுக்கு கொலுசு எப்படி கிடைக்கும் ..? ” பயத்தை மறைத்துக் கொண்டு நயமாக பேசி வெளியேறிவிட எண்ணி கேட்டாள் சமுத்ரா .

” எல்லாம் கிடைக்கும் .உன் பொண்டாட்டி வேணும்னா நீ சேர்த்து வைத்திருக்கும் பொருட்களையெல்லாம் கொண்டுட்டு வான்னா கொண்டாந்து தட்டிட்டு போறான் உன் புருசன் .கொலுசு மட்டுமில்லை எல்லாவற்றையும் வாரிக்கொண்டு நாங்கள் கொஞ்சநாட்கள் எங்கேயாவது மறைந்திருந்து விட்டு பிறகு விற்று காசாக்கிக் கொள்வோம் .கோடிக்கணக்கில் வரும் தெரியுமா ..? ” கருணாமூர்த்தியின் கண்கள் பேராசையில் மின்னியது .

யோகன் ் உயிரை பணயம் வைத்து சேமித்த பொருட்களை தன் முட்டாள்தனத்தால் இழக்க போகிறோமா …? என்றிருந்த்து சமுத்ராவிற்கு .

” சட்டவிரோதமாக தொழில் பார்க்கிறோமாம் .அதனால் எங்களை போலீசில் பிடித்து கொடுக்க போகிறார்களாம் .அந்த ராஜபாண்டியும் , உன் புருசனும் .எல்லா ஏற்பாடும் செய்துவிட்டார்கள் .நாங்கள் விரலிடுக்கில் கூட வழிந்து விடுவோம்னு அவனுங்களுக்கு தெரியலை .இதோ கர்நாடாகா போக எல்லா ஏற்பாடும் பண்ணிவிட்டோம் .ஒரு போனஸ் போல் தானாக நீ வந்து மாட்டினாய் .இப்போது உன்னை வைத்து இன்னமும் நிறைய பொருட்களை அள்ளிக்கொண்டு போக போகிறோம் “

” இந்த தொழில் செய்வதானால் நீங்கள் லைசென்ஸ் வாங்கி செய்யலாமே .ஏன் இப்படி திருட்டுத்தனமாக செய்கிறீர்கள் …? ” இத்தனை நாட்கள் இந்த திருட்டுத்தனத்தை அறியாமல் போனேனே …என மனதிற்குள் நொந்தபடி கேட்டாள்.

” என்னது ..




லைசென்ஸ் எடுத்து செய்யனுமா ? அந்த பைத்தியக்காரத்தனத்தை உன் புருசன்தான் செய்வான் .அப்படி பண்ணினால் இதில் என்ன லாபம் இருக்கும் .உன் புருசனுக்கும் ,அந்த ராஜபாண்டிக்கும் இதில் வரும் பணம் பெரிதில்லை .வேறு பல தொழில்களிலும் சம்பாதித்து கொண்டிருக்கிறார்கள் .அதனால் பொழுது போக்கு என்று இதை செய்து கொண்டிருக்கிறார்கள் .நாங்கள் அப்படியா ..? இதை வைத்துதான எங்கள் பிழைப்பே ஓடுகிறது “

” ஏய் போய் கதவெல்லாம் பூட்டிட்டு வா ” செண்பகத்தை அனுப்பிவிட்டு கயிறு ஒன்றை எடுத்துக் கொண்டு தன்னை கட்ட நெருங்கிய கருணாமூர்த்தியிடம் ” வேண்டாம் என்னை தொட்டால் என் கணவர் உன்னை சும்மா விட மாட்டார் ” எச்சரித்தாள் .

” சும்மா இருக்க மாட்டான் .அது தெரியும் . .அவன் வரட்டும் .வந்தால்தானே எங்களுக்கு வசதி ” சோபாவோடு சமுத்ராவை சேர்த்து இறுக்கி கட்டினான் .

” அப்படியே வந்தாலும் அந்த அபூர்வ பொருட்களை உன்னிடம் கொடுக்க நான் அனுமதிக்க மாட்டேன் ” பளாரென அவள் கன்னத்தில் அறைந்தான்

” திமிராடி உனக்கு அது எப்படி அவன் கொடுக்காமல் போகிறான்னு நான் பார்க்கிறேன் “

” நிச்சயம் கொடுக்க மாட்டேன் கருணாமூர்த்தி ” யோகனின் குரல்தான் .ஆனால் வீட்டினுள்ளிருந்து வர , எல்லாரும் திரும்பி பார்த்தனர் .மாடிப்படி வழியே இறங்கி வந்து கொண்டிருந்தான் யோகன் .

” வாசல் கதவை மூடியவன் மொட்டைமாடி கதவை விட்டு விட்டாயே ..? ” எதைப் பிடித்து மேலே போய் கீழே வந்தானோ ..யோகனின் உடையெல்லாம் புழுதியாக இருந்த்து .

அழுத்தமான காலடிகளுடன் வந்து நின்றவனின் பார்வை சமுத்ராவை ஆராய்ந்த்து .அவள் முகத்தை திருப்பி கன்னத்தில் கைத்தடத்தை பார்த்தவன் வெறியோடு கருணாமூர்த்தியை பந்தாட ஆரம்பித்தான் .” அடித்தாயா அவளை …?” முகம் , கை , கால் என ஒரு இடம் மீதமில்லாமல் அடித்து துவைத்தான் .

அலறிய செண்பகம் சமுத்ராவின் கட்டுக்களை அவிழ்த்து விட்டு ” போய் காப்பாற்றும்மா ” கெஞ்சினாள் .யோகனின் ரௌத்ரம் அருகே நெருங்க சமுத்ராவையும் அச்சம் கொள்ள செய்த்து .ஆனால் விட்டால் யோகன் கருணாமூர்த்தியை கொன்றே விடுவானென தோன்றிவிட வேறு வழியின்றி இருவருக்குமிடையே பாய்ந்து இருவரையும் பிரித்தாள் .

” அவரை விடுங்க யோகன் .போலீசில் சொல்லி விடலாம் “

” சொல்லிவிட்டுதான் வருகிறேன் . இப்போது வந்து விடுவார்கள் .இனிமேல் காலம் பூராவும் உங்களுக்கு களிதான் ” இறுதி உதை ஒன்றை கருணாமூர்த்தியின் இடுப்பில் கொடுத்தான் .

இவனிடம் அடிபட்டு சாவதற்கு ஜெயில் எவ்வளவோ மேல் , இதற்கு மேல் வெளியே இருந்தாலும் யோகேஷ்வரனும் , ராஜபாண்டியும் தங்களை நிம்மதியாக இருக்கவிட மாட்டார்கள் என்பதை உணர்ந்த கருணாமூர்த்தியும் ,செண்பகமும் விருப்பமாகவே போலீஸ் ஜீப்பில் ஏறினர் .

” ரொம்ப நன்றி சார் .இந்த குரூப்பில் ஒவ்வொருவராக பிடிக்க உதவிக் கொண்டு இருக்கிறீர்கள் .ராஜபாண்டி சாரிடமும் எங்கள் நன்றியை சொல்லுங்கள் ” அந்த போலீஸ்  ஆபிசர் யோகனின் கை குலுக்கினார்.

” உங்கள் மனைவி எப்படி சார் இங்கே …? ” அந்த ஆபிசர் கேட்டார் .

” ” ம் …கணவனுக்கு எல்லா விசயத்திலும் உதவி செய்யனுங்கிற உயர்ந்த கொள்கை வச்சிருக்கிறவங்க என் மனைவி .அவுங்க ஒரு ரிப்போர்ட்டர் தெரியுமா ..? அந்த தைரியம்தான் எனக்கு முன்னரே இங்கே வந்து என் வேலையை எளிதாக்கிட்டு இருந்தாங்க .” வெளிப்பார்வைக்கு தன் முட்டாள்தனத்தை பூசி மெழுகி பாராட்டுவது போல் பேசிக்கொண்டிருந்தாலும் உள்ளூர யோகனின் கோபம் புரிய பயத்துடன் எச்சில் விழுங்கிக் கொண்டாள் சமுத்ரா .

அப்போது  ராஜபாண்டி யோகனுக்கு சொன்ன வேலை ..இங்கே கருணாமூர்த்தியிடம்தான் போல , அது தெரியாமல் தானும் இங்கே வந்திருக்கிறோமென புரிந்து கொண்டாள் சமுத்ரா .

யோகன் காரினை செலுத்திய வேகத்திலும் , பார்க்கிங்கில் காரை நிறுத்திவிட்டு , அவள் கைகளை பற்றி ஏறத்தாழ இழுத்துக்கொண்டு அறைக்கு நடந்த்திலும் இன்னமும் பய்ந்தாள்.இவன் நிச்சயம் அறையினுள் நுழையவும் என்னை அறைய போகிறான் என்றே நினைத்தாள் .கருணாமூர்த்தியை புரட்டி எடுத்த யோகனின் வெறி நினைவு வந்து சமுத்ராவை நடுங்க வைத்தது .

ஆனால் அறையினுள் சென்று கதவை பூட்டியதும் சமுத்ராவை இறுக்கமாக அணைத்துக் கொண்டான் யோகன் .” ஏன்டி இப்படி பண்ணுகிறாய் ..? அங்கே கஷ்டப்பட்டு வீட்டினுள் இறங்கி வரும்போது சோபாவில்  கட்டிப்போடப்பட்டு உன்னை பார்த்ததும் ஒரு நிமிடம் என் உயிர் என்னிடம் இல்லை தெரியுமா ..?  ” வலிமையான அணைப்பிற்கு எதிராய் குரல் குழைந்திருந்த்து .

யோகனின் அன்பில் சமுத்ராவிற்குமே கண் கலங்க தொடங்கியது .பதிலே சொல்லாமல் அமைதியாக நின்றபடி அவன் அணைப்பை  அனுபவித்துக் கொண்டிருந்தாள் .எப்போதும் இல்லாமல் இப்போது மிக மிக பாதுகாப்பாய் இருப்பது போன்ற நிறைந்த உணர்வொன்று அவளுள் பரவியது .யோகனை பற்றி நிறைய நல்ல விசயங்களை வேறு இப்போது தெரிந்து கொண்டிருக்கிறாளே ….

” இனி ..இல்லை .உங்களிடம் சொல்லாமல் எங்கேயும் போவதில்லை ” மெல்லிய குரலில் கணவனுக்கு உறுதியளித்தாள் .

” நிச்சயமாக ..” என்று நீட்டியவனின் கைகளில் தன் கைகளை வைத்து அழுத்தியவள் அப்படியே அவன் கைகளை பற்றியபடி ் ” லாவண்யா பற்றி சொல்லுங்கள் ” யோகனின் கண்களுக்குள் பார்த்தபடி அழுத்தி கேட்டாள் .




தனது போனை அவளிடம் நீட்டினான் யோகன் ” நான் சொன்னால் நம்ப மாட்டாய் ..நீயே அவளிடம் பேசு ” என்றான் .

” இல்லை நீங்களே சொல்லுங்கள் ” அவன் போனை ஒதுக்கினாள் .

” முன்பே சொல்லியிருக்கிறேன் சமுத்ரா .நீ நம்பவில்லை “

” என்ன சொன்னீர்கள் ..? எனக்கு நினைவில்லை ..” என்றவளை உற்று பார்த்தான் .

” ஈஸ்வரமூர்த்தி ..??” மெல்ல கேட்டாள் .

” அவனை எப்படி உனக்கு தெரியும் …?”

” கருணாமூர்த்தியும் , செண்பகமும் ஏதோ அரைகுறையாய் உளறினார்கள் .இப்போ நீங்க சொல்லுங்க ”  

” என்னிடம் இருக்கும் பொருட்களுக்காக லாவண்யாவை என்னுடன் பழக கருணாமூர்த்தியும் , செண்பகமும் கட்டாயப்படுத்த, நான் கருணாமூர்த்தியை சந்திக்க செல்வதை தவிர்த்து ஈஸ்வரமூர்த்தியை அனுப்ப தொடங்கினேன் .அவர்கள் இருவருக்குமிடையே பரஸ்பரம் பிடித்து போக தொல்லை பிடித்த அப்பா , அம்மாவிடமிருந்து தப்ப ஈஸ்வருடன் ஓடிப்போக முடிவு பண்ணினாள் லாவண்யா .தங்கள் செலவிற்காக அந்த கொலுசினையும் எடுத்துக் கொண்டு போனதுதான் அவர்கள் செய்த தவறு .கருணாமூர்த்தி வேட்டை நாயாக இருவரையும் விரட்ட துவங்க ,இனி இந்த கொலுசினை வைத்திருந்தால் ஆபத்து என எண்ணி ,இருவரும் என்னை சந்தித்து அதனை என்னிடம் ஒப்படைத்தனர் .நான் அவர்கள் திருமணத்தை முடித்து வைத்து அவர்கள் மறைந்து வாழ்வதற்குரிய ஏற்பாடுகளை செய்தேன் .கையில் மாட்டினால் இருவரையும் கொன று விடும் வெறியுடன் கருணாமூர்த்தி இருப்பதால் அவர்கள் மறைந்தே வாழ்கிறார்கள் .இனி அவர்கள் வெளியே வரலாமென்று நினைக்கிறேன் .கருணாமூர்த்தியும் ,செண்பகமும்தான் அரசாங்க விருந்தாளி ஆகிவிட்டார்களே “

” அது ..என்ன கொலுசு ..? “

” அது ஏதோ ஒரு சோழ மன்னர் தன் ராணிக்காக ஸ்பெசலாக செய்ததாம்.மிகப் பழமையானது .நான் அதனை அரசாங்கத்திடம் ஒப்படைத்து விட்டேன் .அது தெரியாமல் என்னிடம் இருப்பதாக நினைத்துக் கொண்டு உன்னை அனுப்பி வைத்தார்கள் “

” ஓ…” என்று குவிந்த மனைவியின் இதழகளை பார்த்தபடி ” நம்புகிறாயில்லையா முதரா ..? ” என்றான் .

” நிச்சயமாக ..” என்ற சமுத்ராவின் பார்வை யோகனின் மேல் படிந்த்து .” எவ்வளவு தூசி பாருங்கள் ” என்றபடி அழுக்கு படிந்திருந்த அவன் உடைகளை தட்டிவிட்டாள் .” போய் குளித்து விடுங்கள் ” என்றபடி நிமிர்ந்தவள் யோகனின் பார்வையில் சிவந்தாள் .

பார்வையை மனைவியின் உடலில் படிய விட்டபடி ” உன் உடைகள் கூட அழுக்காகி விட்டன முத்ரா .நான் வேண்டுமானால் ” என்றபடி தூசி தட்ட கைகளை கொண்டு வர , அவன் கைகளை பிடித்து நிறுத்தி ” அ…அதெல்லாம் நான் பார்த்துக் கொள்கிறேன் .நீங்கள் முதலில் போய் குளியுங்கள் ” அவன் கண்களை சந்திக்கும் திராணியின்றி தரையை பார்த்தபடி கூறினாள் .

” ம் …” என்ற பெருமூச்சுடன் துண்டினை எடுத்துக் கொண்டு குளியலறையினுள் நுழைந்தான் .தூசி படிந்த உடையுடன் யோகன் தன்னை அணைத்ததால் அழுக்காகி விட்ட தன் உடைகளை குனிந்து பார்த்துக் கொண்ட சமுத்ரா ஏதோ ஓர் சிலிர்ப்பில் உடல் உருக தனது உடைகளை மாற்றினாள் .

ஈஸ்வரும் …ஈஸ்வரமூர்த்தியும் வேறு வேறு . லாவணயா கணவனுடன் பத்திரமாக சந்தோசமாக இருக்கிறாள் .இந்த விபரங்கள் கொடுத்த ஆனந்தத்தில் மிகுந்த திருப்தியுடன் கட்டிலில் அமர்ந்து பின்னால் சாய்ந்துகொண்டாள் .அவன்தான் உன் மேல் ஜொள் விட்டுக் கொண்டு திரிந்தானே , என்ற செண்பகத்தின் வார்த்தை நினைவு வர, அப்படியா யோகன் இருந்தான் என ஆராய தொடங்கினாள் .

ஏனோ நிறைய சந்தர்ப்பங்கள் அப்படித்தானென அவளுக்கு கூற , நம்ப முடியாத வியப்புடன் தலையணை ஒன்றை எடுத்து மடியில் வைத்துக் கொண்டு டிவி போட்டுக் கொண்டாள் .

குளித்து விட்டு குளியலறையை விட்டு வந்த யோகன் , சமுத்ராவை பார்த்தபடியே வந்து அருகில் அமர்ந்தான் .

” என்ன பார்த்துக் கொண்டிருக்கிறாய் முத்ரா …? ” ஒப்புக்காய் ஏதோ கேட்டபடி அவளருகில் நெருங்கி அமர்ந்தான் .

” சும்மா …ஏதோ …” …குளித்துவிட்டு சரியாக துடைக்காமல் நீர்த்திவலைகள் உருண்டிருந்த யோகனின் வெற்றுத் தோள்களில் பதிந்த தன் பார்வையை கஷ்டப்பட்டு விலக்கியபடி முணுமுணுத்தாள் .

” ம் …ஏன் முத்ரா அழுதால்தான் நீ அதுபோலெல்லாம் சமாதானப்படுத்துவாயா ..? ஆண்பிள்ளையாக போய்விட்டோமே என்றிருக்கிறது .இல்லையென்றால் அழுதிருப்பேன் .” குறும்பு வடிந்த்து குரலில் .

என்ன சொல்கிறான் இவன் ..புரியாமல் பார்த்தாள் சமுத்ரா .அவள் மடியில் வைத்திருந்த தலையணையை உருவியவன் சட்டென மடியில் தலை வைத்துப் படுத்துக் கொண்டு கண்களை மூடிக்கொண்டான்  .” கொஞ்ச நேரம் என்ன …? ” என்று கெஞ்சலாய் ஒரு அனுமதி வேறு .

இந்த நினைப்பில்தான் இன்று செல்லியை சமாதானபடுத்தியபோது அந்த பார்வை பார்த்தானா ..? 
ஒன்றும் பேசாமல் அருகில் கிடந்த துண்டினை எடுத்து சரியாக துடைக்காமல் ஈரம் சொட்டிக் கொண்டிருந்த யோகனின் தலையை துடைக்கத் தொடங்கினாள் .கண்களை திறக்காமலேயே ” தேங்க்ஸ் ” என்றவன் இன்னமும் வசதியாக மடியில் சாய்ந்து கொண்டான் .

” நாளை …” என்று ஆரம்பித்த சமுத்ராவின் இதழ்களில் விரல் வைத்தவன் ” இரவு ஒரு மணிக்கு மாடசாமிக்கு ப்ளைட் சமுத்ரா .நான் விமானநிலையம் போக வேண்டும் .அதுவரை தூங்குகிறேன் .இப்போது ஒன்றும் பேச வேண்டாம் ” முகத்தை திருப்பி அவள் மடியில் புதைத்து கொண்டவன் ஐந்தே நிமிடங்களில் தூங்கிப போனான் .

இப்போது குழந்தை போல் என் மடியில் தூங்கிக் கொண்டிருக்கும் இவன்தானா …கொஞ்ச நேரம் முன்னால் கருணாமூர்த்தியை அந்த அடி அடித்தான் .ஆச்சரியமாக அவனை பார்த்தபடியே அவன் உறக்கம் கலையாமலிருக்க வேண்டி அசையாமல் அமர்ந்திருந்தாள் சமுத்ரா .

சுருண்ட முடியையும் , அகன்ற நெற்றியையும் , கூர் நாசியையும் , அடர் மீசையையும் அணு அணுவாய் ரசித்த அவள் விழிகள் அவனது வடிவான இதழ்களில் நிலைத்தபோது 
யோகனின் செல் ஓசையெழுப்ப அவனது உறக்கம் கலையக்கூடாதே என அவசரமாக அதை கட் பண ணிவிட்டு பார்த்தாள் .அழைப்பு ..சாவித்திரியிடமிருந்து .இவளை எப்படி மறந்தேன் ..? இது இவளுக்கான நேரமாயிற்றே ..அதுதான் தேடுகிறாள் .இனிமை மறைந்து வெறுமை பரவியது மனதில் .மீண்டும் போன் வர ஆரம்பிக்க , சுவிட்ச் ஆப் செய்தாள் .

யோகனின் தலையை மெல்ல தலையணை மீது எடுத்து வைத்துவிட்டு , எழுந்து போய் சோபாவில் அமர்ந்து கொண்டாள் .அழக்கூடாது …என்று நினைத்தபடியே மெல்ல விசும்ப ஆரம்பித்தாள்

What’s your Reaction?
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
Subscribe
Notify of
guest

2 Comments
Inline Feedbacks
View all comments
Mai
Mai
4 years ago

Update plzz

ra
ra
4 years ago

wat abt sell amma’s second marriage?

2
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!