mayiladum solayile Serial Stories

Mayilaadum Sollaiyilae – 19

                                             19

 

மாதவி வீட்டின் பின்புற வாசலில் அமர்ந்திருந்தாள் .வழக்கமான பரபரப்பின்றி நிதானமாக நீலவானத்தை , இன்னமும் மறையாத கீற்று நிலவை , சில நட்சத்திரங்களை ரநித்தபடி இருந்தாள.பொதிகை மலைக்கே உரிய காற்று சிலுசிலுக்க உடலை விருப்பமாய் சிலிர்த்துக் கொண்டாள..

” காபி சாப்பிடுங்கம்மா ….” நுரை பொங்கும் காபியை அவள் முன் நீட்டினாள் சாவித்திரி. காபியின் வாசத்தை இழுத்து நுகர்ந்தபடி சாவித்திரிக்கு காலை டிபனுக்கான வேலைகளை சொன்னாள் மாதவி .பவ்யமாக கேட்டுக் கொண்டு போனாள் சாவித்திரி.

சாவித்திரி குளித்து சுத்தமாக திருநீறு துலங்க இருந்தாள் .அருமையாக சமைத்தாள் .விதம் விதமாக பலகாரங்கள் செய்தாள் .வீட்டினர் ஒவ்ஙொருவரின் …விருப்பத்தை கேட்டறிந்து சலிக்காமல் அவரவர்க்குரியதை சமைத்தாள் .

மாதவி வெகு நாட்களுக்கு பிறகு தன்னை மிக இலகுவாக உணர்ந்தாள் .மூன்று பெண் பிள்ளைகளும் ,ஒரு ஆண் பிள்ளையுமாக , சுற்றி சூழ்ந்து வந்த பிரச்சனைகளுமாக எந்நேரமும் ஏதாவது பரபரப்பிலேயே இருந்து வந்தவளுக்கு …இது போன்ற வேலைகளற்ற பொழுதுகள் மிக விருப்பமாக இருந்தன.

இதோ இது போல் நிதானமாக அமர்ந்து சொட்டு சொட்டாக காபியை ரசித்து குடிக்கும் பொழுதுகளை அவளது திருமணத்திற்கு முன்புதான் பெற்றிருந்திருக்கிறாள் .அதன் பின் நீண்ட வருடங்களுக்கு பிறகு இதோ இப்போதுதான் …

கடைசி சொட்டு காபியையும் ருசித்து உள்ளிறக்கிய பிறகு காபி தம்ளரை கீழே வைத்தாள் .

” குட்மார்னிங் அத்தை ….” அவள் அருகே வந்து அமர்ந்தாள் மணிமேகலை .அவளும் கையில் காபி வைத்திருந்தாள் .

” இப்படி உடகார்ந்து காபி குடிப்பது ரொம்பவே நல்லா இருக்கு இல்ல …? ” அபிப்ராயம் கேட்டாள் .

” இதெல்லாம் உன்னால்தான் என்று சொல்லிக் காட்டுகிறாயாக்கும் …? “

” ஏன் …என்னால் நடந்த்தை சொன்னால் தப்பா …? ஒன்று சொன்னால் தப்பாக எடுத்துக் கொள்ளாதீர்கள் அத்தை.தேவையான வசதிகள் இருந்தும் அதை அனுபவிக்க தெரியவில்லை உங்களுக்கு .இப்படியா ………..இருப்பீர்கள் ….?

” அந்த இடைவெளி விட்ட இடத்தில் நீ போட நினைத்த வார்த்தை முட்டாள்தனமாகத்தானே ….? “

” ஹி ….ஹி …அப்படி ஒன்றும் இல்லை ….”

” இது போல் வேலைக்கு ஆள் வைத்துக் கொள்ள எனக்கு தெரியாதா …? அப்படி வைக்காமல் இருந்த்தற்கு சில காரணங்கள் இருந்தன …”

” என்ன பெரிய காரணம் …வேலை செயதுதான் என் துயரங்களை மறக்கிறேன் ….இது போன்ற சென்டிமெனடுகளை தானே ….”

” உன்னை பார்த்தால் துன்பத்தின் சாயலே இன்றி வளர்ந்தவள் போல் தெரிகிறது .உனக்கெல்லாம் எங்கள் வேதனை புரியாது …”




” என்ன பெரிய வேதனை …நம் நாட்டில் சாப்பிட உணவில்லாமல் , உடுக்க துணியில்லாமல் , தலைக்கு மேலே கூரை இல்லாமல் எத்தனை லடசக்கணக்கான பேர் இருக்கின்றனர் தெரியுமா …? அவர்களின் துன்பத்தை விட பெரியதா உங்களுடையது …? “

உடுத்து துணியும் , திங்க சோறும் கிடைத்தால் மட்டும் போதுமென்கிறாயா …? “

” இதுதான் மனித வாழ்வின் முக்கிய மூலதனம் .அது அள்ள அள்ள குறையாமல் உங்களுக்கு கிடைக்கிறது .பிறகும் தேவையில்லாத கற்பனைகளை செய்து கொண்டு மனதை புண்ணாக்கி கொண்டால் என.ன செய்வது …? “

” என் வேதனை உனக்கு தெரியாது ….”

” தெரியும் அத்தை .எனக்கு தெய்வா அம்மாவை பற்றி தெரியும் ….”

மாதவி அவளை திரும்பி உற்று பார்த்தாள் .

” என்ன சொல்ல வருகிறாய் …? “

” உங்கள் ரகசியத்தை நான் அறிவேன் என்கிறேன் …”

” நான் கூட ….உன் ரகசியத்தை அறிந்திருக்கிறேன் என நினைக்கிறேன் ….” மாதவியின் மர்ம குரலில் திடுக்கிட டாள்மணிமேகலை .

” ர…ரகசியமா …எ…என்னிடமா …? “

” ஆமாம் .நிறைய இருக்கிறது .அதில் இதோ இந்த அளவு கொஞ்சூண்டு நான் தெரிந்து கொண்டேன் ….” தன் கையை கொஞ்சமென ஜாடை காட்டினாள் மாதவி.

மணிமேகலை அந்த வீட்டிறகு வந்த நாளிலிருந்து முத்ன் முறையாக மனம் கலங்கினாள் .

” அ…அப்படி எதுவும் …என்னிடம் …”

” இல்லையா ….உன் அம்மா , அப்பா , உன் உறவினர்கள்  பற்றி சொல்லேன் கேட்போம் ….” மணிமேகலை சொல்லப் போகும் தகவல்களுக்காக காதை தீட்டிக் கொளபவளை போல் அவள் புறம் திரும்பி அமர்ந்து கொண்டாள் மாதவி .

” அ…அது …என் அப்பா அம்மா துபாயில் இருக்கிறார்கள் .நான் இதையெல்லாம் முன்பே சொல்லியிருக்கிறேனே …”

” சொன்னாயா என்ன …? சரி அவர்களை வரச் சொல்லேன் ….”

” எ…எதறகு …? “

” என் வீட்டிற்கு வந்த மருமகள வீட்டினரை  பற்றி நான் தெரிந்து கொள்ள வேண்டாமா …? “

” அ…அவர்களுக்கு அங்கே நிறைய வேலை .இங்கே வர முடியாது ….”

” சரி …போன் நம்பராவது கொடு .பேசுகிறேன் ….”

மணிமேகலை உதட்டை கடித்தபடி அமர்ந்திருந்தாள் ்மாதவி அவளை வேடிக்கை பார்த்தாள் .ஐந்தே நிமிடங்கள் தான் .தன்னை சுதாரித்துக் கொண்டு நிமிர்ந்து விட்டாள் மணிமேகலை .

” இப்போது உங்களுக்கு என்ன வேண்டும் அத்தை …? “

” நீ இந்த வீட்டிற்குள் வந்த காரணம் தெரியவேண்டும் .இந்த வீட்டிற்குள் வந்த அடிப்படை தெளியவேண்டும் ….”

” சொல்கிறேன் .பதிலுக்கு எனக்கு உங்கள் ரகசியம் தெரியவேண்டும் .தெய்வா அம்மாவை பற்றிய விபரங்களை எனக்கு சொல்லவேண்டும் ….”

” ஏய் …என னடி என் வீட்டிற்குள் உட்கார்ந்து கொண்டு என்னிடமே பேரம் பேசுகிறாயா ….? “

” கூல் அத்தை .எதற்கு இந்த டென்சன் .நம் இருவருடைய நோக்கமும் இந்த குடும்பம் சீர் பட வேண்டுமென்பது தான்.இருவரும் மனம் விட்டு பேசிக் கொளவேமே …”

” அப் படி எந்த அவசியமும் எனக்கு இல்லை ….”

” எனக்கு இருக்கிறது .நான் உங்களை விடமாட்டேன் ….”

மாதவி ஆத்திரத்துடன் மணிமேகலை தோள்களை பற்ற , மணிமேகலை பதிலுக்கு மாதவியின் தோள்களை பற்றினாள் .

” அம்மா ….மணிமேகலை …்என்ன இது …? ” இருவரையும் அதட்டியபடி வந்து நின்றான்  பார்த்தசாரதி . .

” உன் பொண்டாட்டியோட அப்பா நம்பர் வேணும் எனக்கு .கொடுக்க சொல்லு நான் பேசனும் ….”

” சரிம்மா தர சொல்றேன் .மணிமேகலை எழுந்து வா .வீட்டை சுற்றி ஒரு வாக் போகலாம் ….” அவளை கிளப்பினான் .மணிமேகலை அவசரமாக எழுந்து நடக்க தொடங்க , மாதவி அவள் முதுகை பார்த்து புன்னகைத்தாள் .

” என்ன ஆச்சு மேகா ….? ” நடந்தபடி கேட்ட பார்த்தசாரதியின் கையை பிடித்த மணிமேகலை சட்டென அவன் தோள்களில் சாய்ந்தாள் .

” அத்தை என்னை வீட்டை விட்டு விரட்ட நினைக்கிறார்கள் ….”

பார்த்தசாரதி யோசனையாக அவளை பார்த்தான் .

” என்னை விரட்டிடுவீங்களா பார்த்தா …? ” மணிமேகலை குரல் கரகரக்க , பார்த்தசாரதி பதிலின்றி தலையசைத்தான் .




” இதையெல்லாம் நாம் பிறகு பேசலாம்மேகா ….”

அரை குறை சமாதான மனதுடன்  நடையை தொடர்ந்த மணிமேகலை பார்த்தசாரதியின் கையை விடவில்லை .கோர்த்து பிணைத்த படி நடந்தாள் .

” ஆனால் ஒரு நாள் நீ இந்த வீட்டை விட்டு போய்தானே ஆக வேண்டும் மணிமேகலை ….” பார்த்தசாரதியின் விடுதல் பேச்சில் அதிர்ந்த மணிமேகலை அவன் கையை உதறிவிட்டு மாடியேறி போய் அறைக்குள் நுழைந்து கதவை பூட்டிக் கொண்டாள் .

” இல்லை …நான் இந்த வீட்டை விட்டு போக மாட்டேன் ….” கைகளை பிணைந்தபடி அறையினுள் குறுக்கும் நெடுக்குமாக நடந்தாள் .நகத்தை கடித்து துப்பினாள் .

சன்னலருகே போய் நின்றவளின் பார்வையில் அந்த குன று பட அதனை கூர்ந்து பாரத்தபடி நின்றாள் .தயங்கி …தயங்கி …அதனை அளந்தாள் .

” தெய்வாம்மா ….” மெல்ல உச்சரித்து பார்த்தாள் .

” ம்ஹூம் …இதை விடமாட்டேன் .இதறகு ஒரு முடிவை நானே கண்டுபிடிக்கிறேன் …”

” வெளியிலேயே நின்று பார்க்கையில் பிரச்சினைகள் பெரிதாகத்தான் இருக்கும் .உள்ளே இறங்கிவிட்டால் சாதாரணமானதாகி விடும் …நான் பிரச்சினையின் உள்ளே இறங்க போகிறேன் ….” குன்றை பார்த்தபடி இதை சொன்னாள் மணிமேகலை .

அன்றே அந்த குன்றின் மீது ஏறிப் பார்க்கும் முடிவை எடுத்தாள் .

What’s your Reaction?
+1
4
+1
3
+1
0
+1
0
+1
0
+1
0
+1
1
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!