kadak katru Serial Stories

Kadal Kaatru – 27

                                             27

இந்த மண்புழுக்களெல்லாம் ஆந்திரா வரை போகுதும்மா ” புழுக்களை சேகரித்துக் கொண்டிருந்த பெண்கள் கூறினார்கள் .

” இது எதற்கு உதவும் .? “

” விவசாயம் …பெரிய மீன்களுக்கு உணவாக …ஏதோ மருந்திற்கு என்று நிறைய சொல்லுவங்க .இப்போ எங்களுக்கு இது ரொம்ப உதவி பண்ணுது .தண்ணியில்லாம …மீனும் இல்லாம …இப்படி புழுவை சேகரிச்சிட்டு இருக்கோம் ” அந்த பெண்ணின் புலம்பலை கேட்டதும் நிச்சயம் இந்த பெண்களின் ஜீவனத்திற்காக வேறு ஏற்பாடுகள் செய்ய வேண்டுமென சமுத்ராவிற்கு தோன்றியது .

” இதனை எவ்வளவு நாட்களாக செய்கிறீர்கள் ..? இதனால் உங்களுக்கு எவ்வளவு லாபம் வருகிறது …? “

” லாபமா …? வயித்து பாடு ஓடினால் போதாதுங்களாம்மா …? முந்தில்லாம் நிறைய பேர் இதை வித்து தர்றோம்னு ஏமாத்தி வெலயை அடிச்சி பேசி வாங்கிட்டு போனாங்க .எங்களுக்கு காசு கை சேரலை .இப்போ நம்ம சின்ன ஐயா வந்தா பொறவு , அந்த ஏமாத்துக்காரங்களை விரட்டிட்டு அவரே கொஞ்ச பேர அனுப்பி வசதிகள் பண்ணி ் இருக்கிறாரு .அவுங்க கொஞ்சம் நாயமான வெலையில வித்து தர்றங்க “

விற்று தருவதாக கூறி ஏமாற்றிக் கொண்டிருந்த சிலரை விரட்டிவிட்டு , தானே இதற்காக சில ஏஜன்டுகளை யோகன் நியமித்திருக்கிறான் என உணர்ந்தாள் சமுத்ரா .

எங்கும் …எல்லா இடங்களிலும் இந்த எளிய மக்கள் யோகனின் புகழ் பாடுபவர்களாகவே இருந்தனர் .அவளும் கண்ணில் விளக்கெண்ணெய் ஊற்றிக் கொண்டு அவனிடம் ஒரு சிறு குறைக்காக அலைகிறாள் .ஆனால் சிக்கவில்லை .இப்படி அவரவர்க்கு தக இந்த மக்களை தன் கைக்குள் வசப்படுத்தி வைத்திருப்பதால்தான் தைரியமாக தன்னை இவர்களிடம் விசாரிக்க அனுப்பினானோ …? இந்த மக்கள் அனைவருக்கும் ஹீரோவாக இருப்பவன் …எனக்கு மட்டும் ஏன் வில்லனாக மாறிப் போனான் ?

விருப்பமின்றி பெண்களை தொடுவதில்லை என்றவன் அதே போல்தானே நாகரீகமாக நடந்து கொள்கிறான்.சில நாட்கள் அவன் அயர்ந்து உறங்குகையில் மெல்ல அருகிலிருந்து பார்த்திருக்கிறாள் .அமைதியாய் உறங்கும் ஒரு குழந்தையாகத்தான் தோன்றும் அவன் முகம்.தூக்கத்தில்தான் ஒருவரது இயல்பு முகத்தில் தெரியுமாமே ..? .இப்போது அமைதியாகத்தானே தோன்றுகிறான் …? விழி திறந்த்தும் அந்த புயல் வேகம் ஏன் ..? யோகன் தூக்கத்தில் லேசாக அசைய இவள் வேகமாக உள்ளே ஓடி வந்துவிட்டள்.




அன்று காலையில் மென்மையாக அவள் காதுகளை வருடிய யோகனின் கை சூடு இன்னமும் அவள் காதுகளில் இருந்த்து .எப்படி அதுவரை உணராமல் யோகனை அருகிருக்க விட்டோமென்ற குழப்பம் இன்னமும் சமுத்ராவிற்கு தீரவில்லை .இப்போதைக்கு  அவளுக்கு தோன்றியதெல்லாம் யோகனை விட்டு மிக விலகி இருக்க வேண டும் என்பது மட்டுமே .

இவனுள்ளிருக்கும் அந்த மறுபக கத்தை
கண்டுபிடித்தே ஆகவேண்டும் .அதற்கு இவனுக்கு ஜால்ரா அடிக்கும் இது போன்ற எளிய ஜனங்களை பிடித்து பிரயோஜனமில்லை .இவனது எதிரிகளைத்தான் பிடிக்க வேண்டும் .மனதிற்குள் நினைத்தபடி குறுகுறுத்த தன் காது மடல்களை தடவி விட்டுக்கொண்டு நடந்தாள் .

” வணக்கங்கம்மா ….” அந்த ஆணுக்கு அதிகபட்சம் இருபது வயதிருக்கலாம் .பவ்யமாக கை கூப்பியிருந்தான் .

” வணக்கம் .நீங்க …? “

” நான் தாமசுங்கம்மா …அதோ ..அந்த குப்பத்தை சேர்ந்தவங்க ” என அவன் குறிப்பிட்ட குப்பம் யோகனின் எதிர் கும்பல் குப்பம் .இவனிடம் யோகனை பற்றி கிளறினால் என்ன …?

” சொல்லுங்க …என்ன விசயம் …? “

” அம்மா ..இந்த மண்புழு வியாபாரத்தை நம்பித்தாங்கம்மா என்னை போல் நிறைய பேர் இருந்தோம் .எங்க பொழப்புல உங்க வீட்டுக்கார்ரு மண்ணள்ளி போட்டுட்டாருங்கம்மா “

” அப்படி என்ன செய்தார் .? “

” நாங்க பாட்டுக்கு இங்கன வாங்கி அங்கன கை மாத்தி உட்டு நாலு துட்டு பாத்திட்டிருந்தோம் .இவரு வேறு ஆளுங்களை கொணாந்து எங்க பொழப்ப கெடுத்திட்டாரு “

” ஆனால் நீங்க நியாயமான விலையை கொடுத்திருந்தால் அவர் ஏன் வேறு ஆட்களை ஏற்பாடு செய்ய போகிறார் ..? “

” நல்ல விலைதானுங்கம்மா கொடுத்தோம் .இந்த பொம்பளைங்களுக்கு ஆயிரம் செலவிருக்கும் .அத பூராவும் எங்களிடமே கேட்டால் எப்படிம்மா முடியும் …? “

” இதோ இப்போது அவர் ஏற்பாடு பண்ணிய ஆட்களால் முடிகிறதே ….” புன்னகையுடன் பதிலளித்தாள் .

அவன் முகம் கறுத்தது .” நீங்கள் பத்திரிக்கையில் வேலை பாக்குறவங்க.ரொம்ப நியாமானவுகன்னு ஊருக்குள்ளாற பேசிக்கிட்டாக .அதுதான் உங்க்கிட்ட புலம்பலாம்னு வந்தேன் .ஆனா அவரு உங்க புருசன்கிறது மறந்துட்டேன் “

” இல்லை தாமஸ் நான் என் பத்திரிக்கை தர்மத்திற்கு விரோதமாக எதையும் செய்ய மாட்டேன் .சொந்தங்களெல்லாம் எனக்கு அடுத்துதான் .நீங்கள் கூறுங்கள் ” மனதிற்குள் இவன் யோகனின் எதிர் கும்பலை சேர்ந்தவன் என்ற புள்ளி ஒன்றை வைத்தபடியேதான் அவன் பேச்சினை கேட்க தயாரானாள் சமுத்ரா .

” இதையெல்லாம் விடுங்கம்மா .அவரு சட்டவிரோதமா ஒரு வேலை பண்ணுறாரே ..அதை நான் உங்களுக்கு காட்டி தரட்டா ? ” குரலை குறைத்து கேட்டான் .

சமுத்ராவின் இதயத்துடிப்பு எகிறியது .இவன் …இப்போது எதைப்பற்றி சொல்கிறான் …? ஒரு வேளை அந்த சாராயம் காய்ச்சும் விசயம் …????

” என்ன …?எதைப் பற்றி …? ” ஒத்துழைக்க மறுத்த தொண்டையை செறுமி வசத்துக்கு கொண்டு வந்தாள் .

” என் கூட வாங்க .நானே காட்டுறேன் …” முன்னால் தாமஸ் வேகமாக நடக்க , பின்னிய கால்களை கஷ்டப்பட்டு பிரித்து பின்னால் நடந்தாள் சமுத்ரா .ஏனோ விரும்பத்தகாத ஒன்றை சந்திக்க போகும் எண்ணமெழுந்த்து அவளுக்கு .

அந்த பெரிய தென்னந்தோப்பின் அருகே சென்ற தாமஸ் சுற்று முற்றும் பார்த்துவிட்டு அங்கே ஒரு ஓரமாக பிரிந்து கிடந்த வேலியின் வழியாக உள்ளே நுழைந்தான் .அவளையும் அதே வழியில் வரச்சொன்னான் .

படபடத்த இதயத்துடன் உள்ளே நுழைந்தாள் சமுத்ரா .வாயில் விரலை வைத்து காட்டியபடி பூனை போல் பதுங்கி உள்ளே போனான் .கொஞ்ச நேரம் கழித்து பருத்திருந்த ஒரு தென்னையின் பின் ஒளிந்தபடி அவன் சுட்டிய இடத்தை பார்த்த சமுத்ராவின் இதயம் நின்று பின் துடித்தது .அவளது ஊகம் சரிதான் .

பெரிய பெரிய பானைகளை வைத்து ஏதேதோ போட்டு அங்கே சாராயம்தான் காய்ச்சப்பட்டுக் கொண்டிருந்த்து. ஆக இது உண்மை .யோகன் தானே சாராயம் காய்ச்சி இந்த ஜனங்களுக்கு கொடுத்து வருவது முழு உண்மை .இதில் பெரிய கொடுமையாக சமுத்ராவிற்கு பட்டதென்னவென்றால் அங்கிருந்த அனைவரும் பெண்கள் .இப்படிப்பட்ட ஒரு கேவலமான தொழிலுக்கு இவன் எவ்வளவு தைரியமாக பெண்களையே உபயோகிப்பான் .அது சரி ….அவர்கள்தானே அவன் இம்மெனும் முன் அவன் பின்னால் ஓடி வருகின்றனர் .




சமுத்ரா முதல்நாள் வந்தபோது , மயில்வாகன்னின் காலை பிடித்து கதறிய பெண்ணை இங்கே தோப்பு வீட்டிற்கு போய் சின்னய்யாவை பாரக்குமாறு ஒருத்தி கூறினாளே …அது இதற்குத்தான் போலும் .ஏனென்றால் அந்த பெண் இங்குதான் இதோ வேலை செய்து கொண்டிருந்தாள் .அன்று என்னவோ வாழவே விருப்பமின்றி , விட்டால் கடலில் போய் குதித்து விடுவாள் போல் இருந்தாள் .இன்றோ முகம் நிறைய சிரிப்புடன் வாழ்க்கையை வாழ்வதை தவிர தனக்கு வேறு என்ன வேலை என்ற தோற்றத்துடன் சுறுசுறுப்பாய் வேலை செய்து கொண்டிருந்தாள் .

காரணம் பணம் .இவர்களது வறுமையை தெரிந்து கொண்டு யோகன் இவர்களுக்கு  வீசி எறியும் பணம் .நெஞ்சமெங்கும் கசப்பு பரவ….சட்டென தனது போனை எடுத்தவள் அங்கே நடப்பவற்றை போட்டோ எடுக்க துவங்கினாள் .இவற்றை கண்டிப்பாக பத்திரிக்கையில் போடத்தான் வேண்டும் .

” ம் ..விடாதீங்கம்மா …ஒன்னு விடாம எடுக்க …” தாமஸ் அவளை உற்சாகப்படுத்தினான் .” வாயை மூடு ” அவனிடம் எரிந்து விழுந்துவிட்டு மீண்டும் போட்டோ எடுக்க துவங்கினாள் .

” ஏய் பொண்ணுகளா என்ன செய்றீங்க ? கொஞ்சம் தீயை மட்டுப்படுத்திட்டு வந்து இந்த காபியை குடிங்க ” என்ற பெண் குரலில் போனை பிடித்திருந்த சமுத்ராவின் கை நடுங்கியது .அந்த பெண் அன்று போல் இன்றும் சமுத்ராவிற்கு முதுகு காட்டியே நின்றிருந்தாள் .இது …அவள்தானே …அவளேதான் …திரும்பி கொஞ்சம் ஆழமாக பார்வையை சாய்த்து தோப்பின் உட்புறம் பார்த்தாள் சமுத்ரா.அழகாக , அடக்கமாக அந்த ஓட்டுவீடு தெரிந்த்து .தோப்பு வீடு …???

” இது யாருன்னு தெரியுதுங்களா …? உங்க வீட்டுக்கார்ரோட செட்டப்பு ….” தாமஸின் குரலில் நக்கல்  கலந்த பெருமிதம் .

” இப்போ நீ எதை சாதித்துவிட்டதாக நினைக்கிறாய் …? 
உன் வேலை முடிந்த்து .நீ இடத்தை காலி பண்ணு ..” கோபமாய் அவனிடம் முணுமுணுத்தாள் .தன் போனை அணைத்து பேக்கினுள் போட்டாள் .

” வாங்க போகலாம் ….” அவன் திரும்பி நடக்க ” நீ போ ..நான் பிறகு வருகிறேன் .நான் அவளுடன் பேச போகிறேன் ் ” சொன்னதோடு மரத்தின் பின்புறமுருந்து வெளிப்பட துவங்கினாள் .

” என்னது பேசப் போறீங்களா ..? எம்மா நான் மாட்டிப்பேன் .தயவுசெய்து வந்நிடுங்க .நீங்க பொறவு முன்னாடி வாசல் வழியா  வந்து உங்க சக்களத்தி கிட்ட பேசிக்கோங்க.இப்போ வந்திடுங்க ” அவன் பதட்ட குரலை கேட்காமல் மரத்தின் பின்னிருந்து வந்தவள் ” போடா …” என அவனை அலட்சியமாக கையசைத்து விட்டு அந்த பெண்ணை நோக்கி நடக்க துவங்கினாள் .

முகம் நிறைய பயத்தை அப்பியபடிதிரும்பிக் கூட பார்க்காமல் தான் வந்த வேலியை நோக்கி ஓடினான் அவன் .

” வணக்கம் …” என்று பின்னால் கேட்ட குரலுக்கு திரும்பிய அந்த பெண் முதலில் விழிகளில் சிறிது அதிர்ச்சி வாங்கி , ஆச்சரியமாகி பின் புன்னகையில் முடித்தாள் விழிகளை .

” வணக்கம் …நீங்க யாரு …? ” கேட்ட பெண்ணை பார்த்த சமுத்ராவின் முகம் நம்பமுடியாத்தாக மாறியது .இவளா …? இந்த பெண்ணா …? இப்படி ஒரு குழந்தை முகத்துடன் கள்ளமில்லாமல் வெள்ளை சிரிப்பு சிரிக்கும் இவளா …இந்த மாதிரி ஒரு கேவல வாழ்வு வாழகிறாள் .?ஒரு சதவிகிதம் கூட இதனை நம்பமுடியுமென சமுத்ராவிற்கு தோணவில்லை .பிறகுதான் நீங்க யாரு ..என்ற அவளது கேள்வியை கவனித்து தடுமாறினாள் .என்ன சொல்வாள் …?எப்படி அறிமுகமாவாள் ..?

” நீங்க யாரு …? ” பதில்கள் சொல்ல தெரியாத , சொல்ல முடியாத இடங்களில் பெரும்பாலும் மற்றொரு கேள்வியே கேட்கப்படுகிறது .

இந்த விநோதமான சந்திப்பை பார்த்த சுற்றிலுமிருந்த பெண்கள் வேலைகளை மறந்து திகைப்புடன் இருவரையும் பார்த்தபடி இருந்தனர் .அதில் ஒருத்தி ” சாவித்திரியம்மா இவுங்க நம்ம சின்னய்யாவோட சம்சாரங்க. சின்னம்மா இவுங்க …” என அந்த அவளுக்கான அறிமுகத்திற்காக இவளிடம் வரும்போது கையை அலட்சியமாக உயர்த்தி ” ம் …” என்ற அதிகார குரலுடன் அவளை தடுத்தாள் சாவித்திரி .அதுவே சமுத்ராவை அவள் நன்கு அறிவாளென உணர்த்தியது .தெரிந்தும் ….

” இங்கே என்ன பார்வை ..? வேலையை பாருங்க ” அவர்களுக்கு உத்தரவிட்டு விட்டு ” வாங்களேன் உள்ளே போகலாம் ” என இவளுக்கு வீட்டை காட்டினாள் .

” என்னை தெரியாதா உங்களுக்கு …? ” இந்த வேலையாட்கள் முன்பு காட்சிப் பொருளாக நிற்க விரும்பாமல் அவளுடன் நடந்தபடி கேட்டாள் சமுதரா .

” நீங்கள் இன்று இங்கே வரப்போவதாக ஈஸ்வர் சொல்லவில்லையே …? ” அலட்சிய புன்னகை ஒன்றுடன் கேட்டாள் சாவித்திரி .

தெரிந்து கொண்டே என்னை யாரென கேட்டிருக்கிறாள் என்ற சமுத்ராவின் கோபத்தை ,அவளது ஈஸ்வர் என்ற அழைப்பு அதிகப்படுத்தியது .லாவணயாவின் ஈஸ்வரென்ற அழைப்பும் நினைவு வந்த்து. இவனென்ன இவனது காதலிகளுக்கெல்லாம் ஈஸ்வரா …? இதற்குள் வீட்டு வாசலுக்குள் வந்திருக்க உள்ளே போக யோசித்தபடி பாதங்களை அழுத்தி ஊன்றி நின்றாள் .

” பரவாயில்லை உள்ளே வாருங்கள் .இதற்காக நீங்கள் எப்போதும் வருத்தப்பட வேண்டிய அவசியம் பின்னால் வராது ,” என்றாள் சாவித்திரி.

நீ என்ன எப்போது பார்த்தாலும் இப்படித்தான் இளித்து கொண்டே இருப்பாயா …? என அவளை வெறுத்தபடி யோசனையோடு உள்ளே நுழைந்தாள் சமுத்ரா .




” இங்கே உட்காருங்கள் .மதிய வேலைதான் .ஆனாலும் ஒரு காபி குடியுங்கள் .பில்டர் காபி உங்களுக்கு பிடிக்கும்தானே .அவர் சொல்லியிருக்கிறார் ” வார்த்தைக்கு வார்த்தை கங்குகளை பொதித்து வைத்து , அவள் மேல் எறிந்துவிட்டு டீப்பாயில் இருந்த போனை எடுத்துக்கொண்டு உள்ளே போனாள் .

அந்த நேரத்தில் தனது நிலைமை மிக மிக கேவலமாக சமுத்ராவிற்கு தோன்றியது .கடவுளே …முருகா இதை போன்றதோரு மட்டமான நிலை எந்தப் பெண்ணிற்கும் அவள் வாழ்வில் வரக்கூடாதப்ப .மனம் கலங்க வேண்டிக் கொண்டாள் .

மனம் பொசுங்க நின்ற சமுத்ராவின் கண்களில் அங்கிருந்த அலமாரியில் இருந்த போட்டோக்கள் பட்டன. நிறைய சிறு பிள்ளை ஒன்றின் போட்டோ தான் .சிலவற்றில் சாவித்திரியும் உடனிருந்தாள் .அதோ அந்த பக்கவாட்டு சுவரில் மேலும் சில போட்டோக்கள் ஓரக் கண் பார்வையில் பட்டன.ஆனால் அவற்றை திரும்பி பார்க்கும் துணிவு சமுத்ராவிற்கு இல்லை .அதில் எதிலாவது யோகனும் இவர்களோடு சேர்ந்து இருந்தானானால் …? அந்த கண்றாவியை என்னால் பார்க்க முடியாது …தலையை அசைக்காமல் நேர்கோட்டில் வைத்தபடி அவள் ஒரு பத்து நிமிடம் நின்றிருப்பாள் .

” உன்னை யார் இங்கே வரச்சொன்னது …? “முழக்கமாய் பின்னால் கேட்ட யோகனின் குரலுக்கு முதலில் நடுங்கினாலும் ” ஏன் வந்தாலென்ன …? ” கோபமாய் எதிர் கேள்வி கேட்டாள் .

” முட்டாள் .நீ இங்கே வந்தால் ஊருக்குள் என்ன பேசுவார்கள் ..? படித்திருக்கிறாயே …அறிவு வேண்டாம் ..? ” ஆவேசமாக அவள் தோள்களை பற்றி உலுக்க அவளுக்கு பேச்சு வரவில்லை .

” ஊராரின் பேச்சையெல்லாம் நம் காதில் போட்டுக் கொள்ளக்கூடாது ஈஸ்வர் ” பதில் சென்னபடி டிரேயில் காபியுடன் வந்தாள் சாவித்திரி .கையிலிருந்த போனை டீப்பாயில் வைத்தாள் .இவள்…இவள்தான் போன் போட்டு யோகனை வர வைத்திருக்கிறாள் .சமுத்ரா அவளை முறைத்தாள் .அவள் அதனால் பாதிக்காது அகலமாக சிரித்தாள் .

” நீங்களும் ஒரு கப் காபி குடிங்களேன் ஈஸ்வர் .” ஒரு கப்பை எடுத்து நீட்டினாள் சாவித்திரி.

” வேண்டாம்மா ..நான் அப்புறம் வருகிறேன் . ஏய்…வாடி”  …அவள் கைகளை பிடித்து இழுத்தபடி வெளியே போனான் .வெளியே வேலை பார்த்துக் கொண்டு இருந்த  பெண்களை மனதில் கொண்டு மெதுவாகவே அவன் பின்னால் சென்ற சமுத்ரா காரில் ஏறியதும் ” நானென்ன உன் அடிமை என்று நினைத்நாயோ ..? மாட்ணை இழுத்து வருவது போல் இழுத்து வருகிறாய் ..? ” என எகிறினாள் .

நீ ஏன் இங்கு வந்தாய் …? எப்படி வந்தாய் …? “

” அது என் தொழில் .இங்கே சட்டவிரோதமான காரியங்கள் நடப்பதாக எனக்கு தகவல் வந்த்து .அதனை தெரிந்துகொள்ள வந்தேன் .இப்போது அதையெல்லாம் போட்டோ கூட எடுத்திருக்கிறேன் .எல்லாவற்றையும் பத்திரிக்கையில் போட போகிறேன் .அப்போதே எல்லாவற்றையும. ரங்கநாயகி மேடத்திற்கு அனுப்பி விட்டேன் .அடுத்த வாரம் எல்லாம் பத்திரிக்கையில் வந்துவிடும் .பார் …” போட்டோக்களை காட்டினாள் .

அவனோ சிறிதும் பதட்டமின்றி ஒரு சிகரெட்டை பற்ற வைத்துக்கொண்டு நிதானமாக ” ஆஹாம் …” என்றான் .
” செய்ய மாட்டேன என்று நினைக்காதே .இது நிச்சயம் நடக்கத்தான் போகிறது ” போனை அவன் முன் ஆட்டியபடி பேசினாள் .

” நீ…என்னுடைய நிறைய ரகசியங்களை தெரிந்து கொண்டாய் சமுத்ரா …என்ன செய்வது …ம் …? ” என் ற போது அவன் முகத்தில் பதட்டமின்றி சிரிப்பு இருந்த்து .யோசனை இருந்த்து.இன்னமும் புரிந்து கொள்ள முடியாத ஒரு பாவனை வேறு .அந்த பாவனைதான் சமுத்ராவை குழப்பியது .

இவன் …ஏதோ பெரிய திட்டம் போடுகிறான் .அவள் வயிற்றில் பயப்பந்து உருண டது .

What’s your Reaction?
+1
2
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!