kadak katru Serial Stories

Kadal Kaatru – 28

                                             28

” செல்லா ..சாப்பாடு எடுத்து வை …நீயும் உட்கார் சமுத்ரா .சாப்பிடலாம் ” அவள் கைகளை பற்றி இழுத்து உட்கார வைத்த யோகனின் கரங்களிலும் , குரலிலும் மிக மென்மை .

ஏனோ இந்த மென்மை சமுத்ராவை பயமுறுத்தியது உணவை எடுத்த அவள் கரங்களில் மெல்லிய நடுக்கமிருந்த்து .இவன் என்ன செய்ய போகிறான் …?வேகமாக சாப்பிட்டு முடித்தவள் அவன் பார்வையிலிருந்து தப்ப மாடியேறி சென்று அமர்ந்து கொண்டாள் .அவன் வெளியே போனதும் வருவோம் என எண்ணினாள் .மேலும் இன்று தோப்பு வீட்டில் நடந்த சம்பவங்களினால் வேறு எங்கும் வெளியில் போகும் எண்ணமும் அவளுக்கில்லை .

போனை எடுத்து ரங்கநாயகியிடம் பேசினாள் .அவள் போனை எடுத்தவுடனேயே இவளை திட்டி தீர்த்துவிட்டாள் .சமுத்ரா அவள் புருசனை பற்றி பேசுகிறாளாம் .இது போலெல்லாம் ஒரு தமிழ்பெண் செய்ய கூடாதாம் .மேலும் யோகேஷ்வரனை பற்றி அவளுக்கு தெரியுமாம் .அவன் இது போல் ஏதாவது செய்தால் பின்னால் நியாயமான காரணம் ஏதாவது இருக்குமாம் .அத்தோடு யோகனை போல் பெரிய மனிதர்களை பகைத்துக் கொண்டாள் அவளால் பத்திரிக்கை நடத்த முடியதாம் .

சமுத்ரவை பேசவே விடாது இத்தனையையும் பேசிவிட்டு போனை வைத்து விட டாள் .சமுத்ரா செய்வதறியது திகைத்தாள் .பிறகு இவள் இல்லாவிட்டால் வேறு பத்திரிக்கை .தன்னை சமாதானப்படுத்தியவள் தளர்ந்து படுக்கையில் படுத்து கண்களை மூடிக்கொண்டாள் .கடவுளே …இங்கே என்ன நடக்கிறது …?

அப்போது அவளது நெற்றி மென்மையாக நீவப்பட முதலில் அந்த மென்மையை கண்மூடி ரசித்தவள் , பின் உணர்ந்து கைகளை தட்டிவிட்டு எழ முயன்றாள்.ஆனால் முடியவில்லை .அவளின் அருகே அமர்ந்து அவளை இறுக்கமாக அணைத்திருந்தான் யோகன் .

” என்ன இது …? விடுங்கள் …? “

” இல்லை கண்ணம்மா …இன்று நான் என் உரிமையை எடுத்துக் கொள்ள போகிறேன் ” மேலும் இறுக்கினான் .

” எ…என்ன …ஏன் …இப்படி விடுங்கள் …”

” கணவனென்ற எண்ணம் உனக்கும் வர வேண்டுமில்லையா…? ” கேட்டபடி அவள் கன்னத்தில் இதழ் பதித்தான் .

” இ…இல்லை .இது ..முடியாது …நான் ஒத்துக்கொள்ள மாட்டேன் “.அவனுடன் போராடினாள் .




” நீ தருவதையெல்லாம் ரங்கநாயகி போட மாட்டார்கள் செல்லம் .என்னை தாண்டி வேறு எந்த பத்நிருக்கைக்கும் நீ போக முடியாது தங்கம் .அந்த போட டோக்களுல்லாம் வேஸ்ட் கண்மணி .் ” ஒவ்வொரு பேச்சிற்கும் ஒரு முத்தமிட்டான் .

போட்டோக்களா …? எந்த போட டோக்கள் …? சமுத்ராவின் நினைவில் இப்போது எந்த போட டோவும் இல்லை .சுதந்திரமாய் அவள் மீது படர்ந்து கொண்டிருந்த அவன் விரல்களில்தான் அவள் கவனமிருந்த்து .

” நீ…நீங்கள் எனக்கு வாக்களித்திருக்கிறீர்கள் .விருப்பமில்லாமல் ஒரு பெண்ணை தொட மாட்டேன் என்றிருக்கிறீர்கள் ….” விநாடிக்கு விநாடி பலமிழந்து வரும் தன் உடலை பயத்தோடு பார்த்தபடி அவனிடம் வாதாடினாள் .

” அப்படியா சொன்னேன் …? நினைவில்லையே …எப்போது சொன்னேன் கண்ணம்மா …? ” என்று எளிதாக சமுத்ராவின் இறுதி நம்பிக்கையையும் சாய்த்துவிட்டு முழுமையாக அவளுள் மூழ்க தொடங்கினான் யோகேஷ்வரன்.

மெல்ல மெல்ல ஒளி குறைந்து கொண்டிருந்த்து .அலைகள் உயர உயரமாய் எழுந்து ஆர்ப்பரித்து கொண்டிருந்தன .கடல்  போ..போ என விட்டு விட்டு மீண்டும் அலைகளை சுருட்டி தனக்குள் அடக்கிக் கொள்வது போல் சமுத்ராவிற்கு தோன்றியது .

தனது வெற்றியை அவளிடம் நிலை நாட்டிய பின்னும் , இன்னமும் அவளை விடுவிக்க மனமில்லாமல் அணைத்திருந த அவன் கைகளை வெறுப்படன் தள்ளி விட்டு , எழுந்து குளியலறைக்குள் புகுந்து அப்படியே ஷவரினடியில் நீரை திறந்துவிட்டு நின்றாள் .

உச்சந்தலையில் விழுந்த நீர் உடல் கொதிப்பை தணித்ததேயன்றி , உள்ளக்கொதிப்பை அதிகரித்தது .வெகு நேரத்திற்கு பிறகு ஷவரை நிறுத்திவிட்டு வெளியேறினாள் .

வெளியே பால்கனியில் நின்றபடி யோகன் யாரிடமோ போனில் பேசுவது கேட்டது .உடையை மாற்றிக் கொண்டவள் விரிந்து கிடந்த தலைமுடியை கூட பின்னிக் கொள்ளாமல் அப்படியே இதோ இங்கே வந்து அமர்ந்து விட்டாள்.

வழியில் செல்வமணி வேறு , படியிறங்குகையில் விரிந்திருந்த இவள் தலைமுடியையும், ஓய்ந்திருந்த இவள் தோற்றத்தையும் பார்த்தபடி ” வழக்கமாக தம்பி மதியம் சாப்பாட்டிற்கு வர மாட்டானே …?வந்தாலும் வீடு தங்க மாட்டானே …? ” ஆராய்ச்சி கேள்வியை இவள்புறம் எறிந்தாள் .

பட்டென அவள் கன்னத்தில் ஒன்று வைக்கும் ஆவலை அடக்கியபடி , அலட்சிய பார்வையோடு அவளை கடந்து வாசலை தாண்டுகையில் புவனாவின் கேள்வி பார்வையையும் தவிர்த்துவிட்டு  இங்கே வந்து பித்து பிடித்தது போல் அமர்ந்திருக்கிறாள் .

எதனால் தனக்கு பெற்றோர் சமுத்ரா என பெயரிட்டனர் ? ஒரு வேளை இந்த அலைகளை போல் தானும் அலைக்கழிக்க படுவோமென்றுதானோ ..? மணலில் கைகளை துழாவியபடி குமைந்து கொண்டிருந்தாள் .

இப்படி ஒரு நிகழ்வை அவள் வாழ்வில் இதுவரை எதிர்பார்த்ததில்லை .இன்னமும் நடந்த்தை ஒத்துக் கொள்ளும் திராணி அவளுக்கில்லை .எப்படி ..? எப்படி …?இப்படி அவன் நடக்கலாம் …?

ஆரம்பத்தில் யோகனை தீவிரமாக எதிர்த்தவளின் பலம் போக போக அடங்கியது .ஒரு வேளை கணவனென்ற காரணம் அழுத்தமாக மனதினுள் பதிந்ததால் கூட இருக்கலாமோ…? ஆனாலும் எப்படி அவளை அவள் அனுமதியின்றி தொடலாம் …? அவனது தீண்டல்கள் இப்போதும் நெருப்பென உடல் முழுவதும் தகித்துக் கொண்டிருந்த்து .

இல்லை ..இதற்கு அவன் பதில் சொல்லித்தான் ஆக வேண்டும் .இன்று அவனுக்கான நாள் .அவனது ஆண் திமிரை அவன் காட்டிவிட்டான் .எனக்கான நாள் ஒன்று வந்தே தீரும் .அன்று அவனுக்கான பதிலை நான் நிச்சயம் திருப்பி தந்தே தீருவேன் .மனதிற்குள் சூளுரைத்துக் கொண்டாள் சமுத்ரா .

மறைந்து கொண்டிருந்த ஆதவன் தன் கிரணங்களை சமுத்ராவின் முகத்தில். வீசி அவளை சிவக்கடித்து கொண்டிருந்தான் .கூடவே சமுதராவின் கோபமும் சேர்ந்து கொள்ளவே ,அவள் முகம் செவேலென்று அந்த கதிரவனுக்கு போட்டியாக ஒளி வீசிக்கொண்டிருந்த்து .

” ஐய்யோ …பயம்மாக இருக்குறதே …” கேலிக் குரலொன்று முன்னால்  கேட்க , கனலின் அளவு கூட நிமிர்ந்து முறைத்தாள் அவனை .பேன்ட் பாக்கெட்டினுள் கைகளை நுழைத்தபடி கால்களை அகட்டி நின்று அலடசிய பாவனையுடன் அவளை பார்த்துக். கொண்டிருந்தான் யோகன் .

செய்வதையெல்லாம் செய்துவிட்டு சிறிதும் குனியாமல் நிற்பதை பாரேன் .அவனது ஒவ்வொரு செய்கையும் நான் ஆண் , நான் ஆண் என அவளிடம் பறைசாற்ற கூடவே சற்று முன் அவளிடம் அவன் காட்டிய வேகமும் நினைவு வர அளஙில்லா கோபத்தில் உடல் நடுங்க தொடங்கியது .

ஆனால் அந்த கோபம் சிறிதும் அவனை பாதிக்காமல் போக அலட்சியமாக நேர்விழியால் அவளை அளந்தபடி ஒரு சிகரெட்டினை பற்ற வைத்து க் கொண்டான் .” அப்பா …ஒரே தகிப்பு ” கிண்டலாக கூறி அவளை நோக்கி இதழ் குவித்தான் .

ஏனோ தனது நிலைமை சமுத்ராவிற்கு கழிவிரக்கத்தை உண்டாக்க , கோபம் குறைந்து கண் கலங்க துவங்கியது .இல்லை ..இவன் முன்னால் அழக்கூடாது …வைராக்கியம் தலைதூக்க கண்களை அகட்டி விரித்து கண்ணீரை மறைத்தபடி அவனை முறைக்க முயன்றாள் .




ஆனால் அவளது கண்ணீரை அவன் கண்டு கொண்டானோ …? சிகரெட்டை தூக்கி வீசிவிட்டு வேகமாக அவளருகில் நெருங்கி அருகில் அமர்ந்தான் .

” ஷ் ..சமுத்ரா என்ன இது …?இப்போது என்ன நடந்து விட்டதென்று இந்த அசோகவனத்து சீதை வேடம் ? “

ஆதரவாய் தன் தலை வருடிய அவன் கைகளை பட்டென்று தட்டி விட்டாள் சமுத்ரா .” உன்னைப் போல் ஒரு நெஞ்சழுத்த காரனை நான் பார்த்ததில்லை ..,செய்வதையெல்லாம் செய்துவிட்டு என்ன நடந்த்தென்றா கேட்கிறாய் …?நீயெல்லாம் மனிதன்தானா …?”

” அது …எப்படி வேண்டுமானாலும் வைத்துக்கொள் …இப்போது குளிர்காற்று வீசத்துவங்கிவிட்டது .வா போகலாம் .”

” எனக்கு போய்க்கொள்ள தெரியும் .உன் னுடன் வரமாட்டேன் .போ…இங்கிருந்து …” ஆங்காங்கே கடற்கரையில் நடமாட்டம். தெரிந்த்தால் குரலை வெகுவாக அடக்கி இரைந்தாள் .

அப்படி உடனே விட்டு விடுகிறவனா யோகேஷ்வரன் …? ” ஓ..உனக்கு நடந்து வர யோசனையாக இருந்தால் சொல்லிவிடு டார்லிங் .இங்கிருந்து நம் வீடு வரை உன்னை சுகம்மாக சுமந்து செல்ல நான் தயாராக இருக்கறேன் ” பாக்கியம் போல் தலை குனிந்தான் .

பாவி …பாசத்தில் உயர்ந்தவன் போல் என்னமா நடிக்கிறான் .வெறுத்துப் போய் அவனை பார்த்தாள் சமுத்ரா .அவளருகே மிக குனிந்தவன் மெது குரலில் தணிவாக ” முத்ரா உனக்கு உடம்பை …எதுவும்  ..பாதிக்கவில்லையே …? “

முதலில் புரியாமல் விழித்தவள் அவன் கேள்வி புரிந்த போது முகம் சிவக்க திரும்பி கொண்டாள் .” போங்கள் ..இங்கிருந்து போய்விடுங்கள் .எனக்கு உங்களைப் பார்க்க பிடிக்கவில்லை ” அழுகையை அடக்கியபடி கத்தினாள் .

” நீயாக வரவில்லையென்றால் நிச்சயமாக நானே உன்னை தூக்கிச் செல்வேன் சமுத்ரா ” உறுதி அவன் குரலில் . திக்கென்றது சமுத்ராவிற்கு .இவன் மனிதனில்லை .அசுரன் . செய்தாலும் செய்வான் .

” சீக்கிரம் வா சமுத்ரா ..நான் தோப்பு வீட்டிற்கு போக வேண்டுமல்லவா …? ” இயல்பாய் கேட்டு அவள் மீது மேலும்  தீயள்ளி கொட்டினான் .அசுர்ர்களெல்லாம் அழியவில்லை .இதோ இவனைப் போல பலருடைய உருவில் வாழ்ந்து கொண்டுதான் இருக்கின்றனர் என தோன்றியது சமுத்ராவிற்கு .

இயல்பாக அவளை தூக்கும் பொருட்டு அவள் தோள்களை சுற்றிய கைகளை தள்ளி விட்டு …விட்டு  கட கடவென முன்னால் நடக்க துவங்கினாள் .

” மெல்ல …மெல்ல …” என்றபடி அகன்ற எட்டுகளுடன் அவளுடன் இணைந்து கொண்டான் யோகன் .

” இதற்கெல்லாம் ஒருநாள் நீங்கள் எனக்கு பதில் சொல்ல வேண்டும் ” வேக நடையில் மூச்சிரைத்தது அவளுக்கு .

” ஆஹா சொல்லிவிடலாமே ….” கொதிக்கும் அவள் கோபத்தையும் எளிதாக ஏற்றுக் கொண்டு உடன் நடந்தான் .

கிட்டத்தட்ட சமுத்ராவின் தட்டில் சப்பாத்திகள் தூக்கி வீசப்பட்டன. ” சாப்பிடுங்க்க்கா ..” என்ற வாய் உபச்சாரம் மட்டும் நடந்த்து மேகலையிடமிருந்து.உடலும் , உள்ளமும் கொதித்து கொண்டிருக்கும் அந்த வேளையிலும் மேகலையின் அலட்சியம் வெறியூட்ட …. .இவளை….இருடி உன்னை முதல்ல வீட்டை விட்டு வெளியேற்றுகிறேன் .பற்களை நறநறத்தாள் சமுத்ரா .

” மேகலா சமுத்ராவை அண்ணின்னு கூப்பிடு …” யோகனின் குரலில் உத்தரவு .

” சரிண்ணே …” என அவனுக்கு பணிந்தவள் விரோத முகத்தை சமுத்ராவிடம் காட்டினாள் .சரிதான் போடி பார்வையை அவளுக்கு தந்து விட்டு திரும்பிய சமுத்ரா செல்வமணியின் குரோத முகத்தை சந்தித்தாள் .

இவர்களுக்கு இப்போது என்னவாம் ..?ஆயாசம் வந்த்து அவளுக்கு .” ஏன் தம்பி இன்னைக்கு வெளி வேலை இல்லையோ …? மதியம் இங்கே தங்கி விட்டாயே …?” குறிப்பு காட்டி விசாரித்தாள் .

ஆக ,இவர்கள் கணக்குபடி  தம்பி அவன்  மனைவி மீது காதல் அதிகமாகி அவளை கையோடு அழைத்து வந்து வீட்டில் தங்கிவிட்டான் என அவள் நினைக்கிறாள் .அவள் மட்டுமல்ல இந்த பெண்கள் மூவரும் அதனையே நினைக்கின்றனர் .அதனால்தான் அவள் மீது தீவிர எதிர்ப்பு பார்வையை வீசுகின்றனர் என புரிந்த்தும் சமுத்ராவிற்கு உடல் கூசியது .

கூச்சத்துடன் தலை நிமிர முடியாமல் ஒரக்கண்ணால் யோகனை பார்த்தாள் .இதற்கெல்லாம் அசருகிறவனா அவன் …? உணவிலிருந்த கறிவேப்பிலையை கவனமாக பொறுக்கியபடி ” என்றைக்கும்தான் வேலை இருக்கிறது செல்லா .இன்றைக்கு கொஞ்சம் இளைப்பாற தோன்றியது அதுதான் ….” என்றான் .

இவனுக்கு இளைப்பாறும் மடமா நான் ? கோபத்துடன் அவனை நிமிர்ந்து முறைத்த போது கண் சிமிட்டினான் அவன் .அவசரமாக மீண்டும் தட்டில் குனிந்து கொண்டாள் .

செல்வமணிதான் புரையேறிவிட்ட தலையை தட்டும் சாக்கில் தன் தலையை தானே குட்டிக் கொள்ள வேண்டியிருந்த்து .ராட்ச்சன் …தனக்குள் முணுமுணுத்்துக் கொண்டாள் சமுத்ரா .

எந்த வித பாதிப்புமின்றி தனது வழக்கமான பணியாய் தோப்பு வீட்டுக்கு கிளம்பி போனான் அவன் .

எரிக்கும் பார்வையுடன் செல்வமணி உள்ளே போக தீவிர சிந்தனையுடன் சமுத்ராவை ஆராயும் பார்வை பார்த்தாள் புவனா .இப்போதைய தனது நிலைமையை  இவர்ர்கள் அனைவரும் புரிந்து கொண்டனர் என எண்ணியதும் மிகுந்த தரமசங்கடமானது சமுத்ராவிற்கு .

அவர்கள் முகத்தில் விழிக்கவே கூசியது . அப்போது வீடு சுத்தம் செய்யும் பெண் வந்து நின்றாள் .” இதுதான் வேலைக்கு வரும் நேரமா ..? ” அவளிடம் எகிறினாள் மேகலை .

” பகல்ல ஊருக்கு போயிட்டேன் பாப்பா .இப்போ வீட்டை ஒதுக்கிடுறேன் …” விளக்குமாற்றை எடுத்தாள் அவள் .

” எந்த வேலையை பகல்ல பாக்கனும் ,எதை இரவில் பாக்கனும்னு ஒரு அறிவு வேணும் .உன்னோட அறிவில்லாத வேலைக்கெல்லாம் இந்த வீட்டில் இடம் கிடையாது ” விளக்குமாற்றை அவள் கையிலிருந து பிடுங்கி எறிந்தபடி கூறினாள் மேகலை .பார்வை சமுத்ராவின் முகத்தில் ்

உடல் கூசி உள்ளம் கொதித்தது சமுத்ராவற்கு .கோபத்துடன் அவளை முறைக்க அவளோ இகழ்ச சியான பார்வை ஒன்றுடன் உள்ளே சென்றாள் .

சின்ன பொண ணுன்னு நினைத்தால் என்ன பேச்சு பேசுகிறாள் .? இவள் செய்கைகள்தான் சமீப காலமாக சிறு பிள்ளைத்தனத்துடன் ஒத்து போகவில்லையே …இவளை …தன் நிலையை விட மேகலையை ஒரு வழி பண்ணுவதுதான் இப்போது முக்கியமென சமுத்ராவிற்கு பட்டது . யோசித்தவள் மாடிக்கு சென்று தன் லேப்டாப்பை எடுத்தாள் .

தன் முன்னால் வந்து விழுந்த பேப்பரை புரியாமல்  பார்த்தாள் மேகலை .

” அது உன் காலேஜ் அப்ளிகேசன் .நிரப்பி உன் சான்றிதழ்களையும் இணைத்து தயாராக வைத்திரு .நாளை சென்னைக்கு போக வேண்டும் ” அதிகாரமாக கூறிவிட்டு திரும்பினாள் சமுத்ரா .

” இல்லை ்நான் போக மாட்டேன் ” கீச்சிட்டாள் மேகலை .

திரும்பி தன் உதட்டில் ” உஷ் ..” என விரல் வைத்து அதட்டியவள் ஜாக்கிரதை என ஒற்றைவிரலை ஆட்டிவிட்டு வெளியேறினாள் .கீழே மடிந்து அமர்ந்து அழத் துவங்கினாள் மேகலை .

What’s your Reaction?
+1
1
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!