kadak katru kadal katru Serial Stories

Kadal Kaatru – 15

                                                  ( 15 )

ஆதி நாராயணபெருமாள் கோவிலினுள் இருந்தாள் சமுத்ரா .அந்த பழங்கால கோவிலின் பிரம்மாண்டம் அவளை பிரமிக்க செயத்து .செம்புரைக் கற்களால் கட்டப்பட்டிருந்த்து அக்கோவில் .அவை தமிழகத்தில் கிடைக்காத கற்கள். போக்குவரத்து வசதிகள் அதிகமாக இல்லாத அந்த காலத்தில் இது போன்ற கற்களை அண்டை மாநிலங்களிலிருந்து் கொண்டு வந்து இது போன்றதொரு ஆலயத்தை உருவாக்குவது எவ்வளவு பெரிய அதிசயம்…?…

ஆரவமுடன் அந்த கோவிலின் சிற்பங்களை தடவி பார்த்தாள் .கலைநயத்துடன் செதுக்கப்பட்டிருந்தன அவை .

” கோவிலை சீரமைக்க வந்த அறநிலையத்துறையை விரட்டி விட்டுட்டான் ” அமலராஜ் சொன்னது நினைவு வந்த்து .

” இல்லையே அது சம்பந்தமான நடவடிக்கைகளுக்கு சென்னையை சேர்ந்த ஒருவர்தானே காரணம் .அவர்தானே கோர்ட்டில் சீரமைப்பு பணிக்கு ஸ்டே வாங்கியவர் …?” சமுத்ராவும் பத்திரிக்கையில் இருப்பவள்தானே …தனக்கு தெரிந்த விபரங்களை கூறினாள் .

” ஆமாம் அந்த சென்னைக்கார்ருக்கு இங்கிருக்கும் கோவிலை பற்றி என்ன தெரியும் ? இங்கிருக்கும் ஒருவர் சொல்லாமல் …? “

” ஆனால் இவர் யோகேஷ்வரன் ஏன் அப்படி செய்தார் …?,”

” அறநிலைய துறையை  அனுப்பிவிட்டு தானே செய்த்தாக பெயர் வாங்க  வேண்டுமென்றுதான் …”

இந்த காரணம் அவ்வளவாக ஏற்புடையதாக சமுத்ராவிற்கு தோன்றவில்லை .அவளுடைய அதிருப்தியை பார்வையிலேயே உணர்ந்த அமல்ராஜ் அடுத்தொரு காரணத்திற்கு தாவினான் .

பிரம்மாண்டமான அந்த கோவிலினுள் புதர் மண்டிக் கிடந்த பகுதிகளை பார்க்கையில் மனதை வருத்தியது .அவற்றை சிறிது சிறிதாக சுத்தம் செய்த்தற்கான அறிகுறிகள் தென்பட்டன.அவை அங்குள்ள மக்களால் சுத்தப்படுத்த படுவதை விசாரித்து அறிந்தாள் .

அன்று காலையிலேயே விழித்தெழும் போதே மனது சரியில்லை சமுத்ராவிற்கு .கோவிலுக்கு போக வேண்டுமென அப்போதே  முடிவு செய்து விட்டாள் .இதோ இப்போது அந்த நாராயணனை தரிசித்ததும் மனது சற்று லேசானது .அங்கிருந்த மண்டபத்தில் அமர்ந்து தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டாள் .

அணைத்து வைத்திருந்த தன் போனை ஆன் செய்தாள் .வரிசையாக மிஸ்டு கால்கள் .கருணாமூர்த்தி , செண்பகம் , ரங்கநாயகி , தனசேகரன் …என எல்லோரும் மூன்று முறை , நான்கு முறை அழைத்திருந்தனர் .யாருக்கு பயந்து போனை அணைத்து வைத்திருந்தாளோ அவன் ஒரு முறை கூட அழைத்திருக்கவில்லை .

அன்று  காலை வெளியே கிளம்பிக் கொண்டிருந்தாள் .செல்போனை காதில் ஒட்ட  வைத்தபடி வந்த யோகன் ” சமுத்ரா உன்னோட போன் நம்பர் சொல்லு ” என்றுவிட்டு  அங்கே எதிர்முனையில் போனை  எடுத்து விட்ட ஆளிடம் ஏதோ செங்கல் லோடு விபரம் பேசத் துவங்கினான் .

உனக்கு நான் நம்பர் தருவேனென என்ன நிச்சயம் ? என பார்வையால் கூறிவிட்டு வெகு சின்சியராக அப்போது தனக்கு வந்த வாட்ஸ்அப் மெசேஸை எடுத்து பார்க்க  துவங்கினாள் .

பேசி முடிக்கட்டும் நம்பரெல்லாம் தர முடியாதென சொல்லி  விடுவோம் .இப்படி நினைத்தபடி மெசேஜ் பார்த்துக் கொண்டிருந்தவளின் போன் பறிக்கப்பட்டது .நிதானமாக அங்கிருந்த நாற்காலியில் அமர்ந்தபடி அவளது போனிலிருந்து தன் போனுக்கு அழைப்பு அனுப்பினான் யோகேஷ்வரன் .

” இது என்னுடைய நம்பர் …” போனை அவள் கைகளில் திணித்தான் .” தேவையான போது கூப்பிடு “

” சை …சரியான ரவுடி ….” முணுமுணுத்தாள் .
?

” ஏதோ என்னை பாராட்டினாய் போல …” சரியாக கேட்காத்து போல் காதை தேய்த்து விட்டு கொண்டான் .

நீ கண்ட  இடங்களில் ஊர் சுற்றிக் கொண்டிருப்பாய் .நான் உன்னை வேண்டி அழைத்துக் கொண்டிருக்கறேன் மனதிற்குள் வைதபடி ” நான் அழைக்க மாட்டேன் ” உறுதியாக அறிவித்தாள் .

அலட்சியமாக தோள்களை குலுக்கியவன் 
” இன்று எங்கே போகிறாய் ? ” என்றான் .

வாசல்படியிறங்கி விடுவிடுவென நடந்தாள் .பின்னால் ” அப்துல் …” என்ற அவன் குரல் கேட்டது .தானே ஆட்டோ பிடித்து கோவிலுக்கு போகும் ஐடியா சமுத்ராவிற்கு .ஆனால் அதற்கு எங்கே போவதென்ற தடுமாற்றத்துடன் நடந்து கொண்டிருந்தவளின் அருகே வேகத்துடன் வந்து நின்றது ஜீப் .

” ஐயா உங்களை நீங்க சொன்ன இடத்தில் விட சொன்னாருங்க ” என்றான் டிரைவர் .இதிலொண்ணும் குறைச்சலில்லை …ஜீப்பில்  ஏறி இதோ கோவிலுக்கு வந்திருக்கிறாள் .

அங்கே கோவிலுக்கு வந்த பெண்ணிடம் விசாரித்தாள் .
” ஏன்மா இந்த கோவில் இப்படி உருக்குலைந்து கிடக்கிறதே  .சரி பண்ண வந்த அரசாங்க ஆட்களை ஏன் திருப்பி அனுப்பி விட்டீர்கள் ?”

” அட …அந்த ஆளுங்க எங்கேம்மா சரி பண்ணுனாங்க .சும்மா மாறி மாறி இருக்கிற கோளாறை அதிகப்படுத்துனாங்க .அதோட அதோ பாருங்க  கோவில் கதவை இடிச்சு போட்டு ட்டு  போயிருக்காங்க .இன்னும் பத்து நாள் அவுங்க கையில் கோவில  கொடுத்திருந்தா இங்கன கல்லுதான் குமிஞ்சி கெடந்திருக்கும் ….” என்றாள் .




மேலும் சிலர் இதே ரீதி தகவல்களையே சொன்னார்கள் .கோவிலை சீரமைப்பதற்கு பதில் அறநிலையதுறை அதனை பாழடிக்க எண்ணியிருக்குமோ ? என்ன காரணத்தினால்  அப்படி செய்த்து …சேகரித்த விசயங்களை குறிப்புகளாக்கினாள் சமுத்ரா .

ரங்கநாயகியிடமிருந்து போன் .எடுத்து பேசினாள் .

” சாரி மேம்  கொஞ்சம் பிஸியாக இருந்ததால் போனை அணைத்து விட்டேன் “

” அதை விடும்மா , அந்த ஆந்திர மீனவர்கள் பற்றி விசாரித்தாயா ?”

நாக்கை கடித்து கொண்டாள் .இரண்டு நாட்களாகவே  அதனை  விசாரிக்க சொல்லிக் கொண்டிருக்கிறார் ஆசிரியர் .ஆனால் ஊர் மக்களிடம் விசாரிப்பதற்கு முன்பு அந்த தகவல்களை பொறுப்பான சிலரிடம் விசாரிக்க வேண டும் .முதலில் யோகேஷ்வரனிடம் அது விபரம் கேட்க வேண்டுமென நினைக்கிறாள் .அவன்தான் இரண்டு நாட்களாக  கண்ணிலேயே படுவதில்லையே .அந்த தோப்பு வீடே கதியென்றல்லவா கிடக்கிறான் .

” நாளை …இல்லையில்லை இரண்டொரு நாட்களில் விசாரித்து சொல்கிறேன் மேடம் …”

” சீக்கிரம்மா …மக்களிடம் நேரிடையாக பேட்டி எடுத்து விட்டாயெனில் நன்றாக இருக்கும் …,” வைத்துவிட்டார் .

இது சம்பந்தமாக  அவர்கள் முதலாளி சொல்லாமல் வாய் திறக்க போவதில்லை இந்த மக்கள் .அவனிடம் திரும்ப போய் நிற்க எரிச்சலாக இருந்த்து சமுத்ராவிற்கு .என் குப்பம் , என் மக்கள் என சொல்லிக் கொள்கிறான் .ஆனால் அந்த கவலையேதும் இல்லாமல் கேவலம் ஒரு பெண் பின்னால் சுற்றிக் கொண்டிருக்கிறான் .

சமுத்ராவின் உடல் எரிந்த்து வெயிலினால் மட்டுமல்ல.கூடவே அந்த போன் முத்தம் வேறு அனலை வாரியிறைத்துக் கொண்டிருந்த்து .

” வாவ் வெரி பியூட்டிபுல் …கேன் யூ கிவ் மீ ஒன் போஸ் …?” அந்த வெளிநாட்டவர் கையில் கேமராவோடு அவளிடம் கேட்டார் .

” யூ லுக் வெரி பிரிட்டி அன்ட் பேமிலி ஸ்டெரக்சர் …கேன் ஐ டேக் ஒன் போட்டோகிராபி ஆப் யூ…?”

பேமிலி லுக்கோடு இருந்தாலும் போட்டோவுக்கு போஸ் கொடுக்க வேண்டுமா ?என்னடா வம்பாக போயிற்று …இவருக்கு எப்படி மறுக்க …? நகத்தை கடித்துக் கொண்டாள் .

” ஹேய் மேத்யூ வேர் கேன் யூ கேட்ச் திஸ் ஏஞ்சல் …? ” என்ற கேள்வியுடன் வந்த மற்றொரு நபர் பார்வையில் பிரம்மிப்புடன் அவளை நெருங்கினான் .

ஆர்வத்துடன் விரிந்த அவன் பார்வையில் குனிந்து தன்னை சோதித்துக் கொண்டாள் சமுத்ரா. இடை தெரியவோ , முந்தானை சரி செய்யவோ அவசியமின்றி இன்று சுடிதாரில்தானே இருக்கிறேன் ஒழுங்காக துப்பட்டா போட்டுக்கொண்டு என திருப்தி பட்டுக் கொண்டாள் .

” ஹாய் யங் பியூட்டி ,ஐ யாம் ஜான்சன் …” என்ற அறிமுகத்தோடு வந்த அவன் கை குலுக்கும் எண்ணத்திலில்லை .கைகளை அகல விரித்தபடி அவளை அணைக்க நெருங்கினான் .

புதிய அறிமுகங்களை அணைத்து வரவேற்பது வெளிநாட்டினரின் பழக்கமென மூளை உணர்த்தினாலும் உடல் அசூசையில் சுருங்கியது .தன்னை அவனுக்கு உணர்த்தும் அவகாசமின்றி பாதுகாப்பை மனம் நாட ” ஹாய் …” என விரல்களை அசைத்தவள் அநிச்சையாக பின்னால் நகர்ந்தாள் .

” அதோ அந்த குரங்கு சிற்பங்களை பாருங்கள் ….” இது அவன் குரல் தானே .வேகமாக திரும்பியவள் ,அங்கே இரு வெளிநாட்டு பெண்களுக்கு சிற்பங்களை காட்டியபடி நின்ற யோகேஷ்வரனை பார்த்து விட்டாள் .

அவ்வளவுதான் கொஞ்சமும் யோசிக்காமல் வேகமாக நடந்து அவனருகே போய் நின்றாள் .

சிறு மூச்சு வாங்கலுடன் தன்னருகே வந்து நின்ற சமுத்ராவை ஆச்சரியமாக பார்த்த யோகன் , பின்னாலேயே விரித்த கைகளுடன் ஜான்சனை கண்டவுடன் சமுத்ரா புறம் குனிந்து ” முத்ரா பயப்படாதே , நம் நண்பர்கள்தான் ” என்றான் .

சமுத்ராவை மறைத்தாற் போல் நகர்ந்து நின்று கொண்டு ,ஜான்சனின் விரிந்த கைகளுடன் தன் கைகளை கோர்த்து கொண்டான்.் ” ஜான் இது  சமுத்ரா .என் தோழி .ரிப்போர்ட்டரா இருக்காங்க .” என தேர்ந்த ஆங்கிலத்தில் அறிமுகம் செய்வித்தவன் …

” சமுத்ரா இவர்கள் ஜெர்மனிலிருந்து வருகின்றனர் .பல்கலைக்கழக மாணவர்கள் .அவர்கள் ப்ராஜெக்ட்டிற்காக நம் ஊருக்கு வந்திருக்கிறார்கள் .மேத்யூ , ஜான்சன் ,ஒலிவியா , மார்ட்டினா …” இவளிடம் தமிழில் அறிமுகம் செய்தான் .

” அப்போது இது உங்கள் தோழி மட்டுந்தானா ? …” சமுத்ராவின் கைகளை குலுக்கியபடி ஜான்சன் கேட்டான் .

” அப்படியேதானா நண்பரே …?” மேத்யூ மேலும் துருவினான் .அவர்களுக்கு பதிலாக அழகான ஒரு புன்னகையை தந்தான் யோகன் .

” இந்தியர்கள் காதலை அவ்வளவு எளிதில் சொல்ல மாட்டார்களாமே …அப்படியா ?” என்றான் மேத்யூ .அவன் நம்பாமல் இருவரையும் திரும்பி திரும்பி பார்த்தபடி இருந்தான்

” ஓ…அப்படியேதும் இருந்தால் எங்களிடம் சொல்லிவிடுங்கள்…ப்ரெண்ட் ” சமுத்ராவின் இரு கைகளையும் பற்றிக் கொண்டனர் ஒலிவியாவும் , மார்ட்டினாவும் .

சமுத்ராவிற்கு மூச்சு முட்டுவது போலிருந்த்து .இவர்களென்ன இப்படி பேசுகிறார்கள் ? காதலா ….இவனுடனா ? எதைக் கண்டு இந்த முடிவிற்கு வந்தனர் ..? ..

” ஓ…கண்டிப்பாக …இப்போது அந்த குரங்கு சிற்பத்தை பாருங்கள் நண்பர்களே .பார்ப்பதற்கு ஓரு குரங்கு போல் தோன்றினாலும் அதில் நான்கு குரங்குகள் உள்ளன .”    அவர்கள் கவனத்தை திசை திருப்பினான் யோகன் .

” ஆஹா அழகு …” என சிலாகித்தபடி அவர்கள் கவனம் அந்தப்புறம் திரும்பியது .

நிம்மதி மூச்சு விட்டாள் சமுத்ரா .

அவர்களின் கவனத்தை திசை திருப்பி விட்டு ” முதலிலேயே இங்கே வருவதாக சொல்லியிருநதால் சேர்ந்தே வந்திருக்கலாமே ” என்றான் இவளிடம் .

” சொல்வது எதையும் கேட்கும் நிலையிலா  இருந்தீர்கள் …?” அவனடம் எரிந்து விழும்போதே இவன் சற்று முன் என்னை என்னவென அழைத்தான் முத்ராவா …? சமுத்ராவா …? தனக்குள் குழம்பினாள் .

” குழந்தைக்கு உடல்நலம் சரியில்லை சமுத்ரா .சென்னைக்கு அழைத்து போய் காட்ட வேண்டியதாயிற்று ” என்றான் இறங்கிவிட்ட குரலில் சமாதானமாக.

இவன் பிள்ளைக்கு உடம்பு சரியில்லையென்றால் என்னிடம் சொல்வானேன் .இப்படி நினைத்தாலும் ” என்ன உடம்புக்கு …?” தன்னையறியாமலேயே கேட்டாள் .
” காய்ச்சல் மாறி மாறி நிற்காமல் வரவும் சாவித்திரி ரொம்ப பயந்துவிட்டாள் .உடனே சென்னை போய் காட்ட வேண்டுமென அடம் .அதனால் சென்னையிலேயே தங்கி பார்க்க வேண்டியதாயிற்று “சிற்பம் பார்த்து கொண்டிருந்த விருந்தாளிகளின் கவனம் கவர கூடாதென இவர்களிருவரும் சற்று அருகில் நெருங்கி பேசிக் கொண்டிருந்தனர் .

இவனுக்கு முன் பற்களில் ஒன்றில் சிறு இடைவெளி தெரிகிறதே …மனதினுள் நினைத்தபடி “ ம்ம் “ கொடிக் கொண்ருந்தாள் சமுத்ரா

இருவருமாக மிக அருகில் நெருங்கி நின்று தாழ்ந்த குரலில் பேசிக்கொண்டிருந்தனர் .திடீரென இவர்களை திரும்பி பார்த்த மேத்யூ தன் நண்பர்களுக்கு ஜாடை காட்ட , நால்வரும் அவர்களை சூழ்ந்து நெருங்கி நின்று கொண்டு கை தட்டி வாவ் என குரல் எழுப்பினர்  .

திடுக்கிட்டு விலகிக்கொண்டனர் யோகனும் , சமுத்ராவும் .

” இப்போது உங்கள் இருவருக்குமிடையே ஒரு முத்தத்திற்கு எங்களுக்கு ஆட்சேபமில்லை நண்பர்களே ” குரல் கொடுத்தாள் ஓலிவியா .

முகம் சிவந்து விட்டது சமுத்ராவிற்கு .பக்கத்தில் நின்றிருந்த யோகன் புறம் திரும்ப முடியவில்லை அவளால் .அவன் பார்வை என்னை துளைக்கிறதோ .என் கன்னங்கள் ஏனிப்படி குறுகுறுக்கிறது .தன் கன்னங்களை தேய்த்து விட்டபடி திரும்பி நின்று கொண்டாள் .

” உங்களுக்கு நாங்கள் ஏதும் தடையாக இருக்கிறோமா ? ” தங்கள் கேலியை மேலும் தொடர்ந்தனர் .




” அட …கோவிலில் பார்ப்பதற்கு  எவ்வளவோ இடமிருக்கிறதே …நீங்கள் எங்களை மட்டுமே பார்க்க போகிறீர்களா ? இதோ இந்த கோவில் கட்ட எந்த கற்களை பயன்படுத்தியிருக்கிறார்கள் தெரியுமா ? ” மீண்டும் அவர்கள் கவனத்தை திசை திருப்பினான் யோகேஷ்வரன்.

” ஆமாம் அழகான இந்த கற்கள் எங்கிருந்து கொண்டு வரப்பட்டன ? ” அவர்கள் கவனத்தை கற்களின் மீது வைத்தனர் .

அப்போது திடீரென காலடியில் பூமியை யாரோ உருவி விட்டது போன்ற ஒரு உணர்வில் தடுமாறினாள் சமுத்ரா .தொடர்ந்து அதிர்ச்சி அலையொன்று அவள் உடல் முழுவதும் ஓட கைகள் அலை பாய அருகிலிருந்த யோகேஷ்வரன் கரங்களை பற்றிக் கொண்டாள் .

,”இதோ இந்த பக்கம் வாருங்கள் “அந்த நால்வருக்கும் ஓரிடத்தை சுட்டிவிட்டு சமுத்ராவின் கையை பற்றி இழுத்தபடி அந்த பாறை இடுக்கினுள் நுழைந்தான் யோகன் .

What’s your Reaction?
+1
1
+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!