Samayalarai

வாட்டி வதைக்கும் வெயிலுக்கு இதமான சூப்பர் தர்பூசணி மில்க்‌ஷேக்…

கோடைகாலத்தில் உடலில் தண்ணீரின் அளவு குறைந்து கொண்டே இருப்பது இயல்பு. இதனால் கோடைகாலத்தில் அதிக பழ வகைகள் சாப்பிட வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர். அவற்றிலும் நீர் ஆகாரங்களை அதிக அளவில் எடுத்துக்கொள்ள வேண்டும் என வலியுறுத்துகின்றனர்.

நீர் சத்து அதிகம் நிறைந்த உணவு பொருள்களில் தர்பூசணி முக்கியமான ஒன்று. அதை அப்படியே சாப்பிட்டு பழகிய நீங்கள் ஒருமுறை தர்பூசணி மில்ஷேக் செய்து குடித்து பாருங்கள். சுவை அட்டகாசமாக இருக்கும். தர்பூசணி மில்ஷேக் செய்வது எப்படி என்பதை தெரிந்துகொள்ளலாம் வாருங்கள்.




News18

தேவையான பொருட்கள்:

தர்பூசணி – அரை பழம்

பால் – அரை லிட்டர்

சர்க்கரை – தேவையான அளவு

பாதாம் பிசின் – 2 ஸ்பூன்

சப்ஜா விதை – 1 ஸ்பூன்




செய்முறை விளக்கம் :

  • முதலில் அரை தர்பூசணி பழத்தை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி மிக்ஸியில் இரண்டு ஸ்பூன் சர்க்கரை அல்லது தேன் சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ளவும்.

  • பின்பு ஒரு பாத்திரத்தில் அரைத்த தர்பூசணி ஜூஸை வடிகட்டி எடுத்துக் கொள்ளவும். அதனுடன் அரை லிட்டர் காய்ச்சி ஆற வைத்த பால் ரெண்டு ஸ்பூன் பாதாம் பிசின் ஒரு ஸ்பூன் சப்ஜா விதைகள் சேர்த்து நன்கு கலக்கவும்.

  • பின்பு அதனை அரை மணி நேரம் ஃப்ரிட்ஜில் வைத்து எடுத்து குடித்தால் குளு குளுவென வெயிலுக்கு இதமான தர்பூசணி மில்க் ஷேக் தயார்.

  • இது போன்ற ஜூஸ்களை வீட்டிலேயே தயார் செய்து குடித்தால் சுகாதாரமாகவும் ஆரோக்கியமானதாகவும் இருக்கும்.



வீட்டுக்குறிப்பு:

இட்லி, தோசை மாவு சீக்கிரம் புளிச்சுப் போகுதா? இதோ மாவு புளிக்காமல் இருக்க சில டிப்ஸ்... | Idli Dosai Maavu Pulikamal Iruka Tips To Avoid Sourness In Idli Dosa Batter In Tamil ...

  • பொடி வகைகளில் உப்பு அதிகமாகி விட்டால் அதில் உள்ள பருப்பு எதுவோ அதை கொஞ்சம் வாணலியில் வறுத்து தனியாக பொடி செய்து நன்கு கலந்து விட்டால் உப்பு குறைந்து விடும்.

  • பெருங்காயம் கட்டியாகி இறுகி விட்டால் அதில் இரண்டு பச்சை மிளகாய் போட்டு வைத்தால் இளகிவிடும்.

  •  தோசை மாவு நீர்த்து இருந்தால் பாலில் இரண்டு ஸ்பூன் ரவை மற்றும் அரிசி மாவு சேர்த்து அதனுடன் கலந்து விட்டால் மேலும் நீர்த்துப் போகாது, புளிப்பும் தெரியாது.




What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!