gowri panchangam Sprituality

மகாபாரதக் கதைகள்/துரியோதனின் மனைவி பானுமதி.

துரியோதனின் மனைவி பானுமதி.

துரியோதனின் மனைவியான பானுமதி பிராஜ்யோதிஷ்பூரை ஆண்ட பகதத்தன் என்னும் மன்னனின் மகள் ஆவார். இவர் பருவ வயதை எட்டியவுடன் இவருக்கு சுயம்வர நிகழ்த்த இவரின் தந்தை முடிவு செய்திருந்தார். இளவரசனாக முடிசூடவுள்ள துரியோதனன் சகுனியின் அறிவுரையின் படி பானுமதியின் சுயம்வரத்தில் கலந்துகொள்ள தன் நண்பன் கர்ணனுடன் சென்றான். அந்த சுயம்வரத்தில் சிசுபாலன், ஜராசந்தன், பிக்ஷமகன், வக்ரன் போன்ற மாவீரர்களும் கலந்து கொள்ள வந்திருந்தனர். சுயம்வர விதிகள் பகதத்தன் ஏற்பாடு செய்திருந்த சுயம்வர விதிகளின் படி இளவரசரகள் அனைவரும் வரிசையா நிற்க வேண்டும். பானுமதி ஒவ்வொருவரின் முன்னும் வந்து நிற்கும்போது அவர்கள் தங்களின் வீரத்தைப் பற்றியும், திறமைகளைப் பற்றியும் கூற வேண்டும். அதில் பானுமதிக்குப் பிடித்தவரை அவர் தேர்வு செய்து கொள்வார் என்று விதி நிர்ணயிக்கப்பட்டது. சுயம்வரத்தில் பங்கேற்கும் அனைவரும் பானுமதியின் வருகைக்காகக் காத்திருந்தனர்.




துரியோதனன் அங்கு வரும்போது பானுமதி அவரை பார்க்காமல் வேறு திசையில் பார்த்துக்கொண்டிருந்தார். துரியோதனன் கோபம் கொண்டு பானுமதியை கடந்த திட்டமிட்டார். இதை கர்ணனிடம் கூறியது தான் தாமதிக்காமல் பானுமதி கடத்தினார்கள்.எதிர்த்தவர்களை புறமுதுகிடசெய்து அஸ்தினாபுரம் வந்தனர்.

பீஷ்மர் கோபித்து சத்தம் போடுகையில் முன்பு அம்பை, அம்பாலிகாவை அப்படித்தானே கடத்தினீர்கள் என்றதும் வாயடைத்து போய் நின்றார் பீஷ்மர்.

துரியோதனன் திருமணம் நடந்தது.

ஒருசமயம் கர்ணனும் பானுமதியும் சொக்கட்டான் விளையாடிக் கொண்டிருந்தார்கள்.அதுசமயம் வெளியே சென்றிருந்த துரியோதனன் வருகையில் பானுமதி அவசரமாக எழுந்தார். கர்ணன் ஏன் பாதி விளையாட்டில் எழுந்தார் என்று மேகலை தொட்டு இழுத்தார்.அதிலிருந்த மணிகள் உதிர்ந்தன.இதைப் பார்த்த துரியோதனன் “எடுக்கவா ,கோர்க்கவா” என வினவினார்.அந்த அளவிற்கு அவர்களிடையே நட்பிருந்தது.

What’s your Reaction?
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!