Serial Stories நீ தந்த மாங்கல்யம்

நீ தந்த மாங்கல்யம்-20

( 20 )

அதிகாலை சூரியன் அந்த குளத்து நீரில் சில தங்கத்துகள்களை விதைத்திருந்தான் .அவை அசைவிற்கேற்ப அங்குமிங்கும் மிதந்து கொண்டிருந்தன .

இரண்டு நாட்களுக்கு முன்பு இக்குளம்தானே என் உயிரை குடிக்க நினைத்தது .இப்போது எவ்வளவு அழகாக காட்சியளிக்கிறது .ஏனோ இப்போதும் அக்குளத்தினுள் கண்ணுக்கு தெரியா ராட்சச கரமொன்று தனக்காக காத்திருப்பது போன்றே தோன்றியது முகிலினிக்கு .
குளத்தினுள்ளா ?  …அல்லது இங்கே …எங்காவதா ? .தலையை திருப்பி சுற்றி ஆராய்ந்தாள் .இங்கே எங்கேயோ தப்பு இருக்கிறது .அதை எப்படி கண்டுபிடிப்பது ?

அன்று ஞாயிற்றுக்கிழமை .விடுமுறைதினம் .யதுநந்தன் வீட்டில்தான் இருந்தான் .எதையாவது காரணமாக வைத்துக் கொண்டு அவள் பின்னால் சுற்றிக்கொண்டே கண்களாலே
யே அவளுடன் காதல் செய்து கொண்டிருந்தான் .

தன் பெண்மையை உருக்கும் அந்த பார்வையிலிருந்து தப்பத்தான் முகிலினி இங்கே வந்து அமர்ந்து கொண்டிருந்தாள் .அன்று கீர்த்திவாசனை கோவிலில் சந்தித்ததில் இருந்து அங்கே செல்ல விருப்பமில்லாமல் இருந்தது .

வேறெங்கும் வெளியே செல்வதானாலும் யதுநந்தனை அணுக வேண்டும் அல்லது காருண்யாவை .இந்த இரண்டுமே பிடிக்காததால் அந்த வீட்டையே சுற்றி வந்து கொண்டிருந்தாள் முகிலினி .

அன்று மாடியிலிருந்து பார்த்த போது இரண்டு உருவங்கள் தெரிந்ததே .அவை அதோ அந்த மரத்தின் பின்னால்தானே மறைந்தன .இரண்டு பேருமே எனக்கு பரிச்சயமானவர்களாகத்தானே தோன்றினார்கள் .எனது யூகம் சரியாக இருந்தால் அவர்கள் …

” என்ன மேடம் இங்கே தனியாக உட்கார்ந்து விட்டீர்கள் ? சார் வரவில்லை ? ” முகிலினியின் சிந்தனையை குலைத்தபடி வந்தாள் காருண்யா .

” இல்லை …” என்று பதிலளித்தபடி அவளை உற்று நோக்கினாள் முகிலினி .

அந்த வீட்டில் நீச்சல்குளம் இருக்கும் பகுதி வீட்டுப்பெண்கள் புழங்குவதற்கு வசதியாக சற்று மறைவாகவே அமைக்கப்பட்டிருந்தது .வேலையாட்கள் சுத்தப்படுத்துதல் தவிர்த்து அந்த பகுதிக்கு வருவதில்லை .அங்கே இவள் மட்டும் எப்படி அடிக்கடி வருகிறாள் ? ஒருவேளை இவளை யதுநந்தன் வேலையாளாக எண்ணுவதில்லையோ ?….

” நீங்கள் இங்கு அடிக்கடி வருவீர்களோ ? இரவு , பகல் பாராமல் ….? ” அர்த்தத்துடன் கேள்வியை வீசினாள் முகிலினி .




” அன்று நீங்கள் உள்ளே விழுந்த போது வந்ததை வைத்து கேட்கிறீர்களா? அன்று சும்மா தூக்கம் வரவில்லை .அதுதான் காலாற சிறிது நடக்கலாமென வந்தேன் .வந்தது நல்லதாயிற்று .உங்களை காப்பாற்ற முடிந்தது ” என்றாள் .

” ஏன் மேடம் நீங்கள் நீச்சல் பழகிக் கொள்ளுங்களேன் .நம் சாரிடமே ..அவர் நீச்சல் சாம்பியன தெரியுமா ? ” என்றாள் .குரலில் பெருமை வழிந்தது .

என் கணவரை பற்றி நீ சொல்லி நான் தெரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது பார். எல்லாம் என் நேரம் .என எண்ணியபடி பற்களை காது வரை இழுத்து அவளிடம் காட்டினாள் முகிலினி .

” நான் வருகிறேன் மேடம் ” என சிறிது தூரம் சென்றவள் திரும்பி வந்து ” மேடம் அங்கிருந்து பார்க்கும் போது அப்படியே சிற்பம் ஒன்று உயிர் பெற்று வந்து ஓய்வாக அமர்ந்திருப்பது போன்றே இருக்கிறீர்கள் மேடம் .அதிலும் இந்த சூரியக்கதிர்கள் பட்டதும் பொற்சிலையேதான் .எப்படி இவ்வளவு அழகாக உடம்பை வைத்திருக்கிறீர்கள் ? ” என்றவளின் குரலில் இருந்தது நிச்சயம் பாராட்டுத்தான் .

அன்று சேலை தட்டியதால் ..இன்று முகிலினி அணிந்திருந்தது காலை ஒட்டிய டைட்சும் , மேலே ஒரு காஸுவல் வியரும் .அத்துடன் பின்னால் சாய்ந்து கொள்ளுமாறு இருந்த அந்த இருக்கையில் சாதாரணமாக சாய்ந்திருந்தாள் .அதற்கே இவ்வளவு பாராட்டா ?

கூச்சத்தால் கன்னங்கள் சிவக்க நன்றி சொல்ல வாயை திறந்த போது ” சரியாக சொன்னாய் காருண்யா ” என்று யதுநந்தனின் குரல் பின்னாலிருந்து வந்தது .பார்வையை மனைவி மீது வேரூன்றியபடி வந்தான் யதுநந்தன் .

பார்க்கும் பார்வையை பார் …. அவசரமாக தனது தோற்றத்தை சிறிது சரி செய்து கொண்டாள் முகிலினி .

” நான் வருகிறேன் சார் .இங்கே சுத்தம் பண்ணும் வேலையெல்லாம் முடிந்துவிட்டது .யாரும் வர மாட்டார்கள் ” என்ற உபரி தகவலையும் அளித்துவிட்டு குறும்பு புன்னகையோடு விடை பெற்றாள் காருண்யா .

என்ன நினைத்து இவள் இப்படி சொல்லிவிட்டு போகிறாள் ..வேகமாக எழ முயன்ற முகிலினியை உரசியபடி ஒருவர் மட்டுமே அமர முடிகின்ற அந்த இருக்கையில் அவளருகில் நெருக்கியபடி அமர்ந்தான் யதுநந்தன் .

” என்ன ? ” முடிந்த வரை கோபத்தை குரலில்  காட்ட முயன்றாள் முகிலினி .உள்ளூர இவர் குளிக்க வந்தார் போலும் .நான் கிளம்ப வேண்டியதுதான் என எண்ணினாள் .
உள்ளே நீச்சலுடை அணிந்திருக்க வேண்டும் .வெளியே அதை மறைக்க ஒரு கோட் அணிந்திருந்தான் யதுநந்தன் .

” ஒன்றுமில்லையே …” இதழ்கள் இல்லையென கூற ஏதேதோ விவரங்களை அவளுக்கு விளக்க முயன்று கொண்டிருந்தன அவன் விழிகள் .

இல்லை இல்லையென்றபடியே
விழுங்கிக் கொண்டிருக்கிறாய்
என்னை ,
விடு ..விடு ..என்றபடியே
வீழ்ந்து கொண்டிருக்கிறேன் நான் ஆழிப் பேரலையினுள் ,
காப்பாற்றுவதாய் கை நீட்டாதே ,
முடிந்தால் …
என் ரத்தம் உறியும்
உன் காதல் பற்களை
சுருட்டிக்கொள் ,
இவ்வுலகின் ஏதாவதொரு மூலையில் ,
பிழைத்து கிடந்து விட்டு போகிறேன் .

இப்படித்தான் கவிதை தோன்றியது முகிலினிக்கு .ஏனெனில் அப்படித்தான் யதுநந்தன் தன் ஸ்பரிசத்தால் அவளை சோதித்து கொண்டிருந்தான் .

” நான் உள்ளே போக போகிறேன் ….” எழ முயன்ற முகிலினியை அந்த இருக்கையோடு சேர்த்து அழுத்தியவன் கைகளில் ஒரு க்ரீம் .

அது அலர்ஜிக்கு போடுவது .அன்று முகிலினி குளத்தினுள் விழுந்த அன்று அவள் உடலில் குளோரின் அலர்ஜியை பார்த்து ” இந்த க்ரீம் தடவிக் கொண்டால் அலர்ஜி போய்விடும் ” என்றபடி அவளை அணுகினான் .

” நானே போட்டுக் கொள்கிறேன் ” என அவன் கையிலிருந்த க்ரீமை வெடுக்கென பிடுங்கி தானே தடவிக்கொண்டாள் முகிலினி .

இப்போது இதனை எதற்கு எடுத்து வந்திருக்கிறான் .அவள் யோசனைக்கு பதில் போல அவள் கைகளை எடுத்து அதில் க்ரீமை தடவ தொடங்கினான் .

“, இது எதற்கு இப்போது ? ” திணறலுடன் கேட்டாள் முகிலினி .

” அட நாம் நீச்சல் பழக போகிறோமே குட்டிம்மா .அதற்காகத்தான் “

அப்படி கூப்பிடாதே என்று சொன்ன பின்பும் எவ்வளவு தைரியமிருந்தால் திரும்பவும் அப்படியே கூப்பிடுவான் .

” எனக்கு இப்போது நீச்சல் தேவையில்லை ” வேகமாக கூறினாள் .

” ஆனால்  எனக்கு இப்போது உனக்கு சொல்லிக் கொடுப்பது தேவையாயிற்றே  …” கிண்டலாக கூறியபடி அவளது அடுத்த கையில் நிதானமாக தன் விரல்களை ஓட்டினான் .

முகிலினியின் உடல் மெல்ல நடுங்க தொடங்கியது .தன் கைகளை உருவ முயன்றாள் .அதனை தடுப்பதை சாக்காக வைத்து மேலும் அவளோடு ஒட்டினான் யதுநந்தன் .எனவே அந்த முயற்சியை கை விட்டாள் முகிலினி .




இவனை …எப்படியெல்லாம் சோதிக்கிறான் ..பற்களை கடித்துக் கொண்டாள் .வெளியே நின்று கொண்டு இவனுடன் வெளிப்படையாக சண்டை போட முடியாது .

வேலையாட்கள் யார் கண்ணிலாவது படக் கூடும் .முக்கியமாக அந்த காருண்யா கண்களில் தாங்கள் சண்டையிடுவது படுவது முகிலினிக்கு பிடிக்கவில்லை .அவள் வேறு எந்நேரமும் இங்கேதான் சுற்றிக் கொண்டிருப்பாள் .

எனவே வெளித்தெரியாமல் சுமூகமாக கணவனிடமிருந்து விடுபட எண்ணினாள் முகிலினி .

” இங்கே பாருங்கள் இன்று நான் மிகவும் பலவீனமாக என்னை உணர்கிறேன் .எனவே இன்னொரு நாள் நாம் …” என வார்த்தைகளை கவனமாக தேர்ந்தெடுத்து அவள் கூறிக்கொண்டிருக்கையில் …

” உன் பாதங்கள் கூட எவ்வளவு மென்மையாக இருக்கின்றன குட்டிம்மா …” என ரசனையோடு அவள் பாதங்களை வருடிக் கொண்டிருந்தான் யதுநந்தன்.

பொறுக்க முடியாமல் வேகமாக எழுந்து விட்ட முகிலினியால் ஒற்றைக்காலில்  நிற்க முடியாமல் கணவன் தோள்களையே ஆதரவிற்கு அணைத்தாள் .ஏனெனில் தன் கைகளுக்குள் இருந்த அவள் பாதத்தை அவள் கணவன் விடவில்லையே .

மீண்டும் அமர்ந்து கொண்டவள் , குறும்போடு நகைத்த கணவனை கெஞ்சுதலாக பார்த்து ” விடுங்கள் ..ப்ளீஸ் ..”, என்றாள் .

” ம் …இது பரவாயில்லை “, என்றபடி மெல்ல அவள் பாதங்களை விடுத்து கீழே வைத்தான் .

“,ஏன் இப்படியெல்லாம் செய்கிறீர்கள் …? ” என்றபடி அவன் புறம் திரும்பிய முகிலினி அதே வேகத்தில் முகம் சிவக்க மறுபுறம் திரும்பிக் கொண்டாள் .

” எதற்காக இப்படி நிற்கிறீர்கள் ? ” முகம் சிவப்பை மறைக்க முயன்றபடி மேலே போட்டிருந்த கோட்டை சுழட்டி போட்டு விட்டு ஜட்டியுடன் நின்ற யதுநந்தனை கேட்டாள் .

” என்ன குட்டிம்மா  இது வம்பா இருக்கு ? ஸ்விம் பண்றவங்க வேறு என்ன உடை அணிவார்களாம் ” என்றான் கிண்டலாக .

” நீ கூட ஸ்விம்சூட் போட்டுக்கோயேன் ” என்றவன் பார்வை இப்போதே அவளை ஸ்விம்சூட்டில் நிற்க வைத்திருந்தது .

” நான் நீச்சல் பழகுவதாக இல்லை ” அழுத்தமாக அவனிடம் கூறிவிட்டு நடந்த முகிலினியின் கால்கள் தரையில் பதியவில்லை .

அப்படியே அவளை கைகளில் அள்ளியிருந்தான் யதுநந்தன் .” நானும் உன்னை விடுவதாக இல்லை ” என்றபடி அவளோடு சேர்ந்து நீரினுள் பாய்ந்திருந்தான் .

” இதோ இந்த கைகளில் இப்படி படுத்துக்கொள் ” என கைகளை நீட்டினான் .வேறு வழியின்றி அவன் கைகளில் படுத்து அவன் கூறியது போல் கை கால்களை ஆட்டத்துவங்கினாள் முகிலினி .

நீரினுள் அவள் அணிந்திருந்த சட்டை மேலே சுருண்டுவிட அவளது வெற்றிடையில் பதிந்த யதுநந்தனின் கைகளுக்கு நீச்சல் சொல்லி தரும் எண்ணம் எதுவும் இருப்பதாக முகிலினிக்கு தோன்றவில்லை .

முகம் மாற அவனிடமிருந்து விலக முயல , விடாமல் பற்றி அவன் அருகிழுக்க …தாள முடியாமல் அவன் தோள்களில் சரிந்து விடுவோமோ என முகிலினி அஞ்சிக் கொண்டிருந்த போது ….

” முகிலினி எங்கேம்மா இருக்கிறாய் ? ” என்ற கேள்வியோடு வந்து நின்றாள் சந்திரவதனா .

அடுத்தவர் குரலில் அனிச்சையாய் கணவனிடமிருந்து விலக முயன்ற முகிலினியை இப்போதும் விடாமல் தன்னுடனேயே இறுக்கியபடி ” இங்கேதான் இருக்கிறாள் .என்ன விசயம் அத்தை ? ” என்றான் .கைகள் விடாமல் மனைவியின் இடையை வருடியபடி இருந்தது .

ஏன் இப்படி பண்ணுகிறான் என எண்ணும்போதே சந்திரவதனாவின் நிலை முகிலினிக்கு நினைவு வந்தது .பார்க்க முடியாது என்பதற்காக பெரியவர்கள் முன் இப்படியா நடந்து கொள்வார்கள் ? இதோ பெரியம்மாவின் கண்கள் இந்த நீரையும் தாண்டி எங்களை உறுப்பது போல் எனக்கு தோன்றுகிறதே …

” விடுங்கள் …” என முணுமுணுத்தபடி கணவனிடமிருந்து விலக முனைந்தாள் .

” ஒன்றுமில்லைப்பா சௌமி ஷாப்பிங் னு வெளியே போய் விட்டாள் .எனக்கு பொழுது போகவில்லை .அதுதான் நம் முகிலினியோடு கொஞ்ச நேரம் பேசிக் கொண்டிருக்கலாமே என வந்தேன் ” என்றாள் சந்திரவதனா .

” அவள்…வருவாள் அத்தை …நீங்கள் போங்கள் ….” என்றபடி மனைவியை மேலும் அருகில் இழுத்தான் கணவன் .

அப்போது திரும்ப முயன்ற சந்திரவதனா லேசாக தடுமாற ” மெல்ல அத்தை ” என எச்சரித்த யதுநந்தனின் கை சற்று தளரவே அதை பயன்படுத்தி மேலே ஏறிவிட்டாள் முகிலினி .

” இதோ நானே வந்துவிட்டேன் பெரியம்மா ” வேகமாக சந்திரவதனாவின் தோள்களை அணைத்து கொண்டாள் .

” நீங்கள் உங்கள் அறைக்கு செல்லுங்கள் பெரியம்மா .நான் உடை மாற்றி வருகிறேன் ” என்றுவிட்டு தன் அறைக்கு வந்த முகிலினி ஷவரை திறந்துவிட்டு அதனடியில் நெடுநேரம் நின்றாள் .




நீர் எவ்வளவு குளிர்ந்ததாய் இருந்தாலும் யதுநந்தனின் கை சூட்டினை குறைக்கும் வல்லமை அதற்கு இல்லை .அவனது சூடு முகிலினியின் உடலோடு உறைந்து விட்டதோ ? கண்களிலிருந்து கண்ணீர் வடிந்தது முகிலினிக்கு .

அப்போது சந்திரவதனா வந்தவுடன் இவர் இப்போது ஏன் இங்கே வந்தார் ? என்றுதான் முகிலினிக்கு முதலில் தோன்றியது .அதை நினைத்தே மேலும் கண்ணீர் வடித்தாள் .

வேறு உடை மாற்றி சந்திரவதனா அறையை அடைந்த போது அவள் மிகுந்த கவலையோடு கட்டிலில் அமர்ந்திருந் தாள் .

” என்னாச்சு பெரியம்மா ? ” அவள் கைகளை ஆதரவாக பற்றினாள் முகிலினி .

” முகிலினி நாங்கள் அண்ணன் குடும்பத்தாரை அண்டி இங்கே வாழ்ந்து கொண்டிருக்கிறோம் .இப்போது எங்கள் ஆதரவு நந்து மட்டும்தான் .அவன் விரட்டி விட்டால் எங்களுக்கு வேறு கதியில்லை ” விம்மினாள் சந்திரவதனா .

” என்ன பெரியம்மா ? எனக்கு ஒன்றும் புரியவில்லை “, என்றாள் முகிலினி .

” உன் அப்பா சாவுக்கு அவன்தான் காரணமென்று உனக்கு தெரியாது .அதை உனக்கு சொல்லக்கூடாது என நந்து சொல்லியிருந்தான் .இப்போ இதை நான்தான் உனக்கு சொன்னேன்னு தெரிஞ்சது எங்கள் கதி  அவ்வளவுதான ” சந்திரவதனாவின் கைகள் நடுங்கின .
” இதெல்லாம் அவரிடம் நான் போய் சொல்வேனா பெரியம்மா .நீங்க கவலைப்படாதீங்க ” என அவளை சமாதானப்படுத்தினாள் .

நெற்றி முழுவதும் முத்து முத்தாக வியர்த்திருக்க எச்சில் விழுங்கியபடி நிறைய பதட்டத்துடன் அமர்த்திருந்தாள் சந்திரவதனா .

பாவம் ஆதரவற்ற பெண் .இருக்கும் ஒரே ஆதரவும் போய்விடுமோ என பதறுகிறார்கள் .இரக்கத்துடன் எண்ணியபடி ” ஏன் பெரியம்மா இப்படி ஏஸி போடாமல் வியர்வைக்குள் இருக்கிறீர்கள் .இருங்க ஏஸி போடுறேன் ” என்றுவிட்டு சுவிட்ச் அருகில் சென்றாள் .

ஆன் செய்வதற்காக சுவிட்ச்சில் கை வைத்தவுடனே மிக அதிக …உயிரை பறிக்கும் அளவு அதிக மின்சாரம் முகிலினியின் கைகளில் பாய ” ஆ ” வென அலறினாள் அவள் .




What’s your Reaction?
+1
20
+1
11
+1
0
+1
0
+1
1
+1
0
+1
1
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!