Samayalarai

அரிசி மாவு பூரி

தேவையான பொருட்கள்

அரிசி மாவு-2 கப்

தேங்காய் துருவல் -1/4 கப்

பெரிய வெங்காயம்-1

சீரகம்- ½ தேக்கரண்டி




செய்முறை விளக்கம்

  • முதலில் வெங்காயத்தை நறுக்கிக் கொள்ளவும். பின் தேங்காய் துருவல், நறுக்கிய வெங்காயம், சீரகத்தை சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.

  •  பின்பு ஒரு பாத்திரத்தில் இரண்டு கப் அரிசி மாவு சேர்த்து அதில்  அரைத்து வைத்த கலவையை சேர்த்து பிசைந்து கொள்ளவும்.    தேவைப்பட்டால் தண்ணீர் ஊற்றி பூரி மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ளவும்.

  • பின் பிசைந்த வைத்த மாவை உருண்டையாக உருட்டி கொள்ளவும். கட்டையால் தேய்க்க முடியாது அதனால் வாழ இலை  எடுத்துக் கொள்ளுங்கள்.  இந்த வாழை இலையில் உருட்டி வைத்து உருண்டையை வைத்து அதன் மேல் ஒரு தட்டை வைத்து அழுத்துங்கள்.

  • பிறகு அடுப்பை பற்ற வைத்து கடாயை வையுங்கள். தேவையான அளவு எண்ணெய் ஊற்றிக் கொள்ளுங்கள். எண்ணெய் சூடானதும் தட்டி வைத்த பூரி மாவை  பொரித்து  எடுங்கள்.  அவ்வளவு தான் அரிசி  மாவு பூரி ரெடி.




டிப்ஸ்

  • இந்தப் பூரி மாவை மெல்லிசாக தட்டி விடாதீர்கள். கொஞ்சம் கடினமாக தட்டிக் கொள்ளுங்கள்.

  • இதை பூரிக்கட்டையால் சப்பாத்தி மாவு போல் தேய்க்க வராது.

What’s your Reaction?
+1
0
+1
2
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!