Serial Stories அதோ அந்த நதியோரம்

அதோ அந்த நதியோரம் – 6

6

 

இதோ …இங்கே பேஷன்ட்ஸ் வெயிட் பண்ணுகிற இந்த ரூமுக்கு இரண்டு பேன் போடுங்க …நாலு பக்க சுவரிலும் எல் .இ.டி பல்ப் , அதோ அங்கே உயரமா ஒரு டிவி ….” எலக்ட்ரீசியனிடம் தன் கிளினிக்கிற்கான தேவைகளை விளக்கினாள் ஜீவிதா .

பிரசவ அறையை பார்வையிட்டு திருப்தி பட்டுவிட்டு , பாத்ரூம்களின் சுத்தம் பார்த்தாள் .ப்ளட் டெஸ்ட் லேப்பில் கருவிகளை ஆராய்ந்து விட்டு சீக்கிரமே எக்ஸ்ரே மிஷின் கூட வாங்கனும் …திட்டமிட்டுக் கொண்டாள் .

ஆரம்பத்தில் வேண்டா வெறுப்பாக இந்த க்ளினிக்கை ஆரம்பித்திருந்தாலும் , ஒவ்வொரு வேலையாக செய்ய செய்ய அவளுக்கே அவளுக்கான இந்த தொழில் இடத்தில் வெகுவாக மனம் பொருந்தி போக கொஞ்சம் கொஞ்சமாக அவளுக்காகவே உற்சாகம் வரத் துவங்கியது .இதுவரை  வேறு ஹாஸ்பிடல்களிலேயே பயிற்சி எடுத்துக் கொண்டிருந்தவளுக்கு …அவளுக்கேயான இந்த  சிறு க்ளினிக் மிகப் பிடித்து போனது .




அடுத்தவர்களின் துயர் துடைக்கும் அற்புத பணி இது .வலியால் முகம் சுளித்து கிடப்பவர்களின பாவத்தை மலர்ச்சியாக    மாற்றுவதெனபது …எல்லோருக்கும் வாய்ப்பது கிடையாது .அதனை அனுபவிப்பவர்களுக்கே  தெரியும் .ஒரு வாரத்திலேயே அதனை அனுபவிக்க ஆரம்பித்து விட்ட ஜீவிதாவின் வாழ்வு அந்த எளிய மக்களின் வாழ்த்துக்களால் நிறைய தொடங்க , அவள் அடி மன அழுத்தங்கள் கொஞ்சம் குறைய தொடங்கின .

” முதலாளி ஐயா …இந்த மருந்துகளெல்லாம் வாங்கி கொடுத்து விட்டாருங்க டாக்டரம்மா ….” சிறு ப்ளாஸ்டிக் பெட்டிக்குள் பாதுகாப்பாக பொதித்து அந்த தொழிலாளி கொண்டு வந்து தந்த மருந்துகள் அனைத்துமே அரிதான குழந்தை தடுப்பூசி மருந்துகள் .விலை உயர்ந்தவை .இந்த எளிய மக்களுக்கு எட்டாதவை .இவற்றை அவன் வெளிநாட்டிலிருந்து வர வைத்திருக்க வேண்டும் .இதற்கு அவனிக்கு லட்சங்களில் செலவு ஆகியிருக்கும் .

இதெல்லாம் வேண்டாம் .உங்கள் ஐயாவிடமே கொண்டு போய் கொடு …எனத் துடித்த நாவை ஊர் மக்களுக்காக அடக்கிக் கொண்டு ” மருந்துகளை ப்ரிட்ஜில் எடுத்து வை ஜெயந்தி …” என்றாள் .

சிவபாலனை அவளால் புரிந்து கொள்ள முடியவில்லை .அவனது தோழி என யாரோ ஒரு காமினியை அந்த ஊருக்கு டாக்டராக கொண்டு வருவதில் உறுதியாக நின்றான் .என்னைத் தாண்டி இங்கே ஊருக்குள் எவள் வருகிறாளென பார்க்கிறேன் என ஜீவிதாவும் அவனிடம் மல்லுக்கு நின்றாள் .ஒரு வாரமாக ஊர் பெரிய மனிதர்கள் இவர்கள் இருவருக்குமடையே நடையாய் நடந்து பஞ்சாயத்து பேசி , இந்த ஊர் பெண் எனபதால் ஜீவிதாவிற்கே முதல் உரிமை என ஆலமரமில்லாமல் , சொம்பு இல்லாமல் தோளில் துண்டு மட்டும் போட்டபடி தீர்ப்பு சொல்லி முடித்தனர் .

அந்த தீர்ப்பின் போது வெற்றி பெற்ற களிப்புடன் சிவபாலனை பார்த்தவளுக்கு அவனது முகபாவத்தை பார்த்து குழப்பம் வந்த்து . இது என்ன பாவம் …வெற்றி …தோல்வி என எதையும் தீர்மானிக்க முடியாத வித்தியாச பாவம் .இவன் ஏன் இப்படி தாடி வளர்த்து கொண்டிருக்கிறான் …? சும்மாவே என்ன நினைக்கிறானென்பதை சுலபமாக முகத்தில் கண்டு பிடிக்க முடியாது …இதில் இப்படி தாடி வைத்து பாதி முகத்தை மறைத்துக் கொண்டால் …எதை பார்ப்பது …? அலுத்துக் கொண்டவளை அவன் முகத்தில் என்ன பார்க்க போகிறாய் நீ ..்என மனசாட்சி அதட்டியது .




எப்போதும் என்னிடம் எதற்காவது எதிர் பேச்சு சொல்லிக் கொண்டே இருக்கிறானே …அதுதான் அவன் முகத்தை ஆராய நினைக்கிறேன் …தனக்கு தானே சமாதானம செய்து கொண்டாள் .

ஆரம்பத்தில் இவள் இங்கே க்ளினிக் ஆரம்பிப்பதை அந்த அளவு எதிர்த்தவன் , பிறகோ க்ளினிக்கிற்கான அத்தனை உதவகளையும் தானகவே செய்தான் .இவள் ஒவ்வொன்றாக மனதினுள் நெட்டுரு போட்டிருக்கும் தேவைகள் அடுத்தடுத்து தானாகவே நடந்து கொண்டிருக்கும் .அததற்கான ஆட்களை அனுப்பியபடி இருந்தான் . இன்னமும் இவனுக்கு இந்த படிப்பின் மேலிருந்த ஆவல் குறையவே இல்லை என்று வேதனையுடன் நினைத்துக. கொண்டாள் .

” எங்கேய்யா வேலை பார்க்கிறீங்க …? ” மூச்சிரைப்புடன் தன்னிடம் வந்த அந்த நடுத்தர வயது தொழிலாளியிடம் கேட்டாள் .

” பதி சிமெண்ட் பாக்டரியில் வேலை பார்க்கிறேம்மா …”

அது அவர்கள் சிமெண்ட் பாக்டரி .சேதுபதி , சபாபதி என தன் பிள்ளைகளின் பாதி பெயரில் அவர்கள் தாத்தா ஆரம்பித்தது .சபாபதி கையில் இருந்த அந்த பாக்டரியை சேதுபதி அண்ணனுடன் சண்டையிட்டு பிரித்து வாங்கிக் கொண்டு போனார் .அதனை அப்படியே தன் மருமகனுக்கு கொடுத்து விட , அந்த பேக்டரி இப்போது சிவபாலன் கைகளில் .அதை வைத்துக் கொண்டுதான் பெரிய முதலாளியாக  பாரின் காரும் , புல் சூட்டுமாக ஊருக்குள் பந்தா காட்டிக் கொண்டு திரிகிறான் .

அந்த தொழிலாளியின் இதய துடிப்பை சோதிக்கும் இரண்டு நிமிடத்தில் இத்தனை விசயங்களும் ஜீவிதாவின் மனதில் ஓடிவிட்டது .

” இந்த மூச்சிரைப்பு அடிக்கடி வருமா …? எத்தனை நாட்களாக இருக்கிறது …? “

” இரண்டு நாட்களாகத்தான் இருக்கிறதும்மா .இரண்டு நாளுக்கு முன்ன லோட் இறக்க ரயில்வே ஸ்டேசன் போனேன் .அந்தக் கல்லுங்களை இறக்கியதிலிருந்துதான் இப்படி ….” அந்த ஆள் இருமினார் .

அவருக்கு இன்ஜெக்சன் போட்டு , மாத்திரை தந்தவள் அவர் போன உடன் பதி சிமெண்ட் பாக்டரியை போனில் தொடர்பு கொண்டாள் .போனை எடுத்த மேனேஜரிடம் அவர்கள் பாக்டரி தொழிலாளிகளின் பாதுகாப்பு சம்பந்தமாக பேசவேண்டுமென கூறி வைத்தாள் .




ஒரு மணி நேரத்தில் அந்த மேனேஜர் இவள் க்ளினிக்கிற்குள் இருந்தார் .” என்ன விசயம் மேடம் …? “

அனுப்பி வைத்திருக கும் ஆளை பார் …ஏன் அவன் வர மாட்டானோ …? பெரிய இவன் …

” நான் நேரிடையாக உங்கள் முதலாளியடம் பேச வேண்டும் …”

” அவர் பிஸியானவர் மேடம் .நீங்கள் கூப்பட்டதும் வர முடியாது .என்ன விசயமென்று சொல்லுங்கள் ….”

” உங்கள் தொழிலாளிகள்ளை சரியான பாதுகாப்பு ஏற்பாடுகளின்றி ரசாயனங்களில் புழங்க விடுகிறீர்கள். அதனால் அவர்கள் நுரையீரல் பாதிக்கப்பட்டு உயிருக்கே கூட ஆபத்து வரக்கூடும் …இந்த விபரம் நான் உங்கள் முதலாளியிடம் தான் பேச வேண்டும் …”

” நீங்கள் சொல்வது போன்ற சம்பவம் எங்கள் பாக்டரியில் நடக்க சான்ஸ் இல்லை .எதற்கும் நான் விசாரிக்கிறேன. ….” அநழத மேனேஜர் எழுந்து போய்விட , திமிரை பார் …அப்படியே அவன் திமிர் .அதை அப்படியே அவனிடம் வேலை பார்ப்பவர்களுக்கும  சொல்லக் கொடுத்து வைத்திருக்கிறான் .கொஞ்சம் யோசித்தவள் அந்த ஊர் போலீஸ் ஸ்டேசன் நம்பரை தன் போனில் அழுத்தினாள் .

—————–

” எங்கே உங்க டாக்டரம்மா …? ” திரை மறைவில் கர்ப்பிணி பெண் ஒருத்தியை பரிசோதித்து கொண்டிருந்தவள் சிவபாலனின் குரலில் நம்பாமல் வெளியே வந்தாள் .கோபமெரியும் கண்களுடன் அவன் அங்கே நின்று கொண்டிருந்தான் .

” ஸ்டேசன் வரை போய் கம்ளைன்ட் பண்ணியிருக்கிறாய் …? எவ்வளவு கொழுப்பு உனக்கு …? “

” தப்பான கம்ளைன்ட் எதுவும் பண்ணவில்லையே …சரக்கு ரயிலில் வந்த கிளிங்கர் ரசாயன கல் குவியலை , ரயிலிலிருந்து ப்ளாட்பாரத்தில் சரித்து  குவித்து விட்டு , பிறகு உங்கள  பாக்டரி வேனில் ஏற்றி கொடோனுக்கு கொண்டு போக ஐந்து தொழிலாளர்களை அனுப்மியிருக்கிறீர்கள் .அந்த கிளிங்கர் ரசாயன கல் மிகுந்த வீரியமானது  .அதனை மண்வெட்டி கொண்டு வெட்டி அள்ளும்போது அந்த நெடி நாசி வழியாக உள்ளே போனால் நுரையீரல் வரை மிகுந்த பாதிப்பு ஏற்படும் .  அந்த வேலையை செய்து விட்டு உங்கள் தொழிலாளி இரண்டு நாட்களாக மூச்சு விடக் கூட சிரம்ப்பட டு என்னிடம் சிகிச்சைக்கு வந்தார் .இதைத்தான் நான் அந்த போலீஸ் கம்ப்ளைன்டில் சொல்லியிருக்கிறேன் ….”

” உன் புகாரை நீ முதலில் என்னிடமதானே சொல்லியிருக்க வேண்டும் …”




” சொன்னேனே …உங்கள் பாக்டரிக்கு போன் செய்து விசயத்தை சொன்னேன் .உங்கள் மேனேஜர்தான் வந்தார் .முதலாளியை பார்க்க முடியாதென்றார் .எல்லாம் நாங்களாக பார்த்துக் கொள்வோமென சொல்லிவிட்டு போய்விட்டார் .எனக்கு இந்த பதிலில் திருப்தியில்லை .தொழிலாளிகளின் நலம் எனக்கு முக்கியம்.அதை சொல்ல எனக்கு நீங்கள்தான் தேவைப்பட்டீர்கள் .உங்களை வரவழைக்க வேறு வழி தெரியவில்லை .அதனால்தான் நான் ….” பேசிக் கொண்டே அவன் முகத்தை ஏறிட்டவள் குழம்பினாள் .

விளங்கிக் கொள்ள முடியாதோர் பாவனை…அன்றிருந்தாற்  போலவே  சுமந்திருந்து அவன் முகம் .உள்ளே வரும்போது முகத்திலிருந்த கோபம் இப்போது நிச்சயம் இல்லை .நின்று கொண்டே பேசிக் கொண்டிருந்தவன் இப்போது நிதானமாக சேரை இழுத்து போட்டு அமர்ந்து கொண்டான் .

” ஏன் நிற்கிறாய் …உட்கார் ” என அவளை வேறு உபசரித்தான் .அவளுக்காக டேபிளின் மீது மூடி வைக்கப்பட்டிருந்த கண்ணாடி டம்ளரிலிருந்த தண்ணீரை எடுத்து குடித்தான் .” எனக்கு மரியாதை கொடுத்தது போதும் …”

ஜீவிதா பட்டென தன் ரோலிங் சேரில் உட்கார்ந்து கொண்டாள் .மூஞ்சியை பார் .இவனுக்கு மரியாதை கொடுக்கிறேனாம் …என் க்ளினிக்கிற்குள் வந்து உட்கார்ந்து கொண்டு எனக்கே உபசாரம் செய்கிறான் …

” இது எனது க்ளினிக் .உங்கள் பேக்டரி என நினைத்தீர்கள் போல …? ” அவளுடைய நக்கல் கேள்வியை கவனிக்காமல் கண்களால் அந்த அறையை ஆராய்ந்தான் .

” நைஸ் ….” என திருப்திப் பட்டுக் கொண்டான் .

” ப்ராக்டிசெல்லாம் எப்படி போகிறது …? ” நிதானமாக விசாரிக்க தொடங்கினான் .அப்போது …அங்கே அவளது பழைய பாலாவை பார்த்தவள் , கண்கள் தளும்புவதை மறைக்க பக்கத்திலிருந்த ஏதோ ஓர் ரிப்போர்ட்டை பிரித்து முகத்தை மறைத்தாற் போல் வைத்துக் கொண்டாள் .

” நீங்கள் வந்த விசயத்தை மறந்து விட்டீர்கள்  …”

” ம் …நினைவிருக்கிறது .நான் உன் ப்ராக்டிசை கேட்டேன் ” சிவபாலனின் கைகள் மேஜை மீது கிடந்த அவளது ஸ்டெதஸகோப்பை எடுத்து தன் கழுத்தில் மாட்டிக் கொண்டது .

இதோ இப்படி ஸ்டெதஸ்கோப் அணிந்த டாக்டர் தோற்றம்தான் இவனுக்கு எவ்வளவு பொருத்தமாக இருக்கிறது … அவனை விழிகளால் விழுங்கியபடி ”  ஊரை விட்டு விரட்ட ஆசைப்பட்டவருக்கு என் ப்ராக்டிசை பற்றி என்ன கவலை …? ” என்றாள் .

” நான் உண்மையிலேயே உன்னை ஊரை விட்டு அனுப்ப நனைத்திருந்தால் நீ இந்நேரம் நிச்சயம் இங்கே உட்கார்ந்து பேசிக் கொண்டிருக்க மாட்டாய் …” ஸ்டெதஸ்கோப்பை காதில் மாட்டிக் கொண்டு தனது மார்பு துடிப்பை தானே பரிசோதிக் க ஆரம்பித்தான் .

என்ன சொல்கிறான் இவன் …என்னை ஏமாற்றி விட்டானா …? தீவிரமாக யோசித்துக் கொண்டிருந்தவளின் முகத்தை பார்த்து புன்னகைத்தான் .




” ரொம்ப யோசிக்காதீங்க டாக்டரம்மா .பாவம் இருக்கிற கொஞ்சூன்டு மூளையை ஏன் கஷ்டப்படுத்துறீங்க …? ” அவர்களது சிறு வயது பழக்கம் போன்ற இந்த இதமான கேலிக்குள் ஒளிந்திருந்த  சேதியை விட ,  அடர்வாய் கரும்பட்டாய் மெலிதாய் அவன் தாடை முழுவதும் படர்ந்திருந்த தாடிக்குள் ஒளிந்திருந்த அவன் கன்னக்குழியில்தான் ஜீவிதாவின் மனம் நிலைத்தது . இவன் ஏன் இப்படி தாடி வளர்த்து தொலைந்திருக்கிறான் …? மீண்டும் அலுத்துக் கொண்டாள் .

” உன்னுடைய புது தொழிலுக்கு வாழ்த்துக்கள் …” சொன்னபடி அவன் எழுந்து விட ஜீவிதாவினுள் பதட்டம் வந்த்து .கிளம்பி விட்டானா …?

” என்னுடைய கம்ப்ளைன்ட் என்ன ஆனது ..? ” அவசரமாக கேட டாள் .

” இதுதானே நீ கொடுத்த கம்ப்ளைன்ட் .இந்தா நீயே வச்சுக்கோ …” அவன் பேன்ட் பாக்கெட்டினுள் நான்காய் மடித்து திணித்து வைக்கப்பட்டிருந்த அந்த கசங்கிய …அவள் போலீஸ் ஸ்டேசனில் எழுதிக் கொடுத்தவிஉ ட்டு வந்த கம்ப்ளைன்ட் பேப்பரை எடுத்து தூக்கி அவள் டேபிள் மேல் போட்டான் .” சரியாயிருக்கிறதா பார்த்துக் கொள் ….”

” யு …சீட் …” இவள் கத்திக் கொண்டிருக்க மறதியாக கழுத்தோடு எடுத்துக் கொண்டு போகப் போன ஸ்டெதஸ்கோப்பை சுழட்டி மீண்டும் டேபிளில் வைத்தவன் , ” இதில் அவ்வளவு தெளிவு இல்லை .நான் உனக்கு வேறு நல்ல  கம்பெனி ஒன்று வாங்கி கொடுத்து விடுகிறேன் .பை …” சாதாரணமாக கையசைத்து விட்டு போய்விட்டான் .ஜீவிதா அயர்ந்து உட்கார்ந்துவிட்டாள் .

What’s your Reaction?
+1
9
+1
2
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!