Kodiyile Malligai poo Serial Stories கொடியிலே மல்லிகை பூ

கொடியிலே மல்லிகை பூ – 3

 3

அன்னையென சால பரிகையிலும் 
சமுத்திரமென ஆர்ப்பரித்தே நிற்கிறாய் .

                        வாளி நிறைய தண்ணீரை நிரப்பிக் கொண்டு மாடிப்படியேற தயாரான வேதிகா முன் வந்து நின்றார் சுவாமிநாதன் .

” வேதாம்மா ஏன்டாம்மா கஷ்டப்படுகிறாய் …? “

” இதிலென்னப்பா கஷ்டம் …? மாடியில் என் செடிகளுக்கெல்லாம் தண்ணீர் ஊற்ற வேண்டுமே …”




” இதோ …இங்கே வீட்டை சுற்றி இருக்கிற இடங்களில் உன் செடிகளை  வைத்துக் கொள்ளக்கூடாதாம்மா …? மொட்டை மாடியில் கொண்டு போய் வைத்திருக்கிறாய் …”

” எனக்கு அங்கேதான் செடி வளர்க்க பிடித்திருக்கிறதுப்பா ….” வீட்டின் வெளியே இருந்த தண்ணீர் குழாயிலிருந்து வாளி வாளியாக தண்ணீரை சலிக்காமல் மொட்டை மாடி ஏறிப்போய் ஊற்றினாள் .

இரண்டு பெரிய மண் தொட்டிகளில் வைத்து அழகாக வளர்ந்து , நான்கு புறமும் கம்புகள் நட்டு பந்தலாக படர விட்டிருந்த அந்த மல்லிகை கொடியின் அடியில் சிறிதுநேரம் அமர்ந்து  அந்த மல்லிகை வாசனையை ஆழ்ந்து இழுத்து நெஞ்சம் முழுவதும் நிரப்பிக் கொண்டவள் , நிறைந்த மனதுடன் கீழிறங்கி வந்து போது , வீட்டின் முன் வராண்டாவில் கிடந்த மூங்கில் சேரில் அமர்ந்தபடி அவளை எதிர்பார்த்திருந்த தந்தையை யோசனையுடன் பார்த்தாள் .

” சொல்லுங்கப்பா …” தந்தையின் அருகிலிருந்த சேரில் கால்களை உயர்த்தி சம்மணமிட்டு அமர்ந்து கொண்டாள் .

” அம்மா ஒன்றும் சொல்லவில்லையாம்மா …? “

” இல்லையே ….”

” ஏய் விசாலி …குழந்தைகிட்ட ஒண்ணும் சொல்லலையா ….? ” சாமிநாதன் கத்த , உள்ளிருந்து காபி டம்ளர்களுடன் வந்த விசாலாட்சி ஒன்றை கணவரிடம் கொடுத்துவிட்டு , மற்றொன்றை மகளிடம் கொடுத்த கையோடு அவள் கன்னத்தில் ஒரு இடியும் சேர்த்து கொடுத்தாள் .

” ஏன்டி நேத்து ராத்திரி சொன்னேனே .அதை கேட்காமல் எந்த சொப்பனத்தில் இருந்தாய் …ம் …ம் …ம் …னு நூறு உம் போட்ட …? “

முதல் நாளிரவு சுகமான உறக்கத்திற்காக விழிகள் சொக்கிக் கொண்டிருக்கும் போது , அருகில் படுத்துக் கொண்டு அம்மா ஏதோ தொண தொணவென பேசக் கொண்டிருந்த்து நனைவு வந்த்து .என்ன சொன்னார்கள் …எவ்வளவோ யோசத்தும் ஒரு எழுத்து கூட நினைவிற்கு வரவில்லை .

இதை சொன்னால் அப்பாவிடம் வசவு வாங்க போவது முதலில் அம்மா , இரண்டாவது அவள் .அப்பாவிடம் அம்மா  வாங்கி கட்டிக்கொண்ட வசவிற்கும் சேர்த்து பிறகு அம்மாவிடம் வேறு அவள் தனியாக வாங்கி கட்டிக் கொள்ள வேண்டியதிருக்கும் .இது போன்ற இக்கட்டுகளிலிருந்தெல்லாம் மீளுவதற்காக அவள் யோசித்து அப்பாவை பார்த்து ….




” அம்மா கொஞ்சம் சொன்னார்கள் .நீங்களும் திரும்ப சொல்லுங்களேன்பா ….” கொஞ்சு குரலில் கூறிவிட்டு தனது சமாளிப்பு வெளியே தெரியாமலிருக்க ஹி…ஹி …என ஒரு இளிப்பையும் போட்டு வைத்தாள் .

சாதாரணமாக வேதிகாவின் இது போன்ற சமாளிப்பிகளை சுவாமிநாதன் கண்டுகொள்வார் .ஏய் …குட்டிப்பிசாசே , இதென்ன வேலை …? என கண்டிப்பார் .ஆனால் இன்றோ ….

” திரும்ப சொல்லனுமாம்மா .அப்போது நீ அந்த அளவு ஆர்வமாக இருக்கிறாய் …சரிதானே …” என்றவர் தொடர்ந்து …” இரண்டு ரூட் பஸ் , இரண்டு மினி பஸ்,  நாலு போர் நாட் செவன் , ஒரு அம்பாஸிடர் , இரண்டு சுமோ , மூணு சவேரா , ஒரு காம்ப்ளக்ஸ் , இரண்டு வீடு …” என சம்பந்தமில்லாமல் அடுக்க தொடங்க …வேதிகாவிற்கு தலையை பிய்த்து கொள்ளலாம் போலிருந்த்து .

” அப்பா …நிறுத்துங்க …நிறுத்துங்க .என்ன லிஸ்ட் இது …யாரோடது …? “

” அமர் ட்ராவல்ஸ் பத்தி பேசிட்டிருக்கேன்மா …”

” அப்பா ட்ராவல்ஸ் …உங்கள் தொழில் .அதில் என்னை இழுக்காதீங்கன்னு சொல்லியிருக்கேனில்ல .நான் என் படிப்புக்கேத்த வேலை சென்னையில் போய் பார்க்க போகிறேன் …” பெருமையாய் அணிந்திருந்த நைட்டியில் இல்லாத காலரை உயர்த்திக் கொண்டாள் .

” அங்கே எதுக்குடி ..? அப்பாவை ஒண்ணுக்கு ரெண்டா மிஷின் வாங்கி இங்கே நம்ம வீட்டிலேயே போட சொல்றூன் .நீ அதிலேயே பக்கத்து வீடு , எதிர்த்த வீடு , பக்கத்து தெருவிற்கு கூட ஜாக்கெட் தைத்து கொடு ….”

” என்னது ஜாக்கெட் தைத்து கொடுக்கவா …? “

” ஆமான்டி மெனக்கெட்டு ஹைதராபாத் போய் ஜாக்கெட் தைக்கதானே படிச்சுட்டு வந்த …? அந்த படிப்பை நம்ம பக்கத்து வீட்டு கமலாகிட்டயே படிச்சிருக்கலாம் .அவதான் எனக்கெல்லாம் இருபது வருசமா ஜாக்கெட் தைச்சி தர்றா …”

வேதிகாவிற்கு தலையை எங்கேயாவது இடித்து கொள்ளலாம் போலருந்த்து .” அம்மா நான் படித்தது பேசன் டிசைனிங் மா ….” பற்களை கடித்தபடி கூறினாள் .

” என்னத்த பேசன் …தையல் மிஷின்ல ஜாக்கெட்தானே
தைக்கிற …? ” நொடிக்கும் அம்மாவிற்கு புரிய வைக்க தெரியாமல் விழித்தாள் வேதிகா .

கிராம்மும் அல்லாத நகரமும் அல்லாத அவர்கள் ஊர் எப்போதுமே வேதிகாவை கவர்ந்த்தில்லை .பள்ளிப்படிப்பு வரை அங்கே படித்தவள் ,ஆசைப்பட்ட படிப்பிறகு ஹைதராபாத் காலேஜில் இடம் கிடைக்க அங்கே ஓடிவிட்டாள் .

அங்கிருந்த நாகரீகம் அவளை கவர்ந்திழுக்க , ஹைதராபாத் , சென்னை , கோவை போன்ற பெரிய நகரங்களில் தனது படிப்பற்கேற்ற வேலையை தேடிக்கொண்டிருந்தாள் .

” ஏய் நீ சும்மா இருடி .தெருத்தெருவா ஜாக்கெட் தச்சி கொடுக்கவா என் பொண்ணு படிச்சிருக்கிறா …? அவள் படித்தது பெரிய படிப்பு …டிசைன் டிசைனா டிரஸ் தைத்து கொடுக்க படிச்சிருக்கா …”

” ஆமாம்மா என் படிப்பிற்கேற்ற வேலை சென்னை , பெங்களூர் இங்கேதான் கிடைக்கும் …”




” தாராளமாக வேலைக்கு போம்மா .அதுக்கு முன்னால் கல்யாணம் பண்ணிக்கொண்டு , உன் புருசனிடம் அனுமதி வாங்கிக்கொண்டு போ ….”

வேதிகா தன் காதுகளை தேய்த்து விட்டு கொண்டாள் .” இப்போ என்னப்பா சொன்னீங்க …? ” நம்ப முடியாமல் கேட்டாள் .

” உனக்கு கல்யாணம் பண்ண போறதா சொன்னேன் ” சுவாமிநாதனின் குரலில் உறுதி தெரிந்த்து .

” அப்பா இது அநியாயம் .நான் என்ன சொல்றேன் …நீங்க என்ன செய்றீங்க …? “

” பையனை நீ பார்த்திருப்பாய் .நம் ஊர்தான் .நம் வீட்டிற்கு கூட இரண்டு தடவை வந்திருக்கிறான் “

” நான் எந்த பையனையும் பார்த்ததில்லை …”

” சரி நாளைக்கு வரச் சொல்கிறேன் .பார்த்து விடு …
பையன் பெயர் அமரேசன் .அப்பா இவன் சின்னப்பள்ளையா இருக்கும் போதே இறந்துட்டார் .அம்மாவும் , அப்பாவின் தங்கை அத்தையும் இவனுடன் இருக்கிறார்கள் .எங்களுக்கு உன்னை போலவே அவனும் குடும்பத்திற்கு ஒரே பிள்ளை .அமர் டிராவல்ஸ் னு வச்சு தொழில் பாரததுக்கொண்டு இருக்கிறான் .பஸ் , வேன் , கார்னு  எல்லாம் இருக்குது .லாரி கூட வாங்குற ஐடியாவில் இருக்கிறான் .இரண்டு வீடு இருக்குது .ஒரு வீட்டில் இருந்து கொண்டு இன்னொன்றை வாடகைக்கு விட்டிருக்கிறான் .பஜாரில் காம்ப்ளக்ஸ் ஒன்று பன்னிரென்டு கடையோடு வாடகைக்கு விட்டிருக்கிறான் .நம் ஊரில் இப்போது தொழிலில் வேகமாக முன்னேறி வருகிறான் .அவனுக்கு பெண் கொடுக்க நிறைய பேர் வரிசையில்  நிற்கிறார்கள் ….”

” அந்த வரிசையில் நீங்க முதல் ஆளாக நிற்கிறீர்களாக்கும் …? ” துடுக்காய் கேட்டுவிட்டு அப்பா முறைக்கவும்  நாக்கை கடித்து நிறுத்தினாள் .இல்லை …எதர்த்து பேசி அப்பாவிடம் காரியம் சாதிக்க முடியாது .குரலை தழைத்து குறைத்துக் கொண்டவள் …

” அப்பா இந்த வருடம்தானே படிப்பை முடித்திருக்கிறேன் .ஒரு வருடம் வேலை பார்த்து கொள்கறேன் ..பிறகு உங்கள் விருப.பம் போல் ….”

” ஒரு வருடம் வரையிலெல்லாம் அமர் வீட்டில் காத்திருக்க மாட்டார்கள் …”

” போகட்டுமே …வேறு மாப்பிள்ளை கிடைக்காமலா போய்விடுவான் …? “

” அது கிடைப்பானுங்க ்ஆனால் எனக்கு அமரைத்தான் பிடித்திருக்கிறது ….”

” அப்போ  நீங்களே கல்யாணம் பண்ணிக்கோங்க …” வெடுக்கென கூறிவிட்டவள் விசாலாட்சி வாயை மூடி சிரித்துவிடவும் , இருவரையும் முறைத்த தந்தையை கெஞ்சுதலாக நோக்கினாள் .

சிரிக்கவா செய்ற …உனக்கிருக்குடி ..மனைவியை முறைத்த சுவாமிநாதன் ” ஏய் கூவை …உள்ளே போய் எதுவும் வேலை இருந்தால் பாருடி .இங்கே என்ன வேடிக்கை …? ” மகள் மேலிருந்த கோபத்தை மனைவிக்கு மாற்றிவிட்டு …




” அடுத்த மாதம் பூ வைத்து நிச்சயம் பண்ணலாமென்றிருக்கிறேன் …” தகவலை மகளுக்கு தந்துவிட்டு விரைப்பாய் எழுந்து உள்ளே போனார் .

” ம்க்கும் பெரிய இவரு …இவர் சொன்னா நான் கேட்கனுமாக்கும் …”

” பேசாமல் எங்கேயாவது ஓடிப்போயிடலாமா …? “

” ஆனால் எங்கே போவது …? திங்க , தங்க என்ன பண்ணுவது …? “

” சை காலேஜில் படிக்கும் போதே எவனையாவது லவ் பண்ணியிருந்திருக்கனும் .அவன் கூடவே ரிஜிஸ்டர் ஆபிஸ்ல கல்யாணத்தை முடித்துவிட்டு …இவர் முன்னால் வந்து நின்றருந்தால் …ஆஹா …இவர் மூஞ்சி அப்போ எப்படி இருக்கும் …? ” கண்களை சொருகி கனவு கண்டபடி வாசல் பக்கம் திரும்பிய வேதிகா திடுக்கிட்டாள் .

அங்கே வாசல்படியில் நின்று கதவில் சாய்ந்து கைகளை கட்டிக்கொண்டு ஒருவன் இவளையே பார்த்தபடி இருந்தான் .

யாரிவன் ..? எதற்கு இப்படி குத்துவது போல் பார்க்கிறான் … ” யார் சார் நீங்க ..? என்ன வேண்டும் …” எனக் கேட்டவளுக்கு அந்த சந்தேகம் வந்த்து .

இவன் எப்போதிருந்து இங்கே நிற்கிறான் .கொஞ்ச நேரம் முன்பு நான் பேசியதையெல்லாம் கேட்டிருப்பானோ …? வேதிகா விடம் ஒரு பழக்கம் உண்டு .அவள் கொஞ்சம் மன அழுத்தத்தில் இருந்தாளானால் , யாருமற்ற தனிமையில் தனது பிரச்சினைகளை  தனக்கு தானே வாய்விட்டு புலம்பிக் கொள்வாள் .தலையை , கைகளை ஆட்டி …எதிரே யாரிடமோ சொல்வது போல் பிரச்சனைகளை சொல்வாள் .அப்படி சொல்லி முடித்ததும் மனபாரம் குறைவதோடு சில பிரச்சினைகளுக்கு தீர்வும் மனதில் தோன்றுவதுண்டு .

அது போலத்தான் கொஞ்சம் முன்பு தனது வீட்டினுள்தானே இருக்கிறோம் …என்ற சுதந்திரத்தில் கை , கால்களை ஆட்டியபடி இஷ்டத்திற்கு தனக்குள் பேசிக்கொண்டிருந்தாள் .இதையெல்லாம் இவன் கேட்டுவட்டானோ …?

” ஹலோ …யார் நீங்க …? இப்படித்தான் திறந்த வீட்டிற்குள் எதுவோ நுழைவது போல் உள்ளே நுழைவீர்களா …? ” தனது அந்தரங்கத்தை அறிந்து கொண்டுவிட்டானோ என்ற பயத்தில் அவள் சீற …அவன் அமைதியாக நின்ற போஸ் மாறாமல் …




” நான் அமரேசன் …” என்றான் .

” நீ சாப்பிட்டாயா இல்லையா …? ” கேட்டபடி அருகே நின்ற அமரேசனை வெறுப்புடன் நிமிர்ந்து பார்த்தாள் .

அறையினுள் கட்டிலில் கிடந்த கணவரை பார்த்தபடி திணறி …திணறி …இட்லிகளை விழுங்கிக் கொண்டிருந்தாள் விசாலாட்சி .

” பட்டினி கிடப்பதால் தியாகி என்று தனிப்பட்டம் எதுவும் உனக்கு கொடுக்க போவதில்லை .இதை சாப்பிடு …” தட்டில் இட்லிகளை வைத்து நீட்டினான் .

What’s your Reaction?
+1
2
+1
6
+1
0
+1
0
+1
0
+1
1
+1
1
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!