Cinema Entertainment

நகைச்சுவை நடிகர் வெங்கல் ராவ்விற்கு உதவி செய்த சிம்பு..

வடிவேலு கிட்டத்தட்ட சினிமாவிற்குள் நுழைந்து 34 வருடங்கள் ஆகியிருக்கிறது. அந்த வகையில் காமெடியன், ஹீரோ, குணச்சித்திர கதாபாத்திரம் என பல பரிமாணங்களில் நடித்து மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறார். இவருடைய காமெடிக்கும், உடல் தோற்றத்தை வைத்து நடிக்கும் நடிப்புக்கும் யாரும் ஈடாகாது என்று சொல்வதற்கு ஏற்ப இவரை தூக்கி வைத்து கொண்டாடும் அளவிற்கு பெயர் வாங்கி இருக்கிறார்.

ஆனால் இதெல்லாம் வைத்து இவருடைய கேரக்டரை முடிவு பண்ணிட முடியாது என்று சொல்வதற்கு ஏற்ப நிஜத்தில் பல பேருடைய சாபங்களையும் கண்ணீர்களையும் வாங்கி இருக்கிறார். அதாவது இவரை பொறுத்தவரை இவருக்கு கீழ் வேலை பார்ப்பவர்கள் யாரும் மேலே வந்து விடக்கூடாது. அவர்களுக்கு எந்த நல்லதும் நடந்து விடக்கூடாது என்று கங்கணம் கட்டிக்கொண்டு அலைந்திருக்கிறார்.




தக்க சமயத்தில் உதவி செய்த சிம்பு

அதனால் பலரும் இவருடைய சூழ்ச்சியில் சிக்கி இருக்கும் இடம் தெரியாமல் போய் இருக்கிறார்கள். அதுமட்டுமில்லாமல் இவருடன் பல படங்களில் நடித்த சின்ன சின்ன காமெடியர்கள் கடைசி காலத்தில் பணம் இல்லாமல் அவதிப்பட்டு வரும் பொழுது கூட கண்டுக்காமல் விட்டிருக்கிறார் என்ற குற்றச்சாட்டுகளும் இவர் மீது இருக்கிறது.

அந்த வகையில் இப்பொழுது நகைச்சுவை நடிகர் வெங்கல் ராவ், கை கால்கள் செயலிழந்து ஆந்திராவில் உள்ள இவருடைய வீட்டில் வைத்து சிகிச்சை பெற்று வருகிறார். இதனால் மேற்கொண்டு சிகிச்சைக்கு பணம் இல்லாத இவர் வீடியோ வெளியிட்டு அதன் மூலம் பண உதவி கேட்டு கோரிக்கை வைத்திருக்கிறார்.

அதாவது ஆந்திர மாநிலத்தை பூர்வீகமாகக் கொண்ட இவர் 25 ஆண்டுகளுக்கு ஃபைட் மாஸ்டராக தமிழ் சினிமாவில் பணிபுரிந்து இருக்கிறார். ஒரு கட்டத்தில் உடல்நிலை ஒத்துழைப்பு கொடுக்காததால் நகைச்சுவை நடிகராக நடிப்பதற்கு வடிவேல் உடன் இணைந்து பல படங்களில் நடித்திருக்கிறார். முக்கியமாக தலையில் இருந்து கை எடுத்தால் கடித்து விடுவேன் என்ற நகைச்சுவை மூலம் பிரபலமாகி இருக்கிறார்.




அப்படிப்பட்டவர் கடந்த 2022 ஆம் ஆண்டு சிறுநீரகக் கோளாறு காரணமாக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். பிறகு நீண்ட இடைவெளிக்கு பிறகு வடிவேலு காம்பேக் கொடுத்த நாய் சேகர் ரிட்டன்ஸ் என்ற படத்தில் வடிவேலுடன் இணைந்து நடித்திருக்கிறார். அதன் பிறகு மீண்டும் உடல்நிலை சரியில்லாததால் சிகிச்சை பெற்று சொந்த ஊருக்கு ஓய்வெடுக்க போய்விட்டார்.

இதனால் தற்போது மேற்கொண்டு சிகிச்சைக்கு பணம் இல்லாததால் உதவி கேட்டு வீடியோவை அனுப்பி இருக்கிறார். ஆனால் இவர் அனுப்பிய வீடியோ யாருக்கு கேட்டதோ இல்லையோ சிம்புவுக்கு கேட்டிருக்கிறது என்றே சொல்லலாம். அந்த வகையில் இவருடைய மருத்துவ சிகிச்சைக்காக சிம்பு அவரால் முடிந்த 2 லட்ச ரூபாய் பணத்தை கொடுத்து நிதி உதவி பண்ணியிருக்கிறார்.

தற்போது படம் வாய்ப்பு எதுவும் இல்லாமல் படங்கள் வெளிவராவிட்டாலும் உதவி செய்ய வேண்டும் என்று நினைத்த அந்த மனசு உண்மையிலே தங்கமான மனசு தான் என்று சொல்ல வேண்டும்.




What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!