Cinema Entertainment

செந்திலை வறுத்தெடுத்த பாண்டியன்! பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் அப்டேட்

விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலின் இன்றைய எபிசோடில் தன்னுடைய கணவன் சரவணனை உசுப்பேற்றி தன் மீது கோபப்பட்டது குறித்து கதிரிடம் கேட்குமாறு அனுப்பி வைக்கிறார் தங்கமயில். ஆனால் கல்லூரிக்கும் சென்றுவிட்டு பார்ட் டைம் வேலையும் செய்து கஷ்டப்படும் தன்னுடைய தம்பி கதிரிடம் ஆதரவாக பேசி விட்டு வருகிறார் சரவணன்.




இதனால் தன்னுடைய பேச்சைக் கேட்காமல் சரவணன் நடந்து கொள்வது குறித்து தங்கமயில் திகைக்கிறார். இந்நிலையில் சென்னையில் இருந்து ட்ரெயினிங்கை முடித்துவிட்டு மீனா மற்றும் செந்தில் வீடு திரும்புகின்றனர். அவர்கள் வீட்டிற்குள் நுழைந்தவுடன், செந்திலிடம் பாண்டியன் ஆத்திரத்துடன் பேசுகிறார். இதனால் மீனா அதிர்ச்சி அடைவதாக இன்றைய எபிசோடு காணப்படுகிறது.

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல்: விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலின் இன்றைய எபிசோட் அடுத்தடுத்து பரபரப்பான காட்சிகளுடன் காணப்பட்டது. முன்னதாக டியூஷன் விவகாரத்தில் தன்னை கேள்வி கேட்ட கதிரை பதிலுக்கு சரவணன் கேள்வி கேட்க வேண்டும் என்றும் இது போல அண்ணியிடம் பேசுவது தவறு என்பதை கதிருக்கு புரிய வைக்க வேண்டும் என்றும் பேசுமாறு தங்கமயில் தொடர்ந்து சரவணனிடம் வற்புறுத்துகிறார். தம்பியிடம் இதை எப்படி கேட்பது என்று தெரியாமல் தொடர்ந்து தங்கமயிலிடம் சரவணன் நழுவிக்கொண்டே இருக்கிறார்.

சரவணன் கரிசனம்: இந்நிலையில் இன்றைய எபிசோடில் தங்கமயில் சரவணனை கதிரிடம் பேசுவதற்காக அனுப்புகிறார். வாசலில் தனியாக அமர்ந்து கொண்டிருக்கும் கதிரிடம் வந்து சரவணன் பேச்சு கொடுக்கிறார். கல்லூரி சென்று கொண்டிருக்கும் இந்த காலகட்டத்தில் அடுத்தடுத்து ஃபுட் டெலிவரிக்காக சென்று ஏன் கஷ்டப்படுகிறாய் என்று கதிரிடம் சரவணன் கேட்கிறார். தொடர்ந்து இந்த வயதில் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்றும் கூறுகிறார். அதற்கு கதிர் அப்பாவிற்கு தான் கொடுப்பதாக கூறிய பணத்தை கொடுப்பதற்கு கொஞ்சம் அதிகமாக உழைக்க வேண்டி இருப்பதாக கூறுகிறார்.

தங்கமயில் அதிர்ச்சி: இப்படி இருந்தால் எப்படி படிப்பாய் என்று சரவணன் கேட்க, அதற்கு பதிலளிக்கும் கதிர் காலை 5 மணிக்கு எழுந்து படிப்பதாக கூறுகிறார். ஏதாவது தேவை இருந்தால் தன்னிடம் கேட்குமாறு கூறுகிறார் சரவணன். இதையடுத்து தன்னுடைய அறைக்கு செல்லும் சரவணனிடம் கதிர் குறித்து தங்கமயில் கேட்கிறார். ஆனால் இந்த சிறிய வயதிலேயே மிகவும் கடுமையான வேலைகளை கதிர் செய்து வருவதாக ஒரு நாளில் குறைந்த பட்சம் 5 மணி நேரம் மட்டுமே தூங்குவதாகவும் சரவணன் தன்னுடைய ஆதங்கத்தை கூறுகிறார். இதையடுத்து தங்கமயில் அதிர்ச்சிக்குள்ளாகிறார். தான் கேட்க சொல்லி அனுப்பியது என்ன இவர் என்ன பேசிக்கிட்டு வந்திருக்கிறார் என்று தனக்குள்ளேயே பேசிக்கொள்கிறார் தங்கமயில்.




ராஜிக்கு இன்ப அதிர்ச்சி: தன்னுடைய அம்மாவின் அறிவுரைப்படி அடுத்தடுத்து பாண்டியன் வீட்டில் காய் நகர்த்தி வரும் தங்கமயில் தன்னுடைய கணவனையும் தன் வழிக்கு கொண்டு வர முயற்சிக்கிறார். ஆனால் தன்னுடைய தம்பிகள் மீதும் அப்பா, அம்மா மீதும் மிகுந்த அட்டாச்மெண்ட்டோடு இருக்கும் சரவணன் தங்க மயிலின் வலைக்குள் சிக்காமல் தப்பி வருகிறார். ஆனால் பாண்டியன் தங்கமயில் சொல்வதற்கெல்லாம் ஆமாம் போடும் நிலைக்கு வந்துள்ளார். இந்நிலையில் இன்றைய தினம் ராஜிக்கு டிரஸ் வாங்கிவந்து இன்ப அதிர்ச்சிக் கொடுக்கிறார் கதிர். இதை நம்ப முடியாமல் ராஜி திகைப்பதாகவும் இன்றைய எபிசோடில் காணப்பட்டது.

செந்திலிடம் பாண்டியன் ஆத்திரம்: இந்நிலையில் சென்னையிலிருந்து செந்தில் மற்றும் மீனா இருவரும் வீடு திரும்புகின்றனர். அவர்கள் வந்தவுடன் செந்திலிடம் பாண்டியன் தன்னுடைய ஆத்திரத்தை வெளிப்படுத்துகிறார். தான் வியாபாரிக்கு பணத்தை ஆன்லைனில் அனுப்பி விட்டதாக செந்தில் கூற பணம் வாங்க வேண்டிய வியாபாரியிடம் வாங்காமல் வந்ததற்காக செந்திலை வறுத்தெடுக்கிறார் பாண்டியன். தான் போனில் பேசி வாங்குவதாக செந்தில் கூற, போனில் அவரை பிடிக்க முடியாததால்தான் நேரில் சென்று சந்திக்க தான் கூறியதாக கூறும் பாண்டியன் ஆத்திரத்துடன் பேசுவதால் மீனா அதிர்ச்சி அடைவதாக காணப்படுகிறது.




What’s your Reaction?
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!