Samayalarai

‘சுவரொட்டி வறுவல்’… எப்படி செய்வது.?

ஆட்டு மண்ணீரல் என்று அழைக்கப்படும் சுவரொட்டியில் அமினோ அமிலங்கள், பி12, இரும்பு சத்துக்கள் ஆகியவை உள்ளதால் உடலுக்கு பல நன்மைகளை வழங்குகிறது. சுவரொட்டி சாப்பிடுவதால் இரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு அதிகரிக்கும். மேலும் இதில் வைட்டமின் – சி ஊட்டச்சத்து நிறைந்திருப்பதால் இரத்த சோகை வராமல் தடுக்கிறது மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும் பெண்கள் சுவரொட்டி சாப்பிட்டால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

இவ்வளவு ஆரோக்கிய நன்மைகள் நிறைந்த சுவரொட்டியை கொண்டு காரசாரமான சுவையில் எப்படி ருசியான வறுவல் செய்யலாம் என்று இங்கே தெரிந்துகொள்ளுங்கள்.




தேவையான பொருட்கள் :

சுவரொட்டி வேகவைக்க தேவையானவை :

  • சுவரோட்டி – 250 கிராம்

  • மஞ்சள் தூள் – 1 டீஸ்பூன்

  • உப்பு – 1 டீஸ்பூன்

  • தண்ணீர் – தேவைக்கேற்பமற்ற பொருள்கள் :

  • நறுக்கிய சின்ன வெங்காயம் – 1 கப்

  • காய்ந்த குண்டு மிளகாய் – 4

  • துருவிய பூண்டு – 2 டேபிள் ஸ்பூன்

  • துருவிய இஞ்சி – 1 டேபிள் ஸ்பூன்

  • மஞ்சள் தூள் – 1/2 டீஸ்பூன்

  • இலவங்கப்பட்டை தூள் – 1/4 டீஸ்பூன்

  • கரம் மசாலா – 1/4 டீஸ்பூன்

  • கருப்பு மிளகு தூள் – 2 டீஸ்பூன்

  • கிராம்பு – 3

  • கடுகு – 1/2 டீஸ்பூன்

  • சீரகம் – 1/4 டீஸ்பூன்

  • நல்லெண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்

  • கறிவேப்பிலை – சிறிதளவு

  • கொத்தமல்லி இலை – சிறிதளவு

  • உப்பு – சுவைக்கேற்ப




News18

செய்முறை விளக்கம்  :

  • முதலில் சுவரொட்டியை நன்றாக அலசி சுத்தம் செய்து பிரஷர் குக்கரில் சேர்த்து அதனுடன் மஞ்சள் தூள், உப்பு மற்றும் தேவைக்கேற்ப தண்ணீர் ஊற்றி ஒரு விசில் வரும்வரை விடவும்.

  • குக்கரில் பிரஷர் அடங்கியவுடன் சுவரொட்டியை வெளியே எடுத்து தேவையான அளவிற்கு வெட்டி எடுத்து கொள்ளுங்கள்.

  • குறிப்பு : சமைக்கும் போது சுவரொட்டி சுருங்கும் என்பதால் பெரிய துண்டுகளாக வெட்டிக்கொள்ளுங்கள்.

  • பின்னர் அடுப்பில் மண் சட்டி ஒன்றை வைத்து நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு மற்றும் சீரகம் சேர்த்து கொள்ளுங்கள்.

  • கடுகு பொரிந்ததும் கிராம்பு, சிவப்பு குண்டு மிளகாய் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து சில வினாடிகளுக்கு வறுக்கவும்.

  • பிறகு அதில் நறுக்கிய சின்ன வெங்காயம் மற்றும் சிறிதளவு உப்பு சேர்த்து நன்றாக வதக்கவும்.

  • வெங்காயம் ஓரளவிற்கு வதங்கியவுடன் துருவிய இஞ்சி மற்றும் பூண்டு சேர்த்து வதக்கிக்கொள்ளுங்கள்.

  • அதன் பச்சை வாசனை போனவுடன் மஞ்சள் தூள், இலவங்கப்பட்டை தூள் மற்றும் கரம் மசாலா சேர்த்து நன்றாக கலந்து சில நிமிடங்களுக்கு வதக்கவும்.

  • பின்னர் அதில் வெட்டி வைத்துள்ள சுவரொட்டியை சேர்த்து குறைந்த தீயில் 20 நிமிடங்கள் வதக்கவும்.

  • சுவரொட்டி நிறம் மாறி நன்கு வதங்கியவுடன் உங்கள் காரத்திற்கு ஏற்ப கருப்பு மிளகு தூள் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளுங்கள்.

  • கடைசியாக அதன் மேல் நறுக்கிய கொத்தமல்லி இலைகளை தூவி அடுப்பை அணைத்து எடுத்தால் ‘சுவரொட்டி வருவல்’ பரிமாற ரெடியாக இருக்கும்.



What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!