Samayalarai

90’s கிட்ஸ் புளி மிட்டாய்

நாம் சின்ன பிள்ளையில் பள்ளியில் படிக்கும் போது உணவு இடைவேளையில் வீட்டில் கொடுத்த ஒன்று அல்லது இரண்டு ரூபாய்க்கு ஏதாவது வாங்கி சாப்பிடலாம் என மரத்தடியில் கடை வைத்திருக்கும் தாத்தா அல்லது பாட்டியிடம் சென்றால் பல சிற்றுண்டிகள் வைத்திருப்பார்கள். அதில் புளி மிட்டாய்க்கு கடும் போட்டி இருக்கும். இன்றைய 2k கிட்ஸிற்கு இதை பற்றி தெரிய வாய்ப்பில்லை. என்னுடைய நினைவுக்கு எட்டிய வரை புளி மிட்டாய் ஒன்று மூன்று ரூபாய்க்கு சாப்பிட்ட ஞாபகம் உண்டு. இதை நாம் வீட்டிலேயே தயாரிக்கலாம். வீட்டில் புளி, வெல்லம் இருந்தால் போதுமானது. 90ஸ் கிட்ஸிற்கு மிகவும் பித்தமான புளி மிட்டாய் எப்படி செய்வது என பார்க்கலாம்.




புளி மிட்டாய் செய்யத் தேவையானவை

  • புளி

  • வெல்லம்

  • மிளகாய் தூள்

  • உப்பு

  • தண்ணீர்

குறிப்பு

தரமான பழைய புளியை பயன்படுத்தவும். அப்போது தான் உரிய சுவை கிடைக்கும். புது புளி பயன்படுத்த வேண்டாம்.

 




புளி மிட்டாய் செய்முறை

  • 100 கிராம் அளவிற்கு கொட்டை இல்லாத புளியை ஒரு கப் தண்ணீரில் ஊற வைக்கவும்.

  • அரைமணி நேரம் ஊற வைத்த பிறகு புளியில் இருக்கும் நார்களை ஒவ்வொன்றாக எடுக்கவும்.

  • இதன் பிறகு மீதம் இருக்கும் புளியை மிக்ஸியில் போட்டு நன்கு கெட்டியாக அரைக்கவும்.

  • இப்போது அடுப்பில் கடாய் வைத்து அதில் 100 கிராம் பவுடராக்கிய வெல்லத்தை போட்டு கொஞ்சம் தண்ணீர் சேர்த்து வெல்லம் பாகு போல மாற்றவும்.

  • இதில் இருக்கும் தூசியை வடிகட்டி அகற்றிவிடுங்கள்.  இதனுடன் மிக்ஸியில் அரைத்து கெட்டியாக்கிய புளியை சேருங்கள்.

  • நன்கு மிக்ஸ் செய்த பிறகு அரை டீஸ்பூன், அரை டீஸ்பூன் உப்பு போடுங்கள். மிதமான சூட்டில் வைத்து புளி கெட்டியாகும் வரை மிக்ஸ் செய்து கொண்டே இருங்கள்.

  • முதலில் அல்வா போல தெரியும். இதோடு நிறுத்திவிட வேண்டாம் தொடர்ந்து சூடுபடுத்துங்கள். புளியும், வெல்ல பாகும் நன்கு கலந்து மிக்ஸ் ஆன பிறகு அடுப்பை நிறுத்தி விடுங்கள்.

  • சூட்டிலேயே கொஞ்சம் மிக்ஸ் செய்து தனியாக வைத்துவிடுங்கள். சூடு ஆறிய பிறகு இதை ஐஸ் குச்சியில் எடுத்து பிளாஸ்டிக் கவரில் போட்டு சுருட்டவும். நீங்கள் பயன்படுத்திய புளி மற்றும் வெல்லம் பாகு அளவிற்கு 70 புளி மிட்டாய் தயாரிக்கலாம்.

  • இதை காற்று புகாத பாத்திரத்தில் போட்டு மூடிவிடுங்கள். 30 நாட்கள் வரை கெட்டுப் போகாது. தினமும் ஒவ்வொன்றாக எடுத்து சாப்பிடுங்கள். குழந்தைகளுக்கும் இது பிடிக்கும்.




  • வீட்டு குறிப்பு:

  • Carving Knife ...
  • சமையலறையில் பலரும் சிரமமாக கருதும் மிக எளிதான வேலை காய்கறிகளை நறுக்குவது. காய்கறிகள் நறுக்க அல்லது வெட்ட பயன்படுத்தும் கத்தியின் பிடிப்பு வாட்டமாகவும் வெட்டும் பகுதி நீளமாகவும் இருப்பது அவசியம். கத்தி பிடிக்கும் பகுதியை விட வெட்டும் பகுதி நீளமாக இருக்க வேண்டும். பத்து ரூபாய்க்கு கிடைக்கும் கத்தியை பயன்படுத்தாதீர்கள்.

  • கூர்மையான கத்தி இல்லாத பட்சத்தில் அருகமனை பயன்படுத்துவது நல்லது.

  • ஒரு முறை பயன்படுத்திய எண்ணெய்யை மீண்டும் உபயோகம் செய்யாதீர்கள்.




What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!