Cinema Entertainment

ஸ்ரீதேவியின் பயோபிக் பற்றி – போனி கபூர்.

பிரபலங்களின் வாழ்க்கை சரித்திரத்தை பயோபிக் ஆக எடுப்பது இப்போது ட்ரெண்ட் ஆகி வருகிறது. இளையராஜவையும் கூட இந்த பயோபிக் மவுசு விட்டுவைக்கவில்லை. இதெல்லாம் வேண்டாமென இருந்தவரை தனுஷ் பேசி பேசி இணங்க வைத்துவிட்டார். இது ஒரு புறம் இருக்கட்டும். அடுத்த விஷயத்திற்கு வருவோம்.




ஸ்ரீதேவியின் வாழ்க்கையையும், திரையுலக பயணத்தையும் ஒரு படமாக எடுக்கலாம் என்று சிலர் யோசித்து இருக்கிறார்கள். இதற்காக போனி கபூரிடமும் தங்களது ஆர்வத்தைப் பற்றி கூறியிருக்கிறார்கள்.

அவர்கள் சொன்னதை எல்லாம் பொறுமையாக கேட்ட போனிகபூர், ‘இந்த மாதிரி முயற்சிகளையெல்லாம் என்னால் பொறுத்து கொள்ளமுடியாது. என் மனைவியின் பயோபிக்கை எடுக்க நான் ஒரு நாளும் அனுமதிக்க மாட்டேன்.’ என்று மறுத்துவிட்டாராம்.

திரையுலகப் பயணத்தை எடுத்தால் அதில் ஸ்ரீதேவியின் அந்தரங்க வாழ்க்கையையும் கூறியே ஆகவேண்டும். அது தவிர ஸ்ரீதேவி நடித்த போது அவருடன் நடித்த பல நடிகர்கள் இன்று உச்சத்தில் இருக்கிறார்கள். சமூகத்தில் பெரும் புகழோடும், அடையாளத்தோடும் இருக்கிறார்கள். இதனால் அவர்களைப் பற்றி இந்த கதையில் குறிப்பிடாமல் இருக்கமுடியாது.

மேலும் போனிகபூர் திரைப்பட தயாரிப்பில் முனைப்போடு இருந்து வருகிறார். ஸ்ரீதேவி – போனிகபூரின் வாரிசுகளான ஜான்வி கபூர், குஷி கபூர் இருவரும் சினிமாவில் நடித்து வருகிறார்கள். இன்னும் சொல்லப் போனால், ஸ்ரீதேவிக்கு ஜோடியாக நடித்த நடிகர்களின் வாரிசுகளுடனும் நடிக்கும் சந்தர்ப்பங்கள் இருக்கின்றன. அதனால் எதற்கு தேவையில்லாத வம்பில் மாட்டவேண்டுமென போனிகபூர் மறுத்துவிட்டதாக கூறுகிறார்கள்.




What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!