Cinema Entertainment

வெப்சிரீஸ் இன்ஸ்பெக்டர் ரிஷி விமர்சனம்

ஜே.எஸ். நந்தினி இயக்கத்தில் நவீன் சந்திரா, சுனைனா, கண்ணா ரவி, குமரவேல் உள்ளிட்ட பலர் நடிப்பில் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகியிருக்கும் புத்தம் புதிய ஹாரர் மிஸ்ட்ரி வெப்சிரீஸ் தான் இன்ஸ்பெக்டர் ரிஷி. 10 எபிசோடுகளுடன் நீண்ட நெடிய வெப்சீரிஸாக வந்திருந்தாலும் ஒவ்வொரு எபிசோடும் அடுத்தடுத்த எபிசோடுகளை ஒரே மூச்சில் பார்க்க வைத்து விடுகிறது.




Inspector Rishi Review: குலைநடுங்க வைக்கும் 'வனரட்சி' தேவதை.. இன்ஸ்பெக்டர் ரிஷி விமர்சனம் இதோ! | Inspector Rishi web series review in Tamil is here - Tamil Filmibeat

பேய் வெப்சீரிஸா? அல்லது பேய் வேஷம் போட்டு நடிக்கிறார்களா? என கடைசி வரை நம்மை குழப்பமான சூழலில் வைத்துக் கொண்டே கதையையும் திரைக்கதையையும் இயக்குநர் நந்தினி அழகாக நகர்த்தியுள்ளார்.

பிரம்மன், பட்டாசு, கடந்த ஆண்டு வெளியான ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் உள்ளிட்ட படங்களில் நடித்த நவீன் சந்திரா இந்த படத்தில் இன்ஸ்பெக்டர் ரிஷி கதாபாத்திரத்தில் ஹீரோவாக நடித்துள்ளார். சுனைனா ஹீரோயினாக நடித்துள்ள இந்த வெப்சீரிஸ் எப்படி இருக்கு? 10 எபிசோடுகளை உட்கார்ந்து பார்ப்பது வொர்த்தா? இல்லையா? என்பது குறித்து விரிவான விமர்சனத்தை இங்கே பார்க்கலாம்.




மாஸ் சூசைட்: 20 வருடத்துக்கு முன்பு தேன்காடு எனும் மலை கிராமத்தில் உள்ள கானகர்கள் முதல் காட்சியிலேயே ஒரு குகைக்குள் சென்று ஒரு பெரிய பள்ளத்தில் தீயை மூட்டி அதில் ஏதோ பூஜை செய்து வனரட்சியை வரவைக்கப் போகின்றனர் என பார்த்தால், பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை கொத்துக் கொத்தாக அந்த எரிகிற பள்ளத்தில் விழுந்து எரிந்து விடுவார்கள். அவர்கள் அனைவரும் இறந்த பின்னர் அந்த பள்ளத்தில் இருந்து வனரட்சி எனும் பெண் தேவதை எழுந்து வருவது போல காட்டி ஆரம்பத்திலேயே பயத்தை கிளப்பி உள்ளனர்.

வனரட்சி தான் ஹைலைட்: வழக்கமான பேய் படங்கள் போல அரைத்த மாவையே அரைக்காமல் வித்தியாசமாக வனரட்சி எனும் வன தேவதை பேயை அறிமுகப்படுத்திய இடத்திலேயே ஆர்வம் தொற்றிக் கொள்கிறது. காட்டில் சில பேரை வனரட்சி வந்து பயமுறுத்தி கொன்று விட அந்த உடம்பில் சிலந்திக் கூடு கட்டியது போல கூடு கட்டி அவர்கள் இறந்து போகின்றனர்.

இன்ஸ்பெக்டர் ரிஷி: இப்படி அமானுஷ்யமாக ஊரில் சிலர் மரணிப்பதை கண்டுபிடிக்க ஒரு கண் இல்லாத இன்ஸ்பெக்டர் ரிஷியாக ஹீரோ கதைக்குள் வருகிறார். வனரட்சி கதையை எல்லாம் நம்ப மறுக்கும் நாயகன் இந்த கொலைகளுக்கு மோடிவ் இருக்கும் என்றும் கொல்லப்படும் விதத்தில் அமானுஷ்யம் இல்லை என்றும் ஏதாவது ஒரு அறிவியல் இருக்கும் என கடைசி வரை தேடும் கதாபாத்திரத்தில் கலக்கியிருக்கிறார்.




காட்டை அழித்தால்: தேன் காடில் இருக்கும் வளத்தை எடுக்க சிலர் முயற்சி செய்கிறார்கள் என்றும் அவர்களை தான் வனரட்சி கொல்கிறது என துப்பறியும் சாம்புவாக மாறும் ஹீரோவையே ஒரு கட்டத்தில் வனரட்சி கொண்டு சென்று ஒரு இடத்தில் வைத்து நேருக்கு நேர் சந்திக்கும் காட்சிகள் எல்லாம் தரமான திகில் அனுபவம்.

பார்க்கலாமா? வேண்டாமா?: சுழல் வெப்சீரிஸ் போல இந்த வெப்சீரிஸும் த்ரில்லாகவே செல்கிறது. ஒவ்வொரு எபிசோடிலும் ஹீரோயின் சுனைனா, எஸ்.ஜே. சூர்யா போலவே நடித்து அசத்தும் ஸ்ரீகிருஷ்ணா தயாள், சுழல் வெப்சீரிஸில் வில்லனாக நடித்த குமரவேல் மற்றும் புலிகள், மான்களை வேட்டையாடும் மைம் கோபி, ஊர் தலைவராக நடித்துள்ள வேலராமமூர்த்தி, வனரட்சியாக ஊரில் வேடமணிந்து டிராமா போடும் செம்மலர் அன்னம் என பலர் மீது சந்தேகப் பார்வை கடைசி வரை செல்லும் விதமாகவும் கடைசி எபிசோடில் வெளியாகும் உண்மை என வெப்சீரிஸ் வொர்த்தாகவே இருக்கிறது. 10 எபிசோடுக்கு இழுத்தடித்து சொல்லாமல், 6 எபிசோடுக்குள் இன்னும் கொஞ்சம் சுறுசுறுப்பாக முடித்திருந்தால் சூப்பராக இருந்திருக்கும். சில இடங்களில் ரொம்பவே சீரியல் போல காட்டிய காட்சிகளே காட்டி கடுப்பேத்துகின்றனர் மை லார்ட். மேலும், இந்த வெப்சீரிஸுக்கு இன்ஸ்பெக்டர் ரிஷி என்பதற்கு பதிலாக வனரட்சி என்று பெயர் வைத்திருந்தால் இன்னும் கச்சிதமாக இருந்திருக்கும்.




What’s your Reaction?
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!