Cinema Entertainment

ரஜினிக்கு வில்லன் இவரா?

ஜெய் பீம் பட இயக்குநர் த.செ. ஞானவேல் இயக்கத்தில் ரஜினி காந்த் நடிக்கும் ‘வேட்டையன்’ பட ஷூட்டிங் முடிவடையும் தருவாயில் இருக்கிறது. ஆனால் அதற்குள்ளாகவே ரஜினியும் லோகேஷ் கனகராஜூவும் இணையவிருக்கும் தலைவர் 171 படம் பற்றிய பரபரப்பு அதிகமாகி வருகிறது.

தலைவர் 171-ன் அசல் பெயர் என்ன என்பதை வருகிற ஏப்ரல் 22-ம் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்க இருக்கிறார்கள். வழக்கம் போல் ரஜினியின் போஸ்டரை தயார் செய்து விளம்பரப்படுத்தி, ஒரு பேச்சை கிளப்பும் வேலைகளை லோகேஷ் கனகராஜ் ஆரம்பித்துவிட்டார்.




இந்நிலையில் புதிய கிசுகிசு ஒன்று உலா வருகிறது. அது, லோகேஷ் கனகராஜ் ரஜினிக்கு வில்லனாக நடிக்க யாரும் எதிர்பார்க்காத ஒருவரை நடிக்க வைக்க வேண்டுமென யோசித்திருக்கிறாராம். ஆளாளுக்கு பல நடிகர்கள் பெயரைச் சொல்ல, அவரோ மைக் மோகனை நடிக்க வைத்தால் என்ன என்று கேட்டிருக்கிறாராம். இதற்கு அவரது உதவியாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கவே, இப்போது மைக் மோகனை அணுகியிருக்கிறார்களாம்.

மைக் மோகனை இப்போது விஜயுடன் நடிக்க வைத்திருக்கிறார் வெங்கட் பிரபு. இது தவிர மைக் மோகனும் இரண்டாவது ரவுண்ட் வந்தே தீரவேண்டுமென தீவிரமாக இயங்கி வருகிறார். இதனால்தான் அவரது ரசிகர் மன்றத்தை ஆங்காங்கே விழாக்கள் நடத்த சொல்லி வருகிறாராம். அவரும் மக்களுக்கு நல உதவிகளை அவ்வப்போது செய்து வருகிறாராம்.

அநேகமாக பல வெள்ளிவிழா படங்களைக் கொடுத்த ஹீரோ மோகன் ரஜினிக்கு வில்லன் ஆவாரா என்பதற்கு பதில் இன்னும் சில நாட்களில் தெரிந்துவிடும். மைக் மோகன் இல்லையென்றால் விஜய் சேதுபதியையும் கேட்டுப் பார்க்கலாம் என்ற யோசனையும் இருக்கிறதாம்.




What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!