Samayalarai

மொறு மொறுப்பான கோதுமை பிஸ்கட்

பொதுவாக பிஸ்கட் என்றாலே அனைவருக்கும் பிடிக்கும். குழந்தைகள் பிஸ்கட்டை அதிகம் விரும்பி சாப்பிடுவார்கள். அனைவரும் விரும்பி சாப்பிட கூடிய இந்த பிஸ்கட்டினை வீட்டில் மிக எளிமையான இரண்டு செய்முறைகளில் எப்படி செய்யலாம் என்று பார்க்கலாம். அதுவும் கோதுமை மாவை பயன்படுத்திதான் நாம் கோதுமை பிஸ்கட் செய்யப்போகிறோம். பிஸ்கட் செய்வதற்கு மைக்ரோ ஓவன் தேவைப்படுமே என்று அதிகமாக யோசிக்க வேண்டாம்… இந்த கோதுமை பிஸ்கட்டினை அடுப்பில் வெறும் கடாயை பயன்படுத்தி தான் செய்ய போகிறோம்…




இந்த கோதுமை பிஸ்கட் செய்ய மிகவும் குறைவான பொருள்களே தேவைப்படும். இந்த கோதுமை பிஸ்கட்டை வீட்டில் நீங்கள் ஒரு முறை செய்தால் போதும் அனைவரும் மீண்டும் மீண்டும் வேண்டும் என்று விரும்பி சாப்பிடுவார்கள்.  சரி கோதுமை பிஸ்கட் செய்ய தயாரா? முதலில் கோதுமை பிஸ்கட்செய்ய என்னென்ன பொருட்கள் தேவைப்படும் என்பதை பற்றி பார்க்கலாம்.

கோதுமை பிஸ்கட் செய்முறை! - Vanakkam London

தேவையான பொருட்கள்:

  • வெண்ணெய் 100 கிராம்

  • பொடித்த சர்க்கரை 100 கிராம்

  • வெண்ணிலா எசன்ஸ் ஒரு ஸ்பூன்

  • கோதுமை மாவு ஒரு கப்

செய்முறை:

  • மைதா மாவை தவிர்த்து கோதுமை மாவை எடுத்துக் கொள்வது உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது. இந்த பிஸ்கட் செய்ய முதலில் வெண்ணெயுடன் பொடித்த சர்க்கரை சேர்த்து ஸ்பூனால் நன்கு கலந்து விட்டுக் கொள்ளவும். பிறகு வெண்ணிலா எசன்ஸ் ஒரு ஸ்பூன் சேர்த்து அதையும் நன்கு கலந்து கொள்ளவும்.

  • இப்பொழுது கோதுமை மாவை நன்கு சலித்து ஒரு கப் அளவில் எடுத்து வெண்ணெய் கலவையுடன் சேர்த்து நன்கு கலக்கவும் .

  • சப்பாத்தி மாவை விட சற்று தளர்வாக பிசைந்து கொள்வது நல்லது. இதனால் பிஸ்கட் நன்கு மொறுமொறுப்பாக ருசியாக கிடைக்கும். இப்பொழுது பிசைந்த மாவை சின்ன சின்ன உருண்டைகளாக எடுத்து உள்ளங்கையில் வைத்து அழுத்தி ஒரு ஃபோர்க்கால் நடுவில் சிறிது அழுத்தி பிரஸ் பண்ண அழகான ஷேப்பில் ரெடியாகிவிடும். இதனை இட்லி தட்டில் வைத்து வேக விடவும். ஓவன் தேவையில்லை.

  • இட்லி பாத்திரத்தில் ஒரு கப் கல் உப்பை அடியில் போட்டு உப்பு நன்கு சூடாகும் வரை அடுப்பை நன்கு எரிய விட்டு நன்கு சூடானதும் மிதமான தீயில் வைத்து மேலே இட்லி தட்டில் பிஸ்கட்களை பரப்பி மூடி விடவும். 10 நிமிடங்கள் மிதமான தீயில் வேகட்டும். இப்பொழுது திறந்து பார்க்க அருமையான பொன் கலரில், மணமான கோதுமை மாவு பிஸ்கட் தயார்.

  • இதனை குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள். டீ டைமில் இதனை டீயுடன் சேர்த்து சாப்பிட மிகவும் ருசியாக இருக்கும். செய்வதும் எளிது. இரண்டு மாதங்கள் வரை வைத்திருந்து சாப்பிடலாம்.

  • கிரிஸ்பியாகவும் ருசியாகவும் இருக்கும். பள்ளி விட்டு வரும் குழந்தைகளுக்கு ஏற்ற ருசியான ஸ்நாக்ஸ் இது.




What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!