Samayalarai

பால் இல்லாமல் சேமியா பாயாசம் செய்ய முடியுமா?

பாயாசம் என்றாலே பால் சேர்த்து தான் செய்வார்கள் ஆனால் இதில் பால் எதுவும் சேர்க்காமல் தேங்காய் பால் எடுத்து செய்யும் இந்த சேமியா பாயாசம் ரொம்பவே சுவையாக இருக்கும். வித்தியாசமான முறையில் இது போல ஒரு முறை நீங்கள் பாயாசம் செய்து பாருங்கள் அப்படியே அசந்து போவீங்க! டேஸ்டியான இந்த தேங்காய் பால் பாயாசம் எப்படி செய்வது? என்பதைத் தான் இந்த சமையல் குறிப்பு பதிவின் மூலம் இனி தொடர்ந்து நாம் அறிந்து கொள்ள போகிறோம்.

சேமியா பாயசம் செய்முறை, semiya payasam in tamil - ராக்ஸ் கிட்சன்




தேவையான பொருட்கள்

முழு தேங்காய் – 2

வறுத்த சேமியா – 200 கிராம்

தண்ணீர் – 2 லிட்டர்

சர்க்கரை – 150 கிராம்

மில்க் மெய்டு – 100 கிராம்

ஏலக்காய் தூள் – அரை டீஸ்பூன்

 பொடித்த நட்ஸ் – தேவையான அளவு.

செய்முறை விளக்கம்:

  • இந்த சேமியா பாயாசம் செய்வதற்கு முதலில் இரண்டு முழு தேங்காயை எடுத்துக் கொள்ளுங்கள். அதிகம் முற்றிய தேங்காயாக இல்லாமல் நல்ல பிரஷ்ஷான சுவையுள்ள தேங்காயாக பார்த்து தேர்ந்தெடுப்பது நல்லது. பின்னர் தேங்காயை உடைத்து தேங்காய் சில்லுகளை நறுக்கி எடுத்துக் கொள்ளுங்கள்.

  • தேங்காய் சில்லுகளை மிக்ஸி ஜாரில் சேர்த்து தண்ணீர் எதுவும் சேர்க்காமல் தேங்காய் தண்ணீரையே பயன்படுத்தி பால் எடுக்க வேண்டும். ரெண்டு தேங்காயில் எவ்வளவு பால் எடுக்க முடியுமோ அவ்வளவு பால் கெட்டியாக எடுத்துக் கொள்ளுங்கள், தண்ணீர் சேர்க்காதீர்கள்.

  • இதை அப்படியே வைத்துவிட்டு ஒரு பாத்திரத்தில் இரண்டு லிட்டர் அளவிற்கு தண்ணீர் சேர்த்துக் கொள்ளுங்கள். தண்ணீர் கொதிக்க ஆரம்பித்ததும் வறுத்த சேமியாவை சேர்த்து வேக விட வேண்டும். சேமியாவை முன்னரே ஒருமுறை நன்கு பொன்னிறமாக வறுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.




  • சேமியா குழைந்து போகவும் கூடாது, சரியான பதத்தில் வெந்து இருக்க வேண்டும். சேமியா வெந்ததும் அடுப்பை அணைத்து தண்ணீரை வடிகட்டி எடுத்துக் கொள்ளுங்கள். சேமியா ஒன்றோடு ஒன்று ஒட்டிக் கொள்ளாமல் இருக்க வடிகட்டி எடுத்ததும் அதன் மீது பச்சை தண்ணீரை ஊற்றி வடிகட்டி ஆற விடுங்கள்.

  • வடிகட்டி எடுத்த இந்த சேமியாவை தேங்காய் பாலுடன் சேர்த்துக் கொள்ளுங்கள். இப்பொழுது இனிப்பு சுவைக்கு 150 கிராம் அளவிற்கு சர்க்கரையை மிக்ஸியில் போட்டு நன்கு நைசாக அரைத்து எடுத்து சேர்த்து கலந்துக் கொள்ளுங்கள். சர்க்கரைக்கு பதிலாக கற்கண்டையும் அரைத்து சேர்க்கலாம்.

  • பின்னர் இதனுடன் மில்க் மெய்டு சேர்த்தால் சுவையாக இருக்கும். இது ஆப்ஷனல் தான் தேவை இல்லை என்றால் விட்டுவிடலாம்.

  • பொடித்த ஏலக்காய் தூள் மற்றும் பொடி பொடியாக நறுக்கிய நட்ஸ் வகைகளை நீங்கள் இதற்கு கார்னிஷ் செய்ய வேண்டும். உங்களிடம் இருக்கும் முந்திரி, பாதாம், பிஸ்தா வால்நட் போன்ற பொருட்களில் எது இருக்கிறதோ, அவற்றை குட்டி குட்டியாக நறுக்கி அப்படியே சேர்த்துக் கொள்ளுங்கள். பின்னர் இதை ஃப்ரிட்ஜில் வைத்து சற்று குளிர்ந்ததும் எடுத்து பருகிவிடலாம். ரொம்பவே சுவையாக இருக்கக்கூடிய இந்த பாயாசம் ஜில்லென்று பருகும் பொழுது அதன் சுவையே அலாதியானது. நீங்களும் வீட்டில் எளிதாக இப்படி ட்ரை பண்ணி பாருங்க, உங்களை எல்லோரும் நிச்சயமாக பாராட்டுவாங்க!




What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!