Beauty Tips

நீங்கள் அடிக்கடி வேக்சிங் செய்பவரா ? இதோ சில டிப்ஸ்…

இளம்பெண்கள் கண்டிப்பாக செய்யகூடிய அழகு பராமரிப்பில் முக்கியமானது உடலில் இருக்கும் தேவையற்ற முடிகளை களைவதுதான். சரியான முறையில் செய்தால்தான் சருமத்தில் பிரச்சனைகள் வராமல் இருக்கும். அதே போன்று சரியான நேரத்தில் உரிய இடைவேளையில் செய்வதன் மூலம் முடி வளர்ச்சி அதிகரிக்காமலும் பார்த்துகொள்ள முடியும்.தேவையற்ற முடிகளை அகற்ற நீங்கள் சலூனுக்குச் சென்றாலும் சரி, வீட்டிலேயே மெழுகு வைத்து அகற்றினாலும் சரி, வாக்சிங் செய்யும் போதும், செய்த பிறகும் நாம் செய்யும் சில தவறுகள் பற்றி இந்த பதிவில் தெரிந்துக் கொள்ளலாம் வாங்க…

Tips To Keep In Mind While Waxing At ...




பெரும்பாலானோர் தேவையற்ற முடியை அகற்ற வேக்சிங் ஸ்ட்ரிப்ஸ், ரேஸர், க்ரீம், ஹாட் வேக்ஸ் போன்றவற்றைப் பயன்படுத்துகிறார்கள். சிலர் வீட்டிலேயே அதை செய்வார்கள், இன்னும் சிலர் பார்லருக்குச் சென்று வேக்சிங் செய்வார்கள். அப்படி வேக்சிங் செய்யும் போது நாம் செய்யும் சிறிய தவறுகள் பெரிய விளைவுகளை ஏற்படுத்தும் என்பது உங்களுக்கு தெரியுமா?. அந்த வகையில், வேக்சிங் (Waxing) செய்யும்போது, நாம் செய்யக்கூடாத அந்த சில தவறுகள் பற்றி இங்கு காணலாம்.

1. வேக்சிங் செய்வதற்கு முன்பு, அதற்காக சருமத்தை சரியான முறையில் தயார்படுத்த வேண்டும். இல்லை என்றால், நாம் பயன்படுத்தும் கிரீம், மெழுகு ஆகியவை தோலில் அரிப்பை ஏற்படுத்தும். 2. வேக்சிங் செய்வதற்கு முன் முடிகளை வேர் வரை வெட்டக்கூடாது. உடலில் உள்ள நீளமான முடிகளை வேக்சிங் செய்வதற்கு முன், வேர் வரை ட்ரிம் செய்து அதன் பின் வாக்சிங் செய்கின்றனர். இது தவறானது. 3. வேக்சிங்-க்கு பின்னர் வெந்நீரில் குளிப்பது நல்ல முடிவு தான். ஆனால், தண்ணீரின் வெப்பநிலை மிகவும் அதிகமாக இருக்கும் பட்சத்தில் அது சருமம் சிவத்தல் மற்றும் தடிப்புக்கு வழிவகுக்கும்.

4. வாசனை திரவியங்களை பயன்படுத்துவது கூடாது. வேக்சிங் செய்த பின்னர் சருமம் உணர்திறன் மிக்கதாக இருக்கும். எனவே, அந்த சமயத்தில் டியோடரன்ட், பெர்ஃபியூம் போன்ற வாசனை திரவியங்களை பயன்படுத்துவது சருமத்திற்கு நல்லது அல்ல.




5. வேக்சிங் செய்யும் போது முடிகள் வளரும் திசையில் வேக்சிங் பட்டைகளை பயன்படுத்த வேண்டும். எதிர் திசையில் பயன்படுத்துவது முடிகளை சீராக அகற்ற இயலாது. அதோடு சரும சேதத்திற்கும் வழிவகுக்கும். 6. வேக்சிங் செய்த பின்னர் ஜீன்ஸ் பேண்ட், லெக்-இன் உள்ளிட்ட இறுக்கமான ஆடைகள் அணிவதை தவிர்ப்பது நல்லது. காரணம், இறுக்கமான ஆடைகள் சருமத்துடன் ஏற்படுத்தும் உராய்வு சரும சேதத்திற்கு வழிவகுக்கும்.

7. ஒரு முறை வேக்சிங் செய்த பின்னர் சிலர் மீண்டும் வேக்சிங் செய்துக்கொள்ள தயக்கம் காட்டுகின்றனர். இவ்வாறு வாக்சிங் செய்வதை கைவிடும் போது, முடிகளின் வளர்ச்சி இயல்பை விட அதிகமாக இருக்கும், எனவே, சீரான கால இடைவெளியில் வேக்சிங் செய்துக்கொண்டே இருங்கள்.

8. மெழுகை சருமத்தில் தடவுவதற்கு முன்பு காயங்கள், சிராய்ப்பு, புண் என ஏதேனும் உள்ளதா என்று கவனிக்க வேண்டும். அப்படி இருந்தால் அவற்றை ‘பேண்டேஜ்’ ‘பேண்டேஜ்’ கொண்டு மூட வேண்டும். அவ்வாறு செய்யாமல் சூடான மெழுகை அப்பகுதியில் தடவி வேகமாக இழுக்கும்போது, காயங்கள் மேலும் அதிகமாகக்கூடும்.

9. வேக்சிங் செய்வதற்காக பூசப்படும் மெழுகை எவ்வாறு அகற்றுகிறோம் என்பது முக்கியம். மெழுகை மெதுவாகத் தடவ வேண்டும். பின்னர் அதை அகற்றும்போது ஸ்டிரிப்பை வேகமாகவும் ஒரே சீராகவும் இழுக்கவும்.

10. வேக்சிங் செய்யும் முறையைப் பற்றி தகுந்த நிபுணரிடம் முழுவதுமாக தெரிந்து கொண்ட பின்பு, வீட்டில் சுயமாக செய்து கொள்வது பாதுகாப்பானது.




What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!