நந்தனின் மீரா

நந்தனின் மீரா-14

14

வசீகரங்களை வாரி இறைத்துவிட்டு
உறி மேல் வெண்ணெய்
திருட போய்விடுகிறாய் ,
யசோதையாய் …ராதையாய் …
உனையணைக்கும்
தருணம் தேடுகிறேன் நான் .

பின் மதிய வேளை .வேலைகளை முடித்துவிட்டு சீரியல்களை பார்த்தபடியிருந்தாள் மீரா .

” மீரா …” பின்னாலிருந்து அழைத்த பாட்டியின் குரலுக்கு  எழுந்து போனாள் .

” தண்ணீர் வேண்டும்மா …,”

அருகிலிருந்த தண்ணீரை தம்ளரில் சரித்து பாட்டியை ஏந்தி வைத்து வாயில் ஊட்டினாள் .




” வீட்டில் யாரும் இல்லையாம்மா ? “

” இல்லை .அத்தை பக்கத்து ஊர் கோவிலுக்கு போயிருக்கறாங்க .வர சாயந்தரம் ஆகும்னு சொன்னாங்க …”

” ம் ….இன்னைக்கு உன் மாமியாருக்கும் , மாமனாருக்கும் என்ன பிரச்சினை …? “

” உங்களுக்கு தெரியாததா பாட்டி ..? ” கிண்டலாக கேட்டாள் .

” இல்லைம்மா நீ நினைப்பது போல் அவர்கள் இருவருக்குமடையே வரும் சண்டைகளுக்கு நான் காரணமில்லை .சுந்தரியின் அப்பாவித்தனம்தான் காரணம் .அதுதான் குருவை கோபம் கொள்ள வைக்கிறது ….”

மீராவிற்கு ஆயாசமாக இருந்தது .

“எந்த மனிதன்தான் தன் தவறை தான் ஒத்துக்கொள்கிறான் .அகப்பட்டவர்கள் தலையில் போட்டுவிட்டு தப்பிக்கத்தானே நினைக்கிறான் .”

துணிந்து பேசினாள் .

” உன்னிடம் பேச வேண்டும் மீராம்மா .ஆனால் இன்று இல்லை .ஏனோ இன்று எனக்கு ரொம்ப சோர்வாக இருக்கிறது .தூக்கம் வருகிறது .எனக்கு போர்த்திவிட்டு போம்மா .நாம் இன்னொருநாள் பேசலாம் …” கண்களை மூடிக்கொண்டார் .

தப்பித்தோம் என ஓடிவந்து விட்டாள் மீரா .பாட்டியின் பேச்சுக்கள் சுந்தரியை குறை கூறுவதாகவே இருக்கும் என்பதில் அவளுக்கு சந்தேகம் இல்லை .அதனை இப்போது கேட்க அவள் தயாரில்லை .

டிவியை பார்த்தபடி மெல்ல கண்ணயர்ந்தவளை காலிங்பெல் எழுப்பியது .

கதவை திறந்தவள் முன் நந்தகுமார் நின்றிருந்தான் .

” இந்தப்பக்கம் ஒரு வசூல் மீரா .அப்படியே ஒரு சின்ன ரிலாக்சேசன் .வெயில் இன்னைக்கு ஓவர் .ஏதாவது குளிர்ச்சியாக குடிக்க கொடேன் ” என்றான் .

கணவனின் வருகையே மீராவிற்கு குளுமையை வாரி இரைக்க …எலுமிச்சம்பழத்தை பிழிய ஆரம்பித்தாள் .




” என்ன மீரா இன்னைக்கு காலையில் அப்பாவிடம் அவ்வளவு தைரியமாக பேசிவிட்டாய் ..? ” அவள் பின்னாலேயே அடுப்படிக்கு வந்து அடுப்பு மேடையில் சாய்ந்து நின்றபடி கேட்டான் .

” இதில் என்ன தைரியம் …? என் அம்மாவை என் அப்பா இப்படி பேசினால் கேட்க மாட்டேனா ..? “

” ஆனால் நாங்கள் எல்லாம் அப்பாவிடம் பேசவே பயப்படுவோம் தெரியுமா …? “

” அப்பாவிடம் பயம் எதற்கு …? மரியாதை போதாதா …? “

” அதென்னவோ சின்ன வயதிலிருந்து இப்படியே  பழக்கமாகிவிட்டது .அம்மா அப்படியே …அப்பாவிடம் பேசாதே …தள்ளி நில் …என்று சொல்லி சொல்லியே எங்களை பழக்கி வைத்துவிட்டார்கள் ….”

” ஓ…எங்கள் வீட்டில் நாங்கள் எங்கள் அப்பாவுடன் ப்ரெண்ட் போல் பேசி பழகுவோம் …”

” அப்போது உனக்கு இங்கே நம் வீட்டு சூழ்நிலை பிடித்தமில்லாமல்  இருக்கிறதில்லையா …? “

” பிடித்தமில்லாமல் என்றில்லை …வித்தியாசமாக இருக்கிறது …”

” ஆமாம் அத்தோடு முறைத்து கொண்டு நிற்கும் புருசன் வேறு ….” நந்தகுமார் கிண்டல் போல் சொன்னாலும் அதிலிருந்த வருத்தம் தெரிய …

” அப்படி ஒன்றும் இல்லை …” அவசரமாக சொன்னாள் .

” இதில் உனக்கு வருத்தமில்லையா மீரா …? நான் எனக்கு ….நீ கொஞ்சம் டைம் கொடுக்கவேண்டும் மீரா .நமது வாழ்வு குழம்பிய குட்டையில் ஆரம்பிக்காமல் தெளிந்த நீரோடையில் ஆரம்பிக்க வேண்டுமென நினைக்கிறேன் .புரிந்து கொள்கிறாயில்லையா …? “

கண்ணில் காணும் பெண்களுடனெல்லாம் பார்வையாலேயே குடும்பம் நடத்த துடிக்கும் ஆண்களுக்கிடையே , கட்டிய மனைவியையே உறுத்தலற்ற உண்மை மனதுடன் தொட நினைக்கும் தன் கணவனை ஆசையுடன் பார்த்தாள் மீரா .

இவனல்லவா ..உண்மையான ஆண்மகன் .

” உங்களுடன் ஒரு உண்மையான வாழ்விற்காக நான் காலம் முழுவதும் கூட காத்திருக்க தயார் ….” உணர்ச்சியோடு கூறினாள் .

” ஏய் …அவ்வளவு காலமெல்லாம் ஆகாது .இன்னும் கொஞ்ச நாட்கள்தான் ….சரியா ..? ” மெல்ல அவள் கன்னம் வருடினான் .

இதனை பேசுவதற்காகத்தான் இந்த நேரம் வந்தானோ ..? என மீரா நினைத்தபோதே …

” நான் கிளம்புகிறேன் மீரா .கடையில் சரியான ஆள் இல்லை ….”

” இன்னொரு க்ளாஸ் ஜூஸ் குடித்துவிட்டு போங்கள் …” தம்ளரை நீட்டினாள் .வாசலில் காலிங்பெல் அழைத்தது .
” இந்நேரம் யார் மீரா ..? “




” தெரியவில்லையே .பார்க்கிறேன் ….” கதவை திறந்தவள் ..வாடி ….கருத்து ..அசந்து போய் வெளியே நின்ற திவ்யாவை கண்டதும் திகைத்தாள் .

” அத்தை ….” இரு கைகளையும் நீட்டியபடி இவளிடம் தஞ்சம் புகுந்தாள் திவ்யா .

” என்னம்மா …? என்ன …? ” என பதறிய மீராவிற்கு அங்கே நின்றிருந்த ஆட்டோவிலிருந்து இறங்கி வந்த சற்று பெரிய வகுப்பு பெண்ணைக் கண்டதும் புரிந்தாற்போல் இருந்தது .

அவளது சந்தேகத்தை உறுதிப்படுத்தி விட்டு போனாள் அந்த பெரிய பெண் .பயத்துடன் நின்ற திவ்யாவை அணைத்து சமாதானப்படுத்தி உள்ளே அழைத்து வந்தாள் மீரா .

” திவ்யா …என்னடா …உடம்பு சரியில்லையா …ஏன் ஸ்கூலில் இருந்து பாதியில் வந்துவிட்டாய் ….? ” கவலையாய் கேட்டபடி தலை வருட வந்த தாய்மாமனுக்கு பதில் சொல்ல முடியாமல் திவ்யா வெட்கமும் , கூச்சமுமாக தன் முகத்தை மீராவிற்குள் புதைத்துக்கொண்டாள் .

” திவ்யா பெரிய பெண்ணாகிவிட்டாள் ….” அவளது தலையை ஆதரவாக வருடியபடி சொன்னாள் மீரா.




What’s your Reaction?
+1
19
+1
29
+1
0
+1
0
+1
2
+1
0
+1
0
Subscribe
Notify of
guest

1 Comment
Inline Feedbacks
View all comments
P Bargavi
P Bargavi
1 month ago

Nice

1
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!