Entertainment lifestyles News

சுய தொழில் மூலம் தினக்கூலியாக இருந்த நபர் தொழிலதிபராக மாறிய தாஸ்..! எப்படி?

மக்கள் வீடுகளிலேயே எளிதாக தயாரிக்கும் வகையில் விற்பனை செய்யப்படும் பொருட்கள் குறிப்பாக ரெடி டூ மேக் வகை பொருட்களுக்கு இந்திய சந்தையில் எப்போதுமே வரவேற்பு இருக்கும். அப்படி வீட்டிலே சூடு செய்து சாப்பிடும் வகையில் பரோட்டா விற்பனை செய்யும் நிறுவனம் தான் டெய்லி ஃபிரஷ் ஃபுட். இந்த நிறுவனத்தின் உரிமையாளர் டிகாந்தா தாஸ், 12 ஆண்டுகளுக்கு முன்பு, பெங்களூருவில் ஒரு ஹோட்டலில் பாதுகாவலராக பணி செய்து வந்தார். அப்போது அவருடைய ஒரு நாள் ஊதியம் 300 ரூபாய்.




தற்போது சுயதொழில் முனைவோராக மாதம் லட்சக்கணக்கில் வருவாய் ஈட்டி வருகிறார். இந்த நிறுவனம் ஒருநாளைக்கு 2,000 பரோட்டாக்களை தயாரித்து அசாம், அருணாச்சல பிரதேச மாநிலங்களில் விற்பனை செய்து வருகிறது. அசாம் மாநிலத்தின் பிஸ்வாநாத் மாவட்டத்தில் பிறந்த டிகாந்தா தாஸ் ஏழை குடும்பத்தில் பிறந்தவர்.

கடந்த 2011ஆம் ஆண்டு வேலை தேடி பெங்களூரு வந்த இவர், ஹோட்டலில் பாதுகாவலராகவும், ரூம் சர்வீஸ் பாயாகவும் பணிக்கு சேர்ந்தார். 2012இல் ஐடி ஃபிரஸ் புட் நிறுவனத்தில் இணைந்தார், இன்ஸ்டண்ட் உணவு வகைகளுக்கு பெயர் போன ஒரு நிறுவனம் ஐடி ஃபிரஸ் புட். இட்லி மாவு தொடங்கி, சப்பாத்தி, பரோட்டா ஆகியவற்றை விற்பனை செய்கிறது.

இங்கே சரக்குகளை ஏற்றி இறக்குவது தான் இவரது பணி. படிப்படியாக கேண்டீனிலும் உணவு தயாரிப்பு நிறுவனத்திலும் வேலைக்கு சென்றார். அப்போது பரோட்டா, சப்பாத்தி உள்ளிட்டவற்றை எப்படி மக்களுக்கு பிடித்த முறையில் தயாரிப்பது, சாஃப்டாவும்,டேஸ்டாகவும் தயாரிப்பது எப்படி என்பன உள்ளிட்ட வழிமுறைகளை கற்றுக் கொண்டார்.




பின்னர் மூத்த அதிகாரி ஒருவரின் உதவியோடு ஒரு தொழிலை எப்படி நடத்த வேண்டும், மார்க்கெட்டிங் செய்வது எப்படி என்பன உள்ளிட்ட நுட்பங்களை அறிந்து கொண்டார். சூர்யா என்ற நண்பருடன் இணைந்து முதலில் ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் சிறிதாக பரோட்டா தயாரிக்கும் நிறுவனத்தை தொடங்கினார். ஆனால் கொரோனா காலத்தில் நிறுவனத்தை மூட வேண்டிய சூழல் ஏற்பட்டு அனைத்துமே நஷ்டமடைந்தது.

பின்னர் அசாமுக்கு திரும்பிய டிகாந்தா அன்றாட பொழப்புக்கே வேலைக்கு செல்ல வேண்டிய சூழலுக்கு ஆளானார். மீண்டும் நண்பர் சூர்யா மற்றும் மற்றொரு நண்பர் டோம்பருடன் இணைந்து அசாமிலே டெய்லி ஃபிரஷ் புட் என்ற நிறுவனத்தை தொடங்கினார். ஒருவர் தயாரிப்பு, ஒருவர் மார்க்கெட்டிங், ஒருவர் பொருட்களை வாங்குவது என பணிகளை பிரித்து கொண்டு பணியாற்றினார். படிப்படியாக இவர்களின் பரோட்டாவுக்கு மக்களிடையே வரவேற்பு கிடைக்கவே நிறுவனமும் வளர்ச்சி அடைந்து லாபமும் கிடைக்க தொடங்கியது.

இவர்கள் 60 ரூபாய்க்கு 5 பரோட்டா, 100 ரூபாய்க்கு 10 பரோட்டா என பாக்கெட் செய்து விற்பனை செய்கின்றனர். இதனை சாதாரண வெப்பநிலையில் 3 நாட்களுக்குள், ப்ரீசரில் 15 நாட்களுக்குள் வைத்து பயன்படுத்தி கொள்ளலாம். தற்போது தன்னுடைய பரோட்டா தயாரிக்கும் நிறுவனத்தில் ஒரு நாளைக்கு 20,000 ரூபாய் என்ற அளவில் ஒரு மாதத்திற்கு 6 லட்சம் ரூபாய்க்கு வருவாய் ஈட்டுகிறார்.

இதுமட்டுமின்றி பலருக்கும் வேலைவாய்ப்பையும் ஏற்படுத்தி தந்திருக்கிறார். தன்னுடைய நிறுவனத்தில் பரோட்டாக்களை தயாரித்து ஸ்டாக் வைப்பதில்லை நாள்தோறும் தயாரித்து ஃபிரெஷ்ஷாகவே விற்பனை செய்கிறோம் என கூறுகிறார். நள்ளிரவு 1 மணிக்கு தொடங்கும் பரோட்டா தயாரிப்பு பணி அதிகாலை 4 மணிக்கு முடிந்துவிடும். பின்னர் ஒவ்வொரு ஊருக்கும் அனுப்பி வைக்கும் வேலை நடைபெறுகிறது.




What’s your Reaction?
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!