Cinema Entertainment விமர்சனம்

சிக்கிதவிக்க போகும் கோபி!…பாக்கியலக்ஷ்மி இன்றைய எபிசோட்

இன்றைய எபிசோட்டில் வாழ்த்துக்கள் உங்க மனைவி கர்ப்பமா இருக்காங்க என டாக்டர் சொல்கிறார். அப்போ ஸ்கேன் செய்யலாம் என சொன்னது, அது ரெகுலர் செக்கப் என்கிறார். ராதிகாவிடம் இது எத்தனையாவது குழந்தை எனக் கேட்க அவர் இரண்டாவது குழந்தை என்கிறார்.

கோபி நான்காவது குழந்தை என்று சொல்கிறார். இந்த பிள்ளைக்கும் முதல் பிள்ளைக்கும் வயசு வித்தியாசம் எவ்வளோ எனக் கேட்க 14 வருடம் என்க கோபி செழியன் வயதை கணக்கிட்டு கொண்டு இருக்கிறார். பின்னர் இருவரும் காரில் ஏறி வீட்டுக்கு செல்லாமல் ரோட்டிலே ரவுண்ட் அடித்து கொண்டு இருக்கின்றனர்.

பின்னர் ஈஸ்வரி கால் செய்ய என்ன என் வீட்டில் விட்டுட்டு நீங்க ஹோட்டலுக்கு போங்க என்கிறார் ராதிகா. அதுப்போல கோபி டிராப் செய்து விட்டு கிளம்புகிறார். வீட்டுக்கு வரும் ராதிகாவுக்கு மீண்டும் வாந்தி வர எடுத்துவிட்டு தான் கர்ப்பமா இருக்கும் விஷயத்தினை கூறுகிறார்.




ஆனா இந்த குழந்தை வேண்டுமா என்ற குழப்பத்தில் இருப்பதாக கூற கண்டிப்பா குழந்தை பெத்துக்கோ. ஏற்கனவே உன் மாமியார் எப்போடா உன்னை தொறத்திவிடலாம்னு பார்க்குறாங்க. இந்த குழந்தை தான் உனக்கு வேண்டுமுனா குழந்தையை பெத்துக்கோ என்கிறார். இதை தொடர்ந்து ராதிகாவும் குழந்தையை பெற்றுக்கொள்ள சம்மதமாக சிரிக்கிறார்.

ரெஸ்டாரெண்ட்டில் ஈஸ்வரி எவ்வளோ நேரம்? எனக்கு உடம்பெல்லாம் வலிக்குது என டயலாக் விடுகிறார். பின்னர் ராதிகா குறித்து கேட்க அவளுக்கு டெஸ்ட் எடுத்து இருப்பதாக கூற என்ன மாசமாவா இருக்கா என நக்கல் செய்கிறார். அய்யோ அம்மாக்கு தெரிஞ்சி இருக்கோ என கோபி பதறுகிறார்.

பின்னர் பாக்கியா ரெஸ்டாரெண்டுக்கு பழனிசாமி வருகிறார். அவருக்கு பாக்கியா ஸ்வீட் செய்து கொடுக்க இவர் பாக்கியாவுக்கு புத்தங்களை வாங்கிவருகிறார். அதற்கு எவ்வளோ செலவு ஆச்சு எனக் கேட்க அன்புக்கு விலை பேசாதீங்க எனச் சொல்லி செல்வதுடன் இன்றைய எபிசோட் முடிந்தது.




 

What’s your Reaction?
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!