Samayalarai

கோடை வெயிலுக்கு இதமான மசாலா லஸ்ஸி செய்வது எப்படி?

கோடைக்காலம் துவங்கி வெயில் வாட்டி வதைத்து வருகிறது. எனவே, உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டியது அவசியம். எனவே, கோடைக்காலத்தில் உடலை குளிர்ச்சியாகவும் நீரேற்றமாகவும் வைத்துக்கொள்ள வேண்டியது அவசியம். அந்தவகையில், கோடைக்காலத்தில் புத்துணர்ச்சி தரும் பானம் ஒன்றை பற்றி பார்க்கலாம்.

பொதுவாக லஸ்ஸி இனிப்பு சுவையில் தான் கடைகளில் கிடைக்கும். இந்நிலையில், இனிப்பு லஸ்ஸி விரும்பாதவர்களுக்கு உதவும் விதமாக, காரமான ‘மசாலா லஸ்ஸி’ செய்வது எப்படி என இங்கு காணலாம்.




தேவையான பொருட்கள் :

தயிர் – 2 கப்.
பச்சை மிளகாய் – 2.
சீரகத் தூள் – 1 ஸ்பூன்.
கொத்தமல்லி தழை – 1 கொத்து.
இஞ்சி – 1 இன்ச் அளவு.
உப்பு – தேவையான அளவு.
ஐஸ் கட்டிகள் – தேவையான அளவு




செய்முறை விளக்கம்  :

  • மசாலா லஸ்ஸி செய்வதற்கு முன்னதாக, கடாய் ஒன்றை அடுப்பில் வைத்து அதில் எண்ணெய் ஏதும் சேர்க்காமல் ஒரு ஸ்பூன் சீரகம் சேர்த்து வறுத்து தனியே எடுத்து வைக்கவும்.

  • இதனிடையே, பச்சை மிளகாய் மற்றும் கொத்தமல்லி தழை ஆகியவற்றை தண்ணீரில் கழுவி சுத்தம் செய்து, பின்னர் பொடியாக நறுக்கி தயார் செய்து தனியே வைத்துக்கொள்ளவும்.

  • இதேப்போன்று, மசாலா லஸ்ஸி செய்ய எடுத்துக்கொண்ட இஞ்சியினை தோல் நீக்கி சுத்தம் செய்யவும். பின்னர் ஒரு கை உரலில் சேர்த்து இடித்து தயாராக எடுத்து வைக்கவும்.

  • தற்போது ஒரு பெரிய கோப்பையில் 2 கப் தயிருடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்து நன்கு கரைத்துக்கொள்ளவும். அதாவது தயிரின் திட நிலை தெரியாத அளவிற்கு கரைக்கவும்.

  • தொடர்ந்து இதில் நறுக்கிய பச்சை மிளகாய், வறுத்த சீரகம், இஞ்சி மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கலக்கவும்.

  • இறுதியாக இதில் ஐஸ் கட்டிகளை சேர்த்து கலந்துவிட, சுவையான மசாலா லஸ்ஸி தயார்.

  • தயாராக உள்ள இந்த மசாலா லஸ்ஸியை ஒரு கிளாஸில் ஊற்றி, அதன் மீது சிறிதளவு கொத்தமல்லி தழைகளை பொடியாக நறுக்கி தூவி சுவையாக பரிமாறலாம்.




What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!