gowri panchangam Sprituality

காவல் தெய்வங்கள்/பட்டுக்கோட்டை நாடியம்மன்

தஞ்சாவூரில் உள்ள ஒரு சிறிய நகரமே பட்டுக்கோட்டை. ஒரு காலத்தில் அதில் காடுகளே அதிகம் இருந்தன. அப்போது அந்த பிரதேசத்தை மராட்டிய மன்னர்கள் ஆண்டு வந்தனர். ஒருநாள் அந்த நாட்டு மன்னன் காட்டில் வேட்டை ஆடவந்த போது காட்டின் நடுவில் அழகான ஒரு மங்கை தன்னைப் பார்த்தவாறு பெரியதாக சிரித்தப்படி நின்று கொண்டு இருப்பதைக் கண்டான். ஆகவே அவளை பின் தொடந்து சென்றான் மன்னன். அவன் அவளை துரத்திக் கொண்டு செல்ல ஓடிய அவள் ஒரு புதருக்குள் சென்று மறைந்து விட்டாள். ஆகவே அவள் புதரை விலக்கிப் பார்த்தான்.




காவல் தெய்வம் - YouTube

ஆனால் அவள் அதில் இல்லை என்பதினால் மக்களை அழைத்து அந்த இடத்தை தோண்டுமாறு ஆணையிட்டான். ஆனால் தோண்டிய இடத்துக்குள் அந்தப் பெண்ணுக்குப் பதில் ஒரு அம்மன் சிலையே கிடைத்தது. அதை வெளியில் எடுத்து வந்து பட்டுக்கோட்டை சிவன் ஆலயத்தில் இருந்த பண்டிதர்களைக் கொண்டு பட்டுக்கோட்டையில் ஒரு ஆலயம் அமைத்து அதில் பிரதிஷ்டை செய்தார்.

அந்த காலத்தில் புதுக்கோட்டை வீரம்மா நகர் என்றே அழைக்கப்பட்டது. பெயர் இருந்தது வைத்தார். அந்த சிலைக்கு பூஜைகளை செய்ய நடராஜ பண்டாரம் மற்றும் சின்னன் செட்டியார் என்பவர்களை பண்டிதர்களாக நியமித்தார். அவள் தன்னை வந்து வணங்கியவர்களின் வேண்டுகோட்களை நிறைவேற்றி வந்ததினால் அவள் நாடியம்மன் என அழைக்கப்பட்டாள்.




அது பற்றி இன்னொரு கதையும் உள்ளது. காட்டில் வேட்டை ஆடச் சென்ற மன்னன் ஒரு முயலைக் கண்டு அதை துரத்திப் போனார். அது ஒரு புதருக்குள் சென்று மறைந்து விட அந்த புதரை வெட்டினார்கள். ஆனால் அதை அங்கு காணவில்லை. ஆகவே அந்த இடத்தை தோண்டினார்கள். அவர்கள் தோண்டிய இடத்தில் இருந்து ரத்தம் வந்ததாம். ஆகவே மிகவும் கவனமாக அந்த இடத்தை தோண்டியபோது அங்கு ஒரு சிலை கிடைத்ததாம். அதை வெளியில் எடுத்து அங்கு பிரதிஷ்டை செய்து வழிபட்டனராம்.

சின்னன் செட்டியார் அதே உருவில் ஒரு சிறிய உற்சவ மூர்த்தியை தங்கத்தில் செய்து ஆலயத்தில் வைத்தாராம். பங்குனி மாதத்தில் ( மார்ச்- ஏப்ரல்) பன்னிரண்டு நாட்கள் விழா நடைபெறுகின்றது. அந்த மாதம் வரும் முதல் செய்வாய் கிழமையில் அந்த கிராமத்தில் வைக்கப்பட்டு உள்ள ஐயனார் சிலைக்கு விழா எடுப்பார்கள். நாடியம்மன் விழா ஆரம்பிக்கும் வரை அது தொடரும். நாடியம்மனை தேரில் ஏற்றி ஸ்ரீனிவாச பெருமாள் ஆலயத்துக்கு அழைத்துச் சென்று வணங்கிய பிறகு அவளுடைய சகோதரரான ஸ்ரீனிவாசப் பெருமாள் தரும் பரிசுகளை எடுத்துக் கொண்டு அவள் திரும்ப தன்னுடைய ஆலயத்துக்கு வருகிறாள்.

கோவில் செல்லும் வழி:பட்டுக்கோட்டை என்பது தஞ்சாவூரில் உள்ளது.  நாடியம்மன் ஆலயம் பட்டுக்கோட்டை ரயில் நிலையம் மற்றும் பேருந்து நிலையத்தில் இருந்து சுமார் அரை கிலோ மீட்டர் தொலைவில்தான் உள்ளது.  இந்த ஆலயத்தின் தல விருஷமாக நாகலிங்க மலர் உள்ளது. பட்டுக் கோட்டையில் புராதான வனேஸ்வரர்  எனும் இன்னொரு ஆலயம் சிறப்பு மிக்கது.  ஒரு காலத்தில் அதை மராட்டிய மன்னர்கள் ஆண்டு வந்தார்கள். மராட்டியர்கள் ஆட்சியில் இந்த  இடம் 1799 ஆம் ஆண்டுவரை இருந்துள்ளது. 




What’s your Reaction?
+1
1
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!