gowri panchangam Sprituality

காவல் தெய்வங்கள்/தீ பாய்ந்த நாச்சியார் (திகைப்பூட்டும் கதை)


 

கடலூரில் உள்ள வடலூர் பகுதியின் அருகில் உள்ளது பூதாங்குடி கிராமம். இந்த ஊர் செட்டியார்கள் அதிகம் வாழும் இடம். அவர்கள் சோழ மன்னனின் படை வீரர்களாக இருந்தவர்கள். நாடு போர் இன்றி அமைதியாக இருக்கும் காலங்களில் அவர்களில் பெரும்பாலோனர் விவசாயம் செய்தும் காடுகளில் சென்று வேட்டை ஆடுவதையும் தொழிலாகக் கொண்டு இருந்தனர்.




ஒரு முறை செட்டியார் ஒருவர் காட்டில் வேட்டை ஆடிக்கொண்டு இருந்தபோது அழுது கொண்டு இருந்த அழகான சிறு பெண்ணைக் கண்டனர். ஆகவே அவளை கிராமத்திற்கு அழைத்து வந்து தமது பெண்ணாகவே அவளை வளர்த்து வந்தார். நாளடைவில் அவளை வளர்த்து வந்த செட்டியார் மரணம் அடைய அவள் தன்னையும் அவருடன் சேர்த்து எரித்து விடுமாறுக் கூறினாள்.




எலுமிச்சை, தேங்காய் பின்னிய பாய் மற்றும் வெற்றிலையை தன்னுடைய கையில் வைத்துக் கொண்டு அவர் சிதையில் தானும் விழ அந்த சீதை முழுவதும் எரிந்தப் பின்னும் அவள் எடுத்துச் சென்ற எந்த பொருளும் எரிந்து போகவில்லை . ஆகவே அவள் தெய்வமாகவே இருந்து இருக்க வேண்டும் எனக் கருதிய மக்கள் அவளை தம்மைக் காப்பவளாகக் கருதி காவல் தெய்வமாக வணங்கலாயினர்.

அவளது ஆலயத்தின் அருகில் ஏர் அழிஞ்சி எனும் அபூர்வமான மரம் ஒன்று உள்ளது. குழந்தை இல்லாதவர்கள் அந்த மரத்தின் மீது தூளி ஒன்றைக் கட்டி விட்டு வந்தால் குழந்தை பிறக்கும் என்பது நம்பிக்கை. அப்படி பிறக்கும் குழந்தைகளின் முதல் தலை முடியை அவளுக்கு காணிக்கையாகக் கொடுப்பார்கள். அவளை சீதையின் அவதாரம் எனக் கருதுகிறார்கள். அவள் ஆலயத்தில் ராமருடைய பாதத்தைத் சுற்றி இருக்குமாறு விஷ்ணுவின் சக்கரம், ஐயப்பன், நவக்கிரகங்கள் என அனைவரது சிலைகளும் வைக்கப்பட்டு உள்ளன.

மாசி மகத்தில் அங்கு வருகைத் தரும் ஸ்ரீ முஷ்ணத்து பூவராகவ ஸ்வாமிகள் கடல் கரையில் குளிக்க வரும்போது அந்த ஆலயத்தில்தான் வந்து தங்குவார். வெள்ளிக் கிழமைகளிலும் நவராத்தரியிலும் விசேஷமாக பூஜைகள் நடைபெறுகின்றன. அந்த வழியாகச் செல்லும் வாகன ஓட்டிகள் வாகனத்தை நிறுத்து அவளை வணங்கியப் பின் தமது பயணத்தை தொடர்வார்கள். புதிய வண்டி வாங்குபவர்களும் அங்கு வண்டியை எடுத்து வந்து பூஜிக்கிறார்கள் .




What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!