gowri panchangam Sprituality

காவல் தெய்வங்கள்/ஐயனார் நாகமலை கருப்பஸ்வாமி

தமிழ்நாட்டில் மதுரைப் பகுதியில் ஒரு காலத்தில் ஜைன மதம் தலை தூக்கி நின்றது. சமண மலைப் பகுதியில் அவர்களது கல்வெட்டுக்களும் சிலைகளும் நிறைய இருந்தன. அந்த மலை அடிவாரத்தில் உள்ளது நாகமலை எனும் கிராமம். அங்கு புகழ் பெற்ற ஐயானார் ஆலயம் உள்ளது. அது போலவே மலை மீது கருப்பண்ணஸ்வாமிக்கும் ஆலயம் இருந்தது.




மதுரை ஆங்கிலேயே ஆட்சியில் இருந்தபோது அவர்களில் ஒரு படை தளபதி அடிக்கடி மதுரை மீனாஷி அம்மன் ஆலயத்துக்குச் சென்று அவளை அவமதிப்பது உண்டு. கருப்பண்ணஸ்வாமியினால் அதை பொறுத்துக் கொள்ள முடியாமல் அந்த படை தளபதியின் குதிரையை உதைத்து கீழே விழச் செய்தார். அந்த நிகழ்ச்சி தினமும் தொடர்ந்தது. ஆகவே படை தளபதி ஒரு குறி சொல்பவரிடம் குறி கேட்டபோது அவரும் மலை மீது உள்ள கருப்பண்ணஸ்வாமி குதிரையை உதைத்து கீழே விழச் செய்து வருவதினால் அவருடைய சிலையை கீழே இறக்கி வந்து நாகமலை ஐயனார் ஆலயத்தின் பக்கத்திலேயே பிரதிஷ்டை செய்து விடுமாறு கூறினார். அதை செய்தப் பின் அந்த பிரச்சனை நின்றது. அந்த படை தளபதியும் அங்குள்ள மக்களுக்கு நிறைய நிலம் தந்தார்.

அந்த ஊரின் அருகில் கீழ் குயில் குடி என்ற மற்றொரு கிராமம் இருந்தது. அந்த இரண்டு இடங்களும் எப்போதும் வறட்சியினால் பாதிக்கப்பட்டு இருந்தது. ஆகவே அந்த இரண்டு ஊரிலும் இருந்த மக்கள் வெளியூருக்குச் சென்று வேலை பார்த்தனர். அவர்களில் இருவர் கருமாத்தூரில் இருந்த முனுஸ்வாமி ஆலயத்தில் பூசாரிகளாக வேலைக்குச் சேர்ந்தனர். அவர்கள் பஞ்சம் தீர்ந்ததும் தமது ஊருக்குக் கிளம்பியபோது கருமாத்தூர் விருமப்பஸ்வாமியும் காசி மாயனும் தமது ஆலயங்களில் இருந்து ஒரு பிடி மண்ணை அவர்களுடன் எடுத்துப் போகுமாறு கூறினார்கள்.

ஆகவே அந்த இருவரும் ஒரு பிடி மண்ணை தம்முடன் எடுத்துப் போய் கருப்பச்வாமியின் ஆலயத்தின் அருகில் அந்த மண்ணைப் போட்டு அந்த இடத்தில் கருமாத்தூர் விருப்பஸ்வாமிக்கும் காசி மாயனுக்கும் ஒரு ஆலயம் அமைத்தனர்.




மேலும் கழுவனாதன், கருப்பாயி அம்மன், இருளப்பன், சங்கிலிக் கருப்பன் போன்றவர்களை அந்த ஆலயத்தைப் பாதுகாக்கும் பணிக்கு இருக்குமாறு அவர்களுடைய சிலைகளையும் செய்து வைத்தார்கள். கருப்பண்ணஸ்வாமி ஆலயம் ஐயனார் ஆலயத்துக்கு அருகில் எழும்வரை ஐயனார் ஆலயத்துக்கு பிராமணர்கள் வந்து பூஜை செய்தனர். ஆனால் கருப்பண்ணஸ்வாமி ஆலயம் அங்கு வந்தப் பின் அவர்கள் வருவதை நிறுத்தி விட வேலர் என்ற சமூகத்தினர் விளாச்சேரி எனும் கிராமத்தில் இருந்து அடர்ந்த காடுகளின் வழியே இந்த ஆலயத்துக்கு வந்து அதை நிர்வாகிக்கலானார்கள்.

அவர்கள் அதிகாலையில் வரும்பொழுதும், இரவில் திரும்பிச் செல்லும்போதும் ஒரு கரடியின் உருவத்தில் கருப்பண்ணஸ்வாமி அவர்களுக்குத் துணையாகச் செல்வாராம். அதனால் வேலர்கள் தமது குழந்தைகளுக்கு சமண மலைக் கரடி எனப் பெயர் வைப்பது உண்டாம்.

ஐயனார் ஆலயத்தில் ஒவ்வொரு வருடமும் மார்கழி மாதத்தில் பாவாடை விழா நடைபெறும். அதை இன்றும் பிராமணர்கள் செய்கிறார்கள். அன்றைய தினத்தில் 150 கிலோ அரிசியை உணவாக சமைத்து அதை நைவித்தியம் செய்தப் பின் ஊரில் உள்ள அனைவருக்கும் விநியோகம் செய்கிறார்கள்.
புரட்டாசி மாதத்தில் புரட்டாசி பொங்கல் என்ற விழாவை பதினைந்து நாட்கள் கொண்டாடுகிறார்கள். களிமண்ணால் செய்த முத்தாலம்மனின் சிலைக்கு பூஜை செய்த பின் அதை ஊரில் உள்ள குளத்தில் கரைத்து விடுகிறார்கள்.

ஒவ்வொரு வருடமும் ஊராரின் செலவில் மூன்று குதிரைகளையும் செய்து வைகின்றார்கள். அன்று ஆடுகளும் பலியாக தரப்படுகின்றன.
ஆலயத்தில் அனுமதி பெறாமல் ஊரில் உள்ளவர்கள் எந்த காரியத்தையும் செய்வது இல்லை.
————————————-




What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!