Cinema Entertainment

கமலுக்கு பதில் இவரை ஹீரோவா புக் பண்ண பாலசந்தர்!..

பாரதிராஜா இயக்கத்தில் வெளியான நிழல்கள் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானவர் நிழல்கள் ரவி. அந்தப் படத்தில் நிழல்கள் ரவியின் நடிப்பு பாரதிராஜாவை மிகவும் கவர்ந்தது. ஆனால் அந்த படத்துக்கு முன்பாகவே நிழல்கள் ரவிக்கு பாலச்சந்தர் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்து கடைசி நேரத்தில் மிஸ் ஆனதாக சமீபத்திய பேட்டியில் நிழல்கள் ரவி வருத்தப்பட்டு பேசியுள்ளார்.




Kamal Haasan - K Balachander | Which director has worked with top Tamil heroes the most?

வித்தியாசமான குரலுடன் நடிக்கவும் நடிகர்களுக்கு வில்லன் நடிகராக மாறும் வாய்ப்பு தமிழ் சினிமாவில் நம்பியார் காலத்திலிருந்து கிடைத்து வருகிறது. ரகுவரன், நிழல்கள் ரவி ரீசன்டா வந்த அர்ஜுன் தாஸ் வரை வித்தியாசமான குரல் வளம் உடையவர்கள் வில்லன் நடிகர்களாக மிரட்டி வருகின்றனர்.

ஒரு காலத்தில் அப்படி தமிழ் சினிமாவை கலக்கி வந்த நிழல்கள் ரவி தற்போது சந்தானத்துடன் இணைந்து கொண்டு காமெடி நடிகராக தன்னை அடுத்த கட்டத்துக்கு ஆனந்தராஜ் போல மாற்றிக்கொண்டு நடித்து வருகிறார்.

பாரதிராஜா இயக்கத்தில் வெளியான நிழல்கள் படத்தில் நடித்ததன் மூலம் ரவிச்சந்திரன் என்கிற ரவி நிழல்கள் ரவியாக மாறிவிட்டார். பாரதிராஜா படத்தில் நடிப்பதற்கு முன்னதாக டி.என் பாலு படத்தில் நடித்து வந்த நிழல்கள் ரவி டி.என் பாலு மறைவால் அந்தப் படத்தை தொடர முடியாமல் புதிதாக நிழல்கள் படத்தில் நடிக்க ஆரம்பித்தார்.




கோயம்புத்தூரில் இருந்து சென்னைக்கு நடிக்க வந்த நிழல்கள் ரவி டி.என் பாலு படத்தில் சில காட்சிகள் நடித்து வந்தபோது பாலச்சந்தர் படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. கமல்ஹாசன் இந்தியில் நடித்து வெளியான ஏக் துஜே கேலியே படத்தில் தமிழ் வெர்ஷனில் ஹீரோவாக நிழல்கள் ரவியை நடிக்க வைக்க பாலச்சந்தர் முடிவு செய்திருந்தார்.

டி.என் பாலு இயக்கத்தில் நடித்த காட்சிகளை எடுத்து வரும்படி பாலச்சந்தர் சொல்லி இருக்கிறார். அந்த காட்சியை தேடி கண்டுபிடித்து எடுத்து வந்த நிலையில், ஏக் துஜே கேலியே திரைப்படத்தை தமிழ் டப்பிங் ஆக வெளியிடும் முடிவுக்கு பாலச்சந்தர் வந்ததால் அந்த படத்தில் நடிக்கும் வாய்ப்பு தனக்கு மிஸ் ஆகிவிட்டது எனக் கூறியுள்ளார்.




What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!