தோட்டக் கலை

உங்க வீட்டு செடி முருங்கையில் தாறுமாறாக காய்கள் காய்க்கனுமா?

செடி முருங்கை என்பது, மரத்தை போன்று அல்லாமல் ஒரு குறிப்பிட்ட உயரம் வளரக்கூடியது ஆகும். இது பதியம் வைத்த 4 மாதங்களில் காய்க்க தொடங்கும். இதன் மூலம் குறுகிய காலகட்டத்தில் அதிக விளைச்சலை பெறலாம். இது, மூன்று வருடங்கள் வரை காய்த்து பயனளிக்கும். பெரும்பாலும், நகர்ப்புறங்களில் உள்ள வீடுகளில், செடி முருங்கையை மாடித்தோட்டத்தில் வளர்ப்பார்கள். எனவே, இதனை நாம் வீட்டில் வளர்க்கும் போது அதற்கு என்னென்ன அளிக்க வேண்டும் என்பதை அதனை எப்படி பராமரிப்பது என்பதையும் பின்வருமாறு விவரித்துள்ளோம்.




முருங்கை செடி வைத்து 2 அடி வளர்ந்ததும், அதன் அடிப்பகுதியில் உள்ள மண்ணினை சிறிதளவு குழிபறித்து கட்டி பெருங்காயத்தை அதில் பதித்து வைத்து விடுங்கள். இவ்வாறு செய்வதன் மூலம், முருங்கை எந்தவிதமான நோய்களின்றி நன்றாக வளர தொடங்கும்.

செடி முருங்கை வைத்து, 3 அடிஅளவிற்கு வளர்ச்சி அடைந்ததும் அதனை கவாத்து செய்து விட வேண்டும். அதாவது, அதில் உள்ள பக்க கிளைகளை நறுக்கி விட வேண்டும். செடி முருங்கை வைத்த 4 -வது மாதத்தில் காய்க்க தொடங்கும்.

முருங்கை மரத்தில், பூக்கள் அதிகமாக பூத்தால் தான் காய்கள் காய்க்க தொடங்கும். எனவே, அதற்கு நாம் ஒரு கரைசலை செடி முருங்கைக்கு அளிக்க வேண்டும். அது வேறொன்றுமில்லை, அது புளித்த மோர் கரைசல் தான்.




முதலில் கெட்டியான தயிரை எடுத்து கொள்ளுங்கள். அதை நன்றாக கடைந்து 3 முதல் 5 நாட்கள் வரை புளிக்க வைத்து கொள்ளுங்கள். பிறகு, இந்த புளித்த மோரில் மரத்தின் எண்ணிக்கைக்கு ஏற்றவாறு தண்ணீரை கலந்து கொள்ளுங்கள். அடுத்து, அதில் பெருங்காயம் அல்லது பெருங்காய தூளினை கலந்து ஒரு கரைசலாக கலந்து எடுத்து கொள்ளுங்கள்.

 moringa tree growing tips in tamil

இப்போது, இதனை ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் ஊற்றி செடி முருங்கைக்கு தெளித்து விடுங்கள். முருங்கையின் தண்டுப்பகுதி, இலைப்பகுதி மற்றும் பூக்கள் என எல்லாவற்றிற்கும் தெளித்து விடுங்கள்.

இவ்வாறு செய்வதன் மூலம், செடி முருங்கையில் பூக்கள் அதிகமாக பூத்து வேகமாக காய்கள் காய்க்க தொடங்கும்.




What’s your Reaction?
+1
0
+1
2
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!