gowri panchangam Sprituality

இன்றைய ராசி பலன் (13.04.24)

சந்திர பகவான் இன்று ரிஷப ராசியில் பயணம் செய்கிறார்.  இன்று மாலை 05.00 வரை பஞ்சமி. பின்னர் சஷ்டி. இன்று அதிகாலை 05.05 வரை ரோகிணி. பின்னர் மிருகசீரிடம். சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சந்திராஷ்டமம். சற்று கவனமுடனும் எச்சரிக்கையுடனும் நடந்துகொள்வது அவசியம். மேஷம் முதல் மீனம் வரையுள்ள 12 ராசிக்காரர்களுக்கும் பலன்கள் எப்படி இருக்கிறது என்று பார்க்கலாம்.




மேஷ ராசி அன்பர்களே!

வியாபாரத்தை வெகு நிதானமாக நடத்துவீர்கள். கடன்களை கட்டுக்குள் கொண்டு வருவீர்கள். அலுவலகப் பணிகள் மூலம் டென்ஷனாகக் காணப்படுவீர்கள். தொழில்துறைக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்குவீர்கள். வேலை இடங்களில் இடையூறுகளை நீக்குவீர்கள். எதிர்பார்த்த பதவி உயர்வை பெறுவீர்கள். மாணவர்கள் படிப்பில் கூடுதல் கவனம் செலுத்துவீர்கள்..முருகப்பெருமானை வழிபட சிரமங்கள் குறையும்.

அசுவினி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மற்றவர்களுடன் வீண் விவாதத்தில் ஈடுபடவேண்டாம்.

பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு உறவினர்களால் சங்கடங்கள் ஏற்படும்.

கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத செலவுகளால் கையிருப்பு கரையும்.

ரிஷப ராசி அன்பர்களே!

உத்தியோகம் பார்க்கும் இடத்தில் உள் குத்து வேலையால் உள்ளம் சோர்வடைவீர்கள். பணி நிமித்தமாக வெளியூர்ப் பயணங்களில் அலைவீர்கள். உங்கள் முயற்சிகளுக்கு பிள்ளைகளின் உறுதுணையை பெறுவீர்கள். அரசியல் துறையில் ஏற்றம் காண்பீர்கள். கணவன் மனைவி ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து குடும்பத்தில் அமைதியை கொண்டு வருவீர்கள். .மகாலட்சுமி வழிபாடு அதிர்ஷ்ட வாய்ப்புகளை ஏற்படுத்தும்.

கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு.

ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி உண்டாகும்.

மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதரர்களால் சங்கடம் ஏற்படக்கூடும்.

மிதுன ராசி அன்பர்களே!

வேலையிடத்தில் உயரதிகாரிகளின் சீற்றத்திற்கு ஆளாகாதீர்கள். வாகனங்களில் செல்லும்போது சாலையில் கவனத்தை சிதற விடாதீர்கள். பயணங்களின்போது பர்ஸ் பத்திரமாக இருக்கிறதா என்று பார்த்துக் கொல்ல மறக்காதீர்கள். உடல் ஆரோக்கியத்திலும் அக்கறை காட்ட தவறாதீர்கள். காதலியின் கோபத்தை குறைக்க முடியாமல் தடுமாறுவீர்கள்.துர்கையை வழிபடுவதன் மூலம் முயற்சிகளில் வெற்றி பெறலாம்.

மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வாழ்க்கைத்துணையுடன் அனுசரித்துச் செல்வது நல்லது.

திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நண்பர்களிடம் எதிர்பார்த்த  செய்தி கிடைக்கும்.

புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதரர்களால் சில சங்கடங்கள் ஏற்படக்கூடும்.




கடக ராசி அன்பர்களே!

திட்டமிட்டுச் செயல்படுவீர்கள். அதன் மூலம் தொழிலில் வெற்றி பெறுவீர்கள். வியாபாரம் தொடர்பான பயணங்களில் நன்மையை அடைவீர்கள். உழைப்பு அதிகமாகி அதற்கேற்ற வருமானம் பெறுவீர்கள். திடீர் பிரச்சனைகள் உண்டாகி மனச்சங்கடம் கொள்வீர்கள். தொழிலுக்கு இருந்த எதிர்ப்புகளை விலக்கி ஏற்றம் பெறுவீர்கள். பணவரவு அதிகமாகி பொருளாதாரம் முன்னேற்றம் அடைவீர்கள்.சிவவழிபாடு காரியங்களை அனுகூலமாக்கும்.

புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வீண் அலைச்சலைத் தவிர்ப்பது நல்லது.

பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கடன்கள் விஷயத்தில் கவனமாக இருக்கவும்.

ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத செலவுகள் ஏற்படும்.

சிம்ம ராசி அன்பர்களே!

நீண்ட நாள் பிரச்னைகளுக்குத் தீர்வு காண்பீர்கள். துணிச்சலான முயற்சிகளால் வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் முன்னேற்றம் அடைவீர்கள். அதிகாரியின் உதவியால் வேலை மாறுதல் பெறுவீர்கள். பெற்றோர்களை மருத்துவ பரிசோதனைக்கு அழைத்துச் செல்வீர்கள்.தட்சிணாமூர்த்தி வழிபாடு நலம் சேர்க்கும்.

மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு திடீர் செலவுகளால் கடன் வாங்க நேரிடும்.

பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்வழியில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும்.

உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு.




கன்னி ராசி அன்பர்களே!

எதிரிகள் உங்கள் வியாபாரத்தைக் கெடுக்க நினைப்பதை உணர்வீர்கள். எச்சரிக்கையாக நடந்து அதை தடுப்பீர்கள். எடுத்த காரியத்தில் ஏதாவது ஒரு இடையூறை சந்திப்பீர்கள். மரியாதை குறைவான பேச்சால் மனைவியோடு சண்டை போடுவீர்கள். உத்தியோகம் பார்க்கும் இடத்தில் நேரம் காலம் பார்க்காமல் வேலை செய்வீர்கள். கடன் சுமையால் கவலைப்படுவீர்கள்.ஆஞ்சநேயரை வழிபடுவதன் மூலம் மனஅமைதி உண்டாகும்.

உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பிற்பகலுக்குமேல் உறவினர்களால் செலவுகள் ஏற்படும்.

அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வாழ்க்கைத்துணைக்காக செலவு செய்யவேண்டி வரும்.

சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளில் ஈடுபடவேண்டாம்.

துலா ராசி அன்பர்களே!

வியாபாரத்தை விரிவுபடுத்த வேண்டும் என்ற வேகத்தை அதிகரிப்பீர்கள். அதனால் அவசரப்பட்டு விரயத்தை சந்திப்பீர்கள். பங்குச்சந்தை முதலீடுகள் ரியல் எஸ்டேட் தொழிலில் எதிர்பாராத வகையில் ஏமாற்றத்தை சந்திப்பீர்கள். பொருளாதாரத்தில் மந்தமான நிலையை காண்பீர்கள். சந்திராஷ்டம நாள். கவனமாக நடந்து கொள்ளாவிடில் நஷ்டம் அடைவீர்கள்.அம்பிகையை வழிபட நன்மைகள் கூடும்.

சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிரிகளால் ஏற்பட்ட தொல்லைகள் நீங்கும்.

சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வெளியூரிலிருந்து எதிர்பார்த்த செய்தி கிடைக்கும்.

விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதரர்களிடம் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும்.




விருச்சிக ராசி அன்பர்களே!

நண்பர்கள் உறவினர்கள் உதவியால் வீட்டை புதுப்பிப்பீர்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விட லாபம் அதிகரித்து சந்தோஷப்படுவீர்கள். தொழில் துறையில் புதிய யுக்திகளைப் புகுத்துவீர்கள். வேலைப்பளுவையும் அலைச்சலையும் குறைப்பீர்கள். அரசாங்கத்தில் புதிய ஆர்டர்களைப் பெறுவதற்கான தடைகளை நீக்குவீர்கள். புதிய வாகனம் வாங்குவீர்கள்.முருகப்பெருமானை  வழிபட மகிழ்ச்சி அதிகரிக்கும்..

விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தந்தை வழியில் ஆதாயம் உண்டாகும்.

அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பிள்ளைகளால் மகிழ்ச்சி ஏற்படும்.

கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பிற்பகலுக்குமேல் புதிய முயற்சி சாதகமாக முடியும்.

தனுசு ராசி அன்பர்களே!

உறவுகளில் இருந்த சிக்கலை பேசி தீர்ப்பீர்கள். குறுக்கே வரும் சிறு சிறு இடையூறுகளை முறியடிப்பீர்கள். உத்தியோகத்தில் உயர்வான பலனை அடைவீர்கள். கணவன் மனைவிக்கு இடையில் தோன்றிய ஊடல் நீங்கி நெருக்கத்தை ஏற்படுத்துவீர்கள். வெளியூர் பயணங்களில் சாப்பிட நேரம் இல்லாமல் அலைவீர்கள். தாயாருக்கு கண் அறுவை சிகிச்சை செய்வீர்கள்..விநாயகப் பெருமானை வழிபடுவதன் மூலம் சங்கடங் கள் குறையும்.

மூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் எதிர்பார்த்த சுபச்செய்தி கிடைப்பதற்கு வாய்ப்பு உண்டு.

பூராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு குடும்பத் தேவைகளை நிறைவேற்றும் வாய்ப்பு ஏற்படும்.

உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு மற்றவர்களுடன் வீண்விவாதங்களில் ஈடுபடவேண்டாம்.

மகர ராசி அன்பர்களே!

பணியாளர்கள் அலுவல் சுமையால் மிகுந்த அவதிப்படுவீர்கள். குடும்பத்தில் உள்ளவர்கள் செய்யும் குழப்பத்தால் கோபம் அடைவீர்கள். முயற்சிகளுக்கு இருந்த முட்டுக்கட்டைகளை நீக்குவீர்கள். வியாபாரப் பயணங்களில் தேவையான ஆர்டர்களை பெறுவீர்கள். திட்டமிட்டபடி சிறப்பாக தொழிலை மேம்படுத்துவீர்கள். நாணயமாக நடந்து கொள்ளவில்லை என்றால் அவமானம் அடைவீர்கள்.மகான் ராகவேந்திரரை வழிபட மனஉளைச்சல்கள் நீங்கும்

உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பிற்பகலுக்கு மேல் உடல்நலனில் கவனமாக இருக்கவும்.

திருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்வழி உறவினர்களால் சங்கடங்கள் ஏற்படும்.

அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையால் செலவுகள் ஏற்படும்




கும்பராசி அன்பர்களே!

ரியல் எஸ்டேட் தொழிலில் முழு கவனம் செலுத்துவீர்கள். பங்குச்சந்தையில் லாபம் பெறுவீர்கள். வீடுகட்ட நிலம் வாங்குவீர்கள். உற்ற நண்பர்கள் உதவியை பெறுவீர்கள் திறமையான செயல்பாடுகளால் பாராட்டப்படுவீர்கள். அதிகாரிகளைப் பகைத்துக் கொள்ளாதீர்கள். வியாபாரத்தில் வெற்றி நடை போடுவீர்கள். நினைத்த காரியத்தை நிறைவேற்ற கடினமாக உழைப்பீர்கள்.மகாவிஷ்ணுவை வழிபடுவதன் மூலம் நன்மைகள் அதிகரிக்கும்.

அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையின் மூலம் ஆதாயம் கிடைக்கும்.

சதயம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளில் ஈடுபடுவதை தவிர்ப்பது நல்லது.

பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு திடீர் செலவுகளால் கடன் வாங்க நேரிடும்.

மீனராசி அன்பர்களே!

தொழில் துறையில் எடுக்கும் முயற்சிகள் அனைத்தையும் வெற்றிகரமாக முடிப்பீர்கள். பங்குதாரர்களுடன் இருந்த பிரச்சனைகளை பேசி தீர்ப்பீர்கள். பொறுப்போடு சகோதரியின் திருமண ஏற்பாட்டை செய்வீர்கள். பிள்ளைகளால் பெருமிதம் கொள்வீர்கள். துணிச்சலாக காரியம் முடிப்பீர்கள். வேலைக்காக வேறு இடம் செல்வீர்கள். பேச்சுத் திறமையால் வெளிவட்டாரத்தில் செல்வாக்கு பெறுவீர்கள்.முருகப்பெருமானை வழிபட மகிழ்ச்சி அதிகரிக்கும்.

பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்  உணவு விஷயத்தில் கவனமாக இருக்கவும்.

உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு மாலையில் நண்பர்களின் மூலம் மகிழ்ச்சி  தரும் செய்தி கிடைக்கும்.

ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தந்தையிடம் எதிர்பார்த்த காரியம் சாதகமாக முடியும்.




What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!