gowri panchangam Sprituality

இன்றைய ராசி பலன் (11.04.24)

சந்திர பகவான் இன்று ரிஷப ராசியில் பயணம் செய்கிறார்.இன்று இரவு 07.00 வரை திரிதியை. பின்னர் சதுர்த்தி. இன்று காலை 06.16 வரை பரணி. பின்னர் கிருத்திகை. உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சந்திராஷ்டமம். சற்று கவனமுடனும் எச்சரிக்கையுடனும் நடந்துகொள்வது அவசியம். மேஷம் முதல் மீனம் வரையுள்ள 12 ராசிக்காரர்களுக்கும் பலன்கள் எப்படி இருக்கிறது என்று பார்க்கலாம்.

மேஷ ராசி அன்பர்களே!

ஆதாயம் அடைவதற்காக குறுக்கு வழியைத் தேர்ந்தெடுக்காதீர்கள். ரியல் எஸ்டேட் தொழில் மந்தநிலையை காண்பீர்கள். ஆன்லைன் வர்த்தகங்களில் அதிகம் ஈடுபடாதீர்கள். சுவாசக் கோளாறு ஏற்பட்டு சிரமப்படுவீர்கள். நட்பு வட்டங்களால் நல்ல அனுபவங்களைக் கற்றுக் கொள்வீர்கள். மேல் அதிகாரிகளின் டார்ச்சரால் டென்ஷன் அடைவீர்கள்.இன்று நரசிம்மரை வழிபட நலன்கள் அதிகரிக்கும்.

அசுவினி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பிள்ளைகளால் மகிழ்ச்சி உண்டாகும்.

பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மற்றவர்களுடன் விவாதம் செய்வதைத் தவிர்ப்பது நல்லது.

கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளில் ஈடுபடவேண்டாம்.

ரிஷப ராசி அன்பர்களே!

அவசியமான காரியங்களுக்கு அதிகமாக செலவு செய்வீர்கள். ஒரு முறைக்கு இரு முறை அலைந்து வேலையை முடிப்பீர்கள். குடும்பத்தில் மருத்துவச் செலவுக்கு கடன் வாங்குவீர்கள். பூர்வீகச் சொத்துக்குப் போராட்டம் நடத்துவீர்கள். கணவன் மனைவிக்கிடையே சச்சரவுகளை சந்திப்பீர்கள். உறவினர்களால் உதாசீனப்படுத்தப்படுவீர்கள்.இன்று விநாயகரை வழிபடுவதன் மூலம் மனதுக்கு  மகிழ்ச்சி உண்டாகும்.

கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நண்பர்களால் வீண் செலவுகள் ஏற்படக்கூடும்.

ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்வழி உறவினர்களால் ஆதாயம் கிடைக்கும்.

மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வீண் அலைச்சலைத் தவிர்ப்பது மிக அவசியம்.

மிதுன ராசி அன்பர்களே!

நிலையான வருமானம் பெறுவதற்கு திட்டம் தீட்டுவீர்கள். பெரியோர்களின் உதவியால் பொருள் சேர்க்கையை அதிகரிப்பீர்கள். சகோதர உறவுகளில் இருந்த பிரச்சனையை தீர்ப்பீர்கள். குடும்பத்தில் நிம்மதியான நிலையை உருவாக்குவீர்கள். அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றும் முயற்சியில் ஈடுபடுவீர்கள். அரசு வேலையில் பதவி உயர்வு பெறுவீர்கள்.இன்று அம்பிகையை வழிபட காரியத் தடைகள் விலகும்.

மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டாகும்.

திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி ஏற்படும்.

புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உடல் நலனில் கவனமாக இருக்கவும்.

கடக ராசி அன்பர்களே!

தடையில்லாமல் காரியங்கள் செய்வீர்கள். தன வரவை பெருக்குவீர்கள். புதிய பெண் நண்பர்களிடம் எச்சரிக்கையாக நடந்து கொள்ளாவிட்டால் அவமானம் அடைவீர்கள். இல்லையென்றால் சிக்கலில் மாட்டிக் கொள்வீர்கள். வயிற்றில் ஏற்பட்ட சின்ன பிரச்சனைக்காக ஸ்கேன் பண்ணி மருத்துவரை சந்திப்பீர்கள். மகாவிஷ்ணுவை வழிபட நல்லதொரு திருப்பம் ஏற்படும்.

புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு புதிய முயற்சிகள் சாதகமாக முடியும்.

பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தந்தையின் விருப்பத்தை நிறைவேற்றி மகிழும் வாய்ப்பு ஏற்படும்.

ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதர வகையில் எதிர்பார்த்த காரியம் அனுகூல மாக முடியும்.

சிம்ம ராசி அன்பர்களே!

குடும்பத்தில் ஏற்பட்ட குழப்பத்தால் தூக்கத்தை தொலைப்பீர்கள். பின்னர் தேவையற்ற பிரச்சனைகளை விலக்கி நிம்மதி அடைவீர்கள். முடங்கிப்போன உங்கள் தொழிலில் முன்னேற்றம் காண்பீர்கள். அரசுப்பணியில் இடமாற்றம் ஏற்பட்டு வேறு ஊருக்குச் செல்வீர்கள். வெளிநாட்டில் இருந்து கிடைக்க வேண்டிய உதவிகளில் தாமதத்தை எதிர்நோக்குவீர்கள்.ராகு காலத்தில் துர்க்கை அம்மனை வழிபாடு செய்வது நல்லது.

மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு திடீர் பணவரவுக்கு வாய்ப்பு உண்டு.

பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கடன்கள் விஷயத்தில் கவனமாக இருக்கவும்.

உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் முக்கிய முடிவுகள் எடுப்பதைத் தவிர்ப்பது நல்லது.

கன்னி ராசி அன்பர்களே!

கூட்டு வியாபாரத்தில் கொஞ்சம் விழிப்போடு நடந்து கொள்ள தவறாதீர்கள். மற்றவர்கள் பிரச்சனைகளில் மல்லுக்கட்டி நிற்காதீர்கள். கொடுக்கல் வாங்கல் தொழிலில் இரு மடங்கு எச்சரிக்கையுடன் செயல்பட மறக்காதீர்கள். சின்ன விபத்துகளில் மாட்டிக்கொள்வீர்கள். சந்திராஷ்டமம் நாள். கவனமாக இருங்கள்.

உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உறவினர்களுடன் அனுசரணையாக நடந்துகொள்ளவும்.

அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு குடும்பத்தில் சில பிரச்னைகள் ஏற்பட்டு நீங்கும்.

சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு  தாய்மாமன் வழியில் செலவுகள் ஏற்படும்.

துலா ராசி அன்பர்களே!

கமிஷன் வியாபாரத்தில் கணிசமான லாபம் பெறுவீர்கள். கட்டுமானத் தொழிலில் விறுவிறுப்பாக செயல்படுவீர்கள். நில விற்பனையில் எதிர்பாராத பண வரவு அடைவீர்கள். திருமண விஷயங்களில் இருந்த சிக்கலை பேச்சுவார்த்தை மூலம் தீர்ப்பீர்கள். உயரதிகாரிகள் தரும் உற்சாகத்தால் பணியிடங்களில் பரபரப்பாக வேலை செய்வீர்கள். இன்று வேங்கடேச பெருமாளை வழிபட சிரமங்கள் நீங்கி மகிழ்ச்சி உண்டாகும்.

சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வீண் அலைச்சலைத் தவிர்ப்பது மிக அவசியம்.

சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நண்பர்களின் சந்திப்பு ஆதாயம் தருவதாக இருக்கும்.

விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணைவழியில் சில பிரச்னைகள் ஏற்படும்.

விருச்சிக ராசி அன்பர்களே!

“நெஞ்சம் உண்டு… நேர்மை உண்டு… ஓடு ராஜா” என உங்கள் போக்கில் காரியம் செய்வீர்கள். தொழிலுக்கு இடையூறாக இருப்பதை வெட்டி எறிவீர்கள். எந்தக் காரியத்திலும் ஆலோசித்து இறங்குவீர்கள். வெளியூர்ப் பயணங்களில் சாமர்த்தியமாக ஆர்டர் பிடிப்பீர்கள். பங்குச்சந்தையில் வியூகம் அமைத்து வெற்றி பெறுவீர்கள். போட்டி பந்தயங்களில் ஈடுபடாதீர்கள்.செவ்வாய்க்கிழமையான முருகப்பெருமானை வழிபாடு செய்வதும், ராகு காலத்தில் துர்க்கை அம்மனை வழிபாடு செய்வது நல்லது. முருகப்பெருமானை  வழிபடுவது நலம் தரும்.

விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிரிகளால் ஏற்பட்ட தொல்லைகள் விலகும்.

அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வாகனத்தில் செல்லும்போது கவனமாக இருக்கவும்.

கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்குக் கடன்களால் சில பிரச்னைகள் ஏற்படக்கூடும்.

தனுசு ராசி அன்பர்களே!

 

உங்களுடைய புத்திசாலித்தனத்தால் வருமானத்தைப் பெருக்குவீர்கள். என்ன தடை வந்தாலும் தாண்டிச் செல்வீர்கள். குடும்ப நன்மைக்காக கடுமையாக உழைப்பீர்கள். வசதியான வீட்டுக்கு குடி பெயர்ந்து செய்வீர்கள். மருத்துவர்கள், ஆசிரியர்கள், வழக்கறிஞர்கள் தொழிலில் மேன்மை அடைவீர்கள். பணத்தின் மதிப்பை இந்த நேரத்தில் நன்றாக உணர்ந்து கொள்வீர்கள்.  ஆஞ்சநேயரை வழிபட காரியங்கள் அனுகூலமாகும்.

மூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பிள்ளைகளால் செலவுகள் ஏற்படக்கூடும்.

பூராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உறவினர்களிடம் பேசும்போது பொறுமையைக் கடைப் பிடிக்கவும்.

உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையால்  மகிழ்ச்சி உண்டாகும்.

மகர ராசி அன்பர்களே!

தொழிலுக்கு வேண்டிய முதலீடுகளை வங்கி மூலம் பெறுவீர்கள். உங்கள் முயற்சிகளுக்கு நண்பர்களின் ஒத்துழைப்பை பெறுவீர்கள். உறவினர்கள் செய்யும் உள்குத்து வேலையால் குடும்பத்தில் உண்டாகும் பிரச்சினையை தீர்ப்பீர்கள். தொழிலை விரிவுபடுத்துவது குறித்து நெருங்கிய நண்பர்களுடன் கலந்து ஆலோசனை செய்வீர்கள். இன்று லட்சுமி நரசிம்மரை வழிபட  இடையூறுகளைத் தவிர்த்துவிடலாம்.

உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருக்கவும்.

திருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சிறுசிறு குழப்பங்கள் ஏற்பட்டு நீங்கும்.

அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு காரியங்கள் முடிவதில் தடை, தாமதம் ஏற்படும்.

கும்பராசி அன்பர்களே!

“போனால் போகட்டும் போடா” என்ற மனநிலையில் இருப்பீர்கள். குடும்பத்தில் உள்ளவர்கள் உங்கள் அன்பை புரிந்து கொள்ளாததால் மன வேதனைப்படுவீர்கள். சகோதர உறவுகளால் சங்கடங்களைச் சந்திப்பீர்கள். நம்பிக்கை துரோகத்தால் உள்ளம் கலங்குவீர்கள். அதையும் சமாளித்து நிமிர்ந்து நிற்பீர்கள். குலதெய்வ வழிபாடு செய்வீர்கள்.இன்று அம்பிகையை  வழிபட நன்மைகள் அதிகரிக்கும்.

அவிட்டம் நட்சத்திரத்தில்  பிறந்தவர்களுக்கு தாய்மாமன் வழியில் பணவரவு கிடைக்கக்கூடும்.

சதயம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வாழ்க்கைத்துணைவழி உறவினர்களால் ஆதாயம் பெறுவீர்கள்.

பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளை மேற்கொள்வதற்கு உகந்த நாள்.

மீனராசி அன்பர்களே!

“காசேதான் கடவுளப்பா” என்று பணத்தைத் தேடி ஓடுவீர்கள். கடந்த காலத்தில் பட்ட கஷ்டத்தால் கடுமையாக உழைப்பீர்கள். வியாபாரத்தை சீராக நடத்துவீர்கள். வருமானம் பெருகி மன மகிழ்ச்சி கொள்வீர்கள். தொழிலை விரிவுபடுத்தி உற்பத்தியைப் பெருக்குவீர்கள். நண்பர்களின் ஒத்தாசையை பெறுவீர்கள். வெளியூர்ப் பயணங்களால் நன்மை அடைவீர்கள்.இன்று ஆஞ்சநேயரை வழிபட மகிழ்ச்சி அதிகரிக்கும்.

பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு திடீர் செலவுகளால் கடன் வாங்க நேரிடும்.

உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தந்தையுடன் அனுசரித்துச் செல்வது நல்லது.

ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதரர்களால் சங்கடங்கள் ஏற்படக்கூடும்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!