gowri panchangam Sprituality

இன்றைய ராசி பலன் (07.04.23)

சந்திர பகவான் இன்று மீன ராசியில் பயணம் செய்கிறார்.இன்று அதிகாலை 03.47 வரை திரியோதசி. பின்னர் சதுர்த்தசி. இன்று காலை 11.43 வரை பூரட்டாதி. பின்னர் உத்திரட்டாதி. பூசம் ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சந்திராஷ்டமம். சற்று கவனமுடனும் எச்சரிக்கையுடனும் நடந்துகொள்வது அவசியம். மேஷம் முதல் மீனம் வரையுள்ள 12 ராசிக்காரர்களுக்கும் பலன்கள் எப்படி இருக்கிறது என்று பார்க்கலாம்.

மேஷ ராசி அன்பர்களே!

உயரதிகாரிகளின் கோபத்தால் மன உளைச்சலுக்கு உள்ளாவீர்கள். குடும்பப் பிரச்சனைகளால் மனநிம்மதி இழப்பீர்கள். சக ஊழியர்களின் ஒத்துழைப்பால் உற்சாகப்படுவீர்கள். வியாபாரத்தில் எதிரான நிலையை காண்பீர்கள். ரியல் எஸ்டேட் தொழில் ஓரளவு பணம் பார்ப்பீர்கள். ஏற்றுமதி தொழிலில் எதிர்பார்த்த பலன் கிடைக்காமல் ஏமாற்றம் அடைவீர்கள்.விநாயகப் பெருமானை வழிபடுவதன் மூலம் உறவினர்களால் ஏற்பட்ட பிரச்னைகள் விலகும்.

அசுவினி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணைவழி உறவினர்களால் பொருள் சேர்க்கைக்கு வாய்ப்பு உண்டு.

பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அதிகாரிகளால் காரியங்களில் அனுகூலம் உண்டாகும்.

கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தந்தை வழியில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும்.

ரிஷப ராசி அன்பர்களே!

வீண் செலவுகளை குறைத்து நிதி நிலைமையை சீர்படுத்துவீர்கள். மருந்து மாத்திரை எடுத்து முதுகு வலிக்கு தீர்வு காண்பீர்கள். கடுமையாக உழைத்து காதலியின் ஆசையை நிறைவேற்றி வைப்பீர்கள். விற்பனையில் அதிசயத்தக்க முன்னேற்றம் காண்பீர்கள். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவீர்கள். அரசியலில் செல்வாக்கான இடத்தை பிடிப்பீர்கள்.ஆஞ்சநேயர் வழிபாடு நன்மைகள் அதிகரிக்கச் செய்யும்.

கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சியுடன் ஆதாயமும் தருவதாக இருக்கும்.

ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சகோதரர்களை அனுசரித்துச் செல்வது நல்லது.

மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றும் வாய்ப்பு ஏற்படும்.

மிதுன ராசி அன்பர்களே!

மாறி வரும் சந்தை நிலவரங்களுக்கு ஏற்ப உற்பத்தியைப் பெருக்குவீர்கள். சிறு வியாபாரிகள் அதிக லாபம் அடைவீர்கள். ரியல் எஸ்டேட் தொழிலை சீராக நடத்துவீர்கள். ஷேர் மார்க்கெட்டில் அதிக பலனடைவீர்கள். அலைச்சல் அதிகமானாலும் அதற்கேற்ற வருமானம் அடைவீர்கள். வேலைத் திறனால் முதலாளிகளின் பாராட்டைப் பெற்று பெருமிதம் கொள்வீர்கள்.வேங்க டேச பெருமாளை வழிபடுவதன் மூலம் சிரமங்கள் குறையும்.

மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு.

திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வீண் விவாதங்களில் ஈடுபடுவதைத் தவிர்க்கவும்.

புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தேவையற்ற செலவுகளால் கையிருப்பு கரையும்.

கடக ராசி அன்பர்களே!

நண்பர்களை தேர்ந்தெடுப்பதில் எச்சரிக்கையாக இருப்பீர்கள். தேவையில்லாமல் கெட்ட பெயர்களைச் சம்பாதிக்காதீர்கள். கொடுக்கல் வாங்கல் விஷயத்தில் கவனமாக கையாளவில்லை என்றால் பணத்தை இழப்பீர்கள். அலட்சியமாக கண்ட இடத்தில் பணத்தை வைக்காதீர்கள். பேச்சுவார்த்தையில் நிதானம் தவறாதீர்கள். சந்திராஷ்டம நாள் என்பதால் சண்டை சச்சரவுகளில் ஈடுபடாதீர்கள்.துர்கை வழிபாடு வெற்றிகளை அதிகரிக்கச் செய்யும்.

புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு உறவினர்களால் சில பிரச்னைகள் ஏற்பட்டு நீங்கும்.

பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தவும்.

ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பார்த்த செய்தி கிடைப்பது தாமதமாகும்.

சிம்ம ராசி அன்பர்களே!

வியாபாரத்தை விரிவுபடுத்த வீணாகச் செலவு செய்ய மாட்டீர்கள். உங்கள் மனதை காதலியிடம் சந்தர்ப்பம் பார்த்து வெளிப்படுத்துவீர்கள். கேட்ட இடத்தில் பணம் வர தாமதமாவதால் வெளியூர் பயணத்தை ஒத்தி வைப்பீர்கள். வங்கி பரிவர்த்தனையில் சிக்கல்களை சந்திப்பீர்கள். உறவினர்களுக்கு அதிகம் செலவு செய்வீர்கள். உடல்நிலை பாதிப்புக்கு மருத்துவமனை செல்வீர்கள்.விநாயகரை வழிபடுவதன் மூலம் மன மகிழ்ச்சி அதிகரிக்கும்.

மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு குடும்பத்துடன் விருந்து விசேஷங்களில் கலந்துகொள்ளும் வாய்ப்பு ஏற்படக்கூடும்.

பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வாகனத்தில் செல்லும்போது கவனமாக இருக்கவும்.

உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அரசாங்க வகையில் ஆதாயம் ஏற்பட வாய்ப்பு உண்டு.

கன்னி ராசி அன்பர்களே!

வருமானம் போதிய அளவுக்கு வருவதால் குடும்பத் தேவைகளை பொறுப்பாக நிறைவேற்றுவீர்கள். கணவன் மனைவி உறவில் கலகலப்பை ஏற்படுத்துவீர்கள். வாகனம் ஓட்டும்போது சிறிய விபத்துக்கு ஆளாவீர்கள். உற்பத்தியை அதிகரித்து உற்சாகமடைவீர்கள். காலத்திற்கு ஏற்ற மாதிரி வியாபாரத்தை மாற்றுவீர்கள். அரசாங்க வேலை பார்ப்பவர்கள் அனுகூலம் அடைவீர்கள். மகாலட்சுமியை வழிபட, தேவை யான பணம் கிடைக்கும்.

உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நண்பர்களின் உதவியால் முயற்சியில் வெற்றி கிடைக்கும்.

அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சகோதரர்களிடம் எதிர்பார்த்த காரியம் சாதகமாக முடியும்.

சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பிறருக்குக் கொடுத்த கடன் திரும்பக் கிடைக்கும்.

துலா ராசி அன்பர்களே!

வேலைச் சுமை அதிகமாக இருந்தாலும் அதற்கேற்ற ஊதியம் பெறுவீர்கள். வேலைக்காக கடல்தாண்டிப் போக ஏற்பாடு செய்வீர்கள். கடன் வாங்க வேண்டிய அவசியம் இல்லாமல் பணவரவில் முன்னேற்றம் காண்பீர்கள். தங்கம் வெள்ளி போன்றவற்றில் முதலீடு செய்வீர்கள். வியாபார உத்திகளால் லாபத்தைக் காண்பீர்கள். குடும்பப் பிரச்சனைகளால் மாணவர்கள் மனநிலை பாதிப்படைவீர்கள்.
லட்சுமி நரசிம்மர் வழிபாடு புதிய முயற்சிகளை வெற்றி பெறச் செய்யும்,

சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பிள்ளைகளால் திடீர் செலவுகள் ஏற்படக்கூடும்.

சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கடன்கள் விஷயத்தில் கவனமாக இருப்பது நல்லது.

விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நண்பர்களைச் சந்தித்து மகிழும் வாய்ப்பு உண்டாகும்

விருச்சிக ராசி அன்பர்களே!

அவசியமில்லாத செலவுகளால் அல்லல் படுவீர்கள். பணத்தின் மதிப்பை இந்தக் காலத்தில் நன்கு உணர்வீர்கள். ஏதாவது பிரச்சனை தோன்றி தொழிலில் இடையூறுகளை சந்திப்பீர்கள். பூர்வீகச் சொத்துக்கள் பற்றிய பேச்சுவார்த்தையை நடத்துவீர்கள். கொடுத்த வாக்குறுதியை சிரமப்பட்டுக் காப்பாற்றுவீர்கள். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்வீர்கள்.இன்று முருகப்பெருமானை வழிபட நன்மைகள் கூடும்.

விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உடல்நலனில் கவனமாக இருப்பது அவசியம்.

அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்வழியில் எதிர்பார்த்த உதவி கிடைப்பது தாமத மாகும்.

கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு உறவினர்கள் வருகையால் செலவுகள் அதிகரிக்கும்.

தனுசு ராசி அன்பர்களே!

புத்திசாலித்தனத்தால் வருமானத்தை உயர்த்துவீர்கள். எந்தப் பிரச்சனையானாலும் சொந்த முயற்சியால் தாண்டுவீர்கள். இழுபறியாக இருந்த வழக்கில் சாதகமான தீர்ப்பு பெறுவீர்கள். குடும்பத்தில் மங்கல நிகழ்ச்சியை நடத்துவீர்கள். கடந்தகால நெருக்கடியில் இருந்து விடுபடுவீர்கள். நீங்கள் எதிர்பார்த்த நன்மைகள் அனைத்தையும் பெற்று மகிழ்ச்சியடைவீர்கள்.சிவபெருமானை வழிபடுவதன் மூலம் உடல் ஆரோக்கியம் மேம்படும்.

மூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி உண்டாகும்.

பூராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளில் ஈடுபடுவதை தவிர்க்கவும்.

உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அதிகாரிகளை அணுகும்போது பொறுமையைக் கடைப் பிடிக்கவும்.

மகர ராசி அன்பர்களே!

வாழ்க்கைக்குத் தேவையான வருமானத்தை தடையின்றி பெறுவீர்கள். அசையாச் சொத்துக்களில் முதலீடு செய்வீர்கள். அரசுத் துறை பணியாளர்கள் சிறப்பான பெயரை எடுப்பீர்கள். வியாபாரிகள் கணிசமான லாபம் பெறுவீர்கள். தொழிலில் தடை ஏற்பட்டாலும் சாமர்த்தியமாக விலக்குவீர்கள். கணவன் மனைவி இருவரும் அனுசரித்துப் போய் பழைய சண்டையை மறப்பீர்கள்.இன்று தட்சிணாமூர்த்தியை வழிபடுவதன் மூலம் சிரமங்களைக் குறைத்துக்கொள்ளலாம்.

உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மற்றவர்களிடம் விவாதம் செய்வதை தவிர்க்கவும்.

திருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதரர்களால் சங்கடங்கள் ஏற்பட்டு நீங்கும்.

அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!