Cinema Entertainment

பைசா வாங்காமல் ரஜினிகாந்த் நடித்துக் கொடுத்த திரைப்படம்…

தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டார் என்ற அந்தஸ்துடன் வளமுடன் நடிகர் ரஜினிகாந்த் இவர் அன்றிலிருந்து இன்று வரை சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்தை தக்க வைத்துக் கொண்டிருக்கிறார். எத்தனையோ நடிகர்கள் ரஜினி இடத்தை பிடிக்க ஆசைப்படுகிறார்கள் ஆனால் அவர் இடத்தை இனிமேல் நிரப்புவதற்கு யாராலும் முடியாது என பலரும் கூறிய வருகிறார்கள்.

அதேபோல் கடைசியாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் சன் பிக்ச்சர் தயாரிப்பில் வெளியாகிய ஜெயிலர் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார் இந்த திரைப்படத்தை நெல்சன் திலிப் குமார் தான் இயக்கியிருந்தார். இந்த திரைப்படம் பட்டித்தொட்டி எங்கும் பிரபலமானது அது மட்டும் இல்லாமல் அனிருத் இசையில் மக்கள் கொண்டாடப்படும் திரைப்படமாக மாறியது.




அதேபோல் ஜெயிலர் திரைப்படம் கிட்டத்தட்ட 700 கோடி வரை உலகம் முழுவதும் வசூல் செய்தது இதனால் சன் பிக்ச்சர் நிறுவனம் படத்தில் நடித்த சூப்பர் ஸ்டார், அனிருத், நெல்சன் என அனைவருக்கும் கார் மற்றும் காசோலையை பரிசாக வழங்கினார். இந்த நிலையில் தற்போது ஞானவேல் ராஜா இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் வேட்டையன் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இதனை அடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் 171 வது படத்திலும் நடிக்க இருக்கிறார். சம்பளமே வாங்காமல் ரஜினி நடித்த திரைப்படம் என்ன என்பது தற்பொழுது தெரிய வந்துள்ளது. தற்பொழுது கோடிகளில் சம்பளம் வாங்கும் ரஜினி ஒரே ஒரு படத்திற்காக மட்டும் சுத்தமாக பணமே வாங்காமல் நடித்துக் கொடுத்துள்ளார். ரஜினியை வைத்து எஸ்பி முத்துராமன் பல வெற்றி திரைப்படங்களை கொடுத்துள்ளார்.

அவர்கள் இணைந்தாலே மாபெரும் ஹிட் என்ற நிலை இருந்து வருகிறது அந்த வகையில் முத்துராமன் அவர்களிடம் 14 பேர் கொண்ட டீம் இருந்தது. இவர்களுக்கு ஏதாவது செய்ய வேண்டுமென முத்துராமன் அவர்கள் ரஜினி அவர்களிடம் கூறியுள்ளார் அதற்கு ரஜினி உங்கள் தயாரிப்பில் ஒரு படத்தில் நடிக்கிறேன் எனக் கூறி உள்ளார் அந்த திரைப்படம் தான் பாண்டியன் ஆனால் இதுவரை எந்த திரைப்படத்தையும் தயாரிக்காத முத்துராமன் முதன்முறையாக பாண்டியன் என்ற திரைப்படத்தை சொந்தமாக தயாரித்தார் அந்த திரைப்படத்தில் தான் ரஜினிகாந்த் சம்பளமே வாங்காமல் நடித்துக் கொடுத்தார். இந்த தகவல் தற்பொழுது தெரியவந்துள்ளது.




What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!