Cinema Entertainment

பாண்டியனின் வறட்டு கௌரவத்தால் தவிப்பில் இருக்கும் மகன்..

 விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாண்டியன் ஸ்டோர்ஸ் சீசன் 2 சீரியலில், பாண்டியனின் வறட்டு கௌரவத்தால் மொத்த குடும்பமும் தற்போது பாதிப்பில் தவித்து வருகிறார்கள். அதாவது ஆரம்பத்தில் மூத்த மகன் சரவணன் ஒரு பெண்ணை உயிருக்கு உயிராக காதலித்தார். ஆனால் இவர்களுடைய காதலுக்கு பாண்டியன் எதிர்ப்பு தெரிவித்தல் அந்தப் பெண்ணுக்கு வேறு ஒருவருடன் திருமணம் முடிந்துவிட்டது.

இதனால் தேவதாஸ் மாதிரி மூத்த மகன் சரவணன் சுற்றித்திரிந்தார். ஆனால் இதே நிலைமை தனக்கு ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக இரண்டாவது மகன் செந்தில் உஷாராகி காதலித்த மீனாவை திருட்டுத்தனமாக கல்யாணம் பண்ணி வீட்டிற்கு கூட்டிட்டு வந்தார். பிறகு வேறு வழியில்லாமல் பாண்டியன் ஏற்றுக்கொண்டார். இதனை அடுத்து இக்கட்டான சூழ்நிலையில் அம்மாவின் வற்புறுத்ததால் ராஜியை கதிர் திருமணம் செய்து கொண்டார்.




ஆக மொத்தத்தில் மூத்த மகனைத் தவிர மற்ற இரண்டு மகன்களுக்கும் கல்யாணம் ஆகிவிட்டது. இதனால் எப்படியாவது பாண்டியன் மூத்த மகனுக்கு கல்யாணம் ஆக வேண்டும் என்று தற்போது வீடு வீடாக தேடிக் பெண் கேட்டு வருகிறார். ஆனால் அவர்கள் சொல்லுவதெல்லாம் மூத்த பையன் இருக்கும் பொழுது மற்ற இரண்டு பையன்களுக்கும் திருமணம் ஆனதால் மூத்த பையனுக்கு ஏதோ ஒரு பிரச்சனை இருக்கிறது என்று சொல்லி எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.




போதாக்குறைக்கு ராஜியின் அப்பா மற்றும் சித்தப்பாக்கள் செய்த சதியால் மறுபடியும் திருமணம் தடை பெற்று விட்டது. இதற்கெல்லாம் காரணம் பாண்டியனின் வறட்டு கௌரவம் தான். ஆனால் பாவம் இப்பொழுது இது அனைத்திற்கும் காரணம் மீனாதான் என்று செந்தில் அவர் மீது கோபப்பட்டு வருகிறார்.

அதாவது மீனாதான் அவசரப்பட்டு திருமணம் செய்ய வேண்டும் என்று டார்ச்சர் பண்ணியதால் தான் இப்போ அனைத்து பிரச்சினைக்கும் காரணம் என்பதற்கு ஏற்ப செந்தில், மீனாவிடம் கோபப்பட்டு வருகிறார். அதே மாதிரி ராஜியை தேவையில்லாமல் திருமணம் பண்ணியதால் அண்ணனுக்கு இந்த மாதிரி ஒரு இக்கட்டான சூழ்நிலை அமைந்துவிட்டது என்று கதிரும், ராஜிடம் சண்டை போடுகிறார்.

ஆனால் இதற்கெல்லாம் காரணம் பாண்டியன் மற்றும் மாமியார் கோமதி செய்த குளறுபடியினால் தான் எல்லா பிரச்சனைக்கும் காரணம். அது தெரியாமல் எல்லா பழியில் இருந்தும் இருந்தும் ஈசியாக மாமியார் எஸ்கேப் ஆகிவிட்டார். இதற்கிடையே மீனாவும் ராஜியும் தான் சிக்கி தவித்து வருகிறார்கள்.




What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!