Cinema Entertainment Uncategorized

பாடல் பிறந்த கதை (கல்லாய் வந்தவன் கடவுளம்மா)

கண்ணதாசனை கவியரசர்னு எல்லோரும் சொல்வாங்க. இவருடைய நினைவலைகளைப் பற்றி அவரது மகன் அண்ணாத்துரை கண்ணதாசன் சில தகவல்களைப் பகிர்ந்துள்ளார். என்னவென்று பார்க்கலாமா…

கண்ணதாசனை வாடா போடான்னு கூப்பிட்டவர்கள் சினிமா உலகில் மிக மிகக் குறைவு. அப்படி அழைப்பவர்களில் ஒருவர் தான் ஆர்.ஆர்.சந்திரன். இவர் ஒளிப்பதிவாளர், இயக்குனர், தயாரிப்பாளர். மகாகவி காளிதாஸ் படத்தின் தயாரிப்பாளர். நானே ராஜா படமும் அவர் தான் தயாரித்தார். இந்தப் படத்தோட கதை, வசனம் எழுதியவர் கண்ணதாசன்.




இந்தப்படத்துக்கு ஒரு வெறியோடு வசனம் எழுதினாராம் கண்ணதாசன். அதனால் கதை எடுபடாமல் போய்விட்டதாம். அவர் வசனம் எழுத ஆர்.ஆர்.சந்திரனும் முழு சுதந்திரம் கொடுத்தாராம். நானே ராஜா என்ற தலைப்பை வைத்தவரும் கண்ணதாசன் தானாம்.

அதே ஆர்.ஆர்.சந்திரன் தான் மகாகவி காளிதாஸை தயாரித்த போது கண்ணதாசனை வைத்து வசனம் எழுத வைக்கவும் நினைத்தாராம். ஆனால் அப்போது கண்ணதாசன் ரொம்பவே பிசியாக இருந்ததால் எழுத முடியாமல் போய்விட்டதாம். இந்தப் படத்தில் மொத்தம் 14 பாடல்கள்.




இவற்றில் 11 பாடல்களைக் கண்ணதாசன் தான் எழுதினாராம். சென்று வா மகனே சென்று வா, யார் தருவார் இந்த அரியாசனம் என மகாகவி காளிதாஸ் படத்தில் பாடல்களை எழுதி பட்டையைக் கிளப்பியிருந்தார் கண்ணதாசன்.

ஆடு மேய்க்கும் செல்லையாவாக இருந்தவன் காளி தேவியின் அருளால் மகாகவியாக மாறுகிறான். கண்ணதாசனை வைத்து அந்தப் படத்தில் ஒரு பாடலை எழுத வைக்க வேண்டும். ஆனால் அவர் சிக்கவே இல்லை. என்ன செய்யலாம் என்று யோசித்த ஆர்ஆர்.சந்திரன் உதவியாளர் நாராயணனை அழைத்து விவரம் சொன்னாராம். பாடலும் வர காலதாமதம் ஆனதாம். உடனே கே.வி.மகாதேவனும், ஆர்.ஆர்.சந்திரனும் அவருக்கு நெருக்கடி கொடுக்க மீண்டும் கண்ணதாசனைப் போய் பார்த்தாராம்.

அப்போது காரில் கிளம்பும்போது வேறு இடத்திற்கு கம்போசிங் போக வேண்டும் என்று நாராயணனிடம் சொன்னாராம் கண்ணதாசன். அது நாராயணனுக்கு அதிர்ச்சி. அப்போது காரில் போகும்போதே பாடல் முழுவதையும் சொல்ல சொல்ல நாராயணன் எழுதினாராம். கண்ணதாசன் மாதிரி ஒரு கவிஞன் பிறக்கவே மாட்டாருய்யா என்று கே.வி.மகாதேவன் புகழ்ந்தாராம்.




இதோ பாடல் வரிகள் உங்களுக்காக:

கல்லாய் வந்தவன் கடவுளம்மா
அதில் கனியாய்க் கனிஞ்சவ தேவியம்மா
புல்லாய் மொளைச்சவ சக்தியம்மா
அதில் பூவாய் மலர்ந்தவ காளியம்மா

மந்தையில் மேய்கிற வெள்ளாடு
அந்தி சந்தைக்கு வந்தால் சாப்பாடு
பந்திக்கு முந்துற பெரும்பாடு
அது படிச்சவன் வகுத்த பண்பாடு
பந்திக்கு முந்துற பெரும்பாடு
அது படிச்சவன் வகுத்த பண்பாடு

கல்லாய் வந்தவன் கடவுளம்மா
அதில் கனியாய்க் கனிஞ்சவ தேவியம்மா
புல்லாய் மொளைச்சவ சக்தியம்மா
அதில் பூவாய் மலர்ந்தவ காளியம்மா

ஆண்டியின் கையில் திருவோடு
தினம் அவனுக்கு வேலை தெருவோடு
இருப்பவன் சண்டை பொருளோடு
இந்த ஏழையின் சண்டை வயிறோடு
இருப்பவன் சண்டை பொருளோடு
இந்த ஏழையின் சண்டை வயிறோடு

கல்லாய் வந்தவன் கடவுளம்மா
அதில் கனியாய்க் கனிஞ்சவ தேவியம்மா
புல்லாய் மொளைச்சவ சக்தியம்மா
அதில் பூவாய் மலர்ந்தவ காளியம்மா

காக்காய் உண்டு நரியுண்டு
வரிக்கழுதைகள் உண்டு புலியுண்டு
மனிதரில் இத்தனை வகையுண்டு
அவர் வாக்கினில் தெரியும் யாரென்று

கல்லாய் வந்தவன் கடவுளம்மா
அதில் கனியாய்க் கனிஞ்சவ தேவியம்மா
புல்லாய் மொளைச்சவ சக்தியம்மா
அதில் பூவாய் மலர்ந்தவ காளியம்மா




What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!