gowri panchangam Sprituality

காவல் தெய்வங்கள்/முத்துராக்கு சாமி

*எட்டு தலைமுறைக்கு முன்பு வாழ்ந்த பூலம் முத்துராக்கு சாமி வாழ்கை வரலாறு*

*இப்படிபட்ட ஒரு தெய்வமா முத்துராக்கு சாமி… வாருங்கள் பார்ப்போம்*…

களவு செய்வது அரச குலத்தின் மரபு என்று இருந்த காலத்தில் களவு செய்பவர்களை தண்டிக்கும் நல்ல உள்ளம் கொண்டவர் முத்துராக்கு தேவர்…




ராங்கிய கருப்பர் உண்டு // Rangiya karuppar undu L Sivam Devakottai - YouTube

*திருநெல்வேலி* மாவட்டம் *நாங்குநேரி* தாலுகா *பூலம்* கிராமத்தில் சிவசுப்பிரமணிய தேவர் முத்தம்மாளுக்கு ஒரு ஆண் குழந்தையும் ஒரு பெண் குழந்தையும் இருந்தன. ஆண் குழந்தை முத்துராக்கு தேவர் பெண் குழந்தை தங்கை ஆச்சியம்மாள்… தங்கையை நாங்குநேரி தாலுகா தேவநல்லூர் அருகே உள்ள ஒத்த வீடு என்ற ஊரில் மணம் முடித்து கொடுத்தனர் அதன் பிறகு சிவசுப்பிரமணிய தேவர் காலமாகிவிட்டார்.. தாயாரும் முத்துராக்கு தேவரும் பூலம் ஊரில் வாழ்ந்து வந்தனர்…

முத்துராக்கு தேவர் படித்து முடித்து விட்டு செல்லமாக இருந்து வந்துள்ளார்.. அவர் அவர் மறக்குலத்தின் மாண்பு மாறாமல் வில் வித்தை குதிரையேற்றம் வாள் வீச்சு சிலம்பம் கலை என சகல வீர கலைகளையும் கற்று தேர்ந்தவர்… அந்த காலம் பஞ்ச நாடக இருந்தது பிழைக்க வேறுவழியில்லாமல் பாண்டியமார்கள் தன் குல தொழிலான களவு தொழில் செய்து வந்தனர். முத்துராக்கு தேவருக்கு களவு செய்வதும், களவு செய்வோரையும் பிடிக்காது அதனால் முத்துராக்கு தேவரை ஊரில் யாருக்கும் பிடிக்காது… களவு செய்வோரை பிடித்து போலீசில் கொடுத்து விடுவார் அதனால் அவருக்கு போலீஸ் இலாகாவில் நல்ல மரியாதையை கொடுத்தார்கள்.




அப்போது களக்காட்டில் தான் காவல் நிலையம் இருந்தது பஸ் வசதி கிடையாத நேரம் என்பதால் முத்துராக்கு தேவருக்கு வெள்ளை குதிரை கொடுத்தது காவல் துறை… அவர் குதிரையில் வாரம் ஒருமுறை களக்காடு காவல் நிலையம் சென்று வருவது வழக்கம்… அப்படி ஒருநாள் செல்லும் போது , அவர் செல்லும் வழி பூலம் ஊருக்கு தெற்க்கே நோக்கி புறப்பட்டு புதுக்குளம் ஊரை தாண்டி சூரப்புரம் ஊர் கடந்து தென்திசை நோக்கி காட்டு வழியாக ஓணான்குறிச்சி குளத்தில் இருக்கும் தொண்டில் அடித்தான் பாறை உள்ளது அந்த இடத்தில் குதிரையை விட்டு இறங்கி தரையில் அமர்ந்து வெத்தலை போடுவது வழக்கம். வெத்தலை போட்டுவிட்டு மீண்டும் அப்பர்குளம் ஊர் கடந்து ஒத்தவீடு விளக்கு தாண்டி தேவநல்லூர் ஊரை தாண்டி தெற்கு நோக்கி பதமநேரி கீழகருவேலவன் குளம் வழியாக களக்காடு காவல் நிலையம் சென்று வருவார்…

இப்படி போய் வந்து இருக்கும் போது, தங்களது களவு தொழிலுக்கு இடைஞ்சலாக இருப்பதை எண்ணிய பூலம் வன்னியராஜா தேவர் ஒத்தவீடு சாமி தேவர் பட்டபிள்ளை புதூர் சுப்பிரமணிய தேவர் ஆகிய ஒன்று சேர்ந்து நாம் நிம்மதியாக களவு செய்ய வேண்டும் என்றால் முத்துராக்கு தேவரை தீர்த்து கட்ட வேண்டும் என்று பேசி முடிவு எடுத்தனர்…

வழக்கம் போல் முத்துராக்கு தேவர் களக்காடு செல்வதை கவனித்த மூவரும் இன்று முத்துராக்கு தேவரை கொன்று விட வேண்டும் என நினைத்து கொண்டு, அவரை நேருக்குநேர் சண்டையிட்டு கொள்ளவது கடினம் என எண்ணிய இவர்கள் முத்துராக்கு தேவரின் தங்கையான ஒத்தவீடு ஆச்சியம்மாளை சென்று பார்த்து உதவி கேட்டனர் அப்போது அண்ணனுக்கும் தங்கைக்கும் மனஸ்தாபம் காரணமாக பேச்சுவார்த்தை கிடையாது ஆகையால் அவளும் சம்மதித்தால் அவர்களின் திட்டப்படி களக்காடு சென்று திரும்ப வரும் வழியில் இரவில் கொள்ள வேண்டும் என்று ஆச்சியம்மாளிடம் உன் வீட்டுக்கு அழைத்து சென்று நேரம் தாழ்த்தி அனுப்பு என்றனர்..

அவ்வாறே..மாலை 6மணி அளவில் தேவநல்லூர் கடந்து ஒத்தவீடு விளக்கு அருகே வந்துகொண்டிருந்தார் முத்துராக்கு தேவர் அப்போது அவரின் பின்னால் இருந்து அண்ணா என்று ஒரு பெண்ணின் குரல் கேட்டு நின்ற முத்துராக்கு தேவர் திரும்பி பார்க்க அங்கே நின்றது ஆச்சியம்மாள் அவரின் தங்கை.. நம்ம தங்கைக்கும் நமக்கும் தான் பேச்சுவார்த்தை இல்லையே ஏன் நம்மிடம் பேசுகிறாள் என்று மனதில் நினைத்து திரும்பி வந்து ஏன் அம்மா என்னை கூப்பிட்டாய் சீக்கிரம் சொல் எனக்கு ஊரில் அவசர வேலை இருக்கு நான் ஊருக்கு போகணும் என்று திரும்பினார்…




மீண்டும் தங்கை, இன்று எப்படியாவது என் வீட்டுக்கு வந்துட்டு தான் போக வேண்டும் *அண்ணா* என்றால்.. பேச்சுவார்த்தை இல்லாத தங்கை *அண்ணா* என கூப்பிட்டதும் மணம் உருகிய முத்துராக்கு தேவர் தட்டி செல்ல மணமில்லாமல் தங்கை வீட்டுக்கு போக ஓப்புக்கொண்டார்..

அங்கு முத்துராக்கு தேவருக்கு அவரின் தங்கை கோழி அடித்து குழம்பு வைத்தால், எண்ணெய் தேய்த்து குளிக்க வேண்டும் என்று சொல்லி எண்ணெய் கிண்ணத்தை கொடுத்தால்… எண்ணெய் தேய்ப்பதற்கு கிண்ணத்துக்குள் கை விடும் போது கைவிரலில் முடி சிக்கியது அதனை கண்டு நமக்கு ஏதோ ஆபத்து ஏற்படும் போல் மனதில் நினைத்து கொண்டார்.. எண்ணெய் தேய்த்து விட்டு சீக்காய் பொடியை தண்ணியில் போட்டு குழப்பும் போது அது கரிகட்டை கலரில் மாறியது அதனை கண்டு ஆபத்து நடக்கப்போகிறதை உணர்ந்தார்… குளித்து முடித்து சாப்பிட்டுவிட்டு செல்லும் போது தன் கைபிரம்பை தங்கை மகன் எடுத்து கொண்டு விளையாட போய்விட்டான் அவன் வரட்டும் என பொறுத்திருந்தார் காலதாமதம் ஆனதால் அது போனால் போகட்டும் என்று 7.30மணியளவில் புறப்பட்டார் முத்துராக்கு தேவர்.. போய்வருங்கள் அண்ணா என வழியனுப்பினால் தங்கை…

ஒத்தவீடு விளக்கு கடந்து கிழக்கு நோக்கி வந்து அப்பர்குளம் ஊர் கடந்து வரும் போது மணி 8.30 ஆகியதால் தொண்டில் அடித்தான் பாறை அருகே வேகமாக வந்துகொண்டிருந்தார். அங்கே பட்டபிள்ளை புதூர் சுப்பிரமணிய தேவர் பூலம் வன்னியராஜா தேவர் ஒத்தவீடு சாமி தேவர் ஆகியோரை கண்டார்.. அவர்களை ஏன் இந்த இரவில் இங்கே இருக்கிறீர்கள் என்று கேட்டார்.. அவர்கள் வேறு வேலையாக வந்தோம் என உலறினார்கள்.. சரி எனக்கு ஊரில் அவசர வேலை இருக்கு நான் கிளம்புகிறேன் என புறப்பட்டார் முத்துராக்கு தேவர்.. அந்த மூவரும் முத்துராக்கு தேவரிடம் வெத்தலை போட சுண்ணாம்பு தாருங்கள் என்றனர்.. சுண்ணாம்பு கொடுக்க குதிரையில் இருந்து கீழே இறங்கிய முத்துராக்கு தேவரை அமருங்கள் வெத்தலை போட்டுட்டு போகும்படி கேட்டனர்.. தரையில் அமர்ந்து வெத்தலை போட்டுகொண்டு இருக்கும் போது இரவு இருட்டில் தாங்கள் வைத்திருந்த அருவாளால் வெட்டினார்கள்.. இவர்கள் வெட்டியதை பக்கத்தில் இருந்த பனைமரத்தில் பாளை சீவிக்கொண்டிருந்த அப்பர்குளம் முத்தையா நாடார் பார்த்தார்.. அட சண்டாலபாவிகளா ஏன் எப்படி பெயர்பெற்ற முத்துராக்கு தேவரை இப்படி செய்து விட்டீர்களே என பனையில் இருந்துகொண்டே கேட்டார்…




உடனே அந்த மூன்று பேரும் முத்தையா நாடாரை பார்த்து, ஏய் முத்தையா நாடாரே இந்த விவரம் உன்னை தவிர வேறு யாருக்கும் தெரியாது தெரிந்தால் உனக்கும் இதே கதி தான் என கூறிவிட்டு அவர் கையாலே பனை ஓலைக்குருத்து வெட்ட சொல்லி மூன்று பொட்டாளங்களாக முத்துராக்கு தேவரை கட்டிக்கொண்டு பூலம் ஊருக்கு வந்து, ஊருக்கு மேற்க்கே கோனார் இருக்கும் தெருவில் காணியா கோனார் என்பவரது வீட்டின் பின்புறம் இருக்கும் காணக்கருக்கை கட்டுக்குள் வைத்து விட்டனர்…

முத்துராக்கு தேவரை வெட்டிய உடன் அவரது குதிரை அந்த ரத்தத்தில் விழுந்து புரண்டு எழுந்து வீட்டுக்கு வந்து விட்டது.. வெட்டும் போது தன் விரலில் இருந்த வைர மோதிரம் அருகில் உள்ள ஆவாரம் செடியின் இடையில் விழுந்தது… தன்னை கொலை செய்த விவரத்தை தாயாருக்கு கனவில் காட்சியளித்தார் கொடுத்து விட்டார் முத்துராக்கு தேவர்…

பிறகு இரண்டு நாள் கழித்து கோடை மழை என்று சொல்ல கூடிய பெரிய மழை பெய்தது ஊரெங்கும் வெள்ளம்…

உடனே அந்த மூன்றுபெரும் தான் மறைத்து வைத்திருந்த பொட்டலங்களை எடுத்துக்கொண்டு மேற்கு நோக்கி போய் நடுவகுளம் பாதையாக கங்கனான்குளம் கரை பாதை வழியாக மேற்கு நோக்கி சென்று பச்சை ஆறு வந்து பார்த்தனர் ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது… அந்த மூன்று பொட்டலங்களையும் தண்ணீரில் போட்டனர்..

மூன்று பொட்டலங்களும் ஒன்றாகவே சிங்கிகுளம் கடந்து வடக்கு நோக்கி சென்று திடியூர், ஓமநல்லூர் வழியாக தருவாய் தாம்போதி கடந்து தாமிரபரணி ஆற்றில் விழுந்து ஒரு பொட்டலமும் பிரியாமல் கிழக்கு நோக்கி சென்று அருள்மிகு சீவலபேரி சுடலையாண்டவர் சன்னதி படித்துறையில் தங்கியது…

காலையில் சுடலை ஆண்டவருக்கு பூஜை செய்ய வேண்டும் என கோவில் பூசாரி சப்பாணி கோனார் என்பவர் படித்துறைக்கு வந்தார். படித்துறையில் இருக்கும் மூன்று பொட்டலங்களைம் கண்டார்.. பின் அந்த பூசாரி மூன்று பொட்டலங்களையும் காலால் தள்ளி வெள்ளத்தில் போக விட்டார்.. இரண்டு பொட்டலம் வெள்ளத்தில் போய்விட்டது ஒரு பொட்டலம் மட்டும் தண்ணீரை எதிர்த்து மீண்டும் படித்துறைக்கு வந்தது… பெரும் வெள்ளத்தை எதிர்த்து வந்ததை கண்ட கோவில் பூசாரி ஊருக்குள் போய் ஊர் பெரியவர்களிடம் விவரம் கூறி காவல் துறை அதிகாரிக்கும் தகவல் கொடுத்து எல்லாரும் வந்து பார்த்தனர் ஒரு பொட்டலம் மட்டும் இருந்தது அனைவரும் ஒன்று சேர்ந்து பொட்டலத்தை பிரித்து பார்த்த போது அதில் தலை இருந்தது.. அது எப்படி இருந்தது திருக்கி விட்ட மீசையோடு கண் மூடாமல் பயங்கரமாக இருந்தது…

அந்த நேரம் கோவில் பூசாரிக்கு அருள் வந்து சாமியாடி மக்களிடம் அவன் வேறுயாரும் இல்லை, ஒரு மனித தெய்வபிறவி அவனை பழிவங்கிவிட்டார்கள்.. அவன் இப்போது சீவலபேரி சுடலை ஆண்டவன் சன்னதியில் நிலையம் கேட்டு வந்துள்ளான்.. என சாமி ஆடி சொன்னார் பூசாரி சப்பாணி கோனார். சம்மதித்த மக்கள் அனைவரும் நிலையம் போட்டனர்…




சீவலபேரி சுடலை ஆண்டவன் சன்னதியில் புதியதாக வந்ததால் *புதியவன்* என பெயரிட்டு சுடலைக்கு நேர் எதிரே கிழக்கு நோக்கி நிலையம் போட்டு வழிபட்டனர்..

முத்துராக்கு தேவருக்கு நடந்த சோதனைகளை கேட்டறிந்த சுடலை ஆண்டவர் முத்துராக்கு தேவர் உட்பட 21 தேவாதைகளையும் அழைத்து கொண்டு சீவலபேரி ஊர் விட்டு தெற்கு நோக்கி தோணித்துரை பாதை வழியாக கான்சாபுரம், மருதூர் விளக்கு , திருத்து ஊர் கடந்து செட்டிக்குளம், பாத்திமா கோவில் வழியாக மேற்கு நோக்கி சாந்திநகர், பாளையங்கோட்டை ஊர் தாண்டி தெற்கு நோக்கி டக்கரம்மாள் புரம், ஜோதிபுரம், பொன்னாகுடி விளக்கு கடந்து செங்குளம் விளக்கு விட்டு மூன்றடைப்பு வழியாக பாணான்குளம், நம்பிநகர் வழியாக நாங்குநேரி ஸ்ரீ வானுமாமாலை பெருமாள் சன்னதியில் வந்து அடிபணிந்து தரிசனம் செய்து கொண்டு கிழக்கு நோக்கி சென்று பட்டபிள்ளை புதூர் போய் அத்தனை தெய்வங்களும் சேர்ந்து ஆட்டு எலும்பு, மாட்டு எலும்பு, செங்கல் கட்டி எல்லாம் தெருவில் எரிந்து, தொட்டில் பிள்ளை முதல் மாட்டு தொழுவில் கட்டிருக்கும் கன்று வரை துள்ளி விழுந்து இறந்து விடுமாம்.. ஏகப்பட்ட இடஞ்சல் பண்ணும்போது நமக்கு ஏன் இப்படி சோதனை வருகிறது என எல்லாரும் கூடி பேசி அருகில் உள்ள திலா சேரி என்னும் ஊரில் குறி சொல்லும் கோனார் வீட்டுக்கு சென்றனர்…

நடக்கும் விவரம் பற்றி கேட்ட மக்களிடம் , குறி சொல்லும் கோனார் கூறுகிறார்.. உங்களில் ஒருவர் ஒருமானிட தெய்வத்தை பழி வங்கியுள்ளான்.. அந்த தெய்வம் சீவலபேரி சுடலை ஆண்டவனிடம் போய் தஞ்சமாகி அத்தனை தெய்வமும் ஒன்று சேர்ந்து உங்களை அட்டூழியம் பண்ண வந்திருக்கிறது… அந்த அட்டூழியம் நிற்க வேண்டும் என்றால் அத்தனை தெய்வத்துக்கும் நிலையம் போட்டு கொடுத்து நீங்கள் வழிபட வேண்டும். அப்படி நிலையம் போடும் பட்சத்தில் வேறு இடத்தில் நிலையம் போட கூடாது.. உங்க ஊரின் வடக்குபுரம் நேற்று நெல் நடவு பணி செய்த சுப்பிரமணிய தேவர் வயலில் ஒரு முள் மரம் வளர்ந்து வருகிறது அந்த இடத்தில் நிலையம் போட்டு வழிபட வேண்டும் என்றார்… பின்னர் அங்கு நிலையம் வாங்கிவிட்டு. அத்தனை தெய்வமும் சேர்ந்து பூலம் ஊரில் அத்தனை இடைஞ்சலும் செய்து ஊருக்கு கீழ்புறம் குளக்கரைக்கு வடபுறம் நிலையம் வாங்கி ஊர் மக்களை இன்றளவும் ஒரு குறையும் இல்லாமல் அருள் புரிந்து கொண்டு இருக்கிறார்..




What’s your Reaction?
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!