Cinema Entertainment விமர்சனம்

கார்டியன் விமர்சனம்..

இந்த ஆண்டு மலையாளத்தில் வெளியான மம்மூட்டியின் பேய் படமான பிரமயுகம் திரையரங்குகளில் ரசிகர்களை மிரட்டி 75 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் ஈட்டியது. மார்ச் 8ம் தேதி மகளிர் தினத்தை முன்னிட்டு பாலிவுட்டில் ஜோதிகா, அஜய் தேவ்கன் மற்றும் மாதவன் நடிப்பில் வெளியான ஷைத்தான் திரைப்படம் பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்றுள்ளது. அதே நேரத்தில் நடிகை ஹன்சிகா நடிப்பில் ஹாரர் படமாக உருவாகி உள்ள கார்டியன் படமும் வெளியாகி இருக்கிறது.




Guardian Movie Review - Only Kollywood

கே.எஸ். ரவிக்குமாரின் உதவி இயக்குநர்களான சபரி மற்றும் குரு சரவணன் இணைந்து இதற்கு முன் கூகுள் குட்டப்பா படத்தை குருநாதரை வைத்தே இயக்கி சொதப்பி விட்டனர். இந்நிலையில், ஹன்சிகாவை வைத்து இந்த இரட்டை இயக்குநர்கள் இயக்கிய கார்டியன் படம் மிரட்டலா? உருட்டலா என்பது குறித்த விமர்சனத்தை இங்கே விரிவாக பார்க்கலாம் வாங்க..




கார்டியன் கதை: ராகவா லாரன்ஸ் நடிப்பில் வெளியான முனி படத்தில் எப்படி ஹீரோ தனது உடம்பை பேய்க்கு வாடகை விட்டு கெட்டவர்களை அழிப்பார்களோ அதே போலத்தான் இந்த படத்தில் ஹன்சிகா அதே வேலையை பார்க்கிறார். யோகி பாபு நடிப்பில் வெளியான பேய் மாமா படத்தின் கதையும் இதே தான்.

சிறு வயதில் இருந்தே அதிர்ஷ்டமில்லாதவராக விளங்கும் ஹன்சிகாவுக்கு திடீரென நல்ல வேலை, சந்தோஷமான வாழ்க்கை கிடைக்கிறது. அதற்கு என்ன காரணம் என புரியாமல் யோசிக்கும் அவருக்கு இதெல்லாம் ஒரு ஆவி தான் செய்கிறது என்பது தெரிய வருகிறது. அந்த ஆவி பழிவாங்க துடிக்கும் சுரேஷ் மேனன், ஸ்ரீமன், அபிஷேக் வினோத் மற்றும் ஸ்ரீராம் பார்த்தசாரதி உள்ளிட்டோரை பழிவாங்க ஹன்சிகா எப்படி உதவுகிறார் என்பது தான் இந்த கார்டியன் படத்தின் கதை.

பிளஸ்: ஹன்சிகாவின் நடிப்பு மட்டும் தான் இந்த படத்தில் ரசிகர்களுக்கு ஒரே ஆறுதல் என்று சொல்லலாம். சாம் சி.எஸ். இசை ஓகே ரகம் தான். ஒளிப்பதிவு, லைட்டிங் எல்லாம் பரவாயில்லை. கே.எஸ். ரவிக்குமாரின் உதவி இயக்குநர்ளான சபரி மற்றும் குரு சரவணன் இயக்கத்தில் உருவாகி உள்ள இந்த ஹாரர் படத்தின் முதல் பாதி படத்துக்கு பலமாக உள்ளது.




மைனஸ்: ஹன்சிகாவுக்கு மிகப்பெரிய கம்பேக் கிடைக்குமா என ரசிகர்கள் நினைத்தால் அதற்கு பெரிய ஏமாற்றம் என்று தான் சொல்ல வேண்டும். சிம்பு கேமியோ ரோலில் நடித்த மஹா படமும் சொதப்பியது. இந்த கார்டியன் படமும் பல இடங்களில் ரசிகர்களின் பொறுமையை சோதிக்கிறது

காட்சிகள் மற்றும் தொழில்நுட்பங்கள் மூலம் ரசிகர்களை மிரள வைப்பது தான் திகில் படங்களின் முதல் பணி. ஆனால், அத்தகைய வேலையை இந்த படம் செய்ய தவறியிருக்கிறது. குறிப்பாக பேய் வரும் காட்சிகளில் ரசிகர்களுக்கு எந்தவித பயமும் வராமல் இருப்பது படத்திற்கு பெரும் பலவீனம்.

 

படத்தின் ஆரம்பத்தில் ஹன்சிகாவை அன்லக்கியாக காட்டிய விதமும், அதன் பிறகு நிகழும் அதிசயங்களும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தினாலும், அடுத்தடுத்த காட்சிகள் பழைய பாணியில் பயணித்து பார்வையாளர்களை தூங்க வைத்துவிடுகிறது.

மொத்தத்தில், இந்த ‘கார்டியன்’ மிரட்டவில்லை.




What’s your Reaction?
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!