Cinema Entertainment

கண்ணதாசன் பாடல்கள் எழுதிய ஒரு படத்தில் நடிக்க மறுத்த கமல்ஹாசன்..

தமிழ் சினிமாவில் 65 ஆண்டுகளுக்கும் மேலாக சினிமாவில் இயங்கி வருகிறார். நடிப்பு, இயக்கம், பாடல் பாடுதல், பாடல் எழுதுதல், தயாரிப்பு என ஒரு பல்துறை வித்தகராக வலம் வந்து கொண்டிருக்கிறார். மூன்றாம் பிறை, நாயகன் மற்றும் இந்தியன் ஆகிய மூன்று திரைப்படங்களுக்காக தேசிய விருது பெற்றுள்ளார்.

தன்னுடைய படங்களில் திறமையானவர்களைப் பயன்படுத்த வேண்டும் என்பதில் கமல்ஹாசன் ஆர்வமாக இருப்பார். அதுபோல திறமையானவர்களைக் கண்டால் அவர்களுக்கான வாய்ப்புகளை எப்படியாவது தன்னுடைய கம்பெனியில் கொடுக்கவேண்டும் என ஆசைப்படுவார். வில்லனாக நடித்துக் கொண்டிருந்த சத்யராஜின் திறமையை வியந்து பலரிடம் அவரை வைத்து படம் எடுங்கள் எனக் கூறியதோடு மட்டும் இல்லாமல் தன் தயாரிப்பில் ‘கடமை கண்ணியம் கட்டுப்பாடு’ என்ற படத்தையும் எடுத்தார்.




இப்படி குடிசை என்ற படத்தின் மூலம் கவனம் ஈர்த்த இயக்குனர் ஜெயபாரதி இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க ஆசைபட்டுள்ளார் கமல்ஹாசன்.  அந்த படத்துக்கு 2 பேர் வானத்தை பார்க்கிறார்கள் என்று பெயர் வைத்து தொடக்கக் கட்ட வேலைகளை தொடங்கியுள்ளனர். இந்த படத்துக்காக வெறும் 500 ரூபாய் மட்டும் முன்பணமாகப் பெற்றுக்கொண்டுள்ளார் கமல்ஹாசன்.

அதற்கு முக்கிய காரணம் இந்த படத்தின் திரைக்கதை தான். முதலில் பாடல்களே இல்லாத இந்த திரைக்கதையில் பாடல்களை சேர்ப்பது என்று படத்தின் தயாரிப்பாளர் எம்.ஆர்.ரமேஷ் முடிவு செய்து, கண்ணதாசனை வைத்து 4 பாடல்களை எழுத வைத்துள்ளார். இதன்பிறகு பாடலுக்கான கம்போசிங்கும் தொடங்கியது.

இந்த தகவலை கேள்விப்பட்ட கமல்ஹாசன் உடனடியாக இயக்குனர் ஜெயபாரதியை அழைத்து “இப்ப நான் நடிக்கும் எல்லா படத்திலும் பாட்டு பாடு ஆடிக்கொண்டுதான் இருக்கேன். அது மாதிரி இல்லாம வித்தியாசமா நடிக்கனும் அப்படினுதான் உங்க கதையை நான் தேர்வு செய்தேன். திரும்பவும் இந்த படத்தில் 4 பாடல்கள் சேர்த்து என்னை ஆட வைத்தால், இந்த படத்தில் நான் நடிப்பதில் என்ன அர்த்தம் இருக்கிறது. அதனால் நான் இந்த படத்தில் நடிக்க மாட்டேன்” என உறுதியாக மறுத்துவிட்டாராம். அதன் பிறகு அந்த படம் கடைசி வரை தொடங்கப்படவே இல்லை.

What’s your Reaction?
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!