gowri panchangam Sprituality

இன்றைய ராசி பலன் (20.03.24)

சந்திரன் கடகம் ராசியில் சஞ்சரிக்கிறார். விருச்சிக ராசியில் உள்ள அனுஷம், கேட்டை சேர்ந்தவர்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளது. மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான இன்றைய ராசி பலனை தெரிந்து கொள்வோம்.




மேஷ ராசி அன்பர்களே!

மேஷம் ராசி அன்பர்களுக்கு இன்று உங்களுக்கு ஒன்றன்பின் ஒன்றாக புதிய நற்செய்திகள் வரும். இதனால் குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். வேலைப்பளு, அழுத்தம் குறையும். புதிய வேலை, திட்டங்களை செயல்படுத்தலாம். இன்று பயணங்கள் இனிமையானதாகவும், அனுபவமானதாகவும் இருக்கும். முருகப்பெருமானை வழிபட சிரமங்கள் அறவே நீங்கும்.

அசுவினி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதரர்களால் ஆதாயம் கிடைக்கும்.

பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு.

கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளில் ஈடுபடுவதை தவிர்க்கவும்.

ரிஷப ராசி அன்பர்களே!

ரிஷபம் ராசி அன்பர்களுக்கு இன்று கலவையான பலன் தரக்கூடிய நாள். இன்று எந்த விஷயத்திலும் பிடிவாதமாக, கர்வத்துடனும் இருக்க வேண்டாம். அதிகமாக கவலைப்பட்ட வேலைகள் சிறப்பாக செய்து முடிப்பீர்கள். வணிகத்தில் லாபம் அதிகரிக்கும். பல பிரச்சினைகள் தீரும். இன்று யாரிடமும் கடன் வாங்குவதை தவிர்க்கவும்.அம்பிகையை வழிபட மற்றவர்களால் ஏற்பட்ட அவப் பெயர் நீங்கும்.

கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மற்றவர்களுடன் பேசும்போது பொறுமையைக் கடைப் பிடிக்கவும்.

ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நண்பர்கள் மூலம் மகிழ்ச்சி உண்டாகும்.

மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்வழி உறவினர்களால் ஆதாயம் உண்டாகும்.

மிதுன ராசி அன்பர்களே!

மிதுன ராசி அன்பர்களுக்கு இன்று வியாபாரத்தில் பெரிய இலக்கை அடைய கடினமாக உழைக்க வேண்டியதிருக்கும். அதற்காக முடிந்த வரை அதிக முயற்சி செய்வீர்கள். மாணவர்கள் கல்வியில் ஏற்படக்கூடிய பிரச்சனைகளை சிறப்பாக தீர்க்க முடியும். பிள்ளைகளிடமிருந்து நல்ல செய்திகளை கேட்பீர்கள். குடும்பத்தில் சில சுப நிகழ்ச்சிகள் நடத்துவதற்காக மும்முரமாக செயல்படுவீர்கள்.துர்கை வழிபாடு அளவற்ற மகிழ்ச்சியைத் தரும்.

மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்வழி உறவினர்களால் செலவுகள் ஏற்படும்.

திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு.

புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணைவழியில் செலவுகள் ஏற்படும்.

கடக ராசி அன்பர்களே!

கடக ராசி அன்பர்களுக்கு இன்று மிகவும் பயனுள்ள நாளாக இருக்கும். குடும்பத்திலும், பணியிடத்திலும் உங்கள் பொறுப்புகளை சிறப்பாக நிறைவேற்றுவீர்கள். பணியிடத்தில் நீங்கள் செய்யக்கூடிய தவறுகளுக்கு வருந்த வேண்டியிருக்கும். இன்று உங்கள் வேலைகளை சரியாக முடிக்க கவனமும், கடின உழைப்பும் தேவைப்படும். இது உங்களுக்கு நல்ல லாபத்தை தரும்.வேங்கடேச பெருமாளை வழிபடு வது சிறப்பான பலன்களைத் தரும்.

புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி உண்டாகும்.

பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உணவு விஷயத்தில் கவனமாக இருக்கவும்.

ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு திடீர் செலவுகளுக்கு வாய்ப்பு உண்டு.

சிம்ம ராசி அன்பர்களே!

சிம்ம ராசி அன்பர்களுக்கு இன்று உங்களுக்கு அதிர்ஷ்டமான நாளாக இருக்கும். வியாபாரத்தில் லாபம் கிடைக்கும். சிலருடன் சேர்ந்து செய்யக்கூடிய எந்த ஒரு வேலையிலும் மேன்மை தரக்கூடிய பலன்களை பெறுவீர்கள் . பிள்ளைகளின் வாழ்க்கை தொடர்பாக முக்கிய முடிவு எடுப்பீர்கள். இன்று ஆன்மீக நிகழ்வுகளில் பங்கேற்க வாய்ப்பு கிடைக்கும் . தட்சிணாமூர்த்தியை வழிபட தடைகள் விலகும்.

மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிரிகளால் ஏற்பட்ட தொல்லைகள் நீங்கும்.

பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தெய்வப் பணிகளில் ஈடுபடும் வாய்ப்பு ஏற்படும்.

உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கடன்கள் விஷயத்தில் கவனமாக இருக்கவும்.

கன்னி ராசி அன்பர்களே!

கன்னி ராசி அன்பர்களுக்கு இன்று உங்களுக்கு திடீர் லாபங்கள் கிடைக்க கூடிய நாளாக இருக்கும். மற்றவர்களிடம் சிக்கியுள்ள உங்களின் பணம் திரும்ப கிடைக்க வாய்ப்புள்ளது. உடல் நலனில் அக்கறை செலுத்தவும். எந்த ஒரு ஆபத்தான வேலையையும் ஈடுபட வேண்டாம். மாணவர்கள் தேர்வில் சிறப்பாக செயல்படுவார்கள். இன்று குடும்ப உறுப்பினர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவீர்கள்.முருகப்பெருமானை வழிபட நற்பலன்கள் அதிகரிக்கும்.

உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மற்றவர்களுடன் விவாதம் செய்வதைத் தவிர்க்கவும்.

அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் முக்கிய முடிவுகளை நன்றாக யோசித்து எடுப்பது நல்லது.

சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பயணத்தால் ஆதாயம் உண்டாகும்.

துலா ராசி அன்பர்களே!

துலாம் ராசி அன்பர்களுக்கு இன்று உங்களுக்கு சாதகமான நாளாக இருக்கும். திருமண வாழ்க்கையில் இனிமையான சூழல் இருக்கும். இன்று வீடு, மனை வாங்குவது தொடர்பான முயற்சிகள் நிறைவேறும். இன்று புதிய நண்பர்கள் கிடைப்பார்கள். பணியிடத்தில் எதிரிகளின் ஆதிக்கம் அதிகமாக இருக்கும். புத்திசாலித்தனமாக செயல்படவும்.முருகப்பெருமானை வழிபடுவதன் மூலம் மகிழ்ச்சி அதிகரிக்கப் பெறலாம்.

சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் காலையில் தொடங்கும் முயற்சி சாதகமாக முடியும்.

சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பிள்ளைகளால் சில பிரச்னைகள் ஏற்பட்டு நீங்கும்.

விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணைவழியில் சில சங்கடங்கள் ஏற்படும்.

விருச்சிக ராசி அன்பர்களே!

விருச்சிக ராசி அன்பர்களுக்கு இன்று செலவுகள் நிறைந்த நாளாக இருக்கும். முதலீடு தொடர்பான விஷயங்களில் பணத்தை செலவு செய்வீர்கள். இன்று உங்களின் வேலையில் பெரிய மாற்றம் இருக்கும். வேலை தொடர்பாக மிகுந்த சிந்தனையுடன் செயல்படவும் .தொழில் தொடர்பான பிரச்சனைகளில் நிவாரணம் கிடைக்கும். புதிய வாகனம் வாங்கும் ஆசை நிறைவேறும்.இன்று லட்சுமி நரசிம்மரை வழிபட பல வகைகளிலும் அனுகூலப் பலன்கள் ஏற்படும்.

விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளில் ஈடுபடவேண்டாம்.

அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்வழி உறவினர்களால் திடீர் செலவுகள் ஏற்படக்கூடும்.

கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அரசாங்கக் காரியங்கள் அனுகூலமாக முடியும்.

தனுசு ராசி அன்பர்களே!

தனுசு ராசி அன்பர்களுக்கு இன்று மாணவர்களுக்கு சிறப்பான நாளாக அமையும். கலைத்துறையினருக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். பணியிடத்தில் உங்களின் வேலை மீது அக்கறையுடன் செயல்படுவீர்கள். உங்கள் திறமைக்கு அங்கீகாரம் கிடைக்கும். பொருளாதார நிலை முன்னேற்றம் தரக்கூடிய நாள். காதல் வாழ்க்கையில் புரிதல் அதிகரிக்கும்.ஆஞ்ச நேயரை வழிபட முக்கிய முடிவுகள் சாதகமாகும்,

மூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சகோதரர்களிடம் அனுசரணையாக நடந்துகொள்ளவும்.

பூராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பார்த்த சுபச் செய்தி கிடைப்பதற்கு வாய்ப்பு உண்டு.

உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருக்கவும்.

மகர ராசி அன்பர்களே!

மகர ராசி அன்பர்களுக்கு இன்று மகிழ்ச்சியும், செழிப்பும் அதிகரிக்க கூடிய நாள். தனிப்பட்ட விஷயங்கள் மேம்படுத்திக் கொள்ளக்கூடிய நாள். வேலை தொடர்பாக பயணங்கள் மேற்கொள்ள நேரிடும். இன்று செல்வாக்கு மிக்க நபர்களை சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கும். வீடு, வேலை இரண்டையும் சமாளிக்க சிரமம் ஏற்படும். உங்கள் வேலைகளை சரியான நேரத்தில் முடிக்க முயற்சிக்கவும்.விநாயகரை வழிபடுவது நன்மை களை அதிகரிக்கும்.

உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பண விவகாரத்தில் கவனமாக இருக்கவும்.

திருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தெய்வப் பணிகளில் ஈடுபடும் வாய்ப்பு ஏற்படும்.

அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு முக்கிய பிரமுகர்களின் அறிமுகமும் அதனால் ஆதாயமும் கிடைக்கும்.

கும்பராசி அன்பர்களே!

கும்ப ராசி அன்பர்களுக்கு இன்று வியாபாரத்தில் லாபம் கிடைக்கக்கூடிய நாள். உங்களின் கலைத்திறன் மேம்படும். பணியிடத்தில் குறையுடன் செயல்படுவீர்கள். உங்களின் முடிவு எடுக்கும் திறன் சிறப்பானதாகவும், அதன் மூலம் முழு பலனையும் பெறுவீர்கள். நிதிநிலை தொடர்பான விஷயங்களில் சிறப்பான நாளாக இருக்கும்.சரபேஸ்வரரை வழிபட சங்கடங்கள் நீங்கி மகிழ்ச்சி பெருகும்.

அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வெளியூரிலிருந்து எதிர்பார்த்த நல்ல செய்தி இன்று கிடைப்பதற்கு வாய்ப்பு உண்டு.

சதயம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு திடீர் பணவரவுடன் எதிர்பாராத செலவுகளும் ஏற்படும்.

பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நண்பர்களால் ஆதாயம் கிடைக்கக்கூடும்.

மீனராசி அன்பர்களே!

மீன ராசி அன்பர்களுக்கு இன்று உங்களுக்கு மகிழ்ச்சியும், செழிப்போம் அதிகரிக்கும். வேலை தொடர்பாக பயணங்கள் மேற்கொள்ள வாய்ப்புள்ளது. இன்று உங்களின் வேலையில் சிலர் தடை ஏற்படுத்த வாய்ப்புள்ளது. இன்று சில செல்வாக்கு மிக்க நபர்களை சந்திக்க வாய்ப்பு கிடைக்கும். வேலை தொடர்பான விஷயங்களில் மற்றவர்களின் ஒருங்கிணைப்பு கிடைக்கும்.இன்று விநாயகரை வழிபட நன்மைகளைக் கூடுதலாகப் பெறலாம்.

பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையால் ஆதாயம் உண்டாகும்.

உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உறவினர்களிடம் அனுசரணையாக நடந்துகொள்ளவும்.

ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தந்தையிடம் எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும்.




What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!