Cinema Entertainment

அம்மாடியோ!ஹீரோயின் மாதிரி இருக்காங்க ஊர்வசி மகள் ..

இயக்குநர் கே.பாக்கியராஜ் இயக்கதிலும் நடிப்பிலும் வெளியான முந்தானை முடிச்சி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் நடிகை ஊர்வசி. எமோஷனலாகவும் நகைச்சுவையாகவும் தன் எதார்த்தமான நடிப்பில் அனைவரையும் கவர்ந்து விடுவார். சமீபத்தில், ஊர்வசி அளித்த பேட்டி ஒன்றில் தன் மகள் சினிமாவில் நடிக்கவிருப்பதையும், இத்தனை ஆண்டுகள் நடிக்காததற்கான காரணத்தையும் பற்றி வெளிப்படையாக பேசியுள்ளார்.




urvashi🥀 | Just a pictorial representation of this emoji🥹 . . . . #Urvashi #Urvasi #Urvashichechi #VersatileUrvashi #Oorvasi | Instagram

சினிமாவுக்கு வரும் ஊர்வசி மகள்:

நடிகை ஊர்வசியின் முந்தானை முடிச்சி படத்தின் வெற்றிக்கு பின் தொடர்ந்து பட வாய்ப்புகள் வந்தது. இவரது சகோதரி கல்பனா மற்றும் சகோதரர்கள் கமல் ராய், இளவரசன் ஆகியோரும் சினிமாவில் நடித்துள்ளனர். தனது 10 வயதில் மலையாளத் திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக தன் சினிமா வாழ்க்கையை தொடங்கிய ஊர்வசி தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் சுமார் 700 படங்களுக்கு மேல் நடித்துள்ளார்.

கடைசியாக அவர் நடிப்பில் வெளியாக ஜே பேபி பெரிய அளவில் பேசப்பட்டது. குழந்தையாக தன் சினிமா வாழ்க்கையை துவங்கிய ஊர்வசி பாட்டியான பின்னும் நடித்துவருகிறார். கொஞ்சிப்பேசும் மொழியும் குழந்தைத்தனமான நடிப்பும், எமோஷனலாக மட்டுமல்லாமல் நகைச்சுவையாகவும் வெளிப்படுத்தும் அவரது நடிப்பு அனைவரையும் கவர்ந்துள்ளது.

ஊர்வசி பிரபல மலையாள நடிகர் மனோஜ் கே.ஜெயன் என்பவரை திருமணம் செய்துக்கொண்டார். இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது. பின்பு சில கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து செய்து பிரிந்தனர். மேலும், சிவ பிரசாத் என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்துக்கொண்டார். இவர்களுக்கு ஒரு மகனும் உள்ளார்.





நடிகை ஊர்வசி சமீபத்தில் தன் மகளுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளது வைரலான நிலையில் பேட்டி ஒன்றில் தன் மகள் குறித்து பேசியுள்ள அவர், மகள் தேஜலஷ்மி இத்தனை ஆண்டுகளாக அவரது முன்னாள் கணவரான நடிகர் மனோஜுடன் இருந்ததாகவும் தற்போது 23 வயதாகும் தன் மகள் நடிப்பில் ஆர்வம் செலுத்தி வருவதாகவும் கூறியிருந்தார்.

மேலும், இத்தனை ஆண்டுகளாக இல்லாமல் இப்போது அறிமுகப்படுத்தியதற்கு காரணத்தை பற்றி கேட்ட போது, நடிகர்களின் வாரிசாக திரைத்துறையில் அறிமுகப்படுத்தும் போது அவர்களை அனைவரும் அவர்களின் பெற்றோர்களுடன் ஒப்பீடு செய்து பார்ப்பார்கள். அதனால் தான் நான் இத்தனை நாளாக அவளை படித்து முடித்து வேலைக்கு போ என்று சொன்னேன். ஆனால், படிப்பை முடித்துவிட்டு வந்து அவளின் நண்பர்களின் சிலர் அவளை நடிக்க சொல்வதாக சொன்னால், அவளுக்கும் அதில் ஆர்வம் உள்ளது எனவே நானும் ஒப்புக்கொண்டேன்.

அவளுக்கு நகைச்சுவை என்னைப்போலவே இயல்பாக வருகிறது , அதையடுத்து சிலவற்றை கத்துக்கொடுத்துக் கொண்டிருக்கிறேன். அவள் சினிமாவிற்கு வர வேண்டாம் என்று நினைத்தால் ஆனால் விதி அவளை சினிமாவுக்கு வர வைத்துவிட்டது எதையும் நம்மால் மாற்ற முடியாது என்று பேசியிருக்கிறார்.




What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!