Samayalarai

நாகர்கோவில் ஸ்பெஷல் ‘மீன் வறுவல்’

‘மீன் வறுவல்’ யாருக்குத்தான் பிடிக்காது. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் மீன் உணவுகளில் ஒன்றுதான் இந்த வறுவல். அதுவும் சிலருக்கு குழம்பில் போட்ட மீனை விட வறுத்த மீன் தான் பிடிக்கும்.

மீன்களில் பல வகைகள் உள்ளன. அதில் மிகவும் முக்கியமான மற்றும் நம் உடலுக்கு பல ஆரோக்கிய நன்மைகளை அள்ளி தரும் மீன்களில் ஒன்று சால மீன் என்று அழைக்கப்படும் மத்தி மீன் தான். இந்த மீனிலிருந்து மனிதனுக்கு தேவைப்படும் விட்டமின் பி 12லில் 13 % கிடைக்கிறது. மேலும் இது நமது நரம்பு மண்டலத்தை சிறப்பாக செயல்பட உதவுகிறது மற்றும் இதில் ஒமேகா 3 அமிலம் அதிகளவில் உள்ளது.




Fish Fry: மீனில் மசாலா உதிருதா.. இப்படி செஞ்சா மீன் வறுவல் அட்டகாசமா இருக்கும்-how to make masala fish fry - HT Tamil ,லைஃப்ஸ்டைல் செய்திகள்

இந்த மீன் பெரும்பாலும் தமிழகத்தில் தென்மாவட்ட கடலோர மக்கள், கேரளா, கடலோர கர்நாடகா மற்றும் ஆந்திர மக்களால் விரும்பி உண்ணப்படும் மீனினமாகும். இந்த மீனை வைத்து செய்யப்படும் ‘புளியும் மீனும்’ நாகர்கோவில் பகுதிகளில் மிகவும் பிரபலம் ஆகும்.

காரமான அதே வேளையில் புளிப்பு சுவையுடன் கூடிய இந்த நாகர்கோவில் ஸ்பெஷல் ‘புளியும் மீனும்’ வறுவலை எப்படி எளிதாக வீட்டிலேயே செய்யலாம் என்று இங்கே பார்க்கலாம் வாங்க…




தேவையான பொருட்கள் :

  • மத்தி / சால மீன் – 20

  • சின்ன வெங்காயம் – 8

  • புளி பேஸ்ட் – 2 – 3 டீஸ்பூன்

  • காஷ்மீரி மிளகாய் தூள் – 2 டீஸ்பூன்

  • மஞ்சள் தூள் – 1 டீஸ்பூன்

  • பூண்டு – 6 பல்

  • இஞ்சி – 2 துண்டு

  • காய்ந்த சிவப்பு மிளகாய் – 3

  • கொத்தமல்லி விதைகள் – 1 டீஸ்பூன்

  • பெருஞ்சீரகம் – 1 தேக்கரண்டி

  • மிளகு – 1 தேக்கரண்டி

  • சீரகம் – 1 தேக்கரண்டி

  • தேங்காய் எண்ணெய் – தேவைக்கேற்ப

  • கறிவேப்பிலை – ஒரு கைப்பிடி

  • கல் உப்பு – சுவைக்கேற்ப




செய்முறை விளக்கம்  :

  • முதலில் சால மீனை எடுத்து நன்றாக சுத்தம் செய்து தண்ணீரில் அலசி அதை கீறி வைத்துக்கொள்ளுங்கள்.

  • பிறகு ஒரு மிக்ஸி ஜாரில் சின்ன வெங்காயம், பூண்டு, இஞ்சி, கறிவேப்பிலை, காய்ந்த சிகப்பு மிளகாய், கொத்தமல்லி விதை, பெருஞ்சீரகம், சீரகம், மிளகு, சிறிதளவு கல் உப்பு, காஷ்மீரி மிளகாய் தூள், மஞ்சள் தூள் புளி பேஸ்ட் ஆகியவற்றை சேர்த்து நன்றாக மசிய அரைத்து எடுத்துக்கொள்ளுங்கள்.

  • அடுத்து அரைத்து வைத்துள்ள மசாலாவை சால மீனில் நன்றாக தடவி பிராட்டி 10 நிமிடங்களுக்கு ஊறவிடவும் .

  • பிறகு அடுப்பில் வட்டமான கடாய் ஒன்றை வைத்து அதில் தேவையான அளவு தேங்காய் எண்ணெய் ஊற்றி சூடாக்கிக்கொள்ளவும்.

  • எண்ணெய் சூடானதும் மசாலாவில் பிரட்டி வைத்துள்ள சால மீனை சேர்த்து நன்றாக வறுத்துக்கொள்ளுங்கள்.

குறிப்பு : மீதமுள்ள அனைத்து மசாலாக்களையும் மீனுடன் சேர்த்து கொள்ளுங்கள்.

ஒருபுறம் நன்றாக வெந்தவுடன் மறுபுறம் திருப்பி நன்றாக சமைக்கவும்.

மீன் முழுமையாக வெந்தது வறுபட்டவுடன் அதன் மேல் சிறிதளவு கறிவேப்பிலை தூவி பிரட்டி எடுத்தால் சுவையான ‘புளியும் மீனும்’ தயார்…




வீட்டுக் குறிப்பு

Gulab Jamun Recipe with Milk Powder - Easy Recipe with Step by Step Photo

  • குலாப் ஜாமூன் ஜீரா மிகுந்துவிட்டால், அதில் மைதாவை சிறிது சிறிதாக சேர்த்துப் பிசைந்து சப்பாத்தி போல் திரட்டி, சதுர துண்டுகளாக வெட்டி. எண்ணெயில் பொரித்தால்… சுவையான பிஸ்கட் ரெடி! இதை மிக்ஸரிலும் சேர்க்கலாம்.

  • Gulab Jamun Recipe with Milk Powder - Easy Recipe with Step by Step Photo

    ஜவ்வரிசி, ரவை இரண்டையும் சம அளவு எடுத்து வறுத்து, பால் சேர்த்து வேகவிட்டு, வெல்லப்பாகு சேர்த்து, நெய்விட்டுக் கிளறினால், வித்தியாசமான சுவையுடன் சர்க்கரைப் பொங்கல் ரெடி!




What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!