gowri panchangam Sprituality

காவல் தெய்வங்கள்/கற்குவேல் அய்யனார்

கற்குவேல் அய்யனார் கோயில் என்பது தூத்துக்குடி தேரிக்குடியிருப்பு கிராமத்தில் அமைந்துள்ளது. தேரிகாடு என்னும் மணற்பாங்கான பகுதி தமிழகத்திலுள்ள பாலைவனம் எனலாம். அப்பாலைவனச் சோலைகளில் அய்யனார் கோவில்கள் உள்ளது.




தேரிக்குடியிருப்பு கிராமத்தில் அமைந்துள்ளது. இந்தக் கோயில் 500 முதல் 1000 ஆண்டுகள் பழமை நிறைந்தது. இந்தப் பகுதி பாண்டியர்களின் ஆதிக்கத்தின் கீழ் இருந்தது. அதிவீர ரான சூர பாண்டியன் என்ற மன்னன் ஆட்சி செய்து வந்தான். அவனிடம் அமைச்சராக இருந்தவர் அய்யனார்.

இவ்வாலயத்தின் மற்றொரு தெய்வம்தான் கள்ளர்சாமி. அவர் பெயரால் நடக்கும் கள்ளர் வெட்டு திருவிழாவே இக்கோயிலின் முக்கிய திருவிழாவாகும். இதையறிந்த விஜயநகர பேரரசின் எல்லைக்குட்பட்ட பகுதியைச் சேர்ந்த (இப்போதைய ஆந்திரா) குப்பண்ணா என்பவன் தூத்துக்குடி மாவட்டம் தேரிக்குடியிருப்புக்கு வந்தான். கோயிலை நோட்டமிட்ட அவன் பொருட்களை களவாட திட்டமிட்டு செம்மண்தேரி பகுதியில் பனைமரங்களுக்கிடையே தங்கினான். நள்ளிரவு நேரம் சில ஆயுதங்களுடன் கோயிலுக்குள் நுழைந்தான்.




கருவூலக பெட்டியில் இருந்த ஆபரணங்களை மூட்டையாகக் கட்டிக்கொண்டு புறப்படத் தயாரானான். அப்போது வன்னியராஜன் குப்பண்ணா கைகளை பின்புறமாகக் கட்டினார். முன்னடியான் அவனை இழுத்துச் சென்றார். அனைவரும் சேர்ந்து அய்யனார் முன்பு நிறுத்தினார்கள். அய்யனார் அவனை கோயிலின் பின்புறம் உள்ள செம்மண் தேரியில் கொண்டு சென்று சிரச்சேதம் செய்துவிடுங்கள் என்றார். அதன்படி அவனை செம்மண் தேரிக்கு அழைத்துச் சென்று தலையை வெட்டி எறிந்தனர். அவனது ஆவி, அய்யனாரை அழைத்தபடி கோயிலின் வாசலில் நின்றபடி கத்தியது: ‘‘கட்டிய மனைவியும், பெற்ற நல்பிள்ளைகளும் கஞ்சிக்கு வழியின்றி கதறுகிறார்கள்.

பிழைப்புக்கு வழியுமில்லை, பேரரசனும் உதவவில்லை. கருணை காட்ட யாருமில்லை, களவாட உம் இருப்பிடம் வந்தேன். பிச்சாடனார் மைந்தனே, உயிர் பிச்சை தாரும். பழி பாவத்தால் இழி பிறப்புக்குள்ளான என்னை போற்றி புகழ்ந்துரைக்கும் வகையில் வாழ்வு கொடும். ஒருநாள் வாழ்ந்தாலும் போதும். உம்மால் உயர்வு பெற வேண்டும்.’’ ‘‘மாண்டவன் மீள்வதில்லை, இது மானுட நீதி. உம் மனைவி, மக்கள் எல்லா வளத்துடன் வாழ்வார்கள். நீ என் சந்நதியில் கள்ளர்சாமி என்ற பெயரில் வணங்கப்படுவாய். எனது ஆலய விழாவில் நீ முக்கியத்துவம் பெறுவாய். உன்னை நம்பி வரும் பக்தர்களுக்கு நீ கொடுக்கும் வரம், அவர்களை மேன்மை அடையச் செய்யும். உனது மரணம் திருட நினைக்கும் யாவருக்கும் பாடமாக அமையும் வகையில் கள்ளன் உன்னை வெட்டிய நிகழ்வே என் ஆலய விழாவில் முக்கிய நிகழ்வாகட்டும்,’’ என்று உரைத்தார் அய்யனார்.




அதன்படி குப்பண்ணன் தெய்வமானார். ஆண்டுதோறும் கார்த்திகை மாதம் 30ம் தேதி கள்ளர் வெட்டு திருவிழா நடைபெறுகிறது. பேச்சியம்மன் சந்நதி முன்பு நின்று, ‘‘தாயே நான் போகிறேன். உத்தரவு கொடு அம்மா’’ என்று கள்ளர்சாமிக்கு ஆடுபவர் கேட்பார்.

தெய்வமாக மாறிய குப்பண்ணன் வணங்குபவர்களுக்கு எல்லா பாக்கியமும் கிடைப்பதாக அப்பகுதியினர் மெய்சிலிர்க்கக் கூறுகின்றனர்.

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு திருமாவளவன் என்னும் கரிகாற்சோழன் போன்ற சோழப் பேரரசர்கள் ஆட்சி செய்த காலத்தில் சோழ வளநாடு பல கூற்றங்களாகப் பகுக்கப்பெற்று விளங்கியது. ஆவூர் கூற்றம், ஆர்க்காட்டுக் கூற்றம், கிழார் கூற்றம், உறையூர் கூற்றம் போன்றவை அவர்கள் வகுத்த சோழநாட்டு ஆட்சிப் பகுதிகளாகும். ஆர் என்பது ஆத்தி மரத்தைக் குறிக்கும் சொல்லாகும். ஆத்திமரங்களை மிகுதியாகப் பெற்ற காடாக இக்கூற்றம் விளங்கியதால் ஆர்க்காடு என அழைக்கப் பெற்றது. சோழப் பேரரசர்களுக்குரிய மாலை ஆத்தி மாலை என்பதால் ஆர் என்றும் ஆத்தி மரத்திற்கு தனிச் சிறப்பு உண்டு. ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பு சோழப் பேரரசர்களின் யானைப்படைக்கு தலைமை வகித்த அழிசி, அவன் மகன் சேந்தன் போன்றவர்க்கு உரிய நாடாக இக்கூற்றம் திகழ்ந்தது. காவிரி, ெவண்ணாறு ஆகிய இரண்டு பேராறுகளுக்கு இடையில் திகழ்ந்த இக்கூற்றத்திற்கு தலைமை இடமாக விளங்கியது ஆர்க்காடு என்னும் ஊராகும்.




What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!