Cinema Entertainment Uncategorized

இமயமலை போல் இருக்கும் ரஜினியை மோத விட்டு மொத்தமாக வச்சு செய்து விட்டார்!

செஞ்சோற்று கடன் தீர்க்க சேராத இடம் சேர்ந்து வஞ்சத்தில் வீழ்ந்தாயடா கர்ணா என்றுதான் இப்போது ரஜினியை பார்த்து சொல்ல தோன்றுகிறது. கோலிவுட் சினிமா மட்டுமல்லாமல் இந்திய சினிமாவிலும் இந்த வயதில் நம்பர் ஒன் ஹீரோவாக இருப்பவர் ரஜினி மட்டும் தான். அவரை வம்படியாக அழைத்து வந்து மொத்தமாக அசிங்கப்படுத்தி விட்டார்கள் என்றுதான் சொல்ல வேண்டும்.

குடிப்பழக்கம் மட்டும் இல்லாமல் இருந்திருந்தால்...” - 'ஜெயிலர்' ஆடியோ விழாவில் ரஜினி பேச்சு | rajini advice to his fans in jailer audio launch - hindutamil.in




ரஜினி தன்னுடைய மகள்களை முன்னேற்ற ஏதாவது செய்ய வேண்டும் என முயற்சிப்பதும், அவருடைய மகள்களால் அவருடைய பெயர் மொத்தமாய் டேமேஜ் ஆவதை முட்டுக் கொடுக்க முடியாமல் அவருடைய விசுவாசிகள் தவிப்பதும் பல வருடங்களாக நடந்து வருகிறது. அதிலும் இந்த முறை வெளியில் சொல்ல முடியாத அளவுக்கு சூப்பர் ஸ்டார் சறுக்கி இருக்கிறார்.

எட்டு வருடத்திற்கு பிறகு மீண்டும் இயக்குனர் அவதாரம் எடுத்த ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் அப்பாவை கேமியோ ரோலில் நடிக்க வைத்து படம் பண்ணினார். நீங்க சினிமா துறையில என்ன வேணா பண்ணுங்க, எங்க தலைவரை விட்டுடுங்க என ரஜினியின் விசுவாசிகள் விமர்சனம் செய்து வந்தார்கள். லால் சலாம் படத்தில் ரஜினிக்கு கேமியோ ரோல் என்று சொல்லிவிட்டு, மொத்த படத்தையும் அவரைத்தான் சுமக்க வைத்திருக்கிறார்கள்.

சாக்குபோக்கு காரணங்கள் சொல்லி பொங்கல் ரிலீசில் இருந்து லால் சலாம் விலகி கடந்த ஒன்பதாம் தேதி ரிலீஸ் ஆனது. ரஜினியின் படம் ரிலீஸ் ஆனாலும் பரவாயில்லை என்று தைரியமாக மணிகண்டன் நடித்த லவ்வர் படத்தை ரிலீஸ் செய்தார்கள். வளர்ந்து வரும் ஹீரோவின் படத்தை இப்படி பண்ணுகிறார்களே என யோசித்தால், கடைசியில் வளர்ந்து வந்த ஹீரோ வசூலில் கோலிவுட்டின் மிகப்பெரிய தூணான சூப்பர் ஸ்டாரையே அசைத்து விட்டார்.




வாழ்க்கை கொடுத்த அப்பாவை வச்சு செஞ்ச மகள்

லால் சலாம் திரையிடப்பட்டிருக்கும் ஸ்கிரீன் எல்லாம் ஈ ஓடுகிறது. லவ்வர் படத்திற்கு கூட்டம் கூட்டமாக ஆடியன்ஸ்கள் அலை மோதிக் கொண்டிருக்கிறார்கள். இதுவரை லால் சலாம் படம் 10 கோடி வரை தான் கலெக்ஷன் செய்திருக்கிறது. ஜெய் பீம், குட் நைட் போன்ற படங்களின் மூலம் தான் மணிகண்டன் என்ற ஒரு நடிகர் இருப்பதே தமிழ் சினிமா ரசிகர்களுக்கு தெரியும். அவருடன், இமயமலை போல் இருக்கும் ரஜினியை மோத விட்டு மொத்தமாக வச்சு செய்து விட்டார் அவருடைய மகள் ஐஸ்வர்யா.

லால் சலாம் இசை வெளியீட்டு விழாவின் போது அப்பா எனக்கு வாழ்க்கை கொடுத்தார் என்று ஐஸ்வர்யா சொல்லி இருந்தார். கடைசியில் வாழ்க்கை கொடுத்த அப்பாவை வச்சு செய்து விட்டார் மகள். கடந்த சில வருடங்களாகவே வெற்றி படங்கள் கொடுக்க முடியாமல் துவண்டு கிடந்த ரஜினி ஜெயிலர் படத்தின் மூலம் தான் மீண்டும் தன்னை பாக்ஸ் ஆபீஸ் கிங்காக நிரூபித்தார். அதை மொத்தமாக சுக்கு நூறாக்கிவிட்டார் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்.




What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!