Big Boss Tamil 7 Cinema Entertainment

Big Boss Tamil 7:பிக் பாஸ் சீசன் 7 ல் பணப்பெட்டியை தூக்கியது இவர் தான்..

கடந்த அக்டோபர் ஒன்றாம் தேதி விஜய் டிவியில் ஆரம்பிக்கப்பட்ட பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி இறுதிக்கட்டத்தை அடைந்திருக்கிறது. இன்னும் இரண்டே வாரங்கள் மட்டுமே பாக்கி இருக்கும் நிலையில் ரவீனா மற்றும் நிக்சன் டபுள் எலிமினேஷனில் கடந்த வாரம் வீட்டை விட்டு வெளியேறி இருந்தார்கள். வீட்டிற்குள் இப்போது எட்டு போட்டியாளர்கள் மட்டுமே இருக்கும் நிலையில் இந்த வாரம் அத்தனை பேருமே நாமினேட் செய்யப்பட்டு இருக்கிறார்கள்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொரு சீசனிலும் அதிக அளவில் எதிர்பார்க்கப்படும் டாஸ்க் மணி பாக்ஸ் டாஸ்க் தான். ஒரு போட்டியில் 90 நாட்களை கடந்து வீட்டிற்குள் இருப்பவர்கள் பணப்பெட்டியை வைக்கும் போது எப்படிப்பட்ட முடிவை எடுக்கிறார்கள் என்பது எல்லோருக்குமே சுவாரஸ்யம் நிறைந்ததாக இருக்கும். பல நேரங்களில் இவர்தான் டைட்டில் வின்னர் என்று மக்கள் நினைத்துக் கொண்டிருக்கும் நேரத்தில் அந்த நபர் பணப்பெட்டியை எடுத்துக் கொண்டு வெளியில் போயிருக்கிறார்.




அப்படித்தான் இந்த சீசன் 7 நிகழ்ச்சியிலும் கண்டிப்பாக இந்த நபர் இறுதிப் போட்டியில் இருப்பார், டைட்டில் வெல்வதற்கு தகுதியானவர் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர் பணப்பெட்டியை தூக்கிக்கொண்டு வெளியில் சென்று இருக்கிறார். ஆரம்பத்தில் பிக் பாஸ் நிகழ்ச்சியின் முக்கிய போட்டியாளர் மாயா தான் பணப்பெட்டியை எடுத்துக் கொண்டு வெளியேறியது என்று தகவல் வெளியில் வந்தது.

பணப்பெட்டியை தூக்கிய முக்கிய போட்டியாளர்

ஆனால் இந்த சீசனில் உண்மையில் பணப்பெட்டியை தூக்கிக் கொண்டு வெளியேறி இருப்பது விசித்ரா என தெரிகிறது. கிட்டத்தட்ட பணமதிப்பு 12 லட்சம் என வந்தவுடன் விசித்ரா இந்த முடிவை எடுத்திருக்கிறார். இதுவரை பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஒரு குறிப்பிட்ட வயதை தாண்டியவர்கள் முதல் இரண்டு வாரங்கள் பிக் பாஸ் வீட்டிற்குள் இருந்ததே கிடையாது. ஆனால் விசித்ரா அந்த சாதனையை செய்தார்.




ஏற்கனவே அர்ச்சனா, விஷ்ணு, மணி, தினேஷ் ஆகியோர் இறுதிப் போட்டியில் இருப்பார்கள் என மக்களால் அதிகம் உறுதி செய்யப்பட்டது. அதே நேரத்தில் விஜய் வர்மா, பூர்ணிமா, மாயா, விசித்திராவை ஒப்பிட்டுப் பார்க்கும் பொழுது விசித்ரா தான் கண்டிப்பாக 5 இறுதிப் போட்டியாளர்களில் ஒருவர் என சொல்லப்பட்டது. அப்படி இருக்கும்போது விசித்ரா பணப்பெட்டியை எடுத்துக்கொண்டு சென்றிருப்பது விளையாட்டில் பெரிய ட்விஸ்ட்டை ஏற்படுத்தி இருக்கிறது.

விசித்ரா 12 லட்சம் பணத்தை எடுத்துக்கொண்டு வெளியேறி இருப்பதாக 80 சதவீத தகவல்கள் உறுதிப்படுத்தி இருக்கிறது. அப்படி இருந்தால் மாயா, பூர்ணிமா, விஜய் வர்மா மூவரில் ஒருவர் தான் இறுதிப் போட்டியாளர்களின் லிஸ்டில் சேரப் போகிறார்கள். கடந்த இரண்டு வாரங்களாகவே விசித்ராவுக்கு வெளியில் ஆதரவு குறைந்து வரும் நிலையில், அப்படி அவர் பணப்பெட்டியை எடுத்து இருந்தால் உண்மையாகவே அது நல்ல முடிவு தான்.




What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!