Beauty Tips

முகப்பருக்களை ஏன் கிள்ளக்கூடாது தெரியுமா?

உங்களுக்கு தொடர்ச்சியான சருமப் பிரச்னைகள் அல்லது முகப்பருக்கள் இருக்கிறதா? முகத்தில் கருந்திட்டுகள் தோன்றி உங்கள் அழகை பாதிக்கிறதா? கவலைப்பட வேண்டாம். இவை எல்லாவற்றுக்கும் நிரந்தர தீர்வு இருக்கிறது. உங்கள் முகத்தில் தோன்றியுள்ள பருக்களை கிள்ளுவது, நோண்டுவது, பிய்ப்பது, அழுத்துவது போன்ற செயல்களை நீங்கள் செய்யாமல் இருந்தாலே பாதி பிரச்னையை தவிர்க்கலாம்.

முகத்தில் இருக்கும் பருக்களை கிள்ளுவதால் பல சருமப் பிரச்னைகள் சந்திக்க நேரிடும் என்பது உங்களுக்கு தெரியுமா? உங்கள் சருமத்திற்குள் ஆழமாக சென்றிருக்கும் பருக்களை கிள்ளும்போது, அந்த இடமே சிவப்பு நிறமாக மாறுவதோடு வீக்கமும் ஏற்படுகிறது. மேலும் அதன் அருகிலேயே புதிதாக பருக்களும் தோன்ற ஆரம்பிக்கும்.




முகத்தில் உள்ள பருக்களை அழுத்துவதாலோ, கிள்ளுவதாலோ அல்லது பிய்த்து எடுப்பதாலோ, பருக்கள் இருந்த இடத்தில் சீழ் படிந்து வீக்கம் அடைகிறது. பருக்களை அப்புறப்படுத்தவும் குறைக்கவும் கைகள் அல்லது வேறு ஏதாவது பொருளை பயன்படுத்தும் பழக்கத்தை பலரும் செய்கிறார்கள்.

இதுபோன்ற செயலை மருத்துவர்களோ தோல் நிபுணர்களோ பரிந்துரைப்பதில்லை. வெள்ளை நிற தலையுடைய பருக்களை கிள்ளும்போது, உங்கள் சருமத்தில் துளை விழுகிறது. இதன் காரணமாக அந்த இடத்தில் தொற்றுகள் ஏற்படுகிறது. உங்கள் முகத்தில் உள்ள பருக்களை அழுத்தியபடியே இருந்தால், அவை பெரிதாகி கட்டிகளாக உருமாறிவிடும் ஆபத்துள்ளது.

பருக்களை கிள்ளும்போது உங்கள் சருமத்தை காயப்படுவதோடு அவை குணமான பிறகும் சில திசுக்களை இழக்க நேரிடுகிறது. இதனால் முகத்தில் தழும்போ வடுவோ தோன்றுகிறது. இவ்வாறு பருக்கள் இருந்த இடத்தில் வீக்கம் உண்டாவதால், தழும்புகள் வரவில்லை என்றாலும் கருந்திட்டுகள் தோன்றி உங்கள் அழகை மோசமாக்கும்.




பருக்களை போக்க எப்போதும் மருத்துவர்கள் பரிந்துரைக்கும் மருந்துகளை பயன்படுத்துங்கள். பென்சாக்ஸில் பெராக்சைட் அல்லது சலிசைலிக் ஆசிட் ஆகிய இரண்டையும் நீங்கள் பயன்படுத்தலாம். இதுதவிர சூடான துணி அல்லது விசேஷ பேண்டேஜ் உதவியாக இருக்கும்.

ஒருபோதும் முகப்பருக்களை கடினமான பொருளை வைத்தோ அல்லது உங்கள் கை நகங்களாலோ அழுத்தாதீர்கள். பருக்களின் தலைப்பகுதி வெள்ளை அல்லது மஞ்சள் நிறத்தில் இல்லையென்றால் அதை எந்த தொந்தரவும் செய்யாதீர்கள்.

முகத்தில் உள்ள பருக்களை கைகளால் பிய்த்து எடுப்பதால் என்ன பாதிப்புகள் ஏற்படும் என்பதை நிச்சியம் தெரிந்து கொண்டிருப்பீர்கள். முகத்தில் ஏற்படும் பருக்களுக்கு ஹார்மோன் பிரச்னை, உணவு பழக்கம், முகத்தின் துளைகளில் இறந்த செல்களினால் நிரம்புதல் போன்றவை பொதுவான காரணங்களாக இருக்கிறது. பருக்கள் ஒன்றன்பின் ஒன்றாக தொன்றுகிறது என்றால் கண்டிப்பாக தோல் மருத்துவரை சந்தித்து மூல காரணத்தை தெரிந்துகொண்டு சிகிச்சை பெறுவது நல்லது.




What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!