Entertainment

மயங்கினேன் மன்னன் இங்கே – 17

17

வெளியே போகலாமா …எப்படி போவது …யோசனையுடன் வீட்டின் முன் வராண்டாவில் நடை பயின்றபடி இருந்தாள் சஷ்டி .இந்த ஊருக்கு வந்த புதிதில் சுதந்திரமாக தெருக்களில் நடந்த்து நினைவு வந்த்து .இப்போது அப்படி அவளால் நடக்க முடியுமா …அவள்தான் இப்போது ராயரம்மாவாயிற்றே .சஷ்டி குனிந்து தன் கால்களை பார்த்துக் கொண்டாள் .கண்ணுக்கு தெரியாத   பொன் விலங்கு ஒன்று தன் கால்களில் பூட்டப்பட்டிருப்பதாக உணர்ந்தாள் .

” வெளியே போவதாக இருந்தால் நம்ம சாலப்பனை காரை எடுக்க சொல்லி கூடப் போயிட்டு வா …” பாட்டியம்மா சொல்ல அவர் சொன்ன சாலப்பன் தாத்தாவின் காரோட்டல் சஷ்டிக்கு முன்பே பழக்கமானதென்பதால் அவள் மனதில் மெல்லிய கிலி படர்ந்த்து .




ஆனாலும் அவளுக்கு வேறு வழி இருக்கவுல்லை .சாலப்பனின் நடுங்கும் கைகள் ஸ்டியரிங்கை பிடிக்க , திக் திக் மனதுடனேயே அவள் வெளியே கிளம்பினாள் .சொப்னா எந்நேரமும் வீட்டில் படம் பார்த்து பொழுதை கழிக்க , கோமதியும் , செந்தாமரையும் வீட்டு வேலைகளில் மூழ்கியிருக்க , பேச்சியம்மா வீடு பராமரிப்பில் வேலையாட்களை ஏவியபடி இருக்க  , ஊரிலுள்ளோரின் ,வீட்டில் …அலுவலகங்களில்  வேலை பார்ப்போரின்… குடும்ப பஞ்ஞாயத்துகளில் பாட்டியின் பொழுது கழிய , இவர்கள் யாருடனும் எந்த விசயத்திலும் இணைந்து கொள்ள முடியாமல் தனித்து நின்றாள் சஷ்டி .

அந்த வீடு தன் சுதந்திரத்தை கட்டிப் போட்டிருப்பது போல் உணர்ந்தாள் . அன்று பரண் மேல் பத்திரங்களை தேடிய பிறகு மீண்டும் மேலே ஏறவே முடியவில்லை .எப்போதும் ஏதாவது ஒரு தடை வந்து கொண்டே இருந்த்து .  சில நேரங்களில் தான் கண்காணிக்க படுவது போல் கூட அவளுக்கு தோன்றியது .வாழ வந்த வீட்டில் இப்படி ஒரு உணர்வு ஏற்படுவதென்பது துர்பாக்கியம் . ஆனால் அந்தக் கண்காணிப்பு …

” ஏய் மலர் என்னடி ராயரய்யா இப்போதெல்லாம் அடிக்கடி வீட்டிற்குள்ளேயே இருக்கிறாரே என்ன விசயம் …? ” சொப்னா கேட்க சஷ்டி மலர் விழித்தாள் .

” அப்படியா …? நான் கவனிக்கவில.லையே …”

” எங்க ஊர் ராயருக்கு நிறைய தொழில்கள் .அவற்றை கவனிக்க வேண்டும் .அத்தோடு அவரை நம்பி இருக்கும் ஊர்ஜனங்களை பராமரிக்க வேண்டும் .இத்தனை வேலை பளுவால் அவருக்கு வீட்டிற்கு வர நேரமே இருக்காது . வேளைக்கு சாப்பிட கூட வரமாட்டார் . ஆனால் இப்போது ஒரு மாதமாக அடிக்கடி வீட்டில் தென்படுகிறாரே அதன் காரணம் என்னவோ …? ராயரம்மா உங்களுக்காவது தெரிகிறதா …? “

சஷ்டி இப்போதுதான் தோழி தன்னை கேலி செய்கிறாளென உணர்ந்தாள் .

” ஏய் சும்மா இரடி .எதையாவது உளறிக் கொண்டு ….” சொல்லும் போதே அவள் முகம் சிவந்த்து .

சொப்னா தோழியின் அருகே வந்து அமர்ந்து கொண்டு குரலை குறைத்துக் கொண்டாள் .” உளறுகிறேனா …நானா …உண்மையை சொல்றேன்டி .எப்பா …நானும் எத்தனையோ படங்களில் எவ்வளவோ ரொமான்ஸ் சீன்ஸ் பார்த்திருக்கிறேன் .உங்களை போல் பார்த்தில்லைடி .அட..டா …பார்வையிலேயே இரண்டு பேரும் என்னா லவ்வு …?அதென்னடி நீ முன்னால் வந்து விட்டால்   அண்ணனோட பார்வை உன் மேலிருந்து நகர மாட்டேனென்கறது …? “

நான் உணரும் கண்காணிப்பு இதுதானா …?இல்லையென சஷ்டியால் மறுக்க முடியவில்லை .ஏனெனில் அவளும் வீட்டில் இருக்கும் போது சதா அவளை பின் தொடரும்  திருமலைராயனின் பார்வையை உணர்ந்தே இருந்தாள் .ஏக்கங்களும் , அழைப்புகளும் நிறைந்த கணவன் பார்வை .அந்த பார்வை கணங்களின் போதெல்லாம் இவன் பத்தே நாட்களுக்கு முன்பு வரை  வசதியும் , அழகும் நிறைந்த வேறொரு பெண்ணை காதலித்தவன் .அவளை மணக்க இருந!தவன் என சத்தியம் செய்தாலும் யாரும் நம்ப மாட்டார்கள் .ஏன் சஷ்டியே நம்ப மாட்டாள் .




அது போலொரு காதல் கனியும் பார்வைகளை அவளுக்கு தந்து கொண்டிருப்பான் .அத்தோடு சமயம் வாய்க்கும் போதெல்லாம் அவளை மென்மையாக  தீண்டும் வேலைகளையும் செவ்வனே செய்து கொண்டிருப்பான்.  கையை பற்றிக் கொள்வது , கன்னத்தை தட்டுவது போல் வருடுவது , கன்னத்திலிருக்கும் இருக்கும் கறையை துடைத்து விடுவது …என்பது போல் அவனுக்கு அவளை தீண்ட ஏதோவோர் காரணம் இருந்து கொண டே இருக்கும் . இவனது இந்த மன்மத விளையாட்டுக்களில் எது எது இவள் கண்களில் பட்டதோ …சஷ்டிக்கு கூச்சம் பிடுங்கி தின்ன , தோழியை நிமிர!ந்து பார்க்க முடியாமல் தலை குனிந்தாள் .

” சும்மா இருடி …,” வெட்கமாய் முணுமுணுத்தாள் .

” மலர்  எனக்கு விபரம் அறிந்து நான் அண்ணனைஇப்படி பார்த்ததில்லை .எப்போதும் ஏதாவது வேலை , யோசனை என இறுக்கமாகவே இருப்பார் . அப்பா திடுமென ஹார்ட் அட்டாக்கில் இறந்த்தும் வெளிநாட்டில் படித்துக் கொண்டிருந்த அண்ணனை இங்கே அழைத்து வந்து அவரிடம் தொழில் பொறுப்புகளை கொடுத்தார் பாட்டி.  நிறைய குளறுபடிகள் இருந்த தொழிலை சரி பண்ணும் அவசியத்தில் …கூடவே வழி வழியாக எங்கள் குடும்பம் பேணி காத்த இந்த ஊரையும் காக்கும் அவசியத்தில் அண்ணன் தானென்ற ஒன்றையே மறந்து விட்டார் .முழுக்க முழுக்க தொழில் , ஊரென மூழ்கிவிட்டார் . .மனைவி , காதல் என அவரும் இயல்பாக ஒரு குடும்ப வாழ்வு வாழ வேண்டுமென நான் ரொம்பவே விரும்பியிருக்கிறேன் .சந்திராம்பிகையுடனான திருமண நிச்சயத்தின் பின் கூட அண்ணனின் செயல்களில் எந்த மாற்றமும் இருந!ததில்லை .ஆனால் இப்பொது அவர் டோட்டலாக மாறியிருக்கிறார் .முழுக்க முழுக்க ஒரு காதல் கணவனாகி விட்டார் .இதற்கு நான் உனக்குத்தான் நன்றி சொல்ல வேண்டும் “

சொப்னா சொன்ன அண்ணனின் பெருமைகளில் சஷ்டிக்கும் சிறிதும் மாற்றுக் கருத்து இல்லைதான். ஆனாலும் அன்று அவள் மட்டுமே பார்த்த சந்திராம்பிகையுடனான அவனது நெருக்கம் . அது காதல்லலாமல் வேறு என்னவாக இருக்ககூடும் …? மேலும் சந்திராம்பிகையே சொன்னாளே அவர்கள் இருவரும் காதலிப்பதாக …சஷ்டியின் மனக் குழப்பம் அதிக நாட்கள் நீடிக்கவில்லை .அப்படி  நீடிக்க திருமலைராயன்  விடவில்லை .

முதல்நாள் இரவிற்கு பிறகு சஷ்டி தனியாகவே படுத்துக் கொண்டிருந்தாள் . அதனை திருமலைராயனும் ஆட்சேபிக்கவில்லை . மாடியை திருமலைராயன் மட டுமே பயன்படுத்தி வந்த்தால் தம்பதிகளின் பிரிவு வீட்டு பெரியவர்கள் யார் கவனத்திற்கும் வரவில்லை . ஆனால் அன்று பரணில் ஏறி இறங்கிய பிறகு , அங்கே அவர்களுக்கிடையே நிகழ்ந்த நெருக்கத்திற்கு பிறகு ,  இரவு மாடியேறியவளுக்கு காத்திருந்து  , அவள் படியேறியதும் அவளை இறுக அணைத்துக் கொண்டான் திருமலைராயன் .

” இன்றும் தனியேதான் தூங்க போகிறாயா சஷ்டி …? ” தாப நெருப்பு பற்றியெரிந்த அவன் வார்த்தைகளை சம்ப்படுத்துவது போல் , சில்லென்ற குளிர்வுடன் அவள் பின் கழுத்தில் பதிந்தன அவன் இதழ்கள் .

” ம் …” ஒற்றையெழுத்துடனேயானாலும் ,குறைந்த குரலுடன் பலவீனமாகவே இருந்தாலும் சஷ்டியின் பதில் தெளிவாகவே வெளிப்பட்டது .




” ஏன்டா …ம் …? ” அவளை தன்னிடமிருந்து பிரித்து எதிர் நிறுத்தி , அவள் கண்களுக்குள் பார்த்தான் .

சந்திராம்பிகையை பற்றி சொல்லலாமா என யோசித்து , அன்றைய இரவிற்கு பிறகு அவளுடனான …அவளைப் பற்றிய பேச்சுக்களே இல்லாமலிருந்தவனிடம் தானே அவள் நினைவை உண்டாக்க மனமற்று அந்த எண்ணத்தை ஒதுக்கினாள் .அதனை விட முக்கிய தேவை ஒன்றும் அவளுக்கு அந்த வீட்டில் இருந்த்து . அது அவள் குடும்பத்தின் தன்மானம் .

காதலன் கை விட்டுப் போன பெண்ணிற்கு , அவள் குடும்பத்திற்கு மறு வாழ்வு கொடுத்திருக்கிறார்கள் ராயர் குடும்பம் என்ற ஊரின் பேச்சுக்களை அவள் வெறுத்தாள் .தனது ஏழ்மை நிலைக்கு அவள் வருந்தவில்லை .ஆனால் கடனாளியின் பெண்ணென்ற பேச்சுக்கு வருந்தினாள் .அதிலிருந்து மீள எண்ணினாள்.

” .என் அப்பாவை தேடிக் கண்டுபிடிக்க வேண்டும் .  அப்பாவின் கடனை நான் அடைக்க வேண்டும் .அதன் பிறகுதான் நாம் …வந்து …நம்முடைய வாழ்க்கை தொடங்க வேண்டுமென விரும்புகிறேன் “

” உன் அப்பாவின் கடனிற்கும் நம் வாழ்வுக்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது …? ” திருமலைராயனின் குரல் பொறுமையின்றி ஒலிக்க ,

” அப்பாவின் கடனுக்கு என்னை பலி கொடுப்பது போல் ஒரு உணர்வு எனக்கு வருகிறது …” சஷ்டியின் பதிலை கேட்டதும் சரேலென அவளை விட்டு விலகி விட்டான் திருமலைராயன் .அவன் முகம் கோபத்தில் கொதித்து கிடக்க கை நீட்டி அவள் பின் தலை கூந்தலை கொத்தாக பற்றி உலுக்கினான் .

” என்னைப் பார்த்ந்தால் பலி கேட்கும் கருப்பண்ணசாமி போல் தெரிகிறதாடி உனக்கு …? ” கண்கள் சிவந்து உருள  மிரட்டி நின்ற அவன் , உண்மையில் அப்போது சஷ்டியின் கண்களுக்கு கருப்பண்ணசாமி போலவேதான் தெரிந்தான் .

இயலாமையும் , இறைஞ்சலுமாக சஷ்டி அவனை ஏறிட , அந்த பார்வையில் என்ன கண்டானோ …” ச்சீ …போடி ” என அவளை உதறிவிட்டு தன் அறைக்குள் போய் பூட்டிக் கொண்டான் .

” இந்த தெருதானுங்கம்மா நீங்க சொன்னது …? ” குறுகலாய் போன ஒரு தெரு முன் காரை நிறுத்திக் கொண்டு கேட்டுக் கொண்ணிருந்தார் சாலப்பன் .

தெரு முனையில் இருந்த முக்குறுணி விநாயகர் கோவிலை  சரிபார்த்துக் கொண்டு ” இதுதான் தாத்தா ” என்றபடி இறங்கினாள் சஷ்டி .

” நீங்க இங்கேயே இருங்க தாத்தா .நான் உள்ளே போய் பார்த்து விட்டு வருகிறேன் …” குறுகலான சந்தாக நீண்டு போன அந்த தெருவினுள் நடந்தாள் .சிறு சந்து போல் இருந்தாலும் நடு வழியில்  வாய்க்கால் ஓடாமல் மிக சுத்தமாக இருந்த்து தெரு .இந்த சுத்தம் இங்கு மட்டுமல்ல , இந்த ஊர் முழுவதுமே இருந்த்து .அதன் காரணம் திருமலைராயன் .வெளிநாட்டிலிருந்து இங்கே வந்த்துமே அவன் முதலில் சரி பண்ணியது சாக்கடைகளையும் , குப்பைத் தொட்டிகளையும்தான் .அவனது முயற்சியாலதான் திருமலைராயன் பட்டினம் எந்நேரமும் கழுவி விட்டாற் போல் தூசு தும்புகளின்று சுத்தமாக இருந!தது .




கணவனின் பெருமைகளை மனதிற்குள் நினைத்தபடி கதவு எண்களை கவனித்தபடி நடந்தாள் சஷ்டி .அவள் தன் அம்மா சிறு வயதில் வாழ்ந்த வீட்டை பார்க்க வந்திருந்தாள் .சும்மா பார்க்க வேண்டும் போலுள்ளது எனக் கூறி அம்மாவிடம் அட்ரஸ் கேட்டு வந்திருந்தாலும் அவளது உள்  நோக்கம் இங்கே யாரிடமாவது அப்பாவை பற்றி விசாரிக்கை முடியுமா எனபதுதான் .ஏனென்றால் நாராயணனும் , கோமதியும் ஒரே தெருவில் வசித்தவர்கள்தான் .

” கதீஜா ஆன்ட்டி எங்கே …?, ” அவளது கேளவிக்கு கை காட்டப்பட்ட கதீஜா தளர்ந்த உடலுடன் கல்லுரலில் மாவாட்டிக் கொண்டிருந்தாள் .

சஷ்டியை ஆவலுடன் வரவேற்றாள் .கோமதியை பற்றி விசாரித்தாள் .உன் அம்மா – அப்பா காதலை வளர்த்து விட்டதே நானதான் தெரியுமா …என பீற்றிக் கொண்டாள் .

” உங்கள் ” வாடா ,” ரொம்ப நல்லாயிருக்கும் ஆன்ட்டி .அந்த பக்குவம் நீங்கள் தானே அம்மாவிற்கு சொல்லிக் கொடுத்தீர்களாம. …” தன் சமையலை பாராட்டுபவர்களுக்கு சொத்தை எழுதித் தரவும் பெண்கள் தயங்க மாட்டார்கள் .கதீஜாவும் சஷ்டி கேட்ட விபரங்களை தர தயாரானாள் .

” நாராயணன் அண்ணா எங்கே போனாரென்று நம்ம ராயரம்மாவிற்கு தெரியுமே …? “

” அம்மா சிங்கப்பூராக இருக்கராமென்று சொன்னார்கள.  பாட்டியும் அதேதான் சொன்னார்கள் …,”

” சிங்கப்பூரா …இல்லையே அண்ணா கத்தார் போனதாகத்தான் நான் கேள்விப்பட்டேன் …”

சஷ்டியை குழப்பம் சூழ்ந்து கொண்டது .பாட்டி இதை பற்றி ஒன்றுமே சொல்லவில்லையே …யோசித்தபடி கதீஜாவிடம் விடை பெற்று வெளியே வந்தாள் .இந்த விபரம் அவரிடமதான் கேட்க வேண்டும் , கணவனின் நினைவு வந்த உடனேயே சஷ்டியின் மனதில் ஊஞ்சலொன்று உல்லாசமாக ஆடத் துவங்கி விட்டது .

மிகக் கடுமையானவன் என அனைவராலும் விமர்சிக்கப்படுபவன் , சில நேரங்களில் அவளிடமும் அப்படியே நடந்து கொண்டாலும் , அடுத்த நிமிடமே மயிற்பீலியாய் மாறி விடுவான் .அன்று கோபத்நுடன் இவளை தள்ளி விட்டு விட்டு அறைக்குள் போய் கதவை மூடிக் கொண்டவனின் கோபம் இப்போதிற்குள் போகாது என்ற இவளது கணிப்பை  மறுநாள் காலையே   பொய்யாக்கினான் .

” அம்மா எனக்கு காபி …” என்றபடி அடுப்படிக்குள் வந்து நின்றவன் , பேச்சியம்மாள் அடுப்பு பக்கம் திரும்பவும் பச்சென இவள் கன்னத்தில் தன் இதழ் பதித்து நிமிர்ந்தான் .

பதட்டத்துடன் கன்னம் துடைத்து வெட்கமும் , கூச்சமுமாக முறைத்து நின்றவளின் காதுகளில் ” உன் தன்மானம் நம் பெட்ரூமுக்கு மட்டும்தானே .சும்மா அப்போ இப்போ முத்தமிடுவதற்கு இலலைதானே …? ,” கிசுகிசுத்தான் .

சும்மா அப்போ …இப்போ முத்தமிடுவானாம் ….கணவனின் குறும்புகளின் நினைவில் இப்போதும் கன்னம் சிவக்க , கார் நிறுத்தியிருந்த இடத்திற்கு நடந்தாள் சஷ்டி .




” அதெல்லாம் ஒண்ணும் தெரியாதுங்க ராயரய்யா .அவுங்க அப்பாவை பற்றி எந்த விபரமும் தெரியாமல் ராயரம்மாவை பாதுகாக்க வேண்டியது எம் பொறுப்புங்கய்யா .நீங்க கவலைப்படாதீங்க ” சாலப்பன் தாத்தாதான் .காரின் மறுபுறம் நின்றபடி போனில்  பேசிக் கொண்டிருந்தார்.

இவர் என்னை பற்றியா பேசுகிறார் …அவரிடமா பேசுகிறார்…என் அப்பாவை பற்றிய விபரங்கள் எனக்கு தெரியக்கூடாதென்றால் , என் அப்பா விசயத்தில் இவர்கள் குடும்பம் ஏதோ தப்பு செய்திருக்கிறார்கள் என்றுதானே அர்த்தமாகிறது …இத்தனை நாட்களாக இவர்கள் எல்லோருமாக சேர்ந்து என்னை ஏமாற்றி வந்தார்களா …? என் கவனத்தை திசை திருப்பத்தான் என் கல்யாணமும் …அ…அப்புறம் அவனது அந்த அணைப்புகளுமா …?

சஷ்டியின் மனத் தீ கொழுந்து விட்டு எரியத் தொடங்கியது .




What’s your Reaction?
+1
16
+1
13
+1
1
+1
1
+1
0
+1
0
+1
0
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!